Friday, December 28, 2012

பசுக்கள் தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு






 லட்சியம் கிராமம் தன்நியைவு அடைவது அதிலும் குறிப்பாக அச்சன்கோவில்-மேக்கரை மையமாக ஒரு முன்னேறத்தை அடைவது


பசுவை வாழவைக்கவும் வளர்க்கவும்என்ற இலட்சியத்துடன் அரசன்கோசாலா என்ற ஒரு அமைப்பை தொடங்கும் எண்ணம்  அறிவிக்கப்பட்டு ஒத்த கருத்துள்ள பல நல்ல உள்ளங்களால் வரவேற்று எற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த அமைப்பைப் பற்றி அறிவிக்கவும்- ஆலோசிக்கவும், 23/9/12 அன்று மாலை 3 மணிக்கு,  1/5 பாலாட் மாதவன் தெரு, சென்னையில் சுமார் 28 பேர் கொண்ட கூட்டம் கூடியது. திரு சாரதி அவர்களின் இறைவணக்கத்துடன் கூட்டம் ஆரம்பம் ஆனது.
முதலில் விருந்தினர்களின் அறிமுகமும அதன் பின் கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்றன.
திரு.இராம நம்பி நாரணன்,  பாரதம் அனைத்து வளங்களும் நிறைந்த நாடு அதன் விவசாயம் பசுவை ஆதாரமாகக் கொண்டது என்பதையும்               இன்றைய நிலை என்ன? நாம் என்ன செய்ய வேண்டும் ஆகியவைகளையும் எடுத்துரைத்தார்.
பின் திரு.பசு ராகவன் பேசினார்.
பசுவை விலங்கின ராஜ்ஜியத்தின் முகம் என்றும் அதன் அர்த்தம் மிகுந்த மதிப்பையும், பசுவின் பங்களிப்பையும் விளக்கினார். பசுவே அரசர்களுக்கும் பல பெரிய மனிதர்களுக்கும் முதுகெலும்பாக விளங்கியிருந்தது ஆனால் இன்றைய நிலை, பசு பால் தரும் இயந்திரமாகப் பார்க்கப்படுகிறது என்றும்  பசு விவசாயத்திற்கான மேல் மண் உருவாக்கி என்றும் வர்ணித்தார். W.H.O நமது நாட்டு பசு மாட்டின் பாலைச் சிறந்தது என அங்கீகாரம் வழஙகியுள்ளதாகக் கூறினார்
நம் இயற்கை வளங்களைக் காக்கவும் ,இயற்கை வளங்களை மீண்டும் மீண்டும் உருவாக்கவும் பசுவால் மட்டுமே முடியும் என்பதால் கோசாலையின் தேவை மிக முக்கியமானதாகிறது.
அடுத்ததாக கோசாலையை வைத்து பசு சார்ந்த பல இதர பொருள்களைச் செய்ய  இயலும் என்றும், நாக்பூரில் ஆயுர் வேத ஆராய்ச்சி கழகம் ஒன்று இருப்பதாகவும், இறுதியாக ஆதாரக் கல்வியின் அவசியத்தை விளக்கி அதற்கான வகுப்புக்கள் பற்றியும் கூறி அவர் உரையை முடித்தார்.

திரு.ராமச்சந்திரன் , அச்சன் கோவில் அரசரின் அருளால் அவர் மனதில் உருவான அரசன்கோசாலதிட்டத்தை முன்வைத்தார். அதன்படி டிசம்பர்-15ம் தேதியை ஒட்டி  கோசாலை அமைப்பது என்றும்     பசுவை வாழவைக்கவும் வளர்க்கவும்  ஒரு பொது அமைப்பை (PublicTrust) ஏற்படுத்துவது என்றும் அதற்கான திட்டதை விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்
திரு மகாலிங்கம் குருசாமி  மாடு தானம் முதலில் அறிவித்தார் பின் பாஸ்கர் குரு சாமியும் முனவந்திருக்கிறார்கள்.
கருமாரி கண்ணனின் உலகம் சமநிலை பெறவேண்டும் என்ற பாடலுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது



No comments:

Post a Comment