Sunday, June 30, 2013

மலைகளில் மரம் வளர்ப்போம்

மூன்றாவது உலக யுத்தம் தண்ணீருக்காகத்தான் நடைபெறும்' என்று சொல்வதன் மூலம், யுத்தம் நடைபெறும் என்பதையும், அதற்கான காரணத்தையும் சேர்த்தே சொல்லி எச்சரிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கர்நாடகத்தையும், கேரளத்தையும், ஆந்திரத்தையும் எதிர்த்துப் போராடிக் கொண்டே இருக்கும் நிலை, இனி எந்தக் காலத்திலும் மாறும் என்று நம்பினால் நாம் அறிவிலிகள்.
மழை பெய்தால் உபரி நீர் வரும், அதுஇல்லாவிட்டால் "எந்தத் தீர்ப்பு வந்தாலும்' தண்ணீர் வரவே வராது!
எனவே, மாற்று ஏற்பாட்டைக் கூடவே யோசிக்காவிட்டால், தண்ணீருக்கான சிக்கலையும், போராட்டத்தையும் நாம் தவிர்க்கவே முடியாது.
மழைக்காலம் நெருங்குவதால் எல்லா வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தச் சொல்கிறது அரசு.
இத்திட்டம் ஒரு வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நல்ல பணி, மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான். அதேநேரத்தில் மாநிலம் முழுவதும் சிறிதும், பெரிதுமான மலைகள் நம் கவனத்தில் இருந்து விலகியே இருக்கின்றன.
சாலையோரங்களில் மரங்களை நடும் நிகழ்ச்சிகள் ஏராளமாக நடைபெறுகின்றன. ஆனால், பல மலைகள் வறண்டு கிடக்கின்றன. ஏற்கெனவே நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக இருந்த இவை பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன. ஏன் இவற்றைக் கவனிக்கக் கூடாது?
மலைகளிலிருந்து சிற்றாறுகளும், சுனைகளும் பிறக்கின்றன. பெரும்பாலான இடங்களில் அவை காய்ந்து, வற்றியுள்ளன. அருவிகள் இல்லாத மலைகளே இல்லை. நீர்ப்பிடிப்பு இல்லாததால் பெரும்பாலானவை வறண்டுவிட்டன.
வறட்சியான பெரம்பலூர் மாவட்டத்திலும் ஓர் அருவி இருக்கிறது. சுற்றிலும் மலைகளைக் கொண்ட இயற்கை அற்புதமாக மணப்பாறை அருகே பொன்னணியாறு அணை இருக்கிறது; இப்போது காய்ந்துபோய் காட்சியளிக்கிறது.
ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் உள்ள சிறிதும் - பெரிதுமான மலைகளை ஆய்வுசெய்து பெருந்திட்டம் ஒன்றை அரசு தயாரிக்க வேண்டும். உள்ளூர் மக்களின் உதவியுடன் அந்த மலைகளில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். அந்த மரங்கள் அம் மக்களுக்கும் சமுதாயத்துக்கும் குறுகிய கால, நீண்டகாலப் பயன்களை அளிப்பதாகவும் இருந்தால் சிறப்பு. பழ மரங்கள், மருத்துவத்துக்குப் பயன்படும் மூலிகை மரங்கள், எரிபொருளாகப் பயன்படக்கூடிய மரங்கள், கப்பல் கட்டுதல் போன்ற கனரக உபயோகத்துக்கான மரங்கள், பறவைகள் கூடு கட்டி வசிப்பதற்கானவை என்று எல்லாவித மரங்களையும் திட்டமிட்டு வளர்க்கலாம்.
இதைச் செய்துவிட்டால் நிச்சயம் அடுத்த நூறாண்டுகளுக்குத் தேவையான பெரும் தண்ணீர் ஊற்றுகளை நாம் உருவாக்க முடியும்.
ஏரிகளில் இருந்து குடிநீர்த் திட்டம், ஆறுகளில் இருந்து திட்டம் என்ற நிலை மாறி, மலைகளில் இருந்து வரும் அருவிகளில் இருந்தும், சிற்றாறுகளில் இருந்தும் குடிநீர்த் திட்டத்தை உருவாக்கி அருகேயுள்ள மாவட்டங்களுக்குத் தரும் நிலை வரும். இந்தக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசியமான பணி இது

Thanks to Dinmani.com

Saturday, June 29, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 26/2013)

 

 

 

Posted: 23 Jun 2013 03:00 PM PDT

நீ எப்போதும் வாய்மையைக் கடைப்பிடிக்கவேண்டும்;நீ அளித்த வாக்குறிதிகள் யாவற்றையும் நிறைவேற்ற வேண்டும்.விசுவாசமும் பொறுமையும் பெற்றிரு.நீ எங்கே இருந்தாலும் எல்லா நேரங்களிலும் அப்போது நான் உன்னுடனேயே இருப்பேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 24 Jun 2013 03:00 PM PDT
எவன் என்னை பூரண சரணாகதி அடைகிறானோ,எவன் என்னை விஸ்வாசத்துடன் வணங்குகிறானோ,எவன் என்னை நினைவில் இருத்தி நிரந்தரமாக தியானம் புரிகிறானோ,அவனுடைய எல்லா கஷ்டங்களில் இருந்தும் விடுவிப்பது எனது சிறப்பியல்பாகும்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]
Posted: 25 Jun 2013 03:00 PM PDT
இன்றும் நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை எப்போதும் உணர் .பக்தனாகிய
நீ அழைத்தால் நான் ஓடோடி வருவேன். இது சத்தியம் -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

Posted: 26 Jun 2013 03:00 PM PDT

பொறாமை என்கிற வேண்டாத குணத்தைப் பொறுத்த வரை நமக்கு எந்த விதமான(நேரிடை)லாபமோ,நஷ்டமோ கிடையாது.பொறாமை என்பது இன்னொருவருக்கு கிட்டியிருக்கும் லாபம் அல்லது வளம் கண்டு தாளாமை.வேறு ஒருவருக்கு ஒரு அதிருஷ்டமோ,செல்வாக்கோ கிட்டி விட்டால்,நம்மால் அதை சகித்துக் கொள்ள முடியாமல்,அவரை அவதூறாகப் பேசுகிறோம்.அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டால் மகிழ்ச்சியடைகிறோம்.இது நல்லதா?அந்த மனிதன் வளம் பெற்றால்,நமக்கு என்ன நஷ்டம் ஏற்ப்பட்டுவிட்டது?ஆனால் ஜனங்கள் இந்த விதத்தில் சிந்திப்பதில்லை.அவனுக்கு நலம் கிட்டினால்(அவனுடன் சேர்ந்து)நாமும் மகிழ்வோமே?நமக்கும் நலம் கிட்டியது,நாமும் பாக்கியசாலிகள் என் எண்ணுவோமே?அல்லது அதே நலம் நாமும் பெறுவோம்,அல்லது பெறுவதற்கு முயற்சி மேற்கொள்வோம்.அதுவே நமது விருப்பமும்,தீர்மானமுமாக இருக்க வேண்டும்.நம்மிடமிருந்து அவன் எதை எடுத்துச் சென்றுவிட்டான்?ஒன்றுமில்லை.அவனுடைய கர்மாவின் பலனாக அவன் வளம் பெற்றான்.அப்படியிருக்க அதைக் கண்டு நாம் ஏன் பொறாமை படவேண்டும்?ஆகவே,முதலில்
பொறாமையை வென்றுவிடு.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 28 Jun 2013 03:00 PM PDT

நானா(பாபாவின் பக்தர்);பாபா,தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள்.தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவேண்டும்?[உறவினர்களின் பிரிவு,இழப்பு போன்றவை]

பாபா: உமக்கு நெருக்கமானவர்களின் நலனை எண்ணிக் கொண்டு அதன் பொருட்டு நீர் இங்கு வருகிறீரென்றால்,அது தவறு.இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியத்தில்லை.இவை என் சக்திக்கு உட்பட்டவை அல்ல.
இவை(குழந்தை பிறப்பது,உறவினர் இறப்பது போன்றவை)ஊழ்வினையைப் பொருத்தது.தேவாதி தேவனானவரும்,உலகையே படைத்தவருமான,
பரமேச்வரனால் கூட இவற்றை மாற்றிவிட முடியாது.அவரால் சூரியனையோ சந்திரனையோ நோக்கி,'வழக்கமாக உதிக்கும் இடத்திலிருந்து இரண்டு கஜம் தள்ளி உதிப்பாய்' எனக் கூற இயலுமா?இயலாது,ஏனெனில் அவரால் முடியாதது மட்டுமின்றி,அவர் அப்படி செய்யவும் மாட்டார்.அது  ஒழுங்கின்மை,குழப்பம் விளைவிக்கும்.

நானா:அப்படி என்றால்,ஒருவரிடம் "உனக்கு குழந்தை பிறக்கும்"என தாங்கள் கூறுகிறீர்கள்,அவருக்கு குழந்தை பிறக்கிறது.மற்றொருவரிடம்"உனக்கு வேலை கிடைக்கும்"என் சொல்லுகிறீர்கள்,அவருக்கு வேலை
கிடைக்கிறது.இவை எல்லாம் தங்களுடைய அற்புதங்கள் அல்லவா?

பாபா:இல்லை,நானா.நான் எந்த சமத்காரமும் செய்வதில்லை.கிராமத்து ஜோதிடர்கள் சில தினங்கள் முன்னதாகவே பின்னர் நடக்கப் போவதைக் கூறுகிறார்கள்.அவற்றுள் சில பலிக்கின்றன.நான் அவர்களை விட எதிர்காலத்தை தீர்க்கமாகப் பார்க்கிறேன்.நான் கூறுவதும் நடக்கிறது.என் வழியும் ஒருவகை ஜோதிடத்தைப் போன்றதே.உங்களுக்கெல்லாம் இது புரிவதில்லை.உங்களுக்கு.என் சொற்கள் அற்புதங்களாகத் தோன்றுகின்றன;
ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தை அறியமாட்டீர்கள்.ஆகையால் நிகழ்ச்சிகளை  நீங்கள் எமது அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தியாக முடிவு செய்து,எம்மிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள்.பதிலுக்கு நான் உங்கள் பக்தியை இறைவனிடம் திருப்பி உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன்.

Posted: 29 Jun 2013 03:00 PM PDT

என்னையே சார்ந்து எப்போதும் இருப்பாயாக!வீணான எண்ணங்களில் மனதை அலைபாய விடவேண்டாம்.வேதனையை நேரிடையாக அனுபவிக்காமல்,ஊழ்வினையை கடக்க இயலாது.வாஸ்தவமே.சுக துக்கங்களின் காரணம் கர்மாதான்.ஆகையால் உமக்கு நேருவதை தைர்யமாக தாங்கிக் கொள்ளும்.அந்த சக்தியையும் நானே உனக்கு அளிப்பேன்.என்னை பூரணமாக சரணடைந்து,உமது எண்ணம் எப்போதும் என்னிப்பற்றியே இருக்கட்டும்.பிறகு நான் என்ன செய்வேன் என்பதை நீர் பார்ப்பீர்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 25/2013)

 
Posted: 16 Jun 2013 03:00 PM PDT

உன்னுடைய மனத்தையும் புத்தியையும் என்னிடம் ஸமர்ப்பணம் செய்துவிட்டு என்னையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிரு.அவ்வாறான மனிதன்,தனது தேஹத்திற்கு எப்பொழுது என்ன நடந்தாலும் அதுப்பற்றிக் கவலைப்படமாட்டான்.அவனுக்கு எந்தவிதமான பயமும் இல்லை.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 17 Jun 2013 03:00 PM PDT

"கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்;என் பக்தர்களை நான் துக்கப்பட விடுவதில்லை.சிர்டீயில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது.
நீர் தடங்கல்களின்  கடலில் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம்;துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்துபோயிருக்கலாம்;ஆனால்,யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ,அவர் சுகத்தின்மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும்.இவ்விடத்திலிருக்கும் பக்கிர் மஹா தயாளன்;உம்முடைய வியாதியையும் வலியையும் நிர்மூலமாக்கிவிடுவான்.அனைவரின் மீதும் கருணை கொண்ட இந்தப் பக்கீர் அன்புடன் உம்மைப் பாதுகாப்பான்"-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா


Posted: 19 Jun 2013 03:00 PM PDT

ஒருவன் தனது சுமைகளை என் மீது இறக்கிவிட்டு,என்னையே நினைத்திருப்பானாகில் நான் அவனுடைய எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்கிறேன்.அவனுடைய எல்லா காரியங்களையும் நானே முன் நின்று நடத்தி வைக்கிறேன்.-ஷிர்டி சாய்பாபா

Posted: 21 Jun 2013 03:00 PM PDT

யாரைப் பற்றியும் அவன் எனக்கு எதிராளி எனக் கூறாதே.யார் யாருடைய
விரோதி?எவரிடமும் மனக்கசப்பை ஏற்படுத்திக் கொள்ளாதே.எல்லோரும் ஒன்றுதான்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.