Saturday, August 17, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 33/2013)


 
Posted: 11 Aug 2013 03:00 PM PDT
எனது பக்தனை நான் மறக்கமாட்டேன்.அவன் இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும்,நான் எப்போதும் அவனை நினைத்திருப்பேன்.அவன் இல்லாமல் ஒரு துளி கூட நான் உண்ணமாட்டேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 12 Aug 2013 03:00 PM PDT
பக்தர்: பாபா,என்னை ஏன் இங்கு (ஷிர்டி) வரவழைத்தீர்கள்?
பாபா: உலகில் ஆயிரக் கணக்கானவர்கள் உள்ளனர்.அவர்கள் எல்லோரையும் வரச் சொல்கிறேனா?உம்மை மட்டும் தருவிக்க ஏதாவது
விசேஷ காரணங்கள் இருக்க வேண்டாமா?

பக்தர்: இருக்கலாம்.ஆனால் எதையும் என்னால் காண முடியவில்லை.

பாபா: நீயும் நானும் பல ஜன்மங்களில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்திருக்கிறோம்.உமக்கு அது தெரியாது;ஆனால் நான் அறிவேன்.ஆகையால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது இங்கே {ஷிர்டி}வந்து போய்க் கொண்டிரும்.
இலவசம்
Posted: 13 Aug 2013 03:00 PM PDT
பிறருடைய உழைப்பை (பொருள் உட்பட)இலவசமாக ஒரு போதும் பெறாதே.இது உன் வாழ்க்கையில் ஒரு விதியாக இருக்க வேண்டும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 14 Aug 2013 03:00 PM PDT
நீ என்னை சார்ந்தவன்,என்னை மட்டுமே சார்ந்தவன்.ஒவ்வொரு அடியிலும் நான் உன்னை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.உனக்கு என்ன நேரும் என்பதை நான் மட்டுமே அறிவேன்.உன்னை கரையேற்றும் பொறுப்பை நான் தான் வகிக்க வேண்டும்.என்னை விட்டால் உனக்கு வேறு எவர் உளர்?-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 15 Aug 2013 03:00 PM PDT
வைதீகம், பட்டினி, சிலவற்றை ஒதுக்கி வைக்கும்முறை - இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர் விரும்புவது எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.  
Posted: 16 Aug 2013 03:00 PM PDT
மிக உயர்ந்த செல்வம் ஏழ்மையே;ஒரு பிரபுவின் அந்தஸ்தைக் காட்டிலும் அது உயர்ந்தது.ஏழைகளின் தோழன் இறைவன்.பகீரே உண்மையான பேரரசர். துறவுத் தன்மை அழிவதில்லை.ஆனால் சாம்ராஜ்யம் விரைவில் மறைகிறது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 17 Aug 2013 03:00 PM PDT

நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் பக்தியுடனும், விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும், விசுவாசத்திற்க்கும் ஏற்றவாறு இரவு பகலாக உங்களுடன் திடமாக நிற்கிறேன்.-
ஷிர்டி சாய்பாபா

Sunday, August 11, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 32/2013)


Posted: 04 Aug 2013 03:00 PM PDT
பாபாவினுடைய இரு பாதங்களையும் பற்றிக் கொண்டவர்களுடைய பாவங்கள் அனைத்தும் அழியும்.பூர்வஜன்ம நல்வினைகளின் பலன் மேல் தளத்திற்கு எழும்பும்.வாழ்க்கை பாதையில் பயமோ தடைகளோ வாரா.பக்தர்களின் மனோரதங்களை சாயி பரிபூரணமாக அறிவார்;அவற்றை நிறைவேற்றவும் செய்கிறார்.அதன்மூலமாக,பக்தர்கள் வாழ்க்கையில் நிறைவு பெற்றவர்களாகிறார்கள். 
Posted: 05 Aug 2013 03:00 PM PDT
"துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு             உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்".
பாபாவின் திருவாய்மொழியை விகற்பமாகப் பார்ப்பவர்களுக்கு எந்த சங்கற்பமும் நிறைவேறாது.சங்கற்பம் சக்தியில்லாததும் பலனளிக்காததுமான பிதற்றலாகவே முடியும்.பாபாவின் வசனத்தின் பொருளை எவர் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாரோ,அவர் இகத்திலும் பரத்திலும் நலம் பெறுவார்.எவர் அதில் தோஷமும் குதர்க்கமும் காண்கிறாரோ,அவர் அதலபாதாளத்தில் வீழ்கிறார். 
Posted: 06 Aug 2013 03:00 PM PDT
சிந்தனையை சாயியின் நினைவில் வைத்து,கண்கள் சமர்த்த சாயியின் பாதங்களில் நிலைபெற்று,மனம் சாயி தியானத்திலேயே ஈடுபடுபவருடைய தேஹம் முழுவதும் சாயியின் சேவைக்கு அர்ப்பணமாகிறது.
Posted: 07 Aug 2013 03:00 PM PDT
எந்நேரமும் பாபாவிற்கு சேவை செய்வதிலேயே கண்ணாக இருந்து ,பாபாவின் ஆணைக்குக் கீழ்படியும் பக்தர்,தான் செய்யும் செயல்களின் முடிவை பாபாவின் தலைச்சுமைக்கு விட்டுவிடுகிறார்.வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும்,அது பாபாவின் ஆணை.பாபாவின் ஆணைக்கு பக்தன் அடிமை.சுதந்திரமான கருத்தென்பது அவருக்கு இல்லை.பாபாவின் வசனத்தை எந்நேரமும் பரிபாலனம் செய்யும் ஆர்வத்தில்,நல்லதா/கெட்டதா என்ற ஆராய்ச்சியும் அவருக்கு இல்லை.
Posted: 09 Aug 2013 03:00 PM PDT
படைக்கும் தெய்வமாகிய பிரம்மாவிலிருந்து புல்பூண்டு வரை இப்பிரபஞ்சத்தில் எங்கும் நிலவியிருக்கும்,அளவற்றதும் முடிவற்றதும் பின்னமில்லாததுமான முழுமுதற்பொருளே சாய்பாபாவாக உருவெடுத்திருக்கிறது.சாயி ஒரு சாதாரண மனிதரே என்று நினைப்பவர்கள் மந்தமதிபடைத்தவர்கள்; துரதிருஷ்டசாலிகள். அரிதாகக் கிடைக்கும் இவ்வதிருஷ்டத்தை அவர்கள் எவ்வாறு அனுபவிக்க முடியும்?சாயி ஆத்மபோதத்தின் சுரங்கம்;பூரணமான ஆனந்தத்தை அனுபவிக்கும் விக்கிரஹம்.சம்சார சாகரத்தை முழுமையாகவும் பாதுகாப்புடனும் கடப்பதற்கு அவரைச் சட்டென்று பற்றிக்கொள்வோமாக!
Posted: 10 Aug 2013 03:00 PM PDT
உனது பிரேமையை தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை.செயல் புரியாதது போல் நான் காணப்படினும்,ஒருபோதும் உன்னை கவனியாமலிருந்தது  இல்லை.என்னுடைய கிருபையால் நீ இப்போதைய நிலையை அடையப் பெற்றிருக்கிறாய்.உனக்கென்ன நிர்ணயிக்கப்பட்ட கடமையை செய்;உனது உடல்,வாக்கு,உயிர் முழுவதையும் எல்லாவற்றையும் வியாபித்து நிற்கும் தன்மையுடைய என்னிடம் அர்ப்பணம் செய்யவேண்டும்.என்னிடம் விசுவாசம் வைப்பது இப்போது உனக்கு மிகவும் அவசியமாகிறது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.Saturday, August 10, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 31/2013)

Posted: 28 Jul 2013 03:00 PM PDT
சாய்பாபாவின்  பாதங்களில் நம் அகங்காரத்தை சமர்ப்பித்தாலன்றி நமது வேலையில் நாம் வெற்றி பெறமாட்டோம். நம் அகங்காரத்தை ஒழித்தால் நமது  வெற்றி உறுதி அளிக்கப்படுகிறது
Posted: 29 Jul 2013 03:00 PM PDT
மஹானுபவரான சாயி மஹராஜைத்  தவிர உனக்கு  வேறெந்த துணையும் இல்லை.முழுமையான விசுவாசத்துடனும் பக்தியுடனும் நீர் பாபாவின் உதீயை ஏற்றுக்கொண்டால்,அது தன்னுடைய சக்தியைத் தானே வெளிபடுத்தும்.பக்தி பா(BHA)வத்துடன் உதீயை அணுகவும்.பிறகு அது விளைவிக்கும் அற்புதத்தைப் பார்க்கலாம்.அது உடனே உம்மை இன்னல்களிலிருந்து விடுவிக்கும்.உதீயினுடைய இயல்பான குணம் இதுவே.
Posted: 30 Jul 2013 03:00 PM PDT
என்ன நடக்கப் போகிறதோ அது நடக்கட்டும்.ஆனால்,அது பாபாவின் விருப்பப்படியே நடக்கும் என்ற திடமான சங்கல்பத்தை ஏற்றுக்கொண்டு இருங்கள்.வேண்டுவதோ வேண்டாததோ,சுகமோ துக்கமோ,அமிருதமோ விஷமோ-இந்த இரட்டைச் சூழல்கள் நாம் சேர்த்த வினைகளுக்கு ஏற்றவாறு வெள்ளம்போல் நம்மை நோக்கிப் பாய்கின்றன.ஆகவே அவற்றைக் கண்டு சிரிக்கவும் வேண்டாம்,அழவும் வேண்டாம்.எது எது நேர்கிறதோ,அது அதைப் பொறுத்துக்கொள்ளவும்.பாபாவே நமது ரட்சகர்;எப்பொழுதும் அவரையே தியானம் செய்வீராக.பாரம் சுமப்பவர் அவரே!
" நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்"
பாபாவின் வாக்கு வெறும் சொற்களல்ல;பிரம்மதேவன் எழுதும் தலையெழுத்துக்கு சமம்.மனிதனுடைய கர்மவினையின் பலன்களையும் தடுத்து நிறுத்தும் சக்தி வாய்ந்தவை
Posted: 31 Jul 2013 03:00 PM PDT
ஸ்ரீ சாய்பாபாவின் வழிமுறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை!பாபாவின் பாதங்களில் மூழ்காமல்,அவருடைய யதார்த்தமான சொரூபம் கைக்கு எட்டாது.பாபாவின் பாதங்களில் ஒட்டிக்கொள்வதே நமக்கு எல்லாவற்றுக்கும் மேன்மையான லாபம்.
Posted: 01 Aug 2013 03:00 PM PDT
நான் யார் மீதாவது கோபப்படுவது போலத் தெரிந்தாலும்,என்னுடைய இதயத்தில் கோபமே கிடையாது.தாய் தன் குழந்தையை எட்டி உதைத்துத் தள்ளினால் தான்,கடல் ஆற்றை வராதே என்று திருப்பியடித்தால் தான்,நான் உங்களை வெறுத்து ஒதுக்கி இன்னல் செய்வேன்.நான் என் பக்தர்களின் பிடியில் தான் இருக்கிறேன்;அவர்கள் பக்கத்தில் நிற்கிறேன்.எப்பொழுதும் அவர்களுடைய அன்பை தாகத்துடன் நாடுகிறேன்;துன்பத்தில் அவர்கள் கூப்பிடும்போது ஓடிவருகிறேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 02 Aug 2013 03:00 PM PDT
ஊரும் பெயரும் இல்லாத சாயி அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர்.கடைக்கண் பார்வையால் ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்!
தனது பக்தனின் எல்லா காரியங்களையும் முன் நின்று நடத்துபவர் அவரே.அதேசமயம் எந்த விஷயத்திலும் சம்பந்தபடாதவர் போல் தோன்றுகிறார்.அவர் எவர்களுக்கெல்லாம் கிருபை செய்ய விரும்புகிறாரோ அவர்களிடமெல்லாம் பலவிதமான மாறுவேஷங்களில் தோன்றுகிறார்.கணக்கற்ற அற்புதங்களை திட்டமிட்டு நிறைவேற்றுகிறார்.அவரை தியானத்தாலும் பிரேமை பொங்கும் பஜனையாலும் அணுக முயல்பவர்களுடைய தேவைகள் அனைத்தையும்  நிறைவேற்றி அவர்களைப் பாதுகாக்கிறார்.

Posted: 03 Aug 2013 03:00 PM PDTஎன்னை வேறொன்றிலும் நாட்டமில்லாமலும் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமலும் இரவுபகலாகத் தொழுபவன் இரண்டென்னும் மாயையை வென்று என்னுடன் ஐக்கியமாகிவிடுகிறான்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.