Thursday, July 11, 2013

மாற்றுத் திறனாளிகள்... மகத்தான சாதனைகள்!

ஸ்டீபன் ஹாகிங்
 
பெளதிகத் துறையில் உலகின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்பட்டு வருகிறார் ஸ்டீபன் ஹாகிங். இவரது ஆராய்ச்சித் தொகுப்பான "பிரபஞ்சம் எவ்வாறு உருவானது?' என்பதன் மூலம் பல புதிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
 கை,கால்கள் சரியாக இயங்காமல் இருக்கலாம். பேசும் பேச்சு பிறருக்குப் புரியாமல் இருக்கலாம். உடலில் மேலும் பல குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் சிந்தனையும் தன்னம்பிக்கையும் கொண்டு செயல்பட்டால் உலகம் போற்றும் அறிவியல் அறிஞராக முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஸ்டீபன் ஹாகிங்.
 தர்போது மின்சாரத்தால் இயங்கும் சக்கர நாற்காலியில்தான் பயணிக்கிறார். இவரால் கை,கால்கள் மற்றும் உடலின் பிற உறுப்புகளை நினைத்தபடி இயக்க முடியாது. தலையை நிமிர்த்தி வைத்துக் கொண்டிருக்க முடியாது. மூச்சுத் திணறல் அடிக்கடி ஏற்படும். சிரமப்பட்டுத்தான் உணவே உட்கொள்ள முடியும். அவர் பேச முயற்சித்தாலும் அவருடைய பேச்சைப் புரிந்து கொள்ள முடியாது. வாசனையையும் உணர முடியாது.
 தன் உடலில் இத்தனை குறைபாடுகளையும் வைத்துக் கொண்டு உலகம் போற்றும் விஞ்ஞானியாக வாழ்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
 நம்பித்தான் ஆக வேண்டும்.
 இவருடைய சக்கர நாற்காலி, பல சிறப்பு அமைப்புகளைக் கொண்டது. பாட்டரி மின்சாரம் மூலம் இயங்குவது. அதில் மிகவும் தனித்தன்மை உடைய ஒரு சிறிய கம்ப்யூட்டரும் அமைக்கப்பட்டுள்ளது. அதிகம் செயல்தன்மை இழக்காத தன்னுடைய விரல்களால், இவர் தாம் பேச விருப்புவதை டைப் செய்தால், அது கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்டுள்ள -எழுத்தை ஒலியாக மாற்றும் சிந்தசைசர் என்னும் - கருவியின் மூலம் இவருடைய எழுத்தைப் பேச்சாக மாற்றி இவர் பேசுவது போல ஒலிக்கச் 
 செய்யும்.
 இவருடைய தினசரி வாழ்க்கை முறை இதுதான். ஆனால் முகத்தில் எப்போதும் வாடாத புன்னகை. தனது உடலில் எவ்விதக் குறைபாடும் இல்லை என்ற எண்ணம்.
 இவருக்கு, இவருடைய உடலில் இத்தனை குறைபாடுகள் ஏற்படக் காரணம் 1963-ஆம் ஆண்டு (இருபத்தியொன்றாம் வயதில்) ஏற்பட்ட நரம்பு சம்பந்தமான நோயின் பாதிப்புதான்.
 ஸ்டீபன் ஹாகிங் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் 1942-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர்களுக்கு இவரை ஒரு டாக்டராக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் இவருக்கோ பெüதிகத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. இவருடைய விருப்பம் நிறைவேறியது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த நோய் அவரைத் தாக்கியது. இவர் அதிக காலம் உயிரோடு இருக்க மாட்டார் என்று மருத்துவர்கள் கூறினர். அவர்கள் கூறியதையெல்லாம் முறியடித்து, இன்னும் வாழ்ந்து விஞ்ஞானத்துக்கு அளப்பரிய சேவை செய்து வருவதற்குக் காரணம், இன்றைய மருத்துவத்துறை மற்றும் அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றங்களும் ஸ்டீபன் ஹாகிங்கின் மன உறுதியும்தான்.
 அத்துடன் அந்தக் காலகட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட காதலும் வாழவேண்டிய ஆசையை அவருக்குத் தூண்டிவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.
 நோயின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்த சமயத்தில், தான் காதலிக்கத் தொடங்கிய ஜேன் என்னும் பெண்ணை 1965-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். ஜேன் இவருடைய குடும்ப வாழ்க்கையில் மட்டுமல்லாமல் கல்லூரிப் படிப்பிலும் ஊக்கமும் உதவியும் புரிந்து வந்தார். ஹாகிங் தனது முனைவர் பட்டத்தை 1966-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் 
 பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
 1967-இல் இவருக்கு ஒரு மகனும் 1970-ஆம் ஆண்டில் ஒரு மகளும் பிறந்தனர். இதனால் இவருக்கு வாழ்க்கையில் பிடிப்பு மேலும் அதிகமாகியது. இவரிடம் இவர் மனைவி காட்டிய அன்பும் அன்றாடத் தேவைகளைப் பொறுப்புடனும் கவனத்துடனும் செய்த பாங்கும் இவரை மிகவும் உற்சாகப்படுத்தியது. 1979-ஆம் ஆண்டு மூன்றாவது குழந்தை பிறந்தது.
 ஸ்டீபன் ஹாகிங்கின் வயது முப்பத்தைந்தான போது, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் புவிசக்தி பெüதிகப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவருடைய ஆற்றல் உணரப்பட்டு பல அங்கீகாரங்கள் இவருக்குக் கிடைத்தன.
 இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதே பல்கலைக்
 கழகத்தில் மிக உயர்ந்த பதவியாகக் கருதப்பட்ட பேராசிரியர் பதவிக்கு இவர் உயர்த்தப்பட்டார். உலகப் புகழ்பெற்ற ஐசக் நியூட்டன் வகித்த பதவி இது.
 1988-ஆம் ஆண்டில் "எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் ஃப்ரம் பிக் பாங்க் டூ ப்ளாக் ஹோல்ஸ்' என்னும் விஞ்ஞானத் தகவல்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்று அதில் அவர் தெரிவித்த மிகவும் வித்தியாசமான புதிய ஒப்பரிய கருத்துகள் பற்பல விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
 பெüதிகத் தகவல்கள் அடங்கிய இந்தப் புத்தகத்தில் கணித சம்பந்தமான சமன்பாடுகள் பெரும்பாலும் இல்லாமல் எழுதியிருப்பது மிகவும் வியப்புக்குரியது. சாதாரண கதைப் புத்தகம் படிப்பது போல இந்த விஞ்ஞானத் தகவல்கள் அடங்கிய புத்தகத்தை அனைவரும் ஆர்வத்துடன் வாங்கிப் படித்து எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் கணிதம் சம்பந்தப்பட்ட சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதினார்.
 புத்தக விற்பனையில் நீண்ட காலம் முதலாவது இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்த புத்தகம் - தன்னுடைய சாதனைகளுடன் தனது குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிப் பேசப்படுவதை அவர் விரும்பவில்லை.
 உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ சில குறைபாடுகள் இருக்கும். அதுபோல தனக்கும் சில குறைபாடுகள் உண்டு, அவ்வளவே என்றுதான் ஸ்டீபன் நினைக்கிறார். மிகக் குறைந்த சொற்களைக் கொண்டு மிகத் தெளிவாகத் தனது கருத்துகளை வெளிப்படுத்துவதில் வல்லவர். இவர் தனது கருத்துகளைத் தெரிவிக்கும்போது பல சமயங்களில் மெல்லிய நகைச் சுவையும் வெளிப்படும்.
 வெளிநாடுகளுக்குப் பலமுறை சென்று வந்துள்ளார். பலமுறை திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். தற்சமயம் இவருடன் எந்த நேரமும் சிகிச்சை அளிக்க உதவியாக ஒரு மருத்துவக்குழு கூடவே இருந்து வருகிறது. தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய உடல் குறைபாடுகளை முற்றிலும் மறந்து, தனது கூரிய அறிவுத் திறனைப் பயன்படுத்தி பிரபஞ்சம் பற்றி வியக்கத்தக்க ஆராய்ச்சிகள் செய்துவரும் ஸ்டீபன் ஹாகிங், உலகுக்குச் செய்து வரும் அரிய அறிவியல் சேவை, உடல் குறைபாடுகளுடன் வாழ்க்கையில் வெற்றி பெற முயல்பவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்

 Thanks to செவல்குளம் "ஆச்சா'
 Published : in (Dinamani )சிறுவர் மலர்  on 05 July 2013


Sunday, July 7, 2013

தமிழக அரசுத் துறை சார்ந்த இணைய தளங்களை அறிந்துகொள்வோம்

அரசுத் துறைகள் பல்வேறு சேவைகளை மக்களுக்கு இணையம் மூலம் வழங்கி வருகின்றன. இந்த இணைய சேவைகள் அனைத்தும் இப்போது அந்தந்தத் துறைகளின் வலைத் தளங்களின் மூலம் அளிக்கப்படுகின்றன.
இணையதள சேவை, இணையதள முகவரி, சேவை தொடர்பான இணைப்புகள், சேவையின் நிலை குறித்த தகவல் இடம்பெறும். இதன் மூலம் பொதுமக்கள் அரசின் சேவைகளைப் பெற அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவை குறைக்கும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே இணையதளங்களை வெளியிட்டிருக்கிறது.
இதோ அந்த வெப்சைட்களின் முழுத் தகவல்களும் உங்களுக்காக.

* சான்றிதழ்கள் பெற...
பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf
http://www.tn.gov.in/appforms/death.pdf
சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

* E-டிக்கெட் முன் பதிவு:
ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/

விமான பயண சீட்டு:
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/

* E-Payments (Online):
BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx

Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/

E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/

NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி

E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.rediff.com/shopping/index.html

Share Market - பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/

* கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118
http://www.indianbank.in/education.php
http://www.iob.in/vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp
http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm

பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results

சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge

இணையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/

UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/
http://trb.tn.nic.in/

உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/

இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/

இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/

Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/

* கணினி பயிற்சிகள் (Online)
அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html
சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html
சிறார்களுக்கு கணிதப் பயிற்சி
http://www.mathsisfun.com/

இ - விளையாட்டுக்கள்
http://www.zapak.com/
http://www.miniclip.com/
http://www.pogo.com/
http://www.freeonlinegames.com/
http://www.roundgames.com/\

ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/
http://www.wikipedia.com/
http://www.hotmail.com/
http://www.yahoo.com/
http://www.ebuddy.com/
http://www.skype.com/

* பொது சேவைகள் (Online)
தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/
http://www.rtiindia.org/forum/content/
http://rti.india.gov.in/
http://www.rti.org/

சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/
http://www.india-tourism.com/
http://www.theashokgroup.com/
http://www.smartindiaonline.com/

திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/
http://kalyanamalai.net/
http://www.bharatmatrimony.com/
http://www.shaadi.com/

குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/
ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://freehoroscopesonline.in/horoscope.php
இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/
இணையதள மூலமாக உங்களுக்கு தேவையான அகராதியை பார்க்க
http://www.enchantedlearning.com/Dictionary.html
http://dictionary.tamilcube.com
http://ta.wiktionary.org/wiki/
http://www.tamildict.com
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/
http://www.bbc.co.uk/
SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx
இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx

* மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
http://www.filehippo.com/
* வணிகம் (Economy)
தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/
http://www.rates.goldenchennai.com/
http://www.bullionrates.in/p/live-bullion-rates.html
வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/
http://www.xe.com/
* அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)
பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/
பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html
* அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)
குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf
மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf
பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf
நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf
ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf
http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf
மேற்கண்ட இணையதளங்களை இருந்த இடங்களிலிருந்து பயன்படுத்தி அரசின் திட்டங்கள், அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெற அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவை குறைத்து பயன் பெறலாம்.


First Published :in Dinamani 07 July 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 27/2013)


கவலைப்படாதே
Posted: 30 Jun 2013 11:14 PM PDT
கடவுள் நம்மை வைத்திருக்கும் நிலையில் நாம் திருப்தியடைவோம்;நம் சங்கல்பங்களை அவருடைய சங்கல்பத்திற்க்கு   அர்ப்பணிப்போம்.கிடைப்பதை ஏற்றுக்கொள்.திருப்தியுடனும்,மகிழ்ச்சியுடனும் இரு.ஒருபோதும்
கவலைப்படாதே.அவருடைய ஒப்புதல்,சங்கல்பம் இன்றி ஓரணுவும் அசையாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 02 Jul 2013 03:00 PM PDT
புரந்தரே என்ற பக்தர் : தாங்கள்(பாபா) ஏன் இவ்வளவு பணம் தக்ஷிணையாக  கேட்கிறீர்கள்?

பாபா: நான் எல்லோரிடமும் கேட்பதில்லை.ஆண்டவன் யாரை குறிப்பிட்டு காட்டுகிறாரோ அவரிடமிருந்து மட்டுமே கேட்கிறேன்.ஆனால் பதிலுக்கு,நான் பெற்றுக் கொண்ட தொகையைப் போல் பத்து மடங்கு அந்த நபருக்கு நான் கொடுக்க வேண்டியதாகிறது.எனது சொந்த உபயோகத்துக்காக நான் பணம் பெறுவதில்லை.எனக்கு குடும்பம் எதுவும் கிடையாது.

ஒவ்வொரு தினமும் காலையில் பாபா கையில் ஒன்றுமே இல்லாத எளிய பகீர்;பகல் முழுவதும் தக்ஷிணைகள் குவியும்.மாலை அல்லது இரவில் சேர்ந்த தொகை முழுவதும் பட்டுவாடா செய்து விடப்பட்டுவிடும்.பாபா மறைந்த போது சுமார் பத்து ஆண்டுகள் ஒரு கவர்னருடைய வருமானத்துக்கு சமமான தக்ஷிணையைப் பெற்று வந்த போதும்,அவர் கையில் எஞ்சி இருந்தது ரூ.16 மட்டுமே.பாபா ரூபாய்களை தூசாக மதிப்பவர்.அவர் விரும்புவது உங்கள் மனமும் இதயமும்,உங்கள் நேரமும் ஆன்மாவும் அவரிடம் ஈடுபடுத்தபட வேண்டுமென்பது
Posted: 03 Jul 2013 03:00 PM PDT
என்னிடம் திட விசுவாசம் கொண்ட எவருடைய தேவையும் கிட்டாமற் போகாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாமட்டுமே.

Posted: 04 Jul 2013 03:00 PM PDT
இறைவனை நினை;நானெனும் மமதையை கொன்று விடு.காமத்தை வெல்லாத ஒருவனால் இறைவனைக் காண முடியாது;அதாவது இறையனுபவம் பெற முடியாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
Posted: 05 Jul 2013 03:00 PM PDT

பக்தர் : பாபா நீண்ட நாட்களாக அடியேன் ஒருமைப் பாடான நிலைத்த மனத்துடன் தங்களுக்கு சேவை செய்து வருகிறேன்.அதற்கான பலன் கிட்டிவிட்டது என்பதை நான் எப்படி உணர முடியும்?

பாபா:நம்மிருவருடைய உள்ளங்களையுமே மகிழ்விக்கக் கூடிய உன் சேவையின் பலன் எப்போதெனில்,நீ ஒரு கப்னி அணிந்து,பிக்ஷையின் மூலம் உண்ண ஆரம்பிக்கும்போது(அதாவது நானே நீ என்ற உணர்வு பெற்று பற்றுக்களையும் துறக்கும் போது).
Posted: 06 Jul 2013 03:00 PM PDT
வரவேற்றாலும்,முகத்தைத் திருப்பிக்கொண்டாலும்,நடப்பது நடந்தே தீரும்.பாபாவுடனான நமது தொடர்பு மட்டுமே நம்மை இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பால் கொண்டு செல்ல முடியும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.(ஸ்ரீ சாயி இராமாயணம் )