Sunday, May 12, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 19/2013)


Posted: 05 May 2013 03:00 PM PDT
தேகத்தையும்,மனத்தையும்,புத்தியையும் ஒரு குருவுக்கு மட்டுமே சமர்பிக்க வேண்டும்.அவரையே தியானிக்க வேண்டும்.தியானம் தியானிக்கப்படும் பொருளாகவும் அவரே இருக்க வேண்டும்.அப்போது எங்கு பார்த்தாலும் அந்த
குருவே பிரசன்னமாவார்.அந்த குரு உடலை விட்டு நீங்கியிருந்தாலும் ஆத்மார்த்த நட்புணர்ச்சி,ஆத்மா வடிவத்தில் சிஷ்யனைச் சுற்றியே திரிந்து கொண்டிருக்கும்.இவ்விதமாகவே குரு சிஷ்யர்கள் பௌதீகமாயும்,உடலற்றபோதும் ஒன்றாக சேர்ந்தே இருப்பார்கள்.-ஸ்ரீ சாய் திருவாய்மொழி.
Posted: 06 May 2013 03:00 PM PDT
தீனர்கள்,திக்கற்றவர்கள்,அனாதைகள்,உடல் ஊனமுற்றோர் போன்ற எத்தனையோ பேர் படும் துன்பத்தை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்யுங்கள்.ஆதரியுங்கள்,ஆறுதலாகப் பேசுங்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்தல்,பிரம்மா ஞானத்தையும் மிஞ்சிய பலனைக் கொடுக்கவல்லது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 07 May 2013 03:00 PM PDT
என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வையுங்கள்.என் மீதே உங்கள் கவனம் திருப்பப்படட்டும்.எந்தவொரு பெருமுயற்சியும் இல்லாமலேயே,உங்கள் லட்சியத்தை அடையும்படி செய்வேன்.என்னுடைய செயல்கள் வியப்பூட்டுபவை,மிக மதிப்புள்ளவை,நெடுநாள் நிலைப்பவை.நாளடைவில் உங்கள் இலட்சியம் நிறைவேறும்.இதற்காக நான் உங்களிடம் கேட்பது விசுவாசமும்,உற்சாகத்துடன் பொறுத்திருத்தலும் மட்டுமே.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 08 May 2013 03:00 PM PDT
1911ம்  ஆண்டு தத்தஜயந்தி தினம்.பலவந்த் கொஹோஜ்கர் என்பவர் சீரடியில் பாபாவிடம் வந்தார்.மாலை மணி ஐந்து.
பாபா: எனக்கு பிரசவ வலி; வலி தாங்க முடியவில்லை.
இவ்வாறு சொல்லிக் கொண்டு,பாபா மசூதியிலிருந்து எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டார்.
அவர் தம்மை அனசுயா  தேவியுடன் ஒருமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.சிறிது நேரம் கழித்து பாபா எல்லோரையும் உள்ளே அழைத்தார்.முதலில் சென்ற கோஹோஜ்கர் பாபாவின் ஆசனத்தில் பார்த்தது பாபாவை அல்ல,ஆனால் மூன்று முகங்களுடன் கூடிய அழகிய குழந்தை,அதாவது தத்தரை!ஒரு கணத்தில்
தத்தர் மறைந்தார்,பதிலாக பாபா காணப்பட்டார்.
Posted: 09 May 2013 03:00 PM PDT
உங்களுக்கு விஸ்வாசம் குறித்து கதை ஒன்றை கூறுகிறேன்.சோல்கர் கதை விஸ்வாசத்திற்கு உதாரணம்.அவர் வெறும் தாசகணுவின் கதையை மட்டுமே கேட்டார்.விஸ்வாசம் வைத்தார்.வேண்டுதல் செய்தார்.பிறகு சும்மா இருக்கவில்லை.சர்க்கரையை ஒழித்துப் பணம் சேமித்தார்.எனக்கு வேண்டுதல் செய்ததால் உத்தியோகம் கிடைத்தது என்ற பாவத்துடன் தன்னைத்தானே தண்டித்துக் கொண்டார்.நம்பிக்கையிலேயே நான் இருக்கிறேன் என்பதால் அவருக்கு உத்தியோகம் கிடைத்தது.ஷிரிடிக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றினார்.என்னிடம் முழு நம்பிக்கை இருந்தால் நிறைவேறாத காரியம் இருக்காது.விசுவாசமே ஒரு வடிவம் கொண்டு நானாக இருக்கிறேன்.ஆகையால் உங்கள் நம்பிக்கையை என் மேல் உறுதியக்குங்கள்.உங்களுக்கு முன்புறமும்,பின்புறமும் நானே இருப்பதை கிரகிப்பீர்கள்.உன் காரியங்கள் அனைத்திலும் நான் இருப்பேன்.இது என்னுடைய வாக்கு தானம்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா[ஸ்ரீ சாயி திருவாய்மொழி]
Posted: 10 May 2013 03:00 PM PDT
உங்கள் வேண்டுதல்,எனக்குக் கேட்காமல் இருக்குமா?என் இதயம் இளகாமல் இருக்குமா?ஸ்மரணை உங்களுடையதாக இருக்கையில்,என் இதயத்தில் எதிர்வினை ஏற்படாமல் போகுமா?நான் சர்வமும் வியாபித்திருக்கிறேன்.உங்களுக்கு அருகிலேயே நான் இருக்கிறேன்.
என்னுடைய கதைகளை{ஸ்ரீ சாய் சத்சரித்திரம்}சிரத்தையுடன் சிரவணம் செய்யுங்கள்.மனனம் செய்யுங்கள்.மனத்தில் இருத்திக் கொள்ளுங்கள்.கடைபிடியுங்கள்.உங்கள் கோரிக்கைகள் எதுவானாலும் கண்டிப்பாக நிறைவேறும்.கர்மவினை எவ்வளவு பலமானதாக இருந்தாலும் கண நேரத்தில் நசிந்துவிடும்.என் அனுக்கிரகம் உங்களுக்கு நிரந்தரமாக இருக்கும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 11 May 2013 03:00 PM PDT
காலம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கருதவேண்டாம்.தங்க சிம்மாசனங்களும் கண்மறைவாகிவிடும்.அதிகாரங்கள் மறைந்துபோகும்.செல்வவளம் சொல்லாமலேயே சென்றுவிடும்.கொடுக்கும் கரங்களே பெற்றுக் கொள்ளும் கரங்களாகிவிடும்.அப்போது கொடுப்பவர்கள் இருக்க வேண்டுமல்லவா!ஆகையால்[செல்வம்] இருப்பவர்கள்  கொடுப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.விதையை அப்படி விதைத்துக் கொண்டால் பலன் கிடைக்காமல் போகாது.என்னுடையது எனக்கு மட்டுமே என்ற பாவத்துடன் நாட்களைக் கடத்தி,தேவை எற்பட்டபோது  எனக்கு யாரும் இல்லை என்று கருதினால் பிரயோஜனம் என்ன? தானம் செய்தது வீண் போகாது.ஆறுதல் சொன்னால் அது வீணாகாது.உதவி வீணாகாது.நல்ல சொற்கள் வீணாகாது.அன்பு வீணாகாது.தேவை நேர்ந்தபோது,அதிக பலனை இக்குணங்களே அந்த இறைவனின் வடிவத்தில் பிரத்தியட்சமாகும்.இப்படிச் சேர்த்து வைத்தது எதுவோ அதுமட்டுமே ஜீவர்களுடன் வரும்.உயர்ந்த கதியை நல்கும்.ஆகையால் பிரம்ம ஞானத்தினால் பெரும் பிராப்தியை இவ்விதமாகவும் பெற முடியும்!என் சொற்களை மறந்து விடாதீர்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.








No comments:

Post a Comment