Posted: 24 Mar 2013 03:00 PM PDT
சரணாகதி என்ற ஒன்றினால் மட்டுமே நம்முடைய கர்மாக்கள் கரைந்துபோகும்,சரணாகதி செய்வதால் மட்டுமே நமது பிரச்சினைகள் தீர்ந்து போகும்.நமது வேண்டுதல்கள் கேட்கப்படும்.சரணாகதியே சகலமும்,சாயி நாமமே வேதங்கள் அனைத்தின் சாராம்சம்.சரணாகதி செய்து நமது நம்பிக்கையில் அசைக்க முடியாத உறுதியுடனும்,பொறுமையுடனும் காத்திருந்து பாபா அளிக்கும் விடுதலையைப் பெறுவோம்.
Posted: 25 Mar 2013 03:00 PM PDT
இதோ பார்,உனக்கு நடப்பவையெல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டமே.நான் செய்பவனுமல்லேன்,செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள். ஆனாலும்,செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது!
எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் என்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ,அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 26 Mar 2013 03:00 PM PDT
பாபாவிடம் பக்தி உடையவருக்குக் குறை ஏதும் உண்டோ?அவர் மனத்தால் என்ன வேண்டுமென்று விருப்பப்படுகிறாரோ,அது அவரிடம் உழைப்பு ஏதுமில்லாமலேயே வந்து சேரும்.யாரை பாபா அரவணைக்கிறாரோ,அவர் தம்முடைய வீட்டிலிருந்தாலும் சரி,ஏதோ தீவிலிருந்தாலும் சரி,சர்வ நிச்சயமாக சாயி அவரருகில் இரவும் பகலும் இருக்கிறார்.பக்தர் எங்கே சென்றாலும் எவ்விடத்தில் இருந்தாலும்,சாயி அவருக்கு முன்னமேயே அங்கே சென்று சற்றும் எதிர்பாராத வகையில் தரிசனம் அளிக்கிறார்.
Posted: 27 Mar 2013 03:00 PM PDT
குட்டி ஆமைகள் எப்பொழுதும் தாயைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கின்றன;குட்டிகள் வேறெதையும் செய்யத் தேவையில்லை.அவற்றுக்குப் பாலும் வேண்டா;புல்லும் வேண்டா;வேறெந்த உணவும் தேவையில்லை.தாயை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதே அவற்றுக்குப் போஷாக்கு.
தாய் ஆமையினுடைய கனிந்த பார்வை குட்டிகளுக்கு சுயானந்த புஷ்டியை கொண்டுவரும் அமிருத மழையாகும்.இதுவே பாபாவுக்கும் நமக்கும் உண்டாகும் ஐக்கிய அனுபவமாகும்.
Posted: 28 Mar 2013 03:00 PM PDT
"எது எப்படியிருப்பினும், நான் ஷீரடிக்கு சென்று பாபாவை பேட்டி காண்பேன் ஆனால், பாதங்களுக்கு வந்தனம் செய்யமாட்டேன்; தட்சிணை கொடுக்கவும் மாட்டேன்"
எவரெல்லாம் மனத்தில் இந்தக் குதர்க்க வாதத்தை திடப்படுத்திக்கொண்டு கிளம்பினார்களோ, அவரெல்லாம் தரிசன யோகம் கிடைத்த பின் சாயி பாபாவை சரணடைந்தார்கள். அவர்கள் அனைவரும் தங்களுடைய நிலையில் உறுதியாக நின்றனர். மறுபடியும் சந்தேகங்கொண்டு திரும்பி பார்க்கவே இல்லை. சாய்பாபா பாதங்களில் மூழ்கிவிட்டனர்.
எவரெல்லாம் மனத்தில் இந்தக் குதர்க்க வாதத்தை திடப்படுத்திக்கொண்டு கிளம்பினார்களோ, அவரெல்லாம் தரிசன யோகம் கிடைத்த பின் சாயி பாபாவை சரணடைந்தார்கள். அவர்கள் அனைவரும் தங்களுடைய நிலையில் உறுதியாக நின்றனர். மறுபடியும் சந்தேகங்கொண்டு திரும்பி பார்க்கவே இல்லை. சாய்பாபா பாதங்களில் மூழ்கிவிட்டனர்.
Posted: 29 Mar 2013 03:00 PM PDT
ஜாதகம் ,கைரேகைக்காரர்களின் ஜோசியம் ஆகியோரின் முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு என்னை மட்டுமே நம்புங்கள்.என்னை நம்பி என்பால் லயமாகும் மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மளாட்டத்தைப் போன்று நான் நின்று நடத்துகிறேன்-ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]
Posted: 30 Mar 2013 03:00 PM PDT
என்னையே புகலிடமாக கொண்ட பக்தனின் அடிமையாக நானிருக்கிறேன்.நீங்கள் என்னால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்,தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து தைரியத்தோடு இருங்கள்..காரியம் சித்திக்கும்.
தொகுப்பிற்கு நன்றி ஐயா...
ReplyDeletesaibaba indri intha ulagamillai, nan illai
ReplyDelete