Thursday, May 9, 2013

மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வாழைப்பழம்


மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வாழைப்பழம்

வாழைப் பழத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாததா என்று நீங்கள் சொல்லலாம். நிச்சயமாக வாழைப் பழத்தைப் பற்றி நாம் அனைவருமே அறிந்திருப்போம். ஆனால் ஒரு சில அறியாத விஷயங்களும் இருக்கக் கூடும்.
அவறைப் பார்ப்போம்.
வாழைப் பழம் சிறந்த பழமாக மட்டுமல்லாமல் அழகு சார்ந்த பொருளாகவும் உள்ளது. வாழைப் பழத்தில் சிறிது தேன், ஒரு சில சொட்டு ஆரஞ்சு சாறு கலந்து முகத்தில் பூசி வந்தால், சருமம் இளமையைத் தக்க வைத்துக் கொள்ளும்.
ஆல்கஹால் அருந்தியவர்களை உடனடியாக சீரான நிலைக்குக் கொண்டு வர வாழைப் பழத்தை சாப்பிட அளிக்கலாம். போதை மயக்கத்தில் இருப்பவர்களை உடனடியாக அதில் இருந்து மீட்கும் தன்மை வாழைப் பழத்திற்கு உள்ளது.
ஏதேனும் அசாதாரண சூழ்நிலையில் நமது உடல் படபடப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்படுவது போல் உணர்ந்தால், உடனடியாக வாழைப்பழம் சாப்பிடுங்கள். அதிக படப்படப்பால் உடல் இழந்த பொட்டாசியத்தை வாழைப்பழம் அளிக்கும்.
மூளைக்கு புத்துணர்ச்சியை அளிப்பதில் பொட்டாசியத்திற்கு அதிக பங்கு உள்ளது. எனவே, தேர்வு, நேர்காணல் போன்றவற்றிற்கு செல்லும் போது ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு சென்றால் மூளை புத்துணர்ச்சியுடன் இருந்து படித்தவற்றை எல்லாம் நினைவுபடுத்தும்.
வயிற்றுக்கு எல்லா வகையிலும் வாழைப்பழம் சிறந்ததாக இருக்கிறது. எனவே, தினமும் நமது உணவில் வாழைப்பழத்தை சேர்த்துக் கொண்டால் வயிறு தொடர்பான சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தூக்கத்திற்கும் வாழைப்பழம் பேருதவி செய்யும். எனவே, சரியாக தூங்காத பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை இரவில் ஒரு டம்ளர் பாலுடன் வாழைப் பழம் சாப்பிட்டால் நிச்சயமாக 8 மணி நேர தூக்கம் உறுதியாகும்.

First Published : 08 May 2013 05:51 PM IST


Saturday, May 4, 2013

கால்நடைகளை பாம்பு கடித்தால் செய்ய வேண்டியவை...


கால்நடைகளை பாம்பு கடித்தால் செய்ய வேண்டியவை...

கால்நடைகளை பாம்பு கடித்தால் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கல்லூரியின் இணைபேராசிரியர் த.ஆனந்தபிரகாஷ்சிங் கூறியது:
பசுக்கள், எருதுகள் உள்பட கால்நடைகளை பாம்பு கடிப்பது பரவலாக நிகழ்ந்து கொண்டுள்ளது. மாடுகளை மேய்ச்சலின் போதுதான் அதிகளவில் பாம்பு கடிக்க வாய்ப்புள்ளது. மாடுகளின் முகம், தலை, தாடை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பாம்பு  கடிக்க வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு கடித்தால் விஷத்தின் தீவிரம் அதிகமாக ஏற்பட்டு மாடுகள் இறக்க வாய்ப்புள்ளது. குதிரை மற்றும் மாடுகளின் உடல் பருமன் பெரிதாக இருப்பதால் உடனடியாக இறப்பு ஏற்படுவதில்லை என்றாலும் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்.
நாய் மற்றும் பூனைகள் பெரும்பாலும் பாம்புடன் சண்டையிடும்போது ஒரு முறைக்கும் மேல் பாம்பு கடிக்க வாய்ப்புள்ளது. அவற்றின் உடல் பருமன் குறைவாக இருப்தால் விஷம் உடனடியாக உடலின் பல பாகங்களுக்கும் பரவி உடனடியாக இறப்பை ஏற்படுத்தும். பன்றிகளின் தோலுக்கு அடியில் மிக கெட்டியான கொழுப்பு அடுக்கு இருப்பதால் பாம்புக் கடியால் அவை பாதிக்கப்படுவதில்லை. செம்மறி ஆடுகளில் உரோமம் மிகப் பெரியத் தடுப்பாக இருந்தாலும், மடியில் ஏற்படும் பாம்புக்கடி தீவிர பாதிப்பை உண்டாக்குகிறது.
பாம்பின் வகைகள்..:உலகில் 3000 வகையான பாம்புகள் காணப்படுகின்றன. அவற்றில் 375 வகையான பாம்புகள் மட்டுமே விஷத் தன்மை கொண்டது. நாக பாம்பு, நல்ல பாம்பு, கட்டு விரியன், சுருட்டை, பச்சைப் பாம்பு (விரியன்) மற்றும் கண்ணாடி விரியன் போன்றவை விஷத் தன்மையுள்ளவை. சாரைப் பாம்பு, மண்ணுளிப்பாம்பு, பச்சைப் பாம்பு, தண்ணீர் பாம்பு மற்றும் மலைப்பாம்பு போன்றவை விஷமற்ற பாம்புகளாகும்.
விஷமுள்ள பாம்புகள் மற்றும் விஷமற்ற பாம்புகள் இடையே உருவத்தில் சிற்சில மாறுதல்களோடு காணப்படுகின்றன. விஷமுள்ள பாம்புகளின் மேல் தாடையில் இரு நீண்ட கூரான விஷப்பற்களும், அதன் தலை முக்கோண வடிவிலும், கண் பார்வை செங்குத்தாக அல்லது நீள் வட்டமாகவும், கண்ணுக்கும் மூக்குத் துவாரத்துக்கும் இடையே முகக் குழியுடனும், வாலின் அடியில் செதில்கள் பிளவு பட்டும் காணப்படும். விஷமற்ற பாம்புகளின் தலை வட்ட வடிவிலும், விஷப்பற்கள் இன்றியும், கண்பார்வை வட்டமாகவும், முகக்குழி இல்லாமலும், வால் பகுதியில் செதில் பிளவுபடாமலும் காணப்படும்.
பாம்பு கடித்தால் செய்ய வேண்டியவை..:
பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தை ஆராய்ந்து அது விஷமுள்ள பாம்புக் கடியா அல்லது விஷமற்ற பாம்புக் கடியா எனத் தெளிவுபடுத்திக் கொண்டு உடனடியாக சிகிச்சைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பாம்பை அடித்து விட்டால் அதையும் எடுத்துச் செல்ல வேண்டும். பாம்பை அடிக்கும்போது அதன் தலையை சிதைக்காமல் இருப்பது அடையாளம் காண உதவும்.
கடிபட்ட பிராணிகளை அமைதிப்படுத்த வேண்டும். கடிபட்ட இடம் பிராணிகளின் இதயத்துக்கு கீழ்ப்புறமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பிராணிகளை ஓடவோ அல்லது நடக்கவோ செய்வதால் விஷம் விரைவாக உடலின் பல பாகங்களுக்கும் பரவி வீரியமிக்கதாக செயல்பட்டு உயிரிழக்க நேரிடும்.கடிபட்ட இடத்திற்கு மேலே கயிறு கொண்டு கட்டலாம். ஆனால், அது ரத்த ஓட்டத்தை முழுவதுமாக நிறுத்திவிடக் கூடாது. 20 நிமிடங்களுக்கு ஒரு நிமிடம் கட்டை அவிழ்த்து மீண்டும் கட்ட வேண்டும்.
கடிபட்ட இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கக் கூடாது, கடிபட்ட இடத்தைக் கிழிக்கக் கூடாது, விஷத்தை வாய் வைத்து உறிஞ்சக் கூடாது, கடிபட்ட இடத்திற்கு மேல் கயிற்றை இறுக்கமாக கட்டக் கூடாது, மூலிகைகள் அல்லது மற்ற சுத்தமறற பொருட்கள் மற்றும் சுண்ணாம்பை பூசக்கூடாது, தீக்குச்சி மருந்தை வைத்து தீ மூட்டக் கூடாது, அடித்த பாம்பை அஜாக்கிர தையாக கையாளக் கூடாது.
விஷமுறிவு மருந்து..:
பாம்புக் கடிக்கு பாம்பின் விஷத்திலிருந்தே விஷமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது. விஷமுறிவு மருந்து தனிப்பட்ட விஷமுறிவு மருந்தாகவும், பொதுவாகக் காணப்படும் விஷப் பாம்புகளின் ஒட்டு மொத்த விஷமுறிவு மருந்தாகவும் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மருந்துக்கடைகளிலுள்ள பொதுவான விஷமுறிவு மருந்தில் நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் போன்ற பாம்புகளுக்கு ஒருங்கே சேர்ந்த விஷ முறிவு மருந்து குப்பிகளில் கிடைக்கிறது.
கால்நடை மருத்துவரின் கண்காணிப்பில் எதிர் உயிரி மருந்து, ரணஜன்னி தடுப்பு மருந்து, தேவைப்பட்டால் ரத்த மாற்று சிகிச்சை போன்றவை அளிக்கலாம். மற்ற விஷக் கடிகளில் வலியும் வீக்கமும் காணப்படும். அவற்றிற்கு வலி நிவாரண மருந்துகளும், ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகளும் வழங்கினாலே போதும் என்றார் அவர்.
First Published in Dinmani.com : 02 May 2013 03:12 PM IST


ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 18/2013)



Posted: 28 Apr 2013 03:00 PM PD
என் பெயரை இடைவிடாமல் ஜபித்துக் கொண்டு எல்லா விதமான சங்கடங்களையும் தைரியமாக நேருக்கு நேர் சந்தித்தால், எல்லாவிதமான ஆபத்துகளும் பறந்தோடிவிடும். என் நாமத்தின் சக்தி அவ்வளவு மகிமை வாய்ந்தது.
எப்போது சங்கடம் வருகிறதோ அப்போது என் நினைவு உனக்கு வரும். ஏனெனில், அப்போது தானே சங்கடம் விலகும். உனக்குத் தேவையான புத்தி அனைத்தையும் நான் கொடுத்து உன்னை விடுதலை செய்து காத்து ரட்சிப்பேன். இதை மனதில் வைத்துக்கொள். இன்றைக்கு என்ன உணர்வில் இருக்கிறாயோ, அதே உணர்வில் என்றும் இருக்கப் பழகு. எந்தவித முயற்சியும் இல்லாமல் உன்னை கரை சேர்த்துவிடுகிறேன். என்னிடம் திடமான நம்பிக்கை வைத்தாலே போதும், எல்லாம் தானே கிடைக்கும் என்பதில் தளர்வடையா நம்பிக்கைக் கொள்.எல்லா விளைவுகளுக்கும் ஒரு காரணம் உண்டு. அந்தக் காரணம் உனக்கு நன்மை தருவதற்கே ஏற்பட்டது என நம்பு. ஸ்ரீ சாயி-யின் குரல்.     
Posted: 29 Apr 2013 03:00 PM PD
ஒரு விஷயத்தை நன்கு நினைவில் இருத்துங்கள்.உங்கள்  ஆராதனையை பலன் அற்றுப்போகும்படி விடமாட்டேன்.உங்கள் ஆசைகளை நிராசை செய்யமாட்டேன்.நிராசை,உற்சாகமின்மை,மனச்சோர்வு போன்றவற்றில் நான் இருக்கமாட்டேன்.என் உண்மையான சேவகர்களில் மட்டுமே நான் இருப்பேன்.நானே இருப்பேன்.நானாக இருப்பேன்.உங்கள் காரியங்களை உங்களுக்கு முன்பாகவே நானே செய்து முடிப்பேன்.இதுவெறும் பேச்சல்ல.வீணான வாக்கு தானம் அல்ல.உங்களுக்கு  அந்த அனுபூதி நேரிடையாய் கிடைக்கும்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
Posted: 30 Apr 2013 03:00 PM PD
வாழ்க்கை என்பது பிரச்சினைகளின் சங்கிலித் தொடராகும்.சில பிரச்சினைகள் தீர்க்கவே முடியாது போலத் தோன்றும்.அவற்றை தீர்க்க முயலாதே!
'சாயி,சாயி' என்று எனது நாமத்தை ஜெபித்தால் அவை தாமாகவே மறையும்!-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
Posted: 01 May 2013 03:00 PM PDT
(1918-ம் ஆண்டு) திருமதி தார்கட்,அவரது மகன் இருவரும்  சாயிபாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.

பாபா: தாயே! இப்போதெல்லாம் நான் மிகவும் நச்சரிக்கபடுகிறேன்.சிலருடைய தேவை செல்வம்,சிலருக்கு பெண்டிர்,சிலருக்கு புத்திரர்கள்.அந்தோ! என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லை!நானும் பொறுத்து பொறுத்து போகிறேன்;ஒரு தினம் திடீரென நான் மறைந்துவிடுவேன்.எனக்கு அலுத்துவிட்டது.

திருமதி தார்கட்: பாபா, ஏன் இப்படி பேசுகிறீர்கள்.பின் எங்கள் கதி என்னாவது?

பாபா: ஏன் கவலை? உங்கள்  நலனை ஆண்டவன் பேணுகிறாரல்லவா?என் குழந்தைகள் என்னை நாடி வருவது என்னை மகிழ்விக்கிறது;அப்போது என் இரண்டு கவளங்கள் ஆகாரத்தையும் உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டு மேலும் பருமனாகிறேன்.

சிறுவன்: தாங்களிடம் இருப்பதை கேட்டு பெற்றுக் கொள்ளவே நாங்கள் வருகிறோம்.தாங்கள் அறிவீர்களல்லவா?

பாபா:ஆம்,உங்களுக்கு அது கிட்டும்.

சிறுவன்:பாபா! அதை அடைவதற்கு முன் நான் இன்னும் எத்தனை பிறவிகள்
எடுக்கவேண்டியிருக்கும் என்பது பற்றி தாங்கள் உறுதிமொழியை வேண்டுகிறேன்.

பாபா:இன்னும் மூன்று பிறவிகள் போதுமானது.

சிறுவன்:பாபா,ஆனால் தாங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள் அல்லவா?

பாபா:ஆஹா உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயா?மீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம்.இரவும் பகலும் என் குழந்தைகளை நான் பேணி வந்து,ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது.
Posted: 02 May 2013 03:00 PM PDT

கண்டயோகம் உங்களுக்குத் தேவையில்லை.கடின தவமும் வேண்டாம்.அடர்ந்த கானகத்திற்கும் போகத் தேவையில்லை.கடுமையான உபவாச தீட்சைகளும் தேவை இல்லை.உங்கள் வீட்டிலேயே நீங்கள் இருங்கள்.உங்கள் காரியங்களை நீங்கள் செய்து கொண்டிருங்கள்.உங்கள் கடமைகளை,கடமைதவறாமல் செய்துவாருங்கள்.என்னை கோவிலுக்கே கட்டுப்படுத்தாதீர்கள்.உங்கள் இதயக் கோவிலில் வைத்திருங்கள்.பூஜைகள் செய்து அலுத்துப் போக வேண்டியதில்லை.சிறிதளவு நேரத்தை ஒதுக்கி என் நாமஸ்மரணை செய்யுங்கள்.சாயி என்று ஜபம் செய்தால்,ஸ்மரித்தால்,நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்ய சித்தமாக இருக்கிறேன்.என் விருப்பம் அது மட்டுமே.என் அவதார ரகசியமும் அதுவே.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா[ஸ்ரீ சாயி திருவாய்மொழி]
Posted: 03 May 2013 03:00 PM PDT
அனுபவிக்காமல் கர்மவினை தீர்ந்து போகாது.ஜீவர்களின் கர்ம பாசம் எவ்வளவு பலமானதாக இருந்தாலும்,என்னைச் சரணடைந்தவர்களின் தீவினைகள்,சிலந்திப் பூச்சியுண்டாக்கும் கயிறு போல பலவீனமாகிவிடும்.கஷ்டங்களும்,துன்பங்களும் வருகின்றன என்று நினைத்து வருந்தாதீர்கள்.அப்படி வருவது எதுவானாலும் அது தீவினைப்பயனே.அவ்விதமாகக் கிடைத்து கர்மாவை அழிக்கிறது என்ற ஞானம் உங்களுக்குத் தோன்றினால் அவற்றைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 04 May 2013 03:00 PM PDT

கோரிக்கைகளால் உங்கள் இதயத்தை நிறைத்து சாந்தியற்ற மனமுடையவராக இருந்தால் எனக்கு[ஸ்ரீ சாய்பாபா] இடம் எங்கே இருக்கப் போகிறது.உங்கள் தவிப்பு என்னைப் பற்றியதாக இருக்கட்டும்.அப்போது உங்கள் பாரம் என்னுடையதாக இருக்கும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.