Sunday, December 30, 2012

பசு என் பது ‌விரு‌த்‌தி‌யி‌ன் ‌அமசம்


புதுமனை புகுவிழாவிற்கு பசுவை கொண்டு வருவது பற்றி ஒரு வாசக‌ர் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால், அயல்நாடுகளில் எத்தனையோ மாடிக் கட்டடம் கட்டுகிறார்கள். அவர்களெல்லாம் பசு மாட்டை ஒன்றும் கூப்பிட்டுச் செல்வதில்லை. ஆனால் அந்தக் கட்டடங்கள் உறுதியாக இருக்கின்றனவே என்று கேட்டிருக்கிறார். 
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: கட்டடம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் பசுவை கொண்டு செல்வது கிடையாது. விருத்தி அம்சத்திற்காகத்தான் பசுவை நாம் கொண்டு செல்கிறோம். இந்தக் கட்டடம் 200 வருடம் இருந்தது, 300 வருடம் இருந்தது என்பது முக்கியம் கிடையாது. இப்பவும், சில இடங்களுக்கு, சில வீடுகளுக்கு இந்த வீட்டிற்கு வந்தோம், 4 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. தற்பொழுது குழந்தை பிறந்திருக்கிறது. அது அந்த வீட்டின் ராசி என்றெல்லாம் சொல்கிறார்கள்
சிலரெல்லாம் வீடு கட்டி கோலாகலமாக கிரகப் பிரவேசம் செய்து குடியேறுகிறார்கள். ஆனால் அங்கு சென்ற பிறகு ஒவ்வொன்றாக இழக்கிறார்கள். சிலர் ஒவ்வொன்றாய் பெறுகிறார்கள். பசு என்பது விருத்தி அம்சத்திற்குரிய ஜீவராசி. அது காலடி எடுத்து வைத்தால் விருத்தி வரும். நிறைய பணம் வைத்திருப்பார்கள். ஆனால் நோயாளியாக இருப்பார்கள். பசுவை கொண்டு செல்வது சாந்தம், சாத்வீகம், செளபாக்கியம் என எல்லா அம்சங்களும் வரவேண்டும் என்பதற்காகத்தான். பணம், குணம், நிம்மதி என அனைத்து செளபாக்கியமும் பெறவேண்டும் என்ற காரணத்தினால்தான் பசுவை கொண்டு செல்கிறோம். 
இந்திய மண் என்பது பரிகார பூமி. இன்றைக்கும் சொல்கிறார்கள், தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமா? சீனாவிற்குப் போ, படிப்பு சம்பந்தப்பட்டதற்கு அமெரிக்காவிற்குப் போ, ஆன்மீகத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமா? இந்தியா போ என்று ஆன்மீகத்திற்கு இனம்காட்டக் கூடிய நாடாகத்தான் இந்த நாடு இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நாட்டில் பசுவினுடைய பங்களிப்பு என்பது மிக அதிகம்.

எனக்குத் தெரிந்த வேற்று மத சாமியார் ஒருவர், எங்களுடைய வழக்கப்படி பசுவை வைத்தெல்லாம் செய்ய முடியாது. ஆனால் எனக்குப் பசு மீது பெரிய நம்பிக்கை உண்டு. அதை நான் யதார்த்தமாகவும் பார்த்திருக்கிறேன். ஒரு வேலையாகப் கிளம்பும் போது எதிராக பசு வந்தால் அது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அன்றைக்கு அது முடிந்துவிடும். ஆனால் எங்களுடைய மதத்தவர்களிடம் சொன்னால், என்னை மதத்தை விட்டே தள்ளி வைத்துவிடுவார்கள். அதனால், இப்பொழுது கிரகப் பிரவேசம் செய்யலாம் என்று இருக்கிறேன். பசுவை வரவழைத்தால் என்னை ஒதுக்கியே வைத்துவிடுவார்கள். வேறு எதாவது செய்ய முடியுமா என்று கேட்டார்
பசு மடத்தில் பசு 10, 15 வருடமாக படுத்திருந்த ஒரு கல், பெரிய பாறையை எப்படியாவது கேட்டு வாங்கித் தருகிறேன். அதை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரும் ஒருவரிடத்தில் கேட்டு வாங்கி கொண்டு சென்று அதை வைத்துக்கொண்டு சிலவற்றை செய்து கொண்டிருக்கிறார். இப்படி பல சொல்ல முடியாத விஷயங்களெல்லாம் கூட, நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட சிலவற்றைப் பார்த்துவிட்டு இதுமாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் கேட்கிறார்கள். 
அதனால், பசு என்பது விருத்தி அம்சத்திற்கான அடையாளம். முழுமை, ஒரு பசு ஒரு வீட்டில் காலடி வைக்கிறதென்றால் ஒரு முழுமை பெறுகிறது. அங்கு ஒரு ஜீவ சக்தி உருவாகிறது. தானாக பசு வருவதும். வந்த இடத்தில் பசு தானாக கோமியம் இடுவது என்பதும், சாணமிடுவது என்பதும் பெரிய விஷயம். ஆனால், தற்பொழுது அதை வரவழைக்கிறோம். விருப்போ, வெறுப்போ ஏதாவது ஒரு வகையில் பசு வந்துவிட்டாவது செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் கிரகப் பிரவேசத்தில் அதுபோல செய்கிறோம்
Source த‌‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: 


கால்நடை இனப்பெருக்கம்


இந்தியாவில் கால்நடை வளர்ப்பு வேளாண்மைக்கு இன்றியமையாத ஒன்றாகும். இது நமது கிராமப் பொருளதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனினும் ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் நம் நாட்டின் கால்நடை எண்ணிக்கை மிகக் குறைவு. இதற்குக் காரணம் நல்ல இனப்பெருக்க முறைகளும், புதிய கண்டுபிடிப்பும் கிராமங்களில் இல்லாமையே ஆகும். கீழ்வரும் கருத்துக்கள் மூலம் கால்நடைகளில் சிறந்த இனப்பெருக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அறிமுகம்

கால்நடைப் பராமரிப்பில் இனப்பெருக்கம் இன்றியமையாத ஒன்று. சரியான இனப்பெருக்கமும், கன்று ஈனுதலும் இல்லாமல் கால்நடை வளர்ப்பில் இலாபம் பெற இயலாது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு ஆரோக்கியமான கன்றை ஒவ்வொரு கால்நடையும் கொடுக்கவேண்டும். அதற்கேற்ற, சிறந்த திறன் கால்நடைகளிடம் இருத்தல்வேண்டும்.கலப்பில் ஈடுபட்டு, கருவைப் பெற்று அதைப் பாதுகாத்து, சினைக்கால முடிவில் நல்ல கன்றாகக் கொடுப்பதே இனப்பெருக்கம் ஆகும். இந்தî சங்கிலித் தொடரில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் பசுவானது கருவைப் பெற முடியாமல் போகலாம் அல்லது கரு இறப்பு,  முழு வளர்ச்சியற்ற பிறப்பாக வெளிப்படும்.  
இனப்பெருக்கத் திறன் மரபியல் மற்றும் இதர பிற காரணிகளைப் பொறுத்தது. இதர காரணிகளான தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்துக்கள் மற்றும் முறையான பராமரிப்பு போன்றவற்றில், ஒரே இன மாடுகளிடையே இனப்பெருக்கத் திறன் வேறுபடும். சரியான பராமரிப்பையும் மீறி மரபியல் காரணிகள் செயல்பட்டால் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். எனவே மரபியல் பண்புகளையும் மேம்படுத்த வேண்டும். ஒரு சிறந்த இனப்பெருக்க முறைக்கு நல்ல கவனிப்பு அவசியமாகும்.
இனப்பெருக்கத் திறனை பாதிக்கும் காரணிகள்:

கரு முட்டையின் எண்ணிக்கை


ஒவ்வொரு கருவுறுதல் நிகழ்ச்சியின் பொதும் வெளிவரும் கருமுட்டைகள் ஒரு முக்கியக்காரணி. இந்த கரு முட்டைகளை கரீஃபியின் பாலிக்கிள் குழாயில் விழச் செய்வதே கருவுறுதல் ஆகும். ஒரு முட்டை 5-10 மணி நேரம் வரை இருக்கும். இந்த நேரத்தில் கலப்பு செய்தால் மட்டுமே கரு உருவாகும்.

கருத்தரித்தல் சதவீதம்


சரியான சினைத் தருணத்தில் கலப்பு செய்யாமல் மிகச் சீக்கிரமாகவோ அல்லது மிகத் தாமதமாகவோ செய்தால் விந்தணுவும், கருமுட்டையும் சந்தித்துக் கொள்ள முடியாமல் போகலாம். எனவே மாடு கருவுறாது.

கரு அழிதல்


கறவை மாடுகளில் கரு அழிதல், சரியாக கருத்தரியாமை, கருத்தரித்தபின் கருவானது கருப்பையில் நிலை கொள்ளாமல் வெளித்தள்ளப் படுவதால் (அ) கரு வளரும்போது ஏதேனும் அடிபடுவதால் ஏற்படுகிறது. இவ்வாறு கரு அழிவது ஹார்மோன் சுரக்காததால் (அ) சரியான விகிதத்தில் இல்லாததால் ஏற்படுகிறது.

முதல் சினையின் காலம்


முதல் கன்று ஈனும் காலம் அதிகமானால் அது இனப்பெருக்கத்திறனைப் பாதிக்கும். விரைவில் சினைக்கு வரும் மாடுகள், சிறிது குட்டையாகக் காணப்பட்டாலும் நல்ல இனப்பெருக்கத் திறனுடையவையாக இருக்கும்.

சினைப் பருவ எண்ணிக்கை


குறுகிய காலத்தில் (அடிக்கடி)சினைக்கு வரும் மாடுகள் நல்ல இனப்பெருக்கத் திறனுடையவை. விரைவில் சினைப் பருவமடைந்த மாடுகளை அதன் ஒவ்வொரு பருவத்திலும் முடிந்த வரை இனவிருத்தி செய்து கொள்வது நல்லது. இம்முறையில் அதன் வாழ்நாள் திறன் அதிகரிக்கும். கன்று ஈன்ற 9-12 வாரங்களுக்குப் பிறகு அடுத்த சினைக்குத் தயாராகிவிடும்.

வாழ்நாள்


பசுவின் வாழ்நாள் அளவும் இனப்பெருக்கத்திறனை அதிகரிக்கும். பசுக்கள் அதிக நாட்கள் ஆரோக்கியத்தோடு இருந்தால் ஆண்டுதோறும் மாற்றும் பசுக்கள் எண்ணிக்கை குறையும். அதோடு ஈனும் கன்றுகள் எண்ணிக்கை அதிகமாகும்.
இனப்பெருக்கத் திறனை மேம்படுத்தும் முறைகள்
1.   சினை அடைந்த காலம், கன்று ஈன்ற நாள் போன்வற்றை பதிவேட்டில் பதிந்து பராமரித்து வந்தால் ஒவ்வொரு பசுவிற்கும் அடுத்த சினைக்கான காலத்தை முறையாகக் கணிக்கலாம்.
2.   சரியான சினைத் தருணத்தில் கலப்பு செய்யவேண்டும்.
3.   பசுக்களில் திரவப்போக்கு அதிகமிருந்தால், மருத்துவரை அழைத்துப் பரிசோதிக்கலாம்.
4.   4 கலப்பிற்குப் பின்பும் சினைத் தரிக்கவில்லை எனில் மருத்துவரிடம் கொண்டு செல்லலாம்.
5.   ஒவ்வொரு இனக்கலப்பிற்குப் பிறகும், கன்று ஈனும் முன்பு ஒரு முறை முழுமையாகப் பரிசோதனை செய்துவிடவேண்டும்.
6.   வெளியிலிருந்து மாடுகள் வாங்கிவரும் போது நன்கு பரிசோதித்த பின்பே மந்தையில் சேர்க்கவேண்டும்.
7.   கன்று ஈனுவது அதற்காகத் தயாரித்துள்ள தனி அறையில் சுத்தமான இடத்தில் நிகழ்தல் வேண்டும். ஒவ்வொரு தடவையும் கன்று பிறந்த பின்பு நல்ல கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிடவேண்டும்.
8.   சரியாக நோய் எதிர்ப்புச் சக்தி பெற்றுள்ளவையா என்று பார்த்துத் தடுப்பூசிகளை முன்கூட்டியே போட்டு விடுதல் நலம்.
9.   சுகாதாரமான முறையைப் பின்பற்றலாம்.
10.               தேவையான ஊட்டசத்துக்களை அளிக்க வேண்டும்.
11.               சரியான பாகாப்பு முறைகளைக் கையாளுதல் வேண்டும்.
12.               தேவையான இடவசதி செய்து வைத்தல் வேண்டும்.
13.               சரியான சினைக்கு வரும் பருவத்ததை சிறிய சூடாக இருந்தாலும் அதை டீசர் காளை மூலம் கண்டுபிடிக்கலாம்.
(ஆதாரம்: www.world_agriculture.com)

கால்நடை (பசு)


இளம்பசு

முதல் கன்று ஈனுவதற்குத் தயார்படுத்தும் பசுவானது நல்ல பால் உற்பத்தி கொடுக்கக் கூடியதாக, ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். எந்த மரபியல் பரம்பரைக் குறைபாடும் இன்றி, சரியான வளர்ச்சியுடன் இருக்கவேண்டும். 2 வருடங்களுக்குள்ளாக கருவுற்றுவிடவேண்டும்.

பசு

பசுவைத் தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பால் உற்பத்தி. ஒரு கலப்பின மாடு நாளொன்றுக்கு 5.5 லிட்டர் பால் கொடுக்கவேண்டும். பொருளாதார ரீதியில் 305 நாட்களுக்கு, 2500 லிட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும். முதல் 2 கன்றுகளில் மாட்டின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 10 லி எனில் அதன் அப்பருவப் பால் உற்பத்தி 2000-2500 லி ஆகவும், நாளொன்றுக்கு 15 லி பால் கறக்கும் மாட்டின் ஒரு பருவ உற்பத்தி 3000 லி வரையிலும் இருக்கும். முதல் கன்று ஈனும் வயது 3 வருடங்களுக்கு மிகாமலும், அடுத்தடுத்த கன்று இடைவெளி 12-15 மாதங்களுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும் பசுவானது எந்த உடல் குறைபாடும் இன்றி, நன்கு வளர்ச்சியடைந்த மடியுடன் நல்ல பால் நரம்புகளுடன், கையாள்வதற்கு எளிதானதாக இருக்கவேண்டும். வயது முதிர்ந்த மாடுகளை மாற்றிவிட்டு புதிய இளம் பசுக்களைச் சேர்க்கலாம். பண்ணைக்குள் வளர்ந்த இளம் பசுக்களின் மூலம், வருடம் ஒரு முறை 20 சதவிகிதம் அளவாவது முதிர்ந்த மாடுகளை மாற்றிக் கொள்ளுதல் நன்று.
மந்தைகளின் உற்பத்தி சரியில்லாத நிலையில் வெளியில் இருந்து மாடுகளை வாங்கிச் சேர்த்துக் கொள்ளலாம்
காளை மாடுகள்

கன்றுகளின் மரபியல் குணங்களில் 50 சதவிகிதம் அளவு காளை மாடுகளுக்கு பங்குள்ளது. புதிய தலைமுறைகளின் மேம்பாடு நல்ல காளைகளின் தேர்வைப் பொறுத்தே அமையும். பசுத் தேர்வில் மட்டும் தீவர கவனம் செலுத்தினால் போதாது. நல்ல பால் உற்பத்தி பெறக் காளையிலும் நல்ல வம்சாவளியுள்ள காளையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். நல்ல இளம் காளையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல இளம் காளைகளை இனப்பெருக்கக் கலப்பில் பயன்படுத்தும் போது 4500 கி.கி அளவு  பால் உற்பத்தி ஒரு பருவத்தில் பெற முடிகிறது. பிற பண்புகளான கன்று ஈனுவதில் நோய் எதிர்ப்பு போன்றவையும் கவனிக்கப்பட வேண்டும்.
கால்நடை விவசாயிகள் காளைத் தெரிவு பற்றி நன்கு தெரிந்துவைத்திருக்கவேண்டும். பல ஆராய்ச்சி அறிவியல் நிறுவனங்களில் செயற்கைக் கருவூட்டல், காளைத் தெரிவு பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்றன. இதைப் பற்றிய விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும். பாரம்பரியப் (வம்சாவளிப்) பண்புகள் அடிப்படையில் தேர்ந்தெடுத்த காளைகளைக் கலப்பில் பயன்படுத்திப் பிறக்கும் கன்றின் பண்புகள் அடிப்படையில் காளைகளைத் தெரிவு செய்வதே சிறந்தது. முறையற்ற கலப்பு, விரும்பத்தக்காத பண்புகள் கன்றில் உருவாக வாய்ப்பளிக்கும்.

(ஆதாரம்: www.vuatkerala.org)

பசு ஸம்ரக்ஷணம்


ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் கூறியது
தொன்றுதொட்டுப் பசுவும் அதனுடன் இணைந்துள்ள புனித எண்ணங்களும் தத்துவங்களுமே நம் கலாச்சாரத்திலுள்ள மற்றச் சீரிய அம்சங்களையும் உருவாக்கித் திகழச் செய்துள்ளன.
பாலுட்டித் தன் சிசுக்களை வளர்க்கும் இனங்களிலே பசு ஒன்றுதான் தன் குழந்தைகளுக்குப் பால் கொடுத்துச் சம்ரக்ஷிப்பதுடன் மற்ற இனத்தைச் சார்ந்த பாலகர்களையும், விருந்தினர்களையும் பால் கொடுத்துப் போஷிக்கிறது. ஆகவே நாம் பசுவினிடம் நம் தாயிடம் காட்டும் பக்தியையும் மரியாதயையும் காட்டவேண்டும்.
தமிழ் நாட்டுத் சமயாசார்யார்களும், மனித சமூகத்தின் லௌகிக க்ஷேமத்திற்கும் பசுவின் ஸம்ரக்ஷணம் அவசியம் எனப் போதிக்கிறார்கள்.
நம் நாட்டுத் சமய குரவர்களில் ஒருவரான ஞானசம்பந்தர் ஹிந்து மத முக்கியக் கொள்கைகளில் பசு ஸம்ரக்ஷணையைச் சேர்த்துள்ளனர்.
சங்க நூல்களில் பிரபலமான புறநானுறு, யுத்த காலத்தில் யுத்தத்தில் ஈடுபடும் இரு கட்சியாளர்களும் பசுவைக் காப்பாற்றுவதைக் முதல் கடமையாக கருத வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
பசுவே லோக ஷேமத்தை அளிக்க வல்லது. கண்ணனின் அவதாரம் கோஸம்ரக்ஷணைக்காகவே என்பதை அவரது கோபாலன் என்ற திருநாமம் எடுத்துக் காட்டுகிறது.
வங்கம் பீகார் எல்லையிலுள்ள ஸந்தால் பர்கணா ஜில்லாவில், இலுப்பை மரம், பூர்விக மக்களுக்கு முக்கிய உணவை அளித்து வந்தது. ஆதலால் இலுப்பை மரம் அழியாமல் இருக்க அதற்கு சட்டப்பூர்வமான காப்பு அளிக்கப்பட்டுள்ளது. வருமானத்தைப் பெருக்குகிறது என்பதால் ஆகாரத்துக்கு உபயோகமில்லாத சந்தன மரம் சட்டமூலமாக காப்பாற்றப்படுகிறது.
இம்மாதிரி சாமானிய இனங்களுக்குக் காப்பு இருக்கையில், தேசீயச் செல்வமான பசுவைக் காப்பாற்றவும், பசுவைத் தடுக்கவும் சட்டம் எவ்வளவு அவசியம் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். பசுவதையை தடுப்பதுடன், அதைத் தடுக்க ஒவ்வொரு கிராமத்திலும் கட்டாயமாக மேய்ச்சல் தரை ஒதுக்கப்படவேண்டும். மாட்டுத் தீவனமான பிண்ணாக்கை எருவாக உபயோகிப்பதை தடுக்கவேண்டும். முகலாய அரசர்களான அக்பரும் ஷாஜஹானும், நம் காலத்திலேயே ஆப்கானிஸ்தான் அமீரும், பசு ஸம்ரக்ஷணையின் அவசியத்தை உணர்ந்து அதற்கான சட்டங்களைச் செய்தது ககுறிப்பிடத் தக்கது.
வயல்களில் கஷ்டமான வேலைகளைச் செய்யும்படியான நிர்பந்தத்தைச் செய்யும் அளவிற்கு பசுக்களை உட்படுத்துவது மதக் கோட்பாடுகளுக்கு முரணானது. பெருத்த அநீதியுமாகும். அப்படி செய்வதினால் நாட்டில் வருமானம் குறையும்; நாளடைவில் பசுக் குலமே நசித்துப் போகும்.  

Saturday, December 29, 2012

காராம் பசு


''காராம் பசு என்பது தனி இனம் கிடையாது. நாட்டு இன மாடுகளுக்குப் பிறக்கும் கன்றுக் குட்டிகளில் நாக்கு முதல் மடிக்காம்பு வரை முழுவதும் கருப்பாக உள்ள பசுக்கள் 'காராம் பசுக்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இவை போடும் கன்றுகள்கூட சமயங்களில் 'காரம் பசு'வாக இருப்பதுண்டு. இப்படி அரிதாகப் பிறக்கும், 
வெளிநாட்டு கலப்பின பசுக்கள் கருப்பாக இருந்தாலும் அது காராம் பசுவாக முடியாது. காரம் பசு என்பது நாட்டு மாடு வகையில் தோன்றுவது. 

இந்தப் பசுக்களின் பாலில் மருத்துவ குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. இதன் பால் கெட்டியாகவும், இதிலிருந்து தயாரிக்கப்படும் நெய், வாசனையுடனும் இருக்கும் என்பது ஆச்சரியமான செய்தி. முற்காலங்களில் புகழ் பெற்ற கோயில்களில் காராம் பசுவின் பாலில்தான் அபிஷேகம் செய்திருக்கிறார்கள். இன்றும்கூட காராம் பசுவின் பாலை வழிபாட்டுக்கு பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது.

இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் ஐந்துக்கு மேல் காரம் பசுக்கள் இருப்பதே அரிதுதான். அதனால்தான் அந்த பசு மாடு ஒன்றின் விலை 3 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. தாராபுரம் பகுதியில் சில விவசாயிகள் காராம் பசுவை வளர்த்து வருகிறார்கள்.( அதிக பால் உற்பத்தியே பிரதானமாக கொண்டு அனைவரும் செயல்படுவதால் நாட்டுமாடுகள் எல்லாம் கேரளாவுக்கு அடிமாடாய் போய் இன்று தெய்வீக பசுக்களே குறைந்து போயிற்று...)

மற்ற மிருகங்களின் பால் எல்லாம் குழந்தைகளுக்குக் கொடுக்கும்படியாக இல்லை. கழுதையின் பால் வேண்டுமானால் மருத்துவத்திற்காக ஒரு பாலாடை அளவிற்கு மட்டுமே கொடுக்கும் படியாக உள்ளது. எனவே தினசரி குழந்தைகளுக்கு கொடுக்கும் அளவிற்கு பசும் பால் உள்ளது. மேலும், சைவமாக இருப்பதாலும், சாதுவாக இருப்பாலும், நமக்குப் பயன்பாடாக இருப்பதாலும் அதனை நாம் உடன் வைத்திருக்கிறோம்.
பசுவின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் மனிதர்களுக்காகவே பயன்படுகிறது. உதாரணமாக தன் இரத்ததை அது பாலாக மாற்றித் தருகிறது. அதன் கொம்புகள் பல்வேறு பயன்பாடுகளுக்கும், அதன் தோல் மேளம் செய்வதற்கும் உதவுகிறது. தன்னலமற்றவர்களை உலகம் வணங்கும் என்பதற்கு பொருளாகவே பசுவை வணங்குவதை இந்து மதம் போதித்துள்ளது. 
தாய்ப்பாலுக்கு இணையான மருத்துவ குணமும், புரதங்களும் பசும் பாலில்தான் உள்ளது. ஆட்டுப் பாலில் கூடுதலான புரதங்கள் இருப்பதாக அறிவியல் நிரூபித்தாலும், அது ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் பசும்பால் உடனடியாக செரிக்கும்.
இதிலும் காராம் பசு வகை சில ரக புற்களை மட்டுமே உணவாகக் கொள்ளும். மூலிகைகளுக்கு ஒத்த தன்மையுடைய புற்களை மட்டும் அது உண்ணும். கடைகளில் விற்கப்படும் தீவனங்களை அது விரும்பாது உண்ணாது. காராம் பசு தவிடு, புண்ணாக்கு உள்ளிட் டவை கலந்த புளித்த நீரை குடிக்காது
சாதாரண வகை பசுவுக்கும், காராம் பசுவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. புராணங்களில் கூறப்பட்டுள்ளது போல் இறைவனில் திருமேனி மீது தானாகவே பால் சுரக்கும் வகையைச் சேர்ந்தது காராம் பசுவே. பல கோயில்களின் ஸ்தல வரலாற்றில் இவை கூறப்பட்டிருக்கும்.
தெய்வத்தன்மை உடைய காராம் பசுவின் பால் சுவையும், மருத்துவ குணங்களும் உள்ளதாக இருக்கும். இதற்கு காரணம் மூலிகைகளுக்கு ஒத்த தன்மையுடைய புற்களை மட்டும அது உண்ணும். சந்தைகளில் விற்கப்படும் தீவனங்களை அது விரும்பாது உண்ணாது.
தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவை கலந்த புளித்த நீரைக் கூட காரம் பசு குடிக்காது. இயற்கையாக கிடைக்கும் தண்ணீரைத்தான் அது குடிக்கும்.
இதன் காரணமாகவே அதன் சாணம் மருத்துவ குணம் மிக்கதாகத் திகழ்கிறது. இந்த சாணத்தை நிலத்தில் படாமல், அருகம்புல்லின் மேல் விழ வைத்து, அந்த அருகம்புல்லுடன் அதனை தீயிலிட்டு திருநீறு போல் ஆக்கி, அதனை பூசி வந்தால் தீராத நோயும் தீரும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன. 

இதேபோல் பசுவின் சிறுநீரும் (கோமியம்) மருத்துவ குணம் மிக்கதாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே கிரஹப் பிரவேசத்தின் போது வீட்டிற்குள் கோமியம் தெளிப்பதையும், பசுவை வீட்டைச் சுற்றில் வலம் வரை வைத்து அதனை வீட்டிலேயே சிறிநீர் கழிக்க வைப்பதையும் இந்து மதத்தினர் கடைப்பிடிக்கின்றனர். இதன் காரணமாக அந்த வீட்டிற்கு இறைவன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நகரத்தில் உள்ள பசுக்கள் போஸ்டர்களை தின்று விட்டு பால் கறக்கிறது. அதனைப் பருகுவதால் வேண்டுமானால் நோய் வரலாம். ஆனால் காராம் பசுவின் பால் எந்தக் கெடுதலும் செய்யாது.

பதப்படுத்தப்பட்ட பால் என்று விற்பனை செய்யப்படுவது சுத்தமான பசுவின் பால் கிடையாது. அதில் எருமைப்பால் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் காராம்பசுவின் பாலை குடித்தால் எந்த நோயும் வராது.

நன்றிhttp://www.aanmigakkadal.com/2011/07/blog-post_5726.html