Tuesday, March 12, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 10/2013)





Posted: 03 Mar 2013 02:00 PM PST

சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு,சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால்,எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும்.சாயி நாமத்தின் சக்தி அவ்வளவு பிரம்மாண்டமானது.-ஸ்ரீ சாயி இராமாயணம்.

Posted: 04 Mar 2013 02:00 PM PST
என்னை வேறொன்றிலும் நாட்டமில்லாமலும் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமலும் இரவுபகலாகத் தொழுபவன் இரண்டென்னும் மாயையை வென்று என்னுடன் ஐக்கியமாகிவிடுகிறான்.விசுவாசம் நிறைந்த இதயத்துடன் என்னை நினைத்தால் போதும்.சுயநலம் கருதாது என்னை வழிபடுங்கள்;எல்லா மங்களங்களும் விளையும்.-ஷீரடி சாய்பாபா.
Posted: 05 Mar 2013 02:00 PM PST
குருவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்குப் புலப்படாது,அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது.மூவுலகங்களிலும் தேடினாலும் சத்குருவைத் தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காணமுடியாது.-ஸ்ரீ சாயி இராமாயணம்.
Posted: 06 Mar 2013 02:00 PM PS
நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் சாயி நிரம்பியிருக்கிறார்.சாயி எல்லோருடைய அகத்திலும் புறத்திலும் இருக்கிறார்.சமர்த்த சாயி தீனதயாளர்.நம்பிக்கையுடன் பக்தி செய்து வணங்குபவர்களைப் பாதுகாப்பவர்.உயர்ந்த பிரேமைக்காகப் பசியோடிருப்பவர்.நம் ஊனக்கண்களுக்குத் தெரியாதபோதிலும்,அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்.தம்மளவில் சூட்சுமமாக இருந்தபோதிலும்,நம்மை அவர்பால் வசீகரித்து இழுக்கிறார்.அவருடைய மரணம் ஒரு பாசாங்கு மட்டுமே;நம்மை ஏமாற்றும் ஓர் உத்தியே.பூரணத்துவம் பெற்ற அவர் பல வேஷங்களில் நடிக்கிறார்.அவருடைய இதயத்தில் கனிந்த அபரிதமான அன்பை கெட்டியாகப் பற்றிக்கொள்வோமாக!அவருடைய மார்க்கத்தை நன்கு புரிந்துகொண்டு காரியசாதனை பெறுவோமாக
Posted: 07 Mar 2013 02:00 PM PS
ஒருமுறை பாபாவை அன்புடன் நோக்கினால், அவர் ஆயுள் முழுவதற்க்கும் நம்முடையவர் ஆகிவிடுகிறார். உண்மையான அன்பைத் தவிர நம்மிடம் அவர் வேறெதையும் எதிர்பார்ப்பதில்லை. நாம் கூப்பிடும்போது காப்பாற்ற ஓடிவருகிறார். அந்நேரத்தில் காலமோ, நேரமோ அவருக்குக் குறுக்கே நிற்கமுடியாது. சதாசர்வ காலமும் அவர் நமக்குப் பின்னால் உறுதியாக நிற்கிறார். அவர் எங்கு, எவ்வாறு, எந்த விசையை இயக்குவார் என்று நமக்குத் தெரியாது. அவருடைய செயல்கள் புரிந்துகொள்ளமுடியாதவை.
Posted: 08 Mar 2013 02:00 PM PST
நானா சாஹேப் பாபாவின் மிகப்பெரிய பக்தர்; ஒருமுறை அவருக்கு முதுகுப்புறம் ஏற்பட்ட கட்டியின் காரணமாக அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று டாக்டர்கள் குழு தெரிவித்தது. அவரும் அவ்வாறே தயாரானார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளில்; அவர் இருக்கும் அறையின் மேல்தளத்தின் ஓடுகள் சரியத்தொடங்கின, அதில் ஒரு கூர்மையான ஓடு மிகச்சரியாக குப்புறப்படுத்துக் கொண்டிருந்த நானாவின் முதுக்கட்டியின் மீது சரக்கென்று விழுந்து, சிதைத்தது. வழியால் துடித்தார் நானா. டாக்டர்கள் அதிர்ந்து போனார்கள்.
கட்டி உடைந்து, ரத்தமும், சீழுமாய் வெளியேறிற்று. டாக்டர்கள் அவசர அவசரமாய் நானாவை சோதித்தார்கள். என்ன ஆச்சரியம்! அறுவை சிகிச்சையே செய்யவேண்டாம் என்று சொன்னது மருத்துவக் குழு.  அத்தனை அற்புதமாக ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆம். ஏழெட்டு டாக்டர்கள் உத்திரவாதம் தராமல் செய்வதாக இருந்த அறுவை சிகிச்சையை, உத்திரத்திலிருந்து விழுந்த ஒரு ஓடு செய்துவிட்டது!
சில நாட்கள் சென்றன. நானா  சாஹேப் பூரண குணமடைந்ததும் பாபாவைக் காணச் சென்றார்.
"
வா-வா .." என்று அவரை அழைத்த சாயிபாபா, தன் ஆட்காட்டி விரலை நானா சாஹேப் முன்னால் நீட்டினார். ஒன்றும் புரியாமல் பார்த்தார் நானா. பாபா புன்னகைத்தார். "என்னப்பா, என்னிடம் நீ சொல்லாவிட்டால் எனக்குத் தெரியாதா என்ன? இதோ என் ஆட்காட்டிவிரலால் கூரையிலிருந்து ஓட்டினைத் தள்ளி, உனக்கு சிகிச்சை செய்ததே நான்தான்!" என்று புன்னகைத்தார் ஷிர்டி சாயிபாபா.
பரவசத்தில் நெகிழ்ந்து போனார் நானா சாஹேப்.
ஆமாம். உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் பாபாவை பிராத்தனை செய்யுங்கள். நீங்கள் பிராத்தனை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பாபா உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார், உங்கள் மேல் அக்கறையுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டுமாவது நம்புங்கள்.உளமார நம்புங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களை! நம்பவே முடியாத ஆச்சர்யங்களை. ஆமாம் அதுதான் பாபா. சாயிபாபா. ஷிர்டி சாயிபாபா. - மாண்புமிகு மகான்கள்.
Posted: 09 Mar 2013 02:00 PM PST
பாபா அணிமா சித்தியை பெற்றவர்,கண்ணில் விழும் தூசியளவிளுங்கூட சௌகரியமாக மறைந்து கொள்ளலாம்.ஈயினுடைய உருவத்திலோ,எறும்பினுடைய  ரூபத்திலோ,புழுவினுள்ளோ பாபா சுலபமாக சஞ்சாரம் செய்தது இவ்விதமாகவே.அணிமா,மஹிமா,லகிமா என்னும் அஷ்டமஹா சித்திகளும் நவநிதிகளும் அவருடைய சந்நிதியில் கைகட்டிச் சேவகம் செய்தன.



No comments:

Post a Comment