Posted: 17 Mar 2013 03:00 PM PDT
நடக்கப் போவதை தடுக்க முடியாதென்றால்,பாபாவிடம் போவதால் பிரயோஜனம் என்ன?தலையெழுத்துப்படி நடப்பது நடந்தே தீரும் என்றால் சாய்பாபா என்று ஒருவரை எதற்காக வைத்துக்கொள்ளவேண்டும்?சீரடிக்கு போவதால் என்ன லாபம்?கர்மவினையை பாபாவால் என்ன செய்துவிட முடியும்?
சாய்பாபாவின் பதில்;"உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும்.ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால்,எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதை போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்".
சர்வாந்தர்யாமி
சர்வாந்தர்யாமி
Posted: 18 Mar 2013 03:00 PM PDT
பாபாவின் சொற்கள் பிரமாணம் நிறைந்தவை.வரண்ட பாறையில் தண்ணீர் உள்ளது என அவர் கூறும்போது,அங்கே தண்ணீர் கிட்டியது.பஞ்ச பூதங்களும் அவரது ஆணைக்கு கட்டுப்பட்டன.நெருப்பு,நீர்,காற்று ஆகியவை அவருடைய ஆணைக்கு கீழ்ப்படிந்தது.பலத்த காற்றும் மழையும் அவருடைய ஆணையை மதித்து நின்றன.கொளுத்தும் வெய்யில் காலத்தில் எரியும் நெருப்பின் அருகே குளுமையான காற்று வீச வேண்டுமென பாபா சங்கல்ப்பம் செய்ய,அவ்வாறே குளிர் காற்று வீசியது.மாண்டவர் மீண்டும் உயிர்பெற்றனர்.தம் முன் இருப்பினும் இல்லாவிடினும் ஒருவனது இதயத்தில் உள்ளதை அறியும் சக்தியும்.அதை சீர்படுத்தும் சக்தியும் அவரிடம் இருந்தது.அவர் சர்வாந்தர்யாமி என உணரப்பட்டார்.
Posted: 19 Mar 2013 03:00 PM PDT
பாபா ஒரு சாதாரண வித்தைக்காரர் அல்ல,அவர் ஒரு சமர்த்த சத்குரு.பக்தர்களின் உள்ளங்களில் விசுவாசமும் நம்பிக்கையும் நிரம்பி வழிய பாபா சில அற்புதங்களையோ ,வியக்கத்தகும் உத்திகளையோ கையாளுகிறார்.நன்றி உணர்ச்சி,பிரேமை,பக்தியாக மாறுகிறது.தங்கள் தேவைகள் யாவற்றையும் அளிக்கக் கூடிய வள்ளல் என்ற நோக்கத்துடன் மக்கள் பாபாவை அணுகுகின்றனர்.அவர்களது லௌகீக தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே பாபாவிடம் செல்கின்றனர்.அனால் பின்னர் பலர் பாபா ராமன்,சிவன் போலவே தங்கள் இஷ்ட தெய்வம் என்றும்,தங்கள் முன்னோர்களின் குல தெய்வமே பாபாவாக புதிய உருவில் தோன்றி வையகத்தில் புராதன தெய்வீக பணிகளை நிறைவேற்றுகிறது எனவும் கண்டு கொண்டுவிடுகின்றனர்.
Posted: 20 Mar 2013 03:00 PM PDT
போதிப்பவர் குரு,போதித்து கடவுளிடம் இட்டுச் செல்பவர் சத்குரு,தங்களது சித்திகளையும் உயர்ந்த சக்திகளையும் பயன்படுத்தி பகவானிடத்தில் எல்லோரையும் வரவழைப்பவர் சமர்த்த சத்குரு.ஒரு குருவை மற்றொரு குருவுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது.ஒப்பிட்டுப் பார்த்தால் அனேகமாக மனக்கசப்பை அளிக்கும்.பக்தனுடைய நலனுக்கும் அது ஒவ்வாது.பாபாவின் குணங்கள் அற்புதங்கள் பற்றி கேட்டறிந்தோ,தங்களுடைய சொந்த அனுபவங்கள் அல்லது பிறருடைய அனுபவங்கள் வாயிலாக புரிந்து கொண்டோ ஒருவர் பாபாவினால் வசீகரிக்கப்பட்டால்,அவர் உடனடியாக பாபாவுடன் மேலும் தொடர்பு கொண்டு அதன் மூலம் பயனடைய வேண்டும்.
பாபாவை எந்த வகையில் சேர்ப்பது,அதாவது அவர் அவதார புருஷரா,அவலீயாவா,தேவாத்மாவா,இந்துவா,முஸ்லீமா என்பது போன்ற சர்ச்சைகளில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை.உண்மையான பக்தன் இந்தமாதிரி விஷயங்களில் கவனம் செலுத்தமாட்டான்.
பாபாவை எந்த வகையில் சேர்ப்பது,அதாவது அவர் அவதார புருஷரா,அவலீயாவா,தேவாத்மாவா,இந்துவா,முஸ்லீமா என்பது போன்ற சர்ச்சைகளில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை.உண்மையான பக்தன் இந்தமாதிரி விஷயங்களில் கவனம் செலுத்தமாட்டான்.
Posted: 21 Mar 2013 03:00 PM PDT
பாபாவை அணுகும் போது ஒருவன் என்ன பலன்களை எதிர்ப்பார்க்கிறான்?லௌகீகமானவையா,ஆன்மீகமானவையா?எதுவாயிருப்பினும் பாபாவால் அளிக்க முடியாத பலன் ஏதுமில்லை,"சர்வ சக்தி மூர்த்தயே நம" (எல்லா சக்திகளும் கொண்ட பெருந்தகையே போற்றி)என்பது போன்ற நாமாக்களால் தினமும் பக்தர்களால் துதிக்கப்படுகிறார்.எந்த விதமான பலன்கலானாலும் சரி,நோய் தீர்ப்பதோ(உடல் ரீதியானதாயினும் மனரீதியானதாயினும் சரி)மனப்பிராந்திகள்,ஊனங்கள் இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இல்லங்களில் நிலவி வரும் துன்பங்களுக்கும் நிவாரணம் அளிப்பது போன்ற எந்த விதமான பலனாயினும்,பாபாவால் அளிக்க முடியும் என்பது பல பக்தர்களின் அனுபவங்கள்
![http://feeds.feedburner.com/~r/ShirdiSaiBabaSayings-Tamil/~4/by439NfFL0E?utm_source=feedburner&utm_medium=email](file:///C:/Users/User/AppData/Local/Temp/msohtmlclip1/01/clip_image001.gif)
Posted: 22 Mar 2013 03:00 PM PDT
பாபாவுக்கு பிரியமான ஒரு பையன் இருந்தான். அவனது பெயர் பாபு, அவனது முதல் ஆண்டு பிறந்த நாள் விழா மாதவ ராவ் தேஷ்பாண்டே வீட்டில் சிறப்பாக நடந்தது. இந்த விழாவுக்கு பாலா சாகேப் பாடே அழைக்கப்பட்டிருந்தார். அவர் வர இயலாமையைத் தெரிவித்துவிட்டு, பாபாவை பார்க்கச்சென்றிருந்தார்.
பாபா - "ப்ரதான் அளிக்கும் விருந்தில் சாப்பிட்டாயா"?
பாலா சாகேப் - "இன்று வியாழக் கிழமை நான் சாப்பிடவில்லை"
பாபா - "இருந்தால் என்ன?"
பாலா சாகேப் - "குரு வாரங்களில் (நாட்களில்) நான் வெளியே சாப்பிடுவதில்லை. அது என் நியமம்!"
பாபா - "யாரை திருப்திப்படுத்த இந்த விதி?"
பாலா சாகேப் - "தங்களைத் திருப்திப்படுத்தவே!"
பாபா - "அப்படியானால் நான் சொல்கிறேன், பாவ் அளிக்கும் விருந்தில் சாப்பிடு"
பாபா - "விரதம் என்ற பெயரில் உன் உடல் நலனை கெடுத்துக் கொள்ளும் விதத்தில் பட்டினி கிடப்பது, சத்தற்ற உணவு உண்ணாமல் இருப்பது, வீட்டு விலக்கம் என காரணம் காட்டி ஒதுங்கியிருப்பது போன்றவை செய்யாதே!"
பாபா - "ப்ரதான் அளிக்கும் விருந்தில் சாப்பிட்டாயா"?
பாலா சாகேப் - "இன்று வியாழக் கிழமை நான் சாப்பிடவில்லை"
பாபா - "இருந்தால் என்ன?"
பாலா சாகேப் - "குரு வாரங்களில் (நாட்களில்) நான் வெளியே சாப்பிடுவதில்லை. அது என் நியமம்!"
பாபா - "யாரை திருப்திப்படுத்த இந்த விதி?"
பாலா சாகேப் - "தங்களைத் திருப்திப்படுத்தவே!"
பாபா - "அப்படியானால் நான் சொல்கிறேன், பாவ் அளிக்கும் விருந்தில் சாப்பிடு"
பாபா - "விரதம் என்ற பெயரில் உன் உடல் நலனை கெடுத்துக் கொள்ளும் விதத்தில் பட்டினி கிடப்பது, சத்தற்ற உணவு உண்ணாமல் இருப்பது, வீட்டு விலக்கம் என காரணம் காட்டி ஒதுங்கியிருப்பது போன்றவை செய்யாதே!"
Posted: 23 Mar 2013 03:00 PM PDT
என் பக்தனின் பெயரை உச்சரிப்பதே எனக்கு தியானம்.என் பக்தனோடு நடப்பதே எனக்கு ஆனந்தம்.என் பக்தனுடைய துன்ப வேளைகளில் இன்பத்தைக் கொண்டு வருவதே எனக்குக் கிடைக்கின்ற திருப்தி.என் பக்தன் தவறி விழும் நிலை ஏற்படும்போது எனது கரங்களை நீட்டுகிறேன்.ஒன்று இரண்டாக அல்ல நான்கு நான்காக நாலு மடங்குகளாக நீட்டி தாங்கிப் பிடிக்கிறேன்.அவன் ஒருபோதும் விழுந்து விட அனுமதிக்கவே மாட்டேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
No comments:
Post a Comment