Monday, May 13, 2013

Congress to restore 1964 anti-cow slaughter Act


The Congress government has decided to restore the Karnataka Prevention of Cow Slaughter and Cattle Preservation Act, 1964, that governs the slaughter of cattle in the State.
Asked about the Karnataka Prevention of Slaughter and Preservation of Cattle Bill, 2010, enacted during the previous BJP government which is pending before the President for assent, Chief Minister Siddaramaiah told presspersons that “the 1964 Act will be restored”.
The Opposition Congress in the previous Assembly, where Siddaramaiah was Leader of Opposition, had opposed the 2010 Karnataka Prevention of Cow Slaughter and Preservation (Amendment) Bill, 2010. The Bill was passed in the State legislature twice during the BJP rule.
Scope of the 1964 Act is restricted to the slaughter of cows, calf and she-buffaloes, but allowed slaughter of bulls, bullocks and buffaloes if they were aged above 12 or if they were no longer fit for breeding or draught or did not give milk.
The 1964 Act said that anyone violating the law can be punished with imprisonment up to maximum of 6 months or fine of up to Rs. 1,000 or both. The crime is treated as a cognisable offence.
Boards/Corporations
With the formation of the new government, the Chief Minister said all heads of the Government owned boards and corporations should resign. “If they don’t resign, we will take action as per the law,” Mr Siddaramaiah warned.
Houses
Asked about construction of houses under the Aasare scheme for the flood affected families of north Karnataka, he said the previous BJP government had not spent money to built houses.
The Bharatiya Janata Party government spent only money received from the Centre and donated by donors, he claimed.
A decision with regard to construction of houses to 2009 flood victims would be taken after holding a meeting with officials of the department concerned, he said.
Source :The Hindu.com

Sunday, May 12, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 19/2013)


Posted: 05 May 2013 03:00 PM PDT
தேகத்தையும்,மனத்தையும்,புத்தியையும் ஒரு குருவுக்கு மட்டுமே சமர்பிக்க வேண்டும்.அவரையே தியானிக்க வேண்டும்.தியானம் தியானிக்கப்படும் பொருளாகவும் அவரே இருக்க வேண்டும்.அப்போது எங்கு பார்த்தாலும் அந்த
குருவே பிரசன்னமாவார்.அந்த குரு உடலை விட்டு நீங்கியிருந்தாலும் ஆத்மார்த்த நட்புணர்ச்சி,ஆத்மா வடிவத்தில் சிஷ்யனைச் சுற்றியே திரிந்து கொண்டிருக்கும்.இவ்விதமாகவே குரு சிஷ்யர்கள் பௌதீகமாயும்,உடலற்றபோதும் ஒன்றாக சேர்ந்தே இருப்பார்கள்.-ஸ்ரீ சாய் திருவாய்மொழி.
Posted: 06 May 2013 03:00 PM PDT
தீனர்கள்,திக்கற்றவர்கள்,அனாதைகள்,உடல் ஊனமுற்றோர் போன்ற எத்தனையோ பேர் படும் துன்பத்தை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்யுங்கள்.ஆதரியுங்கள்,ஆறுதலாகப் பேசுங்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்தல்,பிரம்மா ஞானத்தையும் மிஞ்சிய பலனைக் கொடுக்கவல்லது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 07 May 2013 03:00 PM PDT
என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வையுங்கள்.என் மீதே உங்கள் கவனம் திருப்பப்படட்டும்.எந்தவொரு பெருமுயற்சியும் இல்லாமலேயே,உங்கள் லட்சியத்தை அடையும்படி செய்வேன்.என்னுடைய செயல்கள் வியப்பூட்டுபவை,மிக மதிப்புள்ளவை,நெடுநாள் நிலைப்பவை.நாளடைவில் உங்கள் இலட்சியம் நிறைவேறும்.இதற்காக நான் உங்களிடம் கேட்பது விசுவாசமும்,உற்சாகத்துடன் பொறுத்திருத்தலும் மட்டுமே.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 08 May 2013 03:00 PM PDT
1911ம்  ஆண்டு தத்தஜயந்தி தினம்.பலவந்த் கொஹோஜ்கர் என்பவர் சீரடியில் பாபாவிடம் வந்தார்.மாலை மணி ஐந்து.
பாபா: எனக்கு பிரசவ வலி; வலி தாங்க முடியவில்லை.
இவ்வாறு சொல்லிக் கொண்டு,பாபா மசூதியிலிருந்து எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டார்.
அவர் தம்மை அனசுயா  தேவியுடன் ஒருமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.சிறிது நேரம் கழித்து பாபா எல்லோரையும் உள்ளே அழைத்தார்.முதலில் சென்ற கோஹோஜ்கர் பாபாவின் ஆசனத்தில் பார்த்தது பாபாவை அல்ல,ஆனால் மூன்று முகங்களுடன் கூடிய அழகிய குழந்தை,அதாவது தத்தரை!ஒரு கணத்தில்
தத்தர் மறைந்தார்,பதிலாக பாபா காணப்பட்டார்.
Posted: 09 May 2013 03:00 PM PDT
உங்களுக்கு விஸ்வாசம் குறித்து கதை ஒன்றை கூறுகிறேன்.சோல்கர் கதை விஸ்வாசத்திற்கு உதாரணம்.அவர் வெறும் தாசகணுவின் கதையை மட்டுமே கேட்டார்.விஸ்வாசம் வைத்தார்.வேண்டுதல் செய்தார்.பிறகு சும்மா இருக்கவில்லை.சர்க்கரையை ஒழித்துப் பணம் சேமித்தார்.எனக்கு வேண்டுதல் செய்ததால் உத்தியோகம் கிடைத்தது என்ற பாவத்துடன் தன்னைத்தானே தண்டித்துக் கொண்டார்.நம்பிக்கையிலேயே நான் இருக்கிறேன் என்பதால் அவருக்கு உத்தியோகம் கிடைத்தது.ஷிரிடிக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றினார்.என்னிடம் முழு நம்பிக்கை இருந்தால் நிறைவேறாத காரியம் இருக்காது.விசுவாசமே ஒரு வடிவம் கொண்டு நானாக இருக்கிறேன்.ஆகையால் உங்கள் நம்பிக்கையை என் மேல் உறுதியக்குங்கள்.உங்களுக்கு முன்புறமும்,பின்புறமும் நானே இருப்பதை கிரகிப்பீர்கள்.உன் காரியங்கள் அனைத்திலும் நான் இருப்பேன்.இது என்னுடைய வாக்கு தானம்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா[ஸ்ரீ சாயி திருவாய்மொழி]
Posted: 10 May 2013 03:00 PM PDT
உங்கள் வேண்டுதல்,எனக்குக் கேட்காமல் இருக்குமா?என் இதயம் இளகாமல் இருக்குமா?ஸ்மரணை உங்களுடையதாக இருக்கையில்,என் இதயத்தில் எதிர்வினை ஏற்படாமல் போகுமா?நான் சர்வமும் வியாபித்திருக்கிறேன்.உங்களுக்கு அருகிலேயே நான் இருக்கிறேன்.
என்னுடைய கதைகளை{ஸ்ரீ சாய் சத்சரித்திரம்}சிரத்தையுடன் சிரவணம் செய்யுங்கள்.மனனம் செய்யுங்கள்.மனத்தில் இருத்திக் கொள்ளுங்கள்.கடைபிடியுங்கள்.உங்கள் கோரிக்கைகள் எதுவானாலும் கண்டிப்பாக நிறைவேறும்.கர்மவினை எவ்வளவு பலமானதாக இருந்தாலும் கண நேரத்தில் நசிந்துவிடும்.என் அனுக்கிரகம் உங்களுக்கு நிரந்தரமாக இருக்கும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 11 May 2013 03:00 PM PDT
காலம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கருதவேண்டாம்.தங்க சிம்மாசனங்களும் கண்மறைவாகிவிடும்.அதிகாரங்கள் மறைந்துபோகும்.செல்வவளம் சொல்லாமலேயே சென்றுவிடும்.கொடுக்கும் கரங்களே பெற்றுக் கொள்ளும் கரங்களாகிவிடும்.அப்போது கொடுப்பவர்கள் இருக்க வேண்டுமல்லவா!ஆகையால்[செல்வம்] இருப்பவர்கள்  கொடுப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.விதையை அப்படி விதைத்துக் கொண்டால் பலன் கிடைக்காமல் போகாது.என்னுடையது எனக்கு மட்டுமே என்ற பாவத்துடன் நாட்களைக் கடத்தி,தேவை எற்பட்டபோது  எனக்கு யாரும் இல்லை என்று கருதினால் பிரயோஜனம் என்ன? தானம் செய்தது வீண் போகாது.ஆறுதல் சொன்னால் அது வீணாகாது.உதவி வீணாகாது.நல்ல சொற்கள் வீணாகாது.அன்பு வீணாகாது.தேவை நேர்ந்தபோது,அதிக பலனை இக்குணங்களே அந்த இறைவனின் வடிவத்தில் பிரத்தியட்சமாகும்.இப்படிச் சேர்த்து வைத்தது எதுவோ அதுமட்டுமே ஜீவர்களுடன் வரும்.உயர்ந்த கதியை நல்கும்.ஆகையால் பிரம்ம ஞானத்தினால் பெரும் பிராப்தியை இவ்விதமாகவும் பெற முடியும்!என் சொற்களை மறந்து விடாதீர்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.








Friday, May 10, 2013

கறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்


கறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்

கறவை மாடுகள் கன்று ஈன்ற பின்னர் அவற்றுக்கு ஏற்படும் பிரச்னைகளில் முதன்மையானதும், முக்கியமானதுமாக இருப்பது நஞ்சுக்கொடி தங்குதல். எனவே, கறவை மாடுகள் வைத்திருப்போர் நஞ்சுக்கொடி தங்குதலுக்கான காரணங்களையும், அதைத் தவிர்க்கும் வழிமுறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும்.
இது குறித்து, தேனி உழவர் மைய கால்நடை மருத்துவர்கள் அ.செந்தில்குமார், நா.ஸ்ரீபாலாஜி, ஷா.பீர்முகமது ஆகியோர் கூட்டாகக் கூறியதாவது:
நஞ்சுக்கொடி பிரிந்து வெளியே தள்ளப்படும் விதம்: மாட்டின் கருப்பையின் உட்சுவரில் சுமார் 80-120 கருக்காய்கள் (கேரங்கிகள்) உள்ளன. இதேபோல், நஞ்சுக்கொடியின் வெளிப்பகுதியில் 80-120 காட்டிலிடன்ஸ் உள்ளன. இந்த காட்டிலிடன்கள் கருப்பையின் கேரங்கிகளை சுற்றிப்பிடித்து, இரு அமைப்புகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தியிருக்கும்.
கன்று ஈன்றதும் கருப்பைக்கு வரும் ரத்தத்தின் அளவு குறைவதாலும், யோனியின் வெளிப்புறத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் நஞ்சுக்கொடி கீழ்நோக்கு விசையாலும், நஞ்சுக்கொடியின் காட்டிலிடன்ஸ், கருப்பையின் கேரங்கிகளிலிருந்து விடுபட்டு பிரிந்து, நஞ்சுக்கொடி வெளியே தள்ளப்படுகிறது.
நஞ்சுக்கொடி தங்குவதற்கான காரணங்கள்: சினைமாடுகளை உடற்பயிற்சியின்றி ஒரே இடத்தில் கட்டிவைத்துப் பராமரித்தல்.
சினைமாடுகளுக்கு சினைக் காலத்தில் அளிக்கப்படும் கலப்புத் தீவனத்தில் புரதச் சத்து, மாவுச் சத்து, தாது உப்புகள் மற்றும் உயிர்ச் சத்துகள் குறைவாக இருத்தல்.
புரூசல்லோஸிஸ், லெப்டோஸ்பைரோஸிஸ், வீப்ரியோஸிஸ், ஐ.பி.ஆர். போன்ற நோய்களால் ஏற்படும் கருச்சிதைவு.
சினைமாடுகளின் உடலில், கன்று வளர்ச்சிக்காக உற்பத்தியாகும் புரஜஸ்டிரான் குறைவு மற்றும் கார்டிசால் (கருச்சிதைவு ஏற்படுதல்) அதிகரிப்பால் ஏற்படும் கருச்சிதைவு. நஞ்சுக்கொடியில் அதிக நீர் சேருதல் மற்றும் கன்று பிறக்கும்போது ஏற்படும் பிற பிரச்னைகள்.
நஞ்சுக்கொடி தங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்: நஞ்சுக்கொடி கருப்பையிலேயே தங்கிவிடும்போது, ரத்த ஓட்டமின்மையாலும், தொற்றுகளாலும் அழுகி, நச்சுத் தன்மையை உண்டுபண்ணும். இதனால், கருப்பையின் திசுக்களும், செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டு, அடுத்த இனப்பெருக்க சுழற்சி பாதிப்படையலாம். மேலும், நச்சானது ரத்தத்தில் உறிஞ்சப்படும்போது, அவை மற்ற உறுப்புகளுக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், பால் கறவாமை, மடிநோய், குளம்பு அழுகல் நோய் மற்றும் பால் காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.
இதைத் தவிர, நச்சுகளுடன் பெருகிய நுண்கிருமிகளும் சேரும்போது, டாக்ஸிமியா என்னும் நிலை ஏற்பட்டு, அதிக காய்ச்சலால் பாதிக்கப்படுகிறது. சில சமயங்களில் இறக்கவும் நேரிடலாம்.
எனவே, சுகாதாரமான முறையில் நஞ்சுக்கொடிகளை வெளியேற்ற வேண்டும். தவறான முறைகளைப் பின்பற்றி நஞ்சுக்கொடிகளை வெறியேற்றும்போது, கருப்பையில் காணப்படும் கேரங்கிகள் சேதப்படுத்தப்பட்டு, அதிக உள் ரத்தப் போக்கினால் மாடுகள் மூர்ச்சையாகி இறந்துவிடுகின்றன.
சிகிச்சை முறைகள்: கன்று ஈன்று 8-10 மணி நேரம் கழித்தும் நஞ்சுக்கொடி வெளியே தள்ளப்படவில்லையெனில், கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். நஞ்சுக்கொடியை அகற்றுவதற்கு முன், கன்று ஈன்று 8-10 மணி நேரம் ஆகிவிட்டதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

First Published : 08 May 2013 11:21 PM IST