Saturday, April 13, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 15/2013)


Posted: 07 Apr 2013 03:00 PM PDT
பெரும் துன்பம் ஏற்பட்டால், நான் எப்போதும் என் வீட்டிலுள்ள பாபா படத்தின் முன் கதறுவேன்; உடனையே அவர் என் முன் தோன்றி எனக்கு ஆறுதல் அளிப்பார். ஜாம்நேரில் (ஜாம்நகர்) பிரசவ காலத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு உதவி செய்ய ஊதியுடன் (விபுதி) ஒருவரை பாபா அனுப்பியதாக நானா சந்தோர்கர் என்னிடம் கூறியுள்ளார்; அதாவது தான் அனுப்பி வைக்காத ஒரு டோங்காவாலா (குதிரை ஓட்டுபவர்), குதிரைகள் பாபாவின் தூதனை அழைத்து வந்து விட்டு மறைந்து விட்டனர். ராம் கீர் கோசாவி என்ற அந்த தூதர் இன்னமும் ஷீரடியில் வசிக்கிறார். பாபா அவரை பாபுகீர் என அழைப்பார்.

அத்வைதம் பற்றி பாபா என் முன் பேசியதில்லை."அல்லா காப்பார்". "கடவுள் யாவரையும், எளியோரையும் ரக்ஷிக்கிறார்" போன்றெல்லாம் எப்போதும் கூறுவார் . கரீபதோ அல்லா பாலீத் ஹை, அல்லா அச்சா கரேங்கா.
கோபம்
Posted: 08 Apr 2013 03:00 PM PDT
எனக்கு வேகமாக கோபம் வருகிறது. அப்பொழுது உணர்ச்சியால் நான் செயலிழக்கிறேன். இதை போக்குவது எப்படி?
உங்களுக்கு கோபம் வரும்போது , ஸ்ரீ சாயிபாபாவை வேண்டுங்கள். அதோடு அவரின் வாழ்க்கை வரலாறான 'சாயிசத் சரித்திரம்' புத்தகத்தை படியுங்கள். நாளடைவில் உங்கள் கோபம் குறைந்து கொண்டே வரும். யாருடனாவது நீங்கள் கோபமாக இருந்தால் அங்கு நின்று சண்டையிடுவதைவிட நீங்கள் அந்த இடத்தை விட்டு அகலுவது நல்லது. சண்டையிடுபவர்களை விட, பொறுமையாக இருப்பவர்களையே தான் அதிகம் விரும்புவதாக பாபா கூறியுள்ளார். -குருஜி சத்பதி.
கடன்பாக்கி
Posted: 09 Apr 2013 03:00 PM PDT
எனக்கு என்ன வீடா,வாசலா,குடும்பமா,குழந்தையா? நான் ஏன் தக்க்ஷினை கேட்கவேண்டும்?நான் எதையும் எவரிடமிருந்தும் பெற்றுக்கொள்வதில்லை.கடனைத் திருப்பி கேட்பவள் இந்த மசூதிமாயீ!
கொடுப்பவர் தம் கடனிலிருந்து விடுபடுகிறார்.
தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும் இரக்கமாகவும் கெஞ்சுகிறார்கள்;
காரியம் கைகூடிய பிறகு அதைப்பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.
என் பக்தர்கள் எவர் கடன்பாக்கி இல்லாதவரோ அவரே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
Posted: 10 Apr 2013 03:00 PM PDT
பாபாவின் முன்பு குர்ரான் புனித நூல்களைப் படித்து அவரிடம் விளக்கம் பெற முசல்மான்கள் (முஸ்லிம்) யாரும் வரவில்லை. ஆனால் பல பகீர்களும், சாதுக்களும் இங்கு வந்தனர். எல்லா தெருக்களையும் பெருக்குவது, துப்புரவு செய்வது போன்ற பல பணிகளைச் செய்து பாபாவின் தொண்டில் நான் ஈடுபட்டு வந்தேன். பின்னர் பாபாவின் அருகில் குர்ரான் போன்ற நூல்களைப் படித்துக் கொண்டு இரவு முழுவதும் விழித்திருப்பேன். அவர் எனக்கு கூறிய அறிவுரை: "மிகக் குறைவாக சாப்பிடு. வகை வகையான பல பதார்த்தங்களை நாடாதே; ஒரே வகை உணவு போதும். அதிகம் தூங்காதே!" பாபாவின் அறிவுரையை நான் பின்பற்றி வந்தேன். மிகக் குறைவாகவே உண்டேன். இரவு முழுவதும் விழிப்புடன் இருந்து, மண்டியிட்டவாறு குர்ரான் முதலியவற்றை திரும்பத் திரும்ப படித்தும், பாபாவின் அருகிலேயே தியானம் செய்தும் வந்தேன். நான் படித்ததை தியானம் செய்யும்படி பாபா கூறினார். "நான் யார் என்பதை எண்ணிப்பார்" எனக் கூறுவார்.  - அப்துல் பாபா (சுல்தான் என்பவருடைய மகன், சுமார் 65 வயது, முசல்மான், ஷீரடியில் வசிப்பவர்).ஷிர்டி, மார்ச் 10, 1938. 
ஜோதிடத்தை பொய்யாக்கினார் பாபா
Posted: 11 Apr 2013 03:00 PM PDT
சத்சரித்திரம் ஒன்பதாவது அத்தியாயத்தில் தர்கட் குடும்பம் பற்றி அதிகமாக பேசப்படுகிறது. இந்த அம்மையார் மும்பை புறநகர்ப் பகுதி பாந்த்ராவைச் சேர்ந்தவர். இவரது கணவர் பெயர் ராமச்சந்திர ஆத்மா தர்கட். இவர்களது மகன் பாபு. இந்தக் குடும்பம் பாபா மீது தீவிர பக்தி செலுத்தியது. பாபு தேர்வு எழுத்தும் முன்பு இவனை ஆசீர்வதித்து ஜோதிடத்தை பொய்யாக்கினார் பாபா. பாபாவுக்கு முழு கத்தரிக்காய், தயிர்பச்சடி போன்றவற்றை தயார் செய்து பாபாவுக்கு அளிப்பார். முன் ஜென்மத்தில் பால் தரும் பசுவாக இருந்து சேவை செய்தவர் என இவரை பாபா போற்றியுள்ளார்.
Posted: 12 Apr 2013 03:00 PM PD
நம்மில் பலர், நான் பாபாவிடம் சரணடைந்துவிட்டேன், பாபாவின் கதைகளையும், லீலைகளையும் தினமும் படிக்கிறேன், கேட்கிறேன், தியானமும் செய்கிறேன். ஆனாலும் எனக்கு வந்த கஷ்டங்கள் இன்னும் தொடருகின்றன. எப்போது பிரச்சனை முடியும் என்று தெரியவில்லை. அவர் எப்போது எனக்கு கலங்கரை விளக்காக இருக்கப் போகிறார்? எனப் புலம்புவார்கள்.
இது போன்றவர்கள் புலம்பும்போதும் கண்ணீர் விட்டுக் கதறும்போதும், சத்குருவே இவர்களுக்கு உடனடியாகத் தீர்வை தாருங்கள் என நம் மனம் கேட்டுக்கொண்டாலும், அவர்களுக்குள்ளேயே உள்ள நம்பகத் தன்மை, அகங்காரம், எதிர்பார்ப்பு இவைகளால் தாமதம் ஏற்படுகிறது. இதைப் பற்றி 24-ம் அத்தியாயம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.- ஸ்ரீ சாயி தரிசனம்
Posted: 13 Apr 2013 03:00 PM PDT
மாயை என்று அழைக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நடுவில் வாழும் வரை இந்நிலைமையை ஒருவரால் தவிர்க்க முடியாது. இவ்வுலக நடவடிக்கைகளை முற்றிலும் துறந்து ஒரு யோகி அல்லது சன்னியாசியாக மாறினால்தான் இந்த நிலையை தவிர்க்கமுடியும். அதே சமயத்தில் ஒருவர், பாபாவின் நாமத்தை ஜெபிப்பது, பாபாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது, பாபாவைப் பற்றி படிப்பது, பாபாவையே நினைப்பது போன்ற சில வழிகளில் எப்போதும் பாபாவையே இறுகப் பற்றிக்கொண்டால், மாயையின் தாக்குதல்களை எதிர்க்கும் மனோபலத்தை வளர்த்துக் கொள்வதற்கும் பாபாவின் உதவி நமக்குக் கிடைகிறது. எவ்வளவுக் கெவ்வளவு பாபாவின்மீது உள்ள ஈடுபாடு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மாயத்தோற்றமான இவ்வுலக நடவடிக்கைகளில் ஈடுபாடு குறைகிறது.       






No comments:

Post a Comment