Saturday, April 6, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 14/2013)


Posted: 31 Mar 2013 03:00 PM PDT
ஏங்குதல்,போராட்டங்களை  விடுத்து என்னையே சார்ந்திரு,நான் உன்னுடனையே இருப்பேன்.நான் உன்னுடைய தாகத்தை  தீர்ப்பதற்காக வருவதற்குள் உன் மனம் சஞ்சலமடைந்து,எங்கேயோ  செல்லுகிறாய்.நான் உனக்காகவே இருக்கிறேன். பாரத்தை என்மேல் சுமத்து சாந்தி ஏற்படும்.-ஷீரடி சாய்பாபா.    
Posted: 01 Apr 2013 03:00 PM PDT
நானா சாகேப் தெங்களே எனும் ஒரு பக்தர் ஒரு முறை வெள்ளித்தட்டு நிறைய பலவகை ருசியான பண்டங்களை கொண்டு வந்து பாபாவிடம் அவற்றை சாப்பிட வேண்டுமென வேண்டினார். பாபா உரக்க கத்தினார். ஒரு கருப்பு நாய் ஓடி வந்து அந்த உணவின் ஒரு பகுதியை நக்கிவிட்டது. அருகில் நின்று கொண்டிருந்த நானா சாகேப் இதை அருவெறுப்புடன் நோக்கினார். "இந்த கீழ்த்தரமான நாய்க்காகவா நான் இவற்றை தயார் செய்தேன்!" என அவர் மனதில் எண்ணம் தோன்றியது. உடனே பாபா உணவுப் பொருட்களுடன் அந்த தட்டை தூக்கி எறிந்து. "இதை எடுத்துச் செல்" என உத்தரவிட்டார். அப்போது நான் அங்கிருந்தேன் - தாமோதர் ஸாவால்ராம் ராஸனே.

ஈனமான ஜந்துக்களையும், தாழ்ந்த நிலையிலுள்ளோரையும் தமக்கு இணையாகவோ, அல்லது தாமாகவோ பாபா நடத்தி வந்ததை நான் எப்போதும் நினைவில் கொண்டுள்ளேன். ஒரு சமயம் பாபா எங்கும் வரமாட்டார், என் விடுதியில் உணவு ஏற்கமாட்டார் என நன்கு அறிந்த நான் பாபாவிடம் சென்று பாலா படேலை எனது விருந்தாளியாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டேன். பாலா படேல் தாழ்ந்த குலத்தை சார்ந்தவர்; ஆகவே அவரை அனுப்ப சம்மதித்த பாபா, "அவனிடம் தட் தட் எனக் கத்தாதே!" எனக் கூறினார். அதாவது நாம் சாப்பிடும் இடத்திலிருந்து விலகி தனியே இலை போட்டு அவரை உண்ணவைத்து அவரை அவமரியாதை செய்யக்கூடாது என்பது. நான் ஒப்புக்கொண்டேன். அறுசுவை உணவு தயார் செய்து, பாபாவுக்காக ஒரு இலை போட்டு எல்லா உணவு வகைகளையும் அதில் பரிமாறி  "பாபா!வருக!" என அழைத்தேன். ஒரு கருப்பு நாய் ஓடிவந்து அந்த உணவை உண்டது. அது சாப்பிட்டு முடிக்கும் வரை நான் பயபக்தியுடன் காத்திருந்து, அதன் பின்னர் பிறருக்கு விருந்தளித்து நானும் உண்டேன். என் அருகில் பாலாவுக்கு ஒரு இலை போட்டு சாப்பிட வைத்தேன். வீட்டுக்கு வெளியிலல்ல. - தாமோதர் ஸாவால்ராம் ராஸனே.

ஆதாரம்:ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள் - பூஜ்ய நரசிம்ஹ சுவாமிஜ
Posted: 02 Apr 2013 03:00 PM PDT
மும்பையினை சேர்ந்த வியாபாரி சங்கர்லால் கே.பட். அவருக்கு கால் ஊனம்.  அவர் நடப்பது ஒரு மாதிரி கேலி செய்வது போலிருக்கும். இது அவரை மிகவும் வேதனைப்படுத்தியது.  எல்லாவித சிகிச்சை முறைகளையும் செய்து பார்த்தும் எந்த வித பிரயோசனமும் இல்லை.
மனதால் ரணப்பட்ட அவருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. இதற்க்கு வழி தெரியாமல் இருட்டில் நிற்பது போல் உணர்ந்தார்.
தன் கால் ஊனத்திற்க்கு என்னதான் விடிவு என்பது சங்கர்லால் விசாரிக்க ஆரம்பித்தார்.  அப்போது அவருக்குத் தெரிந்தவர்கள் சீரடி சாயிபாபா பற்றியும் அவரின் வியத்தகு சக்தி பற்றியும் எடுத்துக்கூறினார்கள்.
1911-
ம் ஆண்டு அவர் சீரடி வந்தார். பாபாவை வீழ்ந்து வணங்கினார். அவரது ஆசிர்வாதம் பெற்றார்.  பின் பாபா அனுமதியுடன் சீரடியினை விட்டு புறப்பட்டார்.  கொஞ்ச தூரம் நடந்ததும், அவரது நடையில் மாற்றம் தெரிந்தது.  முன்போல நொண்டி நொண்டி நடக்காமல் நன்றாகவே நடந்தார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது ஊனம் நிரந்தரமாகவே குணமானது பற்றி நினைத்து நினைத்து பாபாவிற்க்கு நன்றி கூறினார்.
பாபாவின் அதீத சக்தியை எண்ணி ஆச்சரியப்பட்ட அவர், ஊர் திரும்பியவுடன் பாபாவின் தரிசன மகிமை பற்றியும், வியத்தகு சக்தி பற்றியும் எல்லோரிடமும் சொல்லி அனைவரையும் வியப்படையச் செய்தார்.
பாபா தன்னிடம் வருபவர்களின் வேண்டுகோளை தனது ஆசியால் தனது பார்வையால் நிறைவேற்றி வந்தார். இப்பொதும் நிறைவேற்றி வருகிறார். அவரின் சமாதி அத்தனை மந்திர சக்தி வாய்ந்தது.  சமாதியில் இருந்துகொண்டே தனது பக்தனின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு தருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
Posted: 03 Apr 2013 03:00 PM PDT
 என்னுடைய கதைகள், உபதேசங்கள் இவைகளைக் கேட்போருக்கு நான் பணிவிடை செய்வேன். செய்வது மட்டுமல்ல, அவர்கள் ஆசைகளையும் பூர்த்தி செய்வேன். என்னுடைய கதைகள் வெறுமனே கேட்கப்பட்டால் கூட அவர்களது அனைத்து வியாதிகளும் குணப்படுத்தப்படும். என்னுடைய பக்தர்களை எக்கணமும் அச்சுறுத்துகின்ற ஆபத்துக்களின் கோரப்பற்களிலிருந்து நான் வெளியே இழுத்துவிடுவேன்.-ஷீரடி சாயிபாபா
Posted: 04 Apr 2013 03:00 PM PDT
சேவை செய்வதோ,செய்யாமலிருப்பதோ நமது இஷ்டம் என்ற எண்ணத்துடன் சேவை செய்வது சேவை ஆகாது.இந்த சரீரம் நமது உடமையல்ல,அது பாபாவினுடையது.அவருக்கு பணி புரிவதற்கென்றே  ஏற்பட்டது என்ற மனோபாவத்துடன் செய்யப்படும் பணியே சேவை ஆகும்.
Posted: 05 Apr 2013 03:00 PM PDT
 உங்கள் தேவைகள், வேலைகள் எதுவானாலும் எனக்கு அர்ப்பணமாக செய்யுங்கள். நான் உங்கள் நலனில் அக்கறை உள்ளவன், காப்பாற்றுபவன்.உங்களை ஆட்டுவிப்பவன் நானே...எல்லாவற்றையும் படைத்துக் காப்பவனும் நானே...உலகத்தின் ஆதாரம் நானே..எவன் என்னை மனதார நினைக்கிறானோ அவனுக்கு எப்போதும் துன்பம் நேராது-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 06 Apr 2013 03:00 PM PDT
நான் ஷீரடிக்கு சென்றதில்லை. நண்பர்கள் பாபாவைப் பற்றிப் பேச கேட்டிருக்கிறேன். என்னிடம் அவருடைய படம் இருக்கிறது. சாயி பாபாவின் படத்தை நான் பூஜிப்பதில்லை. அவரை ஒரு மகானாக கருதுகிறேன்.

1917-
ல் நோர்வேகர் (கஜானன்) நோய்வாய்ப்பட்டார். அவருடைய மகன் ரூ.500- எடுத்துச் சென்று பாபாவிடம் அளித்தான். அதைப் பெற்றுக் கொண்டவுடன் பாபா ஜூரத்தால் நடுங்க ஆரம்பித்தார். விளக்கம் கேட்டபோது, "பிறருக்கு எதாவது செய்யவேண்டுமென நினைத்தால், அதன் சுமைகளையும் பொறுப்புகளையும் நாமே ஏற்க வேண்டும்" என பாபா பதில் அளித்தார். சில நாட்களில் கஜானன் நோர்வேகர் ஜூரத்திலிருந்து குணமடைந்தார்.

ஒருசமயம் மிக சிக்கலான ஒரு கிரிமினல் வழக்கு விஷயமாக நான் துப்பு துலக்க வேண்டியிருந்தது. நான் உதவிக்காக பாபாவிடம் பிராத்தனை செய்தேன். சாயி பாபா என் கனவில் தோன்றி, நான் எப்படி செயல்படவேண்டுமென சில வழிமுறைகளை எடுத்துரைத்தார். அதன்படி நடந்ததில் என் துப்பறியும் பணி வெற்றிகரமாக முடிந்தது. - ஜோசப் பெளஸ்தார்

ஜோசப் பெளஸ்தார்: (ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி - கிறிஸ்துவர், வயது 46, டர்னர் ரோடு, பந்த்ரா) செப்டம்பர் 26, 1936. - ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள் - பூஜ்ய ஸ்ரீ நரசிம்ஹ சுவாமிஜி.    


No comments:

Post a Comment