Showing posts with label பாபா. Show all posts
Showing posts with label பாபா. Show all posts

Sunday, May 12, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 19/2013)


Posted: 05 May 2013 03:00 PM PDT
தேகத்தையும்,மனத்தையும்,புத்தியையும் ஒரு குருவுக்கு மட்டுமே சமர்பிக்க வேண்டும்.அவரையே தியானிக்க வேண்டும்.தியானம் தியானிக்கப்படும் பொருளாகவும் அவரே இருக்க வேண்டும்.அப்போது எங்கு பார்த்தாலும் அந்த
குருவே பிரசன்னமாவார்.அந்த குரு உடலை விட்டு நீங்கியிருந்தாலும் ஆத்மார்த்த நட்புணர்ச்சி,ஆத்மா வடிவத்தில் சிஷ்யனைச் சுற்றியே திரிந்து கொண்டிருக்கும்.இவ்விதமாகவே குரு சிஷ்யர்கள் பௌதீகமாயும்,உடலற்றபோதும் ஒன்றாக சேர்ந்தே இருப்பார்கள்.-ஸ்ரீ சாய் திருவாய்மொழி.
Posted: 06 May 2013 03:00 PM PDT
தீனர்கள்,திக்கற்றவர்கள்,அனாதைகள்,உடல் ஊனமுற்றோர் போன்ற எத்தனையோ பேர் படும் துன்பத்தை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்யுங்கள்.ஆதரியுங்கள்,ஆறுதலாகப் பேசுங்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்தல்,பிரம்மா ஞானத்தையும் மிஞ்சிய பலனைக் கொடுக்கவல்லது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 07 May 2013 03:00 PM PDT
என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வையுங்கள்.என் மீதே உங்கள் கவனம் திருப்பப்படட்டும்.எந்தவொரு பெருமுயற்சியும் இல்லாமலேயே,உங்கள் லட்சியத்தை அடையும்படி செய்வேன்.என்னுடைய செயல்கள் வியப்பூட்டுபவை,மிக மதிப்புள்ளவை,நெடுநாள் நிலைப்பவை.நாளடைவில் உங்கள் இலட்சியம் நிறைவேறும்.இதற்காக நான் உங்களிடம் கேட்பது விசுவாசமும்,உற்சாகத்துடன் பொறுத்திருத்தலும் மட்டுமே.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 08 May 2013 03:00 PM PDT
1911ம்  ஆண்டு தத்தஜயந்தி தினம்.பலவந்த் கொஹோஜ்கர் என்பவர் சீரடியில் பாபாவிடம் வந்தார்.மாலை மணி ஐந்து.
பாபா: எனக்கு பிரசவ வலி; வலி தாங்க முடியவில்லை.
இவ்வாறு சொல்லிக் கொண்டு,பாபா மசூதியிலிருந்து எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டார்.
அவர் தம்மை அனசுயா  தேவியுடன் ஒருமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.சிறிது நேரம் கழித்து பாபா எல்லோரையும் உள்ளே அழைத்தார்.முதலில் சென்ற கோஹோஜ்கர் பாபாவின் ஆசனத்தில் பார்த்தது பாபாவை அல்ல,ஆனால் மூன்று முகங்களுடன் கூடிய அழகிய குழந்தை,அதாவது தத்தரை!ஒரு கணத்தில்
தத்தர் மறைந்தார்,பதிலாக பாபா காணப்பட்டார்.
Posted: 09 May 2013 03:00 PM PDT
உங்களுக்கு விஸ்வாசம் குறித்து கதை ஒன்றை கூறுகிறேன்.சோல்கர் கதை விஸ்வாசத்திற்கு உதாரணம்.அவர் வெறும் தாசகணுவின் கதையை மட்டுமே கேட்டார்.விஸ்வாசம் வைத்தார்.வேண்டுதல் செய்தார்.பிறகு சும்மா இருக்கவில்லை.சர்க்கரையை ஒழித்துப் பணம் சேமித்தார்.எனக்கு வேண்டுதல் செய்ததால் உத்தியோகம் கிடைத்தது என்ற பாவத்துடன் தன்னைத்தானே தண்டித்துக் கொண்டார்.நம்பிக்கையிலேயே நான் இருக்கிறேன் என்பதால் அவருக்கு உத்தியோகம் கிடைத்தது.ஷிரிடிக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றினார்.என்னிடம் முழு நம்பிக்கை இருந்தால் நிறைவேறாத காரியம் இருக்காது.விசுவாசமே ஒரு வடிவம் கொண்டு நானாக இருக்கிறேன்.ஆகையால் உங்கள் நம்பிக்கையை என் மேல் உறுதியக்குங்கள்.உங்களுக்கு முன்புறமும்,பின்புறமும் நானே இருப்பதை கிரகிப்பீர்கள்.உன் காரியங்கள் அனைத்திலும் நான் இருப்பேன்.இது என்னுடைய வாக்கு தானம்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா[ஸ்ரீ சாயி திருவாய்மொழி]
Posted: 10 May 2013 03:00 PM PDT
உங்கள் வேண்டுதல்,எனக்குக் கேட்காமல் இருக்குமா?என் இதயம் இளகாமல் இருக்குமா?ஸ்மரணை உங்களுடையதாக இருக்கையில்,என் இதயத்தில் எதிர்வினை ஏற்படாமல் போகுமா?நான் சர்வமும் வியாபித்திருக்கிறேன்.உங்களுக்கு அருகிலேயே நான் இருக்கிறேன்.
என்னுடைய கதைகளை{ஸ்ரீ சாய் சத்சரித்திரம்}சிரத்தையுடன் சிரவணம் செய்யுங்கள்.மனனம் செய்யுங்கள்.மனத்தில் இருத்திக் கொள்ளுங்கள்.கடைபிடியுங்கள்.உங்கள் கோரிக்கைகள் எதுவானாலும் கண்டிப்பாக நிறைவேறும்.கர்மவினை எவ்வளவு பலமானதாக இருந்தாலும் கண நேரத்தில் நசிந்துவிடும்.என் அனுக்கிரகம் உங்களுக்கு நிரந்தரமாக இருக்கும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 11 May 2013 03:00 PM PDT
காலம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கருதவேண்டாம்.தங்க சிம்மாசனங்களும் கண்மறைவாகிவிடும்.அதிகாரங்கள் மறைந்துபோகும்.செல்வவளம் சொல்லாமலேயே சென்றுவிடும்.கொடுக்கும் கரங்களே பெற்றுக் கொள்ளும் கரங்களாகிவிடும்.அப்போது கொடுப்பவர்கள் இருக்க வேண்டுமல்லவா!ஆகையால்[செல்வம்] இருப்பவர்கள்  கொடுப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.விதையை அப்படி விதைத்துக் கொண்டால் பலன் கிடைக்காமல் போகாது.என்னுடையது எனக்கு மட்டுமே என்ற பாவத்துடன் நாட்களைக் கடத்தி,தேவை எற்பட்டபோது  எனக்கு யாரும் இல்லை என்று கருதினால் பிரயோஜனம் என்ன? தானம் செய்தது வீண் போகாது.ஆறுதல் சொன்னால் அது வீணாகாது.உதவி வீணாகாது.நல்ல சொற்கள் வீணாகாது.அன்பு வீணாகாது.தேவை நேர்ந்தபோது,அதிக பலனை இக்குணங்களே அந்த இறைவனின் வடிவத்தில் பிரத்தியட்சமாகும்.இப்படிச் சேர்த்து வைத்தது எதுவோ அதுமட்டுமே ஜீவர்களுடன் வரும்.உயர்ந்த கதியை நல்கும்.ஆகையால் பிரம்ம ஞானத்தினால் பெரும் பிராப்தியை இவ்விதமாகவும் பெற முடியும்!என் சொற்களை மறந்து விடாதீர்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.








Saturday, May 4, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 18/2013)



Posted: 28 Apr 2013 03:00 PM PD
என் பெயரை இடைவிடாமல் ஜபித்துக் கொண்டு எல்லா விதமான சங்கடங்களையும் தைரியமாக நேருக்கு நேர் சந்தித்தால், எல்லாவிதமான ஆபத்துகளும் பறந்தோடிவிடும். என் நாமத்தின் சக்தி அவ்வளவு மகிமை வாய்ந்தது.
எப்போது சங்கடம் வருகிறதோ அப்போது என் நினைவு உனக்கு வரும். ஏனெனில், அப்போது தானே சங்கடம் விலகும். உனக்குத் தேவையான புத்தி அனைத்தையும் நான் கொடுத்து உன்னை விடுதலை செய்து காத்து ரட்சிப்பேன். இதை மனதில் வைத்துக்கொள். இன்றைக்கு என்ன உணர்வில் இருக்கிறாயோ, அதே உணர்வில் என்றும் இருக்கப் பழகு. எந்தவித முயற்சியும் இல்லாமல் உன்னை கரை சேர்த்துவிடுகிறேன். என்னிடம் திடமான நம்பிக்கை வைத்தாலே போதும், எல்லாம் தானே கிடைக்கும் என்பதில் தளர்வடையா நம்பிக்கைக் கொள்.எல்லா விளைவுகளுக்கும் ஒரு காரணம் உண்டு. அந்தக் காரணம் உனக்கு நன்மை தருவதற்கே ஏற்பட்டது என நம்பு. ஸ்ரீ சாயி-யின் குரல்.     
Posted: 29 Apr 2013 03:00 PM PD
ஒரு விஷயத்தை நன்கு நினைவில் இருத்துங்கள்.உங்கள்  ஆராதனையை பலன் அற்றுப்போகும்படி விடமாட்டேன்.உங்கள் ஆசைகளை நிராசை செய்யமாட்டேன்.நிராசை,உற்சாகமின்மை,மனச்சோர்வு போன்றவற்றில் நான் இருக்கமாட்டேன்.என் உண்மையான சேவகர்களில் மட்டுமே நான் இருப்பேன்.நானே இருப்பேன்.நானாக இருப்பேன்.உங்கள் காரியங்களை உங்களுக்கு முன்பாகவே நானே செய்து முடிப்பேன்.இதுவெறும் பேச்சல்ல.வீணான வாக்கு தானம் அல்ல.உங்களுக்கு  அந்த அனுபூதி நேரிடையாய் கிடைக்கும்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
Posted: 30 Apr 2013 03:00 PM PD
வாழ்க்கை என்பது பிரச்சினைகளின் சங்கிலித் தொடராகும்.சில பிரச்சினைகள் தீர்க்கவே முடியாது போலத் தோன்றும்.அவற்றை தீர்க்க முயலாதே!
'சாயி,சாயி' என்று எனது நாமத்தை ஜெபித்தால் அவை தாமாகவே மறையும்!-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
Posted: 01 May 2013 03:00 PM PDT
(1918-ம் ஆண்டு) திருமதி தார்கட்,அவரது மகன் இருவரும்  சாயிபாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.

பாபா: தாயே! இப்போதெல்லாம் நான் மிகவும் நச்சரிக்கபடுகிறேன்.சிலருடைய தேவை செல்வம்,சிலருக்கு பெண்டிர்,சிலருக்கு புத்திரர்கள்.அந்தோ! என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லை!நானும் பொறுத்து பொறுத்து போகிறேன்;ஒரு தினம் திடீரென நான் மறைந்துவிடுவேன்.எனக்கு அலுத்துவிட்டது.

திருமதி தார்கட்: பாபா, ஏன் இப்படி பேசுகிறீர்கள்.பின் எங்கள் கதி என்னாவது?

பாபா: ஏன் கவலை? உங்கள்  நலனை ஆண்டவன் பேணுகிறாரல்லவா?என் குழந்தைகள் என்னை நாடி வருவது என்னை மகிழ்விக்கிறது;அப்போது என் இரண்டு கவளங்கள் ஆகாரத்தையும் உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டு மேலும் பருமனாகிறேன்.

சிறுவன்: தாங்களிடம் இருப்பதை கேட்டு பெற்றுக் கொள்ளவே நாங்கள் வருகிறோம்.தாங்கள் அறிவீர்களல்லவா?

பாபா:ஆம்,உங்களுக்கு அது கிட்டும்.

சிறுவன்:பாபா! அதை அடைவதற்கு முன் நான் இன்னும் எத்தனை பிறவிகள்
எடுக்கவேண்டியிருக்கும் என்பது பற்றி தாங்கள் உறுதிமொழியை வேண்டுகிறேன்.

பாபா:இன்னும் மூன்று பிறவிகள் போதுமானது.

சிறுவன்:பாபா,ஆனால் தாங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள் அல்லவா?

பாபா:ஆஹா உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயா?மீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம்.இரவும் பகலும் என் குழந்தைகளை நான் பேணி வந்து,ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது.
Posted: 02 May 2013 03:00 PM PDT

கண்டயோகம் உங்களுக்குத் தேவையில்லை.கடின தவமும் வேண்டாம்.அடர்ந்த கானகத்திற்கும் போகத் தேவையில்லை.கடுமையான உபவாச தீட்சைகளும் தேவை இல்லை.உங்கள் வீட்டிலேயே நீங்கள் இருங்கள்.உங்கள் காரியங்களை நீங்கள் செய்து கொண்டிருங்கள்.உங்கள் கடமைகளை,கடமைதவறாமல் செய்துவாருங்கள்.என்னை கோவிலுக்கே கட்டுப்படுத்தாதீர்கள்.உங்கள் இதயக் கோவிலில் வைத்திருங்கள்.பூஜைகள் செய்து அலுத்துப் போக வேண்டியதில்லை.சிறிதளவு நேரத்தை ஒதுக்கி என் நாமஸ்மரணை செய்யுங்கள்.சாயி என்று ஜபம் செய்தால்,ஸ்மரித்தால்,நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்ய சித்தமாக இருக்கிறேன்.என் விருப்பம் அது மட்டுமே.என் அவதார ரகசியமும் அதுவே.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா[ஸ்ரீ சாயி திருவாய்மொழி]
Posted: 03 May 2013 03:00 PM PDT
அனுபவிக்காமல் கர்மவினை தீர்ந்து போகாது.ஜீவர்களின் கர்ம பாசம் எவ்வளவு பலமானதாக இருந்தாலும்,என்னைச் சரணடைந்தவர்களின் தீவினைகள்,சிலந்திப் பூச்சியுண்டாக்கும் கயிறு போல பலவீனமாகிவிடும்.கஷ்டங்களும்,துன்பங்களும் வருகின்றன என்று நினைத்து வருந்தாதீர்கள்.அப்படி வருவது எதுவானாலும் அது தீவினைப்பயனே.அவ்விதமாகக் கிடைத்து கர்மாவை அழிக்கிறது என்ற ஞானம் உங்களுக்குத் தோன்றினால் அவற்றைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 04 May 2013 03:00 PM PDT

கோரிக்கைகளால் உங்கள் இதயத்தை நிறைத்து சாந்தியற்ற மனமுடையவராக இருந்தால் எனக்கு[ஸ்ரீ சாய்பாபா] இடம் எங்கே இருக்கப் போகிறது.உங்கள் தவிப்பு என்னைப் பற்றியதாக இருக்கட்டும்.அப்போது உங்கள் பாரம் என்னுடையதாக இருக்கும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.