Posted: 28 Apr 2013 03:00 PM PD
என் பெயரை இடைவிடாமல் ஜபித்துக் கொண்டு எல்லா விதமான சங்கடங்களையும் தைரியமாக நேருக்கு நேர் சந்தித்தால், எல்லாவிதமான ஆபத்துகளும் பறந்தோடிவிடும். என் நாமத்தின் சக்தி அவ்வளவு மகிமை வாய்ந்தது.
எப்போது சங்கடம் வருகிறதோ அப்போது என் நினைவு உனக்கு வரும். ஏனெனில், அப்போது தானே சங்கடம் விலகும். உனக்குத் தேவையான புத்தி அனைத்தையும் நான் கொடுத்து உன்னை விடுதலை செய்து காத்து ரட்சிப்பேன். இதை மனதில் வைத்துக்கொள். இன்றைக்கு என்ன உணர்வில் இருக்கிறாயோ, அதே உணர்வில் என்றும் இருக்கப் பழகு. எந்தவித முயற்சியும் இல்லாமல் உன்னை கரை சேர்த்துவிடுகிறேன். என்னிடம் திடமான நம்பிக்கை வைத்தாலே போதும், எல்லாம் தானே கிடைக்கும் என்பதில் தளர்வடையா நம்பிக்கைக் கொள்.எல்லா விளைவுகளுக்கும் ஒரு காரணம் உண்டு. அந்தக் காரணம் உனக்கு நன்மை தருவதற்கே ஏற்பட்டது என நம்பு. ஸ்ரீ சாயி-யின் குரல்.
Posted: 29 Apr 2013 03:00 PM PD
ஒரு விஷயத்தை நன்கு நினைவில் இருத்துங்கள்.உங்கள் ஆராதனையை பலன் அற்றுப்போகும்படி விடமாட்டேன்.உங்கள் ஆசைகளை நிராசை செய்யமாட்டேன்.நிராசை,உற்சாகமின்மை,மனச்சோர்வு போன்றவற்றில் நான் இருக்கமாட்டேன்.என் உண்மையான சேவகர்களில் மட்டுமே நான் இருப்பேன்.நானே இருப்பேன்.நானாக இருப்பேன்.உங்கள் காரியங்களை உங்களுக்கு முன்பாகவே நானே செய்து முடிப்பேன்.இதுவெறும் பேச்சல்ல.வீணான வாக்கு தானம் அல்ல.உங்களுக்கு அந்த அனுபூதி நேரிடையாய் கிடைக்கும்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
Posted: 30 Apr 2013 03:00 PM PD
வாழ்க்கை என்பது பிரச்சினைகளின் சங்கிலித் தொடராகும்.சில பிரச்சினைகள் தீர்க்கவே முடியாது போலத் தோன்றும்.அவற்றை தீர்க்க முயலாதே!
'சாயி,சாயி' என்று எனது நாமத்தை ஜெபித்தால் அவை தாமாகவே மறையும்!-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
Posted: 01 May 2013 03:00 PM PDT
(1918-ம் ஆண்டு) திருமதி தார்கட்,அவரது மகன் இருவரும் சாயிபாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.
பாபா: தாயே! இப்போதெல்லாம் நான் மிகவும் நச்சரிக்கபடுகிறேன்.சிலருடைய தேவை செல்வம்,சிலருக்கு பெண்டிர்,சிலருக்கு புத்திரர்கள்.அந்தோ! என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லை!நானும் பொறுத்து பொறுத்து போகிறேன்;ஒரு தினம் திடீரென நான் மறைந்துவிடுவேன்.எனக்கு அலுத்துவிட்டது.
திருமதி தார்கட்: பாபா, ஏன் இப்படி பேசுகிறீர்கள்.பின் எங்கள் கதி என்னாவது?
பாபா: ஏன் கவலை? உங்கள் நலனை ஆண்டவன் பேணுகிறாரல்லவா?என் குழந்தைகள் என்னை நாடி வருவது என்னை மகிழ்விக்கிறது;அப்போது என் இரண்டு கவளங்கள் ஆகாரத்தையும் உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டு மேலும் பருமனாகிறேன்.
சிறுவன்: தாங்களிடம் இருப்பதை கேட்டு பெற்றுக் கொள்ளவே நாங்கள் வருகிறோம்.தாங்கள் அறிவீர்களல்லவா?
பாபா:ஆம்,உங்களுக்கு அது கிட்டும்.
சிறுவன்:பாபா! அதை அடைவதற்கு முன் நான் இன்னும் எத்தனை பிறவிகள்
எடுக்கவேண்டியிருக்கும் என்பது பற்றி தாங்கள் உறுதிமொழியை வேண்டுகிறேன்.
பாபா:இன்னும் மூன்று பிறவிகள் போதுமானது.
சிறுவன்:பாபா,ஆனால் தாங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள் அல்லவா?
பாபா:ஆஹா உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயா?மீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம்.இரவும் பகலும் என் குழந்தைகளை நான் பேணி வந்து,ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது.
Posted: 02 May 2013 03:00 PM PDT
கண்டயோகம் உங்களுக்குத் தேவையில்லை.கடின தவமும் வேண்டாம்.அடர்ந்த கானகத்திற்கும் போகத் தேவையில்லை.கடுமையான உபவாச தீட்சைகளும் தேவை இல்லை.உங்கள் வீட்டிலேயே நீங்கள் இருங்கள்.உங்கள் காரியங்களை நீங்கள் செய்து கொண்டிருங்கள்.உங்கள் கடமைகளை,கடமைதவறாமல் செய்துவாருங்கள்.என்னை கோவிலுக்கே கட்டுப்படுத்தாதீர்கள்.உங்கள் இதயக் கோவிலில் வைத்திருங்கள்.பூஜைகள் செய்து அலுத்துப் போக வேண்டியதில்லை.சிறிதளவு நேரத்தை ஒதுக்கி என் நாமஸ்மரணை செய்யுங்கள்.சாயி என்று ஜபம் செய்தால்,ஸ்மரித்தால்,நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்ய சித்தமாக இருக்கிறேன்.என் விருப்பம் அது மட்டுமே.என் அவதார ரகசியமும் அதுவே.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா[ஸ்ரீ சாயி திருவாய்மொழி]
Posted: 03 May 2013 03:00 PM PDT
அனுபவிக்காமல் கர்மவினை தீர்ந்து போகாது.ஜீவர்களின் கர்ம பாசம் எவ்வளவு பலமானதாக இருந்தாலும்,என்னைச் சரணடைந்தவர்களின் தீவினைகள்,சிலந்திப் பூச்சியுண்டாக்கும் கயிறு போல பலவீனமாகிவிடும்.கஷ்டங்களும்,துன்பங்களும் வருகின்றன என்று நினைத்து வருந்தாதீர்கள்.அப்படி வருவது எதுவானாலும் அது தீவினைப்பயனே.அவ்விதமாகக் கிடைத்து கர்மாவை அழிக்கிறது என்ற ஞானம் உங்களுக்குத் தோன்றினால் அவற்றைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 04 May 2013 03:00 PM PDT
கோரிக்கைகளால் உங்கள் இதயத்தை நிறைத்து சாந்தியற்ற மனமுடையவராக இருந்தால் எனக்கு[ஸ்ரீ சாய்பாபா] இடம் எங்கே இருக்கப் போகிறது.உங்கள் தவிப்பு என்னைப் பற்றியதாக இருக்கட்டும்.அப்போது உங்கள் பாரம் என்னுடையதாக இருக்கும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
No comments:
Post a Comment