Thursday, March 21, 2013

பங்குனி உத்திர நாயகன்!


பங்குனி உத்திர நாயகன்!

கும்பமுனி அகத்தியர் சாஸ்தா பக்தர் என்பதற்கு சபரிமலையின் மூலாதாரக் கோயிலாக கருதப்படும் சொரிமுத்து ஐயனார் கோயில் (அம்பா சமுத்திரம் தாலுக்கா, நெல்லை மாவட்டம்) சாட்சியாக விளங்குகிறது. கி.மு. 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் ""பிங்கள நிகண்டு (தமிழ் அகராதி), ஹரிஹரபுத்திரன், ஐயன், ஆர்யன், பூரணைக் கேள்வன், புட்கலை மணாளன், அறந்தைக் காப்போன், சாகவாகனன், கோழி கொடியோன், சாத்தன், வெள்ளையானை வாகனன், காரி (குதிரை வாகனமுடையோன்), செண்டாயுதன்,யோகி,கடல் நிற வண்ணன் எனப் பல பெயர்களை சாஸ்தாவிற்கு கூறுகிறது.
சாஸ்தா வழிபாடு துருக்கி, கம்போடியா, கலிபோர்னியா ஆகிய இடங்களில் இருந்ததாக ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது. இந்நிலையில் பங்குனி உத்திரத்தினை ஒட்டி, வரும் 31ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மறைமலைநகர் பாலாஜி திருமண மண்டபத்தில் முதன்முறையாக சம்பிரதாய சாஸ்தா ஜெயந்தி நடக்கிறது.
தகவலுக்கு: 98402 58639
நன்றி:. ஆர். மகாலிங்கம்/ தினமணி-வெள்ளிமணி
First Published : 21 March 2013 03:51 PM IST


காஞ்சி ஸ்ரீ மகாபெரியவர்- ஞானியின் வெள்ளரிப்பழ முக்தி!


மாயையை விட்டு ஞானி விலகுகிறான் என்று இல்லாமல் ஞானியை விட்டே மாயை விலகுகிறது. இந்த விஷயம் த்ரயம்பக மந்திரத்திலும் சொல்லப் பட்டிருக்கிறது. பந்தத்திலிருந்து உர்வாருகம் மாதிரி விடுபட வேணும் என்று முக்கண்ணனான பரமேச்வரனைப் பிரார்த்திக்கும் மந்த்ரம் அது. பந்தம் என்பது ஸம்ஸôர மாயை. அதுதான் த்வைத இந்திர ஜாலம். உர்வாருகம் என்பது வெள்ளரி.
வெள்ளரிப் பழம் மாதிரி விடுபட வேண்டும் என்றால் என்ன? 
அந்தப் பழம் முற்றிக் கனிந்த பிறகும் மற்ற பழங்கள் மரத்திலிருந்து விழுவதுபோல் விழுவதில்லை. ஏனென்றால் அது பழுப்பது, காய்ப்பது எல்லாமே மரத்தில் இல்லை கொடியில்தான். வெள்ளரி என்பது கொடியே தவிர செடியோ மரமோ இல்லை. அந்தக் கொடியையும் பந்தல் போட்டு படர விடும் வழக்கம் கிடையாது. முழுக்க பூ ஸ்பரிசம் இருந்தால்தான் அந்தக் கொடியின் வளர்ச்சிக்கு நல்லது என்பதால் நிலத்திலேயேதான் படர விடுவது வழக்கம். அதனால், ஒரு வெள்ளரிக்காய் நன்றாகக் கனிவதும் நிலமட்டத்தில்தான். இப்படி பழம் முற்றி கனிந்தவுடன் காம்பு, தானே இற்றுப் போய்விடும். ஆனாலும் பழம் இருந்த இடத்திலேயேதான் இருக்கும். ஏனென்றால் அதுதான் விழ முடியாமல் நில மட்டத்திலேயே இருக்கிறதே! கொடி படர்ந்து கொண்டே இருக்கும். அப்போது பழம் எந்த இலைப் பாகத்தோடும் காம்போடும் ஒட்டிக் கொண்டிருந்ததோ அவையும் சற்று தள்ளி நகர்ந்து போய்விடும். அதாவது, காம்புதான் இதை விட்டு விலகிற்றே தவிர, இது விலகுவது, விடுபடுவது என்பது இல்லையே.
இதே போலத்தான், ஞானி சம்ஸôர பந்தத்திலிருந்து விடுபடுவது என்பது. அது ஒரு விருட்சம் மாதிரியும், இவன் அதில் முற்றிப் பழுத்து விழுவது மாதிரியும் இல்லை. ஞானத்தில் அவன் பழுத்த பழமான பின்னும், அவன் இருந்தபடியேதான் இருப்பான். வெளியிலே அவன் செயலாற்றினாலும் உள்ளே சலனமே இல்லாமல்தான் இருப்பான். ஸம்ஸôரத்திலிருந்து விடுபட்டு அப்புறம் மோட்சம் என்று எங்கேயோ ஓர் உலகத்துக்குப் போவது என்பதே அவனுக்கு இல்லை.
துவைதிகள்தான் அப்படி எங்கேயோ உள்ள ஒரு மோட்சத்துக்குப் போவது. அத்வைத ஞானி இங்கேயே, இந்த லோகத்திலேயே, சரீரத்திலே இருப்பதாகத் தெரியும்போதே ஆத்ம சாட்சாத்காரம் பெற்றவன். அதுதான் விடுபட்ட நிலையான மோட்சம் என்பது. விடுபட்ட என்றாலும், இவன் ஒன்றும் விடுபடும் காரியம் பண்ணவில்லை. இவன் பண்ணியது ஆத்மாவே குறியாக விசாரம் செய்ததுதான். அதனால் சாட்சாத்காரம் வந்து, தான் ஆத்மாவே என்று தெரிந்து கொண்டு அதுவாகவே இருப்பான். அப்போது பந்தம், சம்ஸôர மாயை என்பது அதுவே கத்தரித்துப் போய்விடும்.
துவைதம் நகர்ந்து ஓடிப் போய்விடும். வெள்ளரிப்பழம் பூமியிலே இருப்பதுபோல இவனும் லோகந்தில் முன்பு எங்கே இருந்தானோ அங்கேயே ஜீவன்முக்தன் என்ற பெயரில் தொடர்ந்தும் இருந்து கொண்டிருப்பதாகத் தெரியும்.
ஆனாலும் லோகத்தில் தனி ஜீவ மனஸின் வாழ்க்கை என்று வேரோடிப் படர்ந்திருந்த ஒரு கொடியோடு இவனுக்கு முன்பு இருந்த பிணைப்பு இப்போது கத்தரித்துப் போயிருக்கும். இவனாக விடுபடாமலே, இவனை விடுவித்துவிட்டு, அது ஓடிப் போயிருக்கும். இதுதான் வெள்ளரிப்பழ முக்தி
நன்றி:வெள்ளிமணி-நாள்-22/3/2013.

ஆதிகாலத்தில் சூரியனுக்கு என்று தனி மதமும் வழி பாடும் இருந்தது





ஆதிகாலத்தில் சூரியனுக்கு என்று தனி மதமும் வழி பாடும் இருந்தது இன்று இந்து மதத்தில் சூரியனை கடவுளாக வணங்கும் முறை நடைமுறையில் இருக்கிறதா?
நமது இந்து மதத்தில் ஆறு விதமான உட்பிரிவுகள் உள்ளன.
திருமாலை வழிபடும் வைஷ்ணவம், சிவனை வழிபடும் சைவம், முருகனை வழிபடும் கௌமாரம் கணபதியை வழிபடும் காணாபக்தியம், சக்தியை வழிபடும் சாக்த்தம். சூரியனை வழிபடும் சௌரம் என்பது அந்த ஆறு பிரிவுகளாகும்.
இவை எல்லாம் ஒரு காலத்தில் தனித்தனியாக இயங்கின. சண்டை போட்டன. தலையை பிய்த்து கொண்டு நடுத்தெருவில் புரண்டன.
இதனால் இந்து தாய் பலவீனமாக கிடந்தாள். கடைசி மூச்சை கையில் பிடித்துக் கொண்டு விழி பிதுங்கி கிடந்தாள்
மரண படுக்கையில் கிடந்த அவளை அமணம், சமணம், பௌத்தம் சாருவாகம் போன்ற மத பிரிவுகள் கழுத்தை நெறித்தன, நெஞ்சில் மிதித்து குதித்தன,
கடைசி தாகத்திற்கு யாராவது ஒரு சொட்டு தண்ணீர் தர மாட்டார்களா என நமது தாய் துடித்த போது அவள் வாயில் தண்ணீரை அல்ல அமுதத்தையே கொண்டு வந்து புகட்டியவர் கௌடபாதரின் சீடர் பகவத் பாதர் ஆதிசங்கரர்.
இவர் மட்டும் இந்தியாவில் தோன்றவில்லை யென்றால் நீங்கள் கிறிஸ்டோபர் ஆகியிருப்பீர்கள், நான் அமானுல்லா ஆகியிருப்பேன்.
அதாவது அறிவு சுரங்கமான நமது மதம் காலம் என்னும் யானையின் காலில் சுண்டெலி போல சிக்கி நசுங்கி போயிருக்கும்.
மகாவீரரை போல, புத்தரை போல ஆதிசங்கரர் புதிய மதத்தை உருவாக்கவில்லை.
சிதறி கிடந்த நவமணிகளை ஒன்று படுத்தி பழைய மாலைக்கு புதிய மெருகு கொடுத்தார்.
அவர் ஆறு மதப் பிரிவுகளையும் ஒன்றாக நோக்கினார்
இன்று நமது இந்து தர்மத்தில் தனிப்பட்ட பின்பற்றுவோர்கள் இல்லையென்றாலும் சூரிய வழிபாடு என்ற சௌரம் நிலைத்து நிற்பதற்கு அவரே காரணம்.
ஞான பானு என்ற சூரியன் இல்லையென்றால் உயிர்கள் உயிர்கள் இல்லை, உலகமும் இல்லை.
அவனுடைய சக்தியால் தான் மரங்கள் வளர்கின்றன. நுரையீரல் சுவாசிக்கின்றது.
கண்ணெதிரே தெரியும் சூரிய நாராயணனை ஆதிக்காலதிலிருந்தே இந்துக்கள் வழிப்பட்டு வந்தனர்.
உலகம் எல்லாம் ஏதோ ஒரு வகையில் சூரிய வழிபாடு இருந்தது என்றாலும் இந்துக்கள் மட்டும் தான் சூரியனை தனிப்பெரும் கடவுளாக வழிபட்டனர்.
பரந்து விரிந்தும் சர்வத்திற்கும் சாட்சியாகவும் அஞ்ஞான இருளை போக்குவதாகவும் கால தேச வர்த்தமானத்தால் பாதிக்கப்படாததாகவும் எழுந்து நிற்பது உதய சூரியன்.
ரிக் வேதம் சூரியனை அக்னியின் முதல்வன் என்று போற்றுகிறது.
யஜுர் வேதம் சகல உலகத்தையும் காப்பவன் என்று பாடி பணிகிறது.
சாம வேதம் உலகத்தை ஒளிர்விப்பவன் என கீதம் இசைக்கின்றது.
சதபத பிரம்மானம் சூரியனை ஜோதி பிழம்பு என்றும் தங்க ஆரங்களால் ஆன வட்டம் எனவும் வியந்து போற்றுகிறது.
பவிச புராணம், பிரம்ம புராணம், வராக புராணம், மச்ச புராணம், அக்னி புராணம், கருட புராணம், பவிஷோதிர புராணம், காளிகா புராணம், மார்க்கண்டேய புராணம் ஆகிய பழம்பெரும் புராணங்களில் சூரிய வழிபாட்டின் மேன்மைகள் விவரிக்கப்படுகின்றன.
சர்வ வியாவியான கடவுளாகிய கிருஷ்ண புருஷோத்தமன் தனது அமுத மொழியான பகவத் கீதையில் பிரகாசிக்கும் பொருளில் நான் சூரியன் என்று ஆதவனுக்கு இறை முத்திரை தருகிறார்.
சூரியன் காலிலிருந்து தொடை வரை கவசமும் கைகளில் தாமரை பூவும், தலையில் மகுடமும், காதுகளில் மகர குண்டலமும், பிரசன்ன முகத்தில் இளம் முறுவலும், சிவப்பான குருதி வட்டமும் உடைய தோற்றத்தில் வண்ண ஒவியமாக படம் பிடித்து காட்டுகிறார் வராகிமிகிரர் தான் எழுதிய பிரகத் சங்ஹிதை என்ற நூலில்,
சிவாகமங்கள் சூரியனை சிவசூரியன் என்கிறது.
தாய் தெய்வ வழிபாட்டில் சூரியன் அன்னையின் தேக ஒளியாகிறான்.
இப்படியெல்லா மத பிரிவிற்குள்ளும் சூரிய வழிபாடு தழைத்தோங்கி இருக்கிறது.
சூரியனுக்கு பாரசீகர்கள் வைத்த பெயர் மித்திரன். கிரேக்கர்கள் வைத்த பெயர் அப்பல்லோ, ரோமர்கள் வைத்த் பெயர் தைபிரியஸ்,
எகிப்து வட அமெரிக்கா என எல்லா இடங்களிலும் சூரிய வழிபாடு தொன்று தொட்டு நடந்து வந்துள்ளது.
எகிப்தை ஆண்ட பாரோ மன்னர்கள் தங்களை சூரிய குமார்கள் என பெருமையாக அழைத்து கொண்டது போலவே, இந்திய மன்னர்களும் தங்களை சூரிய வம்சம் என அழைத்து கொண்டனர்.
பழங்கால அரசர்கள் பலர் சூரியனுக்கு தனி கோவிலே எழுப்பியுள்ளனர்.
முதலாம் குலோத்துங்க சோழன் தஞ்சை மாவட்டம் திருமங்கல குடியில் சூரியணார் கோவிலை எழுப்பினார்.
கங்க வம்சத்தை சேர்ந்த முதலாம் நரசிம்மன் கோணார்க்கில் உள்ள சூரிய கோயிலை பதின்மூன்றாம் நூற்றாண்டில் கட்டினார்.
சோளங்கி வம்சத்தாரால் பதினாறாம் நூற்றாண்டில் குஜராத்தில் முதேரா சூரிய கோவில் கட்டப்பட்டது.
வட குஜராத்திலும், ராஜஸ்தானிலும், வங்காளத்திலும், காஷ்மீரத்திலும் பல அரசர்களால் கட்டப்பட்ட சூரிய கோவில்கள் உள்ளன.
தனியான பக்தர் கூட்டம் சூரியனுக்கு என்று பெரியதாக இல்லையே தவிர சூரியனை வழிபடாத இந்துக்களே இல்லை எனலாம்.
மந்திரங்களில் தலைசிறந்தது என வர்ணிக்கப்படும் காயத்ரி மந்திரமே சூரியனை நோக்கி செய்யும் பிராத்தனை தான்.
காலை சூரியன் உடலை ஆக்குகிறான் அப்போது அவன் பிரம்மா
மாலை சூரியன் அதை பாதுகாக்கிறான் அப்போது அவன் நாராயணன்
மதிய சூரியனோ சம்ஹார மூர்த்தியாகிறான் அப்போது அவன் மகேஸ்வரன்
எனவே மும்மூர்தியாகவும் சூரியன் இருக்கிறான்.
எந்த கடவுள் உலகத்தில் உள்ள இருளை போக்கி ஒளியை தருகிறானோ அவன் நமது இதயத்தில் பிரகாசிக்க சூரிய வடிவாக காட்சி தருகிறான்.
எனவே அன்றும் இன்றும், என்றும் இந்துக்களின் வழிபாட்டில் சூரியன் இருப்பான்.

Monday, March 18, 2013

அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?


பசுமையான நினைவுகள் 

'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?
" OLD IS GOLD
"
'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள்  நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டக்காரர்களே!

WE ARE AWESOME !!!!
OUR LIFE IS A LIVING PROOF



·         தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்!
·         எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
·         கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
·         நாம் புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.
·         சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஓட்டி விளையாண்டது இல்லை.
·         பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான்! ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
·         நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான், நெட் நண்பர்களிடம் இல்லை.
·         தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம்; ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
·         ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
·         அதிக அளவு இனிப்பு பண்டங்களையும், தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் யாரும் ஓவர் குண்டாக இருந்ததில்லை.
·         காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
·         சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
·         உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை. மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே நாம் உடல் வலிமை பெற்றவர்கள்.
·         எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்!
·         எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஓடியவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே, பொருட்களை அல்ல.
·         அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது. அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட வேண்டிய அவசியமிருந்ததில்லை.
·         உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார், டாக்டரை தேடி ஓடியதில்லை!
.
·         எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை.

 
உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
·         எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளே  ஸ்டேஷன்எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம், பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவைகள் இல்லை - ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்.
·         வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

·         எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமூகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர். இந்த காலம் போல சமூக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
·         உறவுகள் அருகில் இருந்தது - உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை.
·         நாங்கள் எடுத்த புகைப் படங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
·         இலவசம் பெறும் பிச்சைக்  காரர்களாக இருந்ததில்லை.
·         அந்த காலங்களில் பிறந்து வளர்ந்து வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்!


Thanks to  Doraiswamy Arunachalam -&Venkataraman Natesan