Posted: 21 Apr 2013 03:00 PM PDT
ஸ்ரீ சாயிசத் சரித்திராவை கவனமாகவும், தொடர்ந்து இடைவிடாதும் படியுங்கள். எல்லா விடைகளும் உங்களுக்கு கிடைக்கும். எல்லா ஆன்மீகப் புத்தகங்களும், குருக்களின் வாழ்க்கை வரலாறுகளும் அடிப்படையில் உண்மையான வாழ்க்கை பாதை பற்றியே கூறுகின்றன.
Posted: 22 Apr 2013 03:00 PM PDT
சாயி-யின் முன்னால் எவன் சாஷ்டாங்க சரணம் செய்து, தனது இதயத்தையும் உயிரையும் அவரிடம் சமர்பிக்கிறானோ, அவன் வாழ்கையின் நான்கு முக்கிய குறிக்கோளாகிய அறம் (தருமம்), பொருள் (செல்வம்), இன்பம் (ஆசை), வீடு (முக்தி) இவைகளை எளிதில் அடைகிறான்- ஷிர்டி சாய்பாபா (சாயி சத்ச்சரித்ரா 6 )
Posted: 23 Apr 2013 03:00 PM PDT
வெளிப்புறமாக நீங்கள் செய்யும் ஆராதனை, உங்களுக்குள் இருக்கும் என்னை அடைகிறது. அப்போது நான் சக்தி உடையவனாகி உங்களை காப்பாற்றுகிறேன். - ஷிர்டி சாய்பாபா
Posted: 24 Apr 2013 03:00 PM PDT
நான் இந்த பெளதீக உடலுடன் ஷிரிடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன்- ஷிர்டி சாய்பாபா.
Posted: 26 Apr 2013 03:00 PM PDT
பி.லகாதே, பி.ஏ., எல்.எல்.பி.
(ஸப் ஜட்ஜாக இருந்தவர், வயது 70, பூனா) ஜூலை 20, 1936.
1913 அல்லது 1914-ம் ஆண்டு வாக்கில் நான் சாயிபாபாவிடம் சென்றேன். நான் ஒரு இக்கட்டில் இருந்தேன்; அதிலிருந்து விடுதலை பெற ஆசிகளை நாடி நான் அவரிடம் சென்றேன். நான் அவரை அணுகிய போது, அவர் என்னிடம் தக்ஷிணை கேட்டார்; நான் கொடுத்தேன். அவராகவே "வேம்பை விதை; பின்னர் மரத்தை வெட்டிவிடு"* என என்னிடம் கூறினார். அவருடைய இந்தப் பேச்சு எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நான் அவரிடம் வேண்டிச் சென்ற ஆசிர்வாதம் அல்ல அது. நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.
* குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்சம் வாங்கியதாக அவர் மீது ஒரு ஊழல் வழக்கு தொடரப்பட்டு, அவர் குற்றவாளி எனக் கருதப்பட்டு கடும் அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டிலும் இது ஊர்ஜிதமாயிற்று. இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது தான் இவர் (லகாதே) தாம் வெற்றிபெற ஆசிகோரி பாபாவை அண்டினார். வேம்பு விதைப்பதும், வேம்பு அறுவடை செய்வதும் கர்மாவின் நியதி பற்றிய பாபாவின் உபமானக் கதை. கசப்பானதை விதைத்தால், கிடைப்பது அதே ரகமாக, கசப்பாகத் தான் இருக்கும். ஆதலால், ஒருவன் தான் செய்த பாவச் செயலுக்கு உண்டான தண்டனை முழுவதும் அனுபவித்து கர்மவினையைப் போக்கிக் கொண்டு, இதை படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் பயனடைவதே சிறந்தது. - ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள்- பூஜ்ய நரசிம்ம சுவாமிஜி.
அன்புத் தந்தை நான்

Posted: 27 Apr 2013 03:00 PM PDT
என் மகனே! மகளே! நான் சத்திய தேவன். பொய் சொல்ல மாட்டேன். முழுமையான சரணாகதி அடைந்து நீ கரம் குவித்தால் ஓடி வரும் நாராயணன் நான். உன் விதியை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கும் கலியுக பிரம்மாவும் நானே! உனது இன்னல்களை அழிக்கும் ஈசனும் நானே! கோபத்தின் போது வெளிப்படும் அக்கினியும், துக்கத்தின் போது வெளியாகும் கங்கையும் நானே! உன் நாசியில் வெளிவரும் வாயுவும் நானே! எங்கும் எதிலும் உனக்காக, உன் சார்பில் இருக்கும் அன்புத் தந்தை நான்.
நீ அமைதியாக இரு.. என் பெயரை சதா உச்சரித்துக் கொண்டிரு.. உனக்குத் தேவையானதை செய்வேன். கடைசி வரை உன் கூடவே இருந்து துணை செய்வேன். - ஸ்ரீ சாயியின் குரல்.
No comments:
Post a Comment