இந்தியாவில் கால்நடை வளர்ப்பு வேளாண்மைக்கு இன்றியமையாத ஒன்றாகும். இது
நமது கிராமப் பொருளதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனினும் ஐரோப்பிய நாடுகளோடு
ஒப்பிடுகையில் நம் நாட்டின் கால்நடை எண்ணிக்கை மிகக் குறைவு. இதற்குக் காரணம் நல்ல
இனப்பெருக்க முறைகளும், புதிய கண்டுபிடிப்பும் கிராமங்களில் இல்லாமையே ஆகும். கீழ்வரும்
கருத்துக்கள் மூலம் கால்நடைகளில் சிறந்த இனப்பெருக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அறிமுகம்
கால்நடைப் பராமரிப்பில் இனப்பெருக்கம் இன்றியமையாத ஒன்று. சரியான இனப்பெருக்கமும், கன்று ஈனுதலும் இல்லாமல் கால்நடை வளர்ப்பில் இலாபம் பெற இயலாது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு ஆரோக்கியமான கன்றை ஒவ்வொரு கால்நடையும் கொடுக்கவேண்டும். அதற்கேற்ற, சிறந்த திறன் கால்நடைகளிடம் இருத்தல்வேண்டும்.கலப்பில் ஈடுபட்டு, கருவைப் பெற்று அதைப் பாதுகாத்து, சினைக்கால முடிவில் நல்ல கன்றாகக் கொடுப்பதே இனப்பெருக்கம் ஆகும். இந்தî சங்கிலித் தொடரில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் பசுவானது கருவைப் பெற முடியாமல் போகலாம் அல்லது கரு இறப்பு, முழு வளர்ச்சியற்ற பிறப்பாக வெளிப்படும்.

இனப்பெருக்கத் திறன் மரபியல் மற்றும் இதர
பிற காரணிகளைப் பொறுத்தது. இதர காரணிகளான தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்துக்கள் மற்றும்
முறையான பராமரிப்பு போன்றவற்றில், ஒரே இன மாடுகளிடையே இனப்பெருக்கத் திறன் வேறுபடும்.
சரியான பராமரிப்பையும் மீறி மரபியல் காரணிகள் செயல்பட்டால் இனப்பெருக்கம் பாதிக்கப்படும்.
எனவே மரபியல் பண்புகளையும் மேம்படுத்த வேண்டும். ஒரு சிறந்த இனப்பெருக்க முறைக்கு நல்ல
கவனிப்பு அவசியமாகும்.
இனப்பெருக்கத் திறனை பாதிக்கும் காரணிகள்:
கரு முட்டையின் எண்ணிக்கை
ஒவ்வொரு கருவுறுதல் நிகழ்ச்சியின் பொதும் வெளிவரும் கருமுட்டைகள் ஒரு முக்கியக்காரணி. இந்த கரு முட்டைகளை கரீஃபியின் பாலிக்கிள் குழாயில் விழச் செய்வதே கருவுறுதல் ஆகும். ஒரு முட்டை 5-10 மணி நேரம் வரை இருக்கும். இந்த நேரத்தில் கலப்பு செய்தால் மட்டுமே கரு உருவாகும்.
கருத்தரித்தல் சதவீதம்
சரியான சினைத் தருணத்தில் கலப்பு செய்யாமல் மிகச் சீக்கிரமாகவோ அல்லது மிகத் தாமதமாகவோ செய்தால் விந்தணுவும், கருமுட்டையும் சந்தித்துக் கொள்ள முடியாமல் போகலாம். எனவே மாடு கருவுறாது.
கரு அழிதல்
கறவை மாடுகளில் கரு அழிதல், சரியாக கருத்தரியாமை, கருத்தரித்தபின் கருவானது கருப்பையில் நிலை கொள்ளாமல் வெளித்தள்ளப் படுவதால் (அ) கரு வளரும்போது ஏதேனும் அடிபடுவதால் ஏற்படுகிறது. இவ்வாறு கரு அழிவது ஹார்மோன் சுரக்காததால் (அ) சரியான விகிதத்தில் இல்லாததால் ஏற்படுகிறது.
முதல் சினையின் காலம்
முதல் கன்று ஈனும் காலம் அதிகமானால் அது இனப்பெருக்கத்திறனைப் பாதிக்கும். விரைவில் சினைக்கு வரும் மாடுகள், சிறிது குட்டையாகக் காணப்பட்டாலும் நல்ல இனப்பெருக்கத் திறனுடையவையாக இருக்கும்.
சினைப் பருவ எண்ணிக்கை
குறுகிய காலத்தில் (அடிக்கடி)சினைக்கு வரும் மாடுகள் நல்ல இனப்பெருக்கத் திறனுடையவை. விரைவில் சினைப் பருவமடைந்த மாடுகளை அதன் ஒவ்வொரு பருவத்திலும் முடிந்த வரை இனவிருத்தி செய்து கொள்வது நல்லது. இம்முறையில் அதன் வாழ்நாள் திறன் அதிகரிக்கும். கன்று ஈன்ற 9-12 வாரங்களுக்குப் பிறகு அடுத்த சினைக்குத் தயாராகிவிடும்.
வாழ்நாள்
பசுவின் வாழ்நாள் அளவும் இனப்பெருக்கத்திறனை அதிகரிக்கும். பசுக்கள் அதிக நாட்கள் ஆரோக்கியத்தோடு இருந்தால் ஆண்டுதோறும் மாற்றும் பசுக்கள் எண்ணிக்கை குறையும். அதோடு ஈனும் கன்றுகள் எண்ணிக்கை அதிகமாகும்.

இனப்பெருக்கத் திறனை மேம்படுத்தும் முறைகள்
1.
சினை அடைந்த காலம், கன்று ஈன்ற நாள் போன்வற்றை
பதிவேட்டில் பதிந்து பராமரித்து வந்தால் ஒவ்வொரு பசுவிற்கும் அடுத்த சினைக்கான காலத்தை
முறையாகக் கணிக்கலாம்.
2.
சரியான சினைத் தருணத்தில் கலப்பு செய்யவேண்டும்.
3.
பசுக்களில் திரவப்போக்கு அதிகமிருந்தால்,
மருத்துவரை அழைத்துப் பரிசோதிக்கலாம்.
4.
4 கலப்பிற்குப் பின்பும் சினைத் தரிக்கவில்லை
எனில் மருத்துவரிடம் கொண்டு செல்லலாம்.
5.
ஒவ்வொரு இனக்கலப்பிற்குப் பிறகும், கன்று
ஈனும் முன்பு ஒரு முறை முழுமையாகப் பரிசோதனை செய்துவிடவேண்டும்.
6.
வெளியிலிருந்து மாடுகள் வாங்கிவரும் போது
நன்கு பரிசோதித்த பின்பே மந்தையில் சேர்க்கவேண்டும்.
7.
கன்று ஈனுவது அதற்காகத் தயாரித்துள்ள தனி
அறையில் சுத்தமான இடத்தில் நிகழ்தல் வேண்டும். ஒவ்வொரு தடவையும் கன்று பிறந்த பின்பு
நல்ல கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிடவேண்டும்.
8.
சரியாக நோய் எதிர்ப்புச் சக்தி பெற்றுள்ளவையா
என்று பார்த்துத் தடுப்பூசிகளை முன்கூட்டியே போட்டு விடுதல் நலம்.
9.
சுகாதாரமான முறையைப் பின்பற்றலாம்.
10.
தேவையான ஊட்டசத்துக்களை அளிக்க வேண்டும்.
11.
சரியான பாகாப்பு முறைகளைக் கையாளுதல் வேண்டும்.
12.
தேவையான இடவசதி செய்து வைத்தல் வேண்டும்.
13.
சரியான சினைக்கு வரும் பருவத்ததை சிறிய சூடாக
இருந்தாலும் அதை டீசர் காளை மூலம் கண்டுபிடிக்கலாம்.
(ஆதாரம்: www.world_agriculture.com)
No comments:
Post a Comment