Wednesday, February 27, 2013

கண்டமும் அகண்டமும்-அத்வைதம்-தெய்வத்தின் குர



தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
அத்வைதம்
கண்டமும் அகண்டமும்
ஒரே ஒரு சூரியன்தான் உள்ளது. கையிலே கொஞ்சம் ஜலத்தை எடுத்துக் கொண்டு நல்ல வழுவழுப்பான தரையில் அதைத் தெளித்தால் ஒவ்வோரு முத்து ஜலத்திலும் பிரதி ரூபமாக ஒரு சூரியன் தெரிகிறது. அவை எல்லாம் பிரிந்து பிரிந்து காணப்பட்டாலும் அநேக சூரியன்கள் இருப்பதாக ஆகாது. சூரியன் ஒன்றுதான். அவ்வாறே, உலகில் காணும் இத்தனை ஜீவராசிகளுக்குள் சிறியதாக மினு மினுக்கிற அறிவொளி அனைத்தும் ஒரே பிரம்மத்தின் பிரதிபலிப்புத்தான். இதைத்தான் ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யரவர்கள் ப்ரம்ம ஸுத்ர பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கும் அகண்டமான ஒரே சக்தி எதுவோ, அறிவு எதுவோ, அந்த எல்லா கடந்த சக்திதான், அறிவுதான் நம்மிடத்தில் ஒர் எல்லைக்குள் பிரிந்து கண்டம் கண்டமாகத் தோன்றுகிறது. அந்த ஒரே வஸ்துதான் வேதத்தின் அந்தத்தில் இருக்கும்படியான தத் (அது) என்பது. தத் என்றால் தூரத்தில் எல்லாவற்றுக்கும் மேலே இருக்கிறது என்று அர்த்தம். நாம் இப்போதிருக்கும் நிலையில் அது தூரத்தில் எல்லாவற்றுக்கும் மேலே இருக்கிறதென்று அர்த்தம். நாம் இப்போதிருக்கும் நிலையில் அது தூரத்தில் இருப்பதாகத் தோன்றினாலும், உன்மையில் தூரத்தில் கிட்டத்தில் எல்லாமுமாய் இருப்பது அதுதான். அது நீயேதான் - தத் - த்வம் என்கிறது வேதம்.
இப்படி நான் சொல்லுகிற க்ஷண காலம் நமக்கு எல்லாம் புரிந்து விட்டதுபோல் இருக்கிறது. இந்த ஒரு க்ஷணத்தில் எப்படி இருக்கிறாமோ
அப்படியே எப்போதும் இருந்தால் துக்கம் இல்லை. ஆனால் அடுத்த க்ஷணமே நமக்கு இந்த சத்தியமான பார்வை போய்விடுகிறது. நாம் பல விதமான பொய்களாலேயே கஷ்டங்களுக்காளாகிறோம். பொய்யினால் பெறும் ஆனந்தமும் விரைவில் பொய்யாகிவிடும். உண்மையில் எப்போதும் ஆனந்தமாக இருப்பதற்கு எப்போதும் உண்மையாக இருக்கிறவனைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். உண்மையாக இருக்கிறவன் ஸ்வாமி ஒருத்தன்தான். ஆசாமிகளாகிய நாம் அந்த ஸ்வாமியைத்தான் பற்றிக் கொள்ள வேண்டும். கண்டம் கண்டமாக இருப்பது எல்லாம் முடிவில் அகண்டத்தோடு ஒன்றுபடும்போது அகண்டமாக ஆகி, நிரந்தர ஆனந்தமாகி விடுகிறது.
அகண்டமாக இருப்பவன் ஒருவன்தான் இருப்பு. கண்டமாக இருப்பது வெறும் நினைவுதான். நினைவு, கனவு எல்லாம் சாசுவத உண்மை அல்ல.
அகண்டமாக இருக்கிற பரமாத்மாவைக் கண்டம் கண்டமாக உருவமும் குணமும் உள்ளவனாக தியானம் பண்ணிக் கடைசி நிலையாக நிர்குணத் தியானம் செய்ய ஆரம்பித்தால், சண்டை, பூசல் ஒன்றுமே வராது. துக்கம், பயம் எதுவுமே இராது. பரம சாந்திதான் இருக்கும். இதுதான் ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் உபநிஷத மரத்திலிருந்து நமக்குப் பறித்துக் கொடுத்த பழம்.
இந்தப் பழுத்த நிலையை அடைவதற்குமுன், மொட்டாக, பூவாக, பிஞ்ஜாக காயாக இருந்ததுதான் முதிர வேண்டும். பழுக்கும் நிலைவரைக்கும் பொருமையாகத்தான் இருக்க வேண்டும். காயாக இருக்கும்போதே பழமாவதற்கு அவசரம் காட்டி, வெம்பி விழுந்துவிட்டால் பயன் இல்லை. வெம்பி விழுந்திடுமோ என்று ராமலிங்கர் சொல்லுகிறார். நமக்கும் அந்தக் கவலை இருக்க வேண்டும். கனிந்த பழம் ஆகும் வரையில் பூஜை, ஜபம், தபம் எல்லாம் இருக்கவேண்டும். வேதத்தின் அந்தத்தில் இருக்கும்படியாக தத்தத்வம் என்கிற உண்மை நிலைக்கு நாம் வரும் வரையில் அவை அப்போதுதான் வெம்பாது பழுக்கும். கடைசியில் அந்த தத்வம் - மூலம் - எங்கே இருக்கிறது. தன்னிடத்திலேயேதான் இருக்கிறது. எந்த அறிவு தத்துவத்தை ஆராய்கிறதோ, அந்த அறிவுக்குள்ளேயே இருக்கிறது என்பதை அநுபவத்தில் உணரலாம்.

Source:www.kamakoti.org

Tuesday, February 26, 2013

அழுக்கு நீங்க வழி-தெய்வத்தின் குரல்


தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
அத்வைதம்
அழுக்கு நீங்க வழி
ஞானத்துடன் - அறிவுடன் பார்த்தால் - எல்லாவற்றையும் ஆனந்தமாகவே பார்ப்போம். ஆனந்தம் முடிவில்லாதது. உண்மையாக அறிந்தால் எல்லாம் ஆனந்தம் என்று காண்போம். ஆனந்தம் எல்லையில்லாதது. அது இல்லாத இடமில்லை. எல்லையில்லாத எங்கும் நிறைந்த பொருள் இரண்டு இருக்கமுடியாது. ஆகையால் ஆனந்தமும் ஞானமும் ஒன்றே. அது இல்லாத இடமில்லை என்பதால், அதுவே. இந்த ஞானத்தையும் ஆனந்தத்தையும் உடைய ஜீவனும்.

நாம் கண்ணால் மட்டுமே பார்க்கிறோம். ஒன்றை ரோஜா என்கிறோம். இன்னோன்றை ஊமத்தை என்று சொல்கிறோம். ஞானம் என்கிற அறிவால் பார்த்தால் அது ரோஜா அன்று. ஆனந்தமாகத்தான் தெரியும். ஊமத்தம் பூவும் அப்படியே தெரியும். நமக்கு ஞானம் இல்லாதபடியால் ஒன்றை ரோஜாவாகவும், மற்றோன்றை இன்னோரு பொருளாகவும் பார்க்கிறோம். உண்மையில் எல்லாம் ஆனந்தம்தான். உண்மை நமக்குப் புலப்படாததற்குப் காரணம். நமக்குச் சித்தத்தில் அழுக்கு இருப்பதும், ஒருமைப்பாடு இல்லாததும்தான். கண்ணாடி ஆடிக் கொண்டிருந்தால், அதில் தெரியும் பிரதி பிம்பம் யதார்த்தமாக அல்லாமல் விரூபமாகத் தெரியும். ஆட்டத்துடன் அந்தக் கண்ணாடியில் அழுக்கும் இருந்தால் பிரதிபிம்பத்தில் யதார்த்த பாவமே கொங்சங்கூட இராது. நம்முடைய மனக்கண்ணாடி ஆடிக் கொண்டும், அழுக்குப் படிந்தும் இருப்பதால் பொருள்களை அது உள்ளபடி ஆனந்த வஸ்துவாகப் பிரதிபலிப்பதில்லை.

பைத்தியம் பிடித்த ஒருவனிடம் இந்தத் தடியைக் கால்மணி நேரம் பிடித்துக் கொண்டே இரு என்றால், அவனால் முடியாது. நம்மால் அந்தத் தடியைத் கால்மணி நேரம் பிடித்துக் கொண்டிருக்க முடிகிறது. ஆனால் ஒரு பொருளை மட்டும் குறிப்பிட்ட நேரம்வரை நினைத்துக் கொண்டு இரு என்றால் அப்படிச் செய்ய முடியவில்லை. சித்தம் மறுகணமே ஆயிரக்கணக்கான எண்ணங்களை சினிமாப் பாடல்கள் ஒடுவதுபோல் ஒட்டமாக ஒடியபடி நினைக்கிறது. ஆகையால், நாம் எப்படிப் பைத்தியங்களை நினைக்கிறோமோ, அதுபோல் மகான்களுக்கு நாமும் பைத்தியமாகத்தான் படுவோம். மனம் கட்டப்படுகின்ற வரையில் எல்லோரும் பல வகைப்பட்ட பைத்தியங்களே. அழுக்குடனுள்ள கண்ணாடி ஆடுவதுபோல் நம்முடைய சித்தம் தோஷத்துடனும் ஜகாக்ரதை இல்லாமலும் (ஒரு முகமாகாமலும்) இருப்பதுதான் இதற்குக் காரணம். தோஷம் போனால் ஜகாக்ரதை வரும். ஜகாக்ரதை வந்தால் உண்மை விளங்கும்.

தோஷத்தைப் எப்படிப் போக்குவது. நமக்கு அழுக்கு என்பது தேகம். இந்தத் தேகம் எதனால் வந்தது. பாபத்தினால் வந்தது. அந்தப் பாபத்தை எதனால் செய்தோம். கர சரணாதி அவயங்கள், மனம் இவற்றினால் செய்தோம். சுற்றியுள்ள கயிற்றை அவிழ்க்க வேண்டியிருந்தால், சுற்றின பிரகாரமே திரும்பவும் அவிழ்க்க வேண்டும். அதே மாதிரி அஸத் காரியங்களை ஸத்காரியங்களினாலும், பாவங்களைப் புண்ணியங்களினாலும் தொலைக்க வேண்டும். கர சரணாதி அவயங்கள், மனம் இவற்றினால் செய்த பாவங்களை இந்த அவயங்களினாலேயே தொலைக்க வேண்டும். தானம், தருமம், கர்ம அநுஷ்டானம், ஈசுவர நாமோச்சாரணம், ஆலய தரிசனம் முதலியவையே ஸத்காரியங்கள். பாவத்தைப் போக்குவதற்கு இவையே உபாயம். இவற்றால் பாபத்தைப் போக்கிக் கொண்டு பிறகு ஞான மார்க்கத்தில் ஈடுபட்டு எல்லையில்லாத ஞானமாக ஆனந்தமாக ஆக வேண்டும்.


நன்றி:/www.kamakoti.org

Monday, February 25, 2013

அத்வைதமும் அணு விஞ்ஞானமும்-தெய்வத்தின் குரல்


அத்வைதம்
அத்வைதமும் அணு விஞ்ஞானமும்
மனித வாழ்வு உள்ள வரையில் ஆசை உண்டு. துன்பம் உண்டு. பயம் உண்டு. இவற்றிலிருந்து விடுபடுவதே மோக்ஷம். அத்வைத அநுபவத்தால்தான் பாசமும், பனிவும், துன்பமும், பயமும், துவேஷமும் நிவிருத்தியாகி மோக்ஷ ஆனந்தத்தை இங்கேயே அநுபவிக்க முடியும். நமக்கு அந்நியமாக இன்னொரு வஸ்து உள்ள போதுதான் அதனால் துன்பம், அதனிடம் ஆசை அல்லது பயம், அதன்மீது
துவேஷம் இவை உண்டாக்க முடியும். இன்னொன்றே இல்லை. காண்பன எல்லாம் ஒரே பரமாத்மா - என்ற அத்வைத ஞானம் அநுபவமாக வந்துவிட்டால், அப்புறம் ஆசையும், பயமும் கோபமும், துயரமும் ஏற்பட வழி ஏது? தேளும் பாம்பும் இப்போது நமக்குத் துன்பம் தருகின்றன. நாமே தேளாகவும், பாம்பாகவும் இருந்தால் இந்தத் துன்பம் இராது அல்லவா! எல்லாம் நாமே என்ற உணர்வு வந்து விட்டால், எப்போதும் ஸ்வபாவமான ஆனந்தம்தான் இருக்கும். அதுதான் மோக்ஷ நிலை. சரீரம் நசித்துப் செத்துப்போன பின்தான் மோக்ஷம் என்று எங்கேயோ ஒரிடத்துக்குப் போக வேண்டும் என்பதில்லை. அனைத்தும் ஒன்றே என்ற அத்வைத ஞானம் ஸித்தித்தால் இங்கேயே இப்பொழுதே மோக்ஷத்தில் இருப்போம்.
அனைத்தும் ஒன்று என்பது எப்படிச் சரியாகும். இத்தனை மாறுபட்டுள்ள நானாவித வஸ்துக்களைப் பிரத்தியக்ஷமாகப் பார்க்கிறோமே. என்று தோன்றலாம். ஒன்று, நாம் பிரத்தியக்ஷமாகப் காண்பது சத்தியமாக இருக்கவேண்டும். அல்லது வேதாந்தம் சொல்லுவதும், ஞானிகளின் அநுபவுமான அத்வைதம் சத்தியமாக இருக்க வேண்டும்.
சத்தியமாக இருப்பது எதுவோ அது மாறாத சாந்தியும் ஆனந்தமும் நிறைவும் தர வேண்டும். நம் பிரத்யக்ஷ வாழ்க்கையில் இந்தச் சாந்தியும் ஆனந்தமும் நிறைவும் இல்லையே. வேதாந்தம் சொல்கிற அத்வைதத்தில்தானே அவை இருக்கின்றன. அதை அநுபவிக்கும் ஞானிகள்தான் மற்ற ஜனங்களுக்கு உள்ள துன்பமும், சஞ்சலமும் இல்லாமல் எப்பொழுதும் சாந்தியாக, எப்பொழுதும் திருப்தியாக, எப்பொழுதும் ஆனந்தமாக நிறைந்திருக்கிறார்கள். இதிலிருந்தே எல்லாம் ஒன்று என்ற ஆத்வைதமே சத்தியம் என்றாகிறதல்லவா. சொப்பனத்தில் எத்தனையோ வஸ்துக்களைப் பார்கிறோமே. நாம் விழித்துக் கொண்டவுடன் அவை எல்லாம் என்ன ஆயின. சொப்பனம் கண்ட ஒருத்தன் மட்டும்தானே எஞ்சி நிற்கிறான். அப்படியே இந்த லோகமெல்லாமும் ஒரு சொப்பனம் தான். மாயை நீங்கி ஞான நிலையில் விழித்துக் கொண்டால், அப்போது ஒரே பரமாத்மா மட்டுமே எஞ்சி நிற்பதை அநுபவிக்க முடியும்.
காண்கிற உலகம் பலவிதமாக இருந்தாலும், ஒன்றேதான் இத்தனையும் ஆகியிருக்கிறது என்பதை நவீன ஸயன்ஸ் தெளிவாக ஒப்புக் கொண்டு நிலை நாட்டுகிறது. ஐம்பது வருஷங்களுக்கு முன் உலக வஸ்துக்கள் எல்லாம் எழுபத்திரண்டு முலப்பொருட்களுக்குள் (Elements) அடங்குவதாக ஸயன்ஸ் சொல்லி வந்தது. இந்த மூலப்பொருட்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை என்பதே அன்றைய கருத்து. ஆனால், இப்போது அணு (Atom) பற்றி அறிவு விருத்தியான பின் இந்த மூலப்பொருட்கள் எல்லாமும்கூட வேறு வேறான பொருட்கள் அல்ல என்றும், ஒரே சக்தி (Energy) தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது என்றும் ஸயன்ஸ் நிபுணர்கள் நிலைநாட்டியிருக்கிறார்கள். பொருள் (Matter) சக்தி (Energy) இவையும் வேறானவை அல்ல என்று நவீன ஸயன்ஸ் சொல்லுகிறது. ஆக, அத்வைதம்தான் ஸயன்ஸும் நமக்குக் காட்டுகிற உண்மை. ஐன்ஸ்டைன், ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல ஸயன்ஸ் நிபுணர்கள் உபநிஷதமும் சங்கர பகவத் பாதாளும் உபதேசித்த அத்வைத சித்தாந்தத்துக்கு மிகவும் நெருங்கி வந்து விட்டார்கள். உலகம் மாயை என்று அத்வைதம் கூறுவதற்குப் பொருள் யாதெனில்,
உலகம் இறுதி சத்தியமல்ல. இது விவகாரத்துக்கு மட்டுமே சத்தியம். இதனுடைய இருப்பும் பிரம்மம் என்ற ஒன்றைச் சார்ந்ததே. என்பதுதான். இதையே மேற்சொன்ன ஸயன்ஸ் நிபுணர்களும் சொல்கிறார்கள். பிரம்மமே பாரமார்த்திக சத்தியம். உலகம் விவகாரிக்க சத்தியமே என்று அத்வைதம் சொல்வதைத்தான் இவர்கள் உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (relative) தான். முழு உண்மை ( absolute ) அல்ல என்கிறார்கள்.
சக்தியும் பொருளும் ஒன்று என்ற பெரிய உண்மையைக் கண்ட அணு விஞ்ஞானிகள் அந்த அறிவைக் கொண்ட அணுகுண்டைக் கண்டுபிடித்தார்கள் என்பதுதான் துக்கமாக இருக்கிறது. வெளி உலக வஸ்துக்களைக் குறித்து ஸயன்ஸால் நிலைநாட்டப்படும் அத்வைதம் புத்தி மட்டத்தோடு நின்றதன் அனர்த்தம் இது. ஸயன்ஸின் அத்வைதம் வெறும் அறிவோடும், வெளி உலகத்தோடு மட்டும் நிற்காமல் வெளி உலகத்துக்கு காரணமான உள் உலக உண்மையையும் ஆராய்ந்து, புத்தியோடு நிற்காமல், மக்களின் பாவனையிலும் தோய வேண்டும். ஜீவ குலம் எல்லாம் ஒன்றுதான் என்ற ஞானமும் ஸயன்ஸ் வழியாக ஏற்பட்டால், அணுகுண்டைத் தயாரித்த நவீன ஸயன்லஸே ஆத்ம ஹானிக்குப் பதிலாக மகத்தான ஆத்ம க்ஷேமம் செய்ததாகவும் ஏற்படும்.

நன்றி:/www.kamakoti.org

Holy Cows -- Acclaimed abroad, despised at home


Holy Cows -- Acclaimed abroad, despised at home

A couple of days back, newspaper in Punjab reported that an American company -- World Wide Sires Ltd -- is planning to provide high-quality semen to dairy farmers. Some days back, I had heard that the Kerala Minister for Animal Husbandry was thinking of importing some improved cattle breeds from Denmark for cross-breeding with the local cows.

I find this shocking.

The fascination for exotic cattle breeds has been the bane of Indian dairy industry. Our planners and policy makers have introduced these breeds without even ascertaining the potential of native breeds. The Indian breeds are suited to the local conditions, are able to resist the heat of summers, need less water, can walk long distances, live on local grasses and resist tropical diseases. They can be also turned into high milk producers given the right kind of feed and environment.

While the native cattle breeds (they number 30) are despised at home, and roam the streets because of their low productivity and therefore low economic value, the same breeds are doing exceptionally well in Brazil. In fact, over the years Brazil has become the biggest exporter of Indian breeds of cows. Three importants breeds -- Gir, Kankrej and Ongole -- give more milk than Jersey and Holstein Friesian.



At a competiton held recently in Brazil, pure bred Gir cow clocked 48 litres of milk/day.

If India had given the same importance to our local cattle instead of depending upon cross-breeding with exotic breeds, the land of holy cows would have made not only the domestic cattle economically viable but also ensured a significant shift towards the viability of farms and crop sustainability. Still I feel India can launch bilateral cooperation with Brazil to strengthen our own dairy industry and farming. I think there is an urgent need to draw the nation's attention to the way we have neglected our own cattle breeds thereby doing more damage to agriculture and animal husbandry.

Here is an article that I wrote sometimes back, and is so relevant today.

Holy cow
Acclaimed abroad, despised at home

By Devinder Sharma

For years we were made to believe that Indian cows are unproductive. They give less milk and therefore are a drain on farming. The entire focus has therefore been to crossbreed with the exotic high-yielding milch cattle from abroad.

For a nation, which has rarely been proud of its natural assets, expecting the holy cows to be scientifically and technically revered was certainly out of question. While India refused to acknowledge the distinct and superior traits of its indigenous cattle breeds, and in fact derided all efforts to develop the production potential of its own local cattle breeds, another developing country saw the virtues of the Indian cattle breeds and has over the years emerged as the major supplier of semen and embryos of high-yielding milk cattle breeds. These improved cattle breeds actually originated from India.

It was in the 1960s that Brazil imported three cattle breeds from India -- Gir and Kankrej from Gujarat, and Ongole from Andhra Pradesh. These were essentially imported for beefing up its meat exports. It was only when these breeds landed in Brazil that they found them to be also a good source for milk production. In a recent FAO publication on traditional knowledge, it has been observed that what was (and is still) considered a ‘waste’ in India, has turned out to be a great economic wealth for Brazil.

Brazil has in recent years emerged as the world’s biggest supplier of improved cattle embryos and semen of Indian origin – now rated amongst the best dairy breeds in the world. The demand for Indian breeds is particularly high from the African and Southeast Asian countries. Suitable for the tropical conditions, these countries find the improved cattle germplasm to be ideal for their cattle breeding programmes. If only Indian dairy and animal scientists had not ignored the domestic cattle breeds, the fate of the Indian cows would have been much different – these holy cows would have then been truly revered.

Believe it or not, the world’s best Gir cows today give 5500 litres of milk on an average per lactation. Compare these with the neglected cousin back home, which do not yield more than 980 litres, the Brazilian Gir yield roughly six times more. And that’s not the maximum limit, milk yields as high as 9000 litres per lactation have been recorded in Brazil. Imagine the Indian Gir breed giving that much of milk. The fate of the Indian cattle would have undergone a dramatic change for the better.

In India, where agriculture research and education has been more or less westernised after the advent of the land grant system of education, agriculture scientists considered it worthless to work on the native breeds. Cattle improvement realised on the sole methodology of bringing in alien breeds of Jersey and Holstein-Friesen and using them in a nation-wide crossbreeding programme to improve the domestic milk production capacity.

The imported Jersey purebreds, which were used extensively for improving milk production in Indian breeds, on an average produce 3,000 to 5,000 litres in a lactation year. On the other hand, the resulting Jersey crossbreds that were born do not give more than 2500 to 3000 litres. Imagine if the country has instead gone in for developing its own indigenous breeds yielding almost double than the crossbreds, India’s milk production would have surpassed all global records.

Indiscriminate crossbreeding of Indian cattle with the exotic breeds under the Intensive Cattle Breeding Programme (ICDP) has already rendered more than 80 per cent of the Indian cattle in the non-descript category. In a country, which has the largest population of cattle in the world, and some 30 recognised breeds of cattle, genetic contamination had taken its toll. More than a dozen of the Indian cattle breeds have almost disappeared.

So much so that some years back, Oman made an unusual request to India. The oil-rich Middle East country was looking for four purebred animals of the cattle breed – Tharparkar -- found only in the dry and arid regions of Rajasthan. Tharparkar derives its name from its unique genetic ability that enables the animal to walk across the massive desert of Thar in Rajasthan. It took us several years to procure four genetically pure Tharparkar bulls.

While India ignored the strength and capabilities of its domestic cattle, Brazil realised the unique genetic potential of Indian breeds. It has meanwhile developed a number of commercially important crossbreds: Girolando, a dual purpose cattle for beef and milk and Zeboain, developed from crossing Kankrej and Ongol. A breed evolved for meat, and currently being developed for milk is Nellore. Another breed Indo-Gujarat is a genetic mixture.

In Minas province, a research company, EPAMIG, has produced 50 dairy cows recording 10,000 litres per 307 days of milk period. These high-yielding cows are being used for embryo collection, fetching US $ 220 per embryo. Semen from the progeny bulls of this breed fetches US $ 11 a dose.

Not only in Brazil, animal genetic wealth from India has been the building block of numerous improved breeds all over the world. Take poultry, a rare Indian breed - Brahma -- is among the parents of modern broilers. The development of Anglo-Nubian breeds of goat in Europe is traced back to Jamnapari breed from India. In the case of buffaloes, some of the best breeds available world over are from India.

And yet, India has been regularly sending official missions to scout for improved breeds of sheep, horses, rabbits, poultry and you name it. The accepted logic being that India’s own domestic breeds are unproductive and importing exotic breeds is the only practical way to improve productivity. The same reasoning also extends to plant varieties and the traditional medicinal systems. While the production potential of high-yielding crop varieties is often exaggerated, there is not even a single official research programme to identify and improve the traditional and locally adaptable crop varieties.

It is primarily because of our inability to appreciate the genetic wealth existing in our backyard that much of it has already been taken and deposited in the plant and animal repositories in Europe, United States, Japan and Australia.

Sunday, February 24, 2013

பரமேசுவரனுக்குப் பசுபதி என்று பெயர்


தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்
பசுபதி
பரமேசுவரனுக்குப் பசுபதி என்று பெயர். இங்கு பசு என்று சொல்வது அவருடைய வாகனமாக ரிஷபத்தையோ காவலாளான நந்தியையோ பசுக்கள். அவர்களுக்கு யஜமானனாக இருக்கும் ஈசுவரனே பசுபதி.
தழையைக் கண்ட இடமெல்லாம் ஒடுகிற பசுவைப் போல், இந்திரிய சௌக்கியத்தைத் தேடி ஒடிக்கொண்டேயிருக்கிறோம் நாம். பசுவின் சொந்தக்காரன் அதைக் கட்டிப் போடுவதைப்போல் பசுபதியான ஈசுவரன் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறான்.
எங்கே கட்டியிருக்கிறான். கண்ணுக்குக் கட்டு எதுவும் தெரியவில்லையே என்று  தோன்றும். ஆனாலும் நம்மை அறியாமலேயே இந்தக் கட்டைப் பற்றி நாம் அவ்வப்போது பேசுகிறோம். ஒரு காரியத்துக்காக நாம் எத்தனையோ முயற்சி செய்கிறோம். அப்படியும் அது பலிதமாகவில்லை. இச்சமயத்தில், முடிந்ததெல்லாம் செய்தேன். ஆனால், கர்ம பந்தம் யாரை விட்டது?காரியம் ஜயிக்கவில்லை என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். பந்தம் என்பதுதான் கட்டு. நம்முடைய பூர்வ கர்மாவினால் நம்மைக் கட்டியிருகிகிறார் பசுபதி.
கயிற்றால் கட்டப்பட்ட பசுவுக்கு, அந்தக் கட்டின்மீது கோபம்தான் வரும். ஆனால் கட்டை அவிழ்ந்துவிட்டால் என்ன ஆகிறது?அது அசலான் தோட்டத்தில் மேய்கிறது.
அவன் அதை வெளு வெளு என்று வெளுத்துக் கட்டுகிறான். பட்டியில் கொண்டுபோய் அடைகிறான். அப்போதுதான் தன்னைக் கட்டிப்போட்டிருந்தது எவ்வளவு நல்லது என்று தெரிகிறது.
இப்படியேதான் கர்மக் கட்டைப்பற்றி நமக்குக் கோபம் வருகிறது. ஈசுவரன் இப்படி ஒரு கட்டைப் போட்டுவிட்டால் நமக்குத் தோல்வி, துக்கம் இதெல்லாம் ஏற்படாது. தோல்வியும் துக்கமும் வருவதால்தான் நாம் இப்போது நமக்கு இவ்வளவுதான் பொசிப்பு என்கிற புத்தியைப் பெற்று, இருக்கிற மட்டும் திருப்தியுடன் நிம்மதியுடன் வாழக் கொஞ்சமாவது முயல்கிறோம். இவை இல்லாவிட்டால் நம்முடைய ஆசைக்கும், நாம் போடுகிற பிளானுக்கும் முடிவே இராது. இத்தனை பலமான கட்டும் இருக்கும்போதே, நம்மில் ஒவ்வொரு தனி மநுஷஷ்யனின் ஆசைக்கும் இந்த சிருஷ்டி முழுவதையும் ஆஹ§தி பண்ணினாலும் போதாமலிருக்கிறது. பூலோகம் போதாதென்று, இப்போதே சந்திர மண்டலம், மார்ஸ் என்று போகிறோம். கட்டு இல்லாவிட்டால் கேட்கவே வேண்டாம். இப்போதே இத்தனை போட்டி, பொறாமை, சண்டே என்றால் அப்போது எப்படி இருக்கும் என்று கற்பனைக்கூடச் செய்ய முடியாது. நம் ஆசை அவ்வளவையும் காரியத்தில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யாதபடி கர்மம் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறதோ, நாம் பிழைத்தோமா.
பசுவைக் கட்டிப் போட்டால் அது பயிரையும் பாழாக்குகிறது. தானும் அடிபடுகிறது. அதுபோல் கர்மாவால் ஈஸ்வரன் நம்மைக் கட்டிப் போடாவிட்டால் நம்மையும் கெடுத்துக் கொண்டு லோகத்தையும் கெடுத்து விடுவோம் - இப்போதே கொடுக்கிறோம். துர்பலத்திலேயே இவ்வளவு கெடுததால், சுயேச்சை பலம் பூரணமாக இருக்கும்போது எவ்வளவு கெடுப்போம். கயிறு போட்டுக் கட்டுவதால்தான், ஏதோ ஒரு சமயத்திலாவது பசுவுக்குக் கட்டுத் கறியிடம் வந்து படுக்க முடிகிறது. கர்மம் கட்டுவதால்தான், நாமும் எப்போதாவது அதற்கு முளையான ஈசுவரனிடம் சித்தத்தைப் படுக்க வைக்கிறோம். இல்லாவிட்டால், பகவானை அடியோடு மறந்து, இப்படியே சம்ஸாரத்தில் உழன்றுகொண்டு தானிப்போம்.
நம்முடைய க்ஷேமத்துக்காக, நமே நமக்கு அதிக உபத்திரவத்தை உண்டாக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக, பகவான் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார். எப்போது அவிழ்த்து விடுவீர். என்று அவரைக் கேட்டால், ஒருவருக்கும் ஒரு தீங்கும் செய்யாமல், அதனால் உனக்கும் பாபம் உண்டாக்கிக் கொள்ளாமல் இருக்கிற பக்குவம் வந்தால், அவிழ்து விடுவேன் என்கிறார்.
குழந்தை விஷயம் செய்தால், கட்டிப் போடுகிறோம். நம்மிடம் ஆசை என்ற விஷயம் இருப்பதால், நம்மைப் பசுபதி கட்டிப் போட்டிருக்கிறார். குழந்தைக்கு விஷம் புத்தி போய் விட்டால் அப்புறம் கட்ட மாட்டோம். நமக்கு ஆசை போய்விட்டால் ஈசுவரனும் நம்மை அவிழ்த்து விடுவார். ஆசையினால் பலருக்கு பலவித கஷ்டங்களை உண்டாக்கி, நாமும் கஷ்டப்படுகிறோம். ஆசை போயிவிட்டால், யாருக்கும் நம்மால் கஷ்டம் இல்லை. அப்போது கட்டும் இல்லை. அவிழ்த்து விடுவார்.
கட்டு போயிவிட்டது என்பதால் அசலான் தோட்டத்தில் மேயமாட்டோம். ஏனென்றால், அசலான் தோட்டத்தில் மேயாத புத்தி நமக்கு வந்த பிறகுதான் பசுபதி கட்டையே எடுக்கிறார். கட்டு போனபின் நாம் கட்டுப்பட்ட நிலையிலிருந்து உயர்ந்து கட்டியவனின் நிலைக்கே போய்விடுவோம். கட்டு இருக்கிற வரையில் நாம் வேறு, ஸ்வாமி வேறு என்று பூஜிக்கிறோம். கட்டு போய் விட்டால் நாமே அவன் என்று தெரிந்து கொள்வோம். அப்புறம் பூஜைகூட வேண்டாம். ஒரு நிலை வரையில் ஜீவன் பசு என்று சுருதியும் சொல்கிறது. அது எந்த நிலை?

'தேவதாம் அன்யாம் உபாஸதே'

என்று சொல்லியிருக்கிறது. இதற்குப் பொதுவாக, இஷ்ட தேவதையை விட்டுவிட்டு அதற்கு அந்நியமான தேவதையை உபாஸிக்கிறவன். பசு என்று பொருள் சொல்வார்கள். அது தவறு. தான் பூஜிக்கிற தேவதை தனகக்கு அந்நியமானது எனறு நினைத்து எவன் பூஜை செய்கிறானோ அவன் பசு என்பதே சரியான அர்த்தம். இப்படி பகவான் வேறு, பக்தன் வேறு என்ற பேத புத்தி இருக்கிற வரையில் கர்மா உண்டு. கர்மா உள்ள வரையில் கட்டும் உண்டு.
அதற்காக, இப்போதே நமக்கு பேத புத்தி போய்விட்டதாக நாம் பிரமை கொள்ளக் கூடாது. பாசாங்கு பண்ணக்கூடாது. உண்மையாகவே பேத புத்தியைப் போக்கிக் கொள்ள வேண்டும். அப்படிப் போகாத வரையில் சாஸ்திரோக்கதமான கர்மங்களைச் செய்யத்தான் வேண்டும்.
ஸ்வாமிகள் என்ன இப்படிச் சொல்கிறார்? இத்தனா நாழி கர்மா இருந்தால் கட்டும் உண்டு என்று சொன்னார். இப்போது இவரே அநுபவத்தில் அபேத ஞானம் வருகிற சாஸ்திரம் விதிக்கிற தர்ம காரியங்களின் கட்டு உதவி செய்கிறது. அதெப்படி ஒரு கட்டு இன்னொரு கட்டை அவிழ்க உதவும் என்று கேட்கலாம். ஒரு திருஷ்டாந்தமம் சொல்கிறேன். ஒருத்தன் விறகுகளைக் கட்டிக் கொண்டு வருகிறான். மணி முடிச்சாகக் கட்டிவிட்டான். கயிற்றை அவிழ்க்க முடியவில்லை. இப்போது என்ன செய்வாள் தெரியுமா. அந்தப் பழைய கட்டுக்குப் பக்கத்திலேயே அதைவிட இறுக்கமாக மற்றொரு கயிற்றைச் சுற்றி நெருக்குவார்கள். இந்த இரண்டாவது கயிற்றை முடிச்சுப் போடமாட்டார்கள். அப்படியே கெட்டியாக விறகுகளைச் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொள்வார்கள். இந்த இறுக்கலில் பழைய மணி முடிச்சுக் கட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொள தொள என்று நெகிழ்ந்து கொடுக்கும். அதை அப்படியே அலக்காக விறகுச் சுமையிலிருந்து கழற்றி விடுவார்கள். பிறகு புதிதாக இறுக்கிப் பிடித்துக் கொண்ட கயிற்றையும் விட்டுவிடுவார்கள். ஆக, புதிய கட்டு பழைய கட்டை அவிழ்க்க உதவி விட்டது. அப்புறம் இதையும் சுலபமாக எடுத்துப் போட்டு விட முடிந்தது.
சாஸ்திரம் சொல்கிற தர்ம காரியங்களின் கட்டு, இரண்டாவது கயிறு போன்றது. அது முடிச்சுப் போட்டுக் கட்டுவது அல்ல. கட்டுகிற மாதிரி இருக்கும். சாஸ்திர விதிகள் ரொம்பவும் கறாராக, கண்டிப்பாக கட்டுப்படுத்துகிற மாதிரிதான் இருக்கும். ஆனால் இந்திரியங்கள் போடுகிற மணி முடிச்சான ஆசைக்கட்டிலிருந்து விடுபட்டு, கடைசியில் பூரண நிம்மதி, சௌக்கியம், விடுதலை பெற வேண்டுமானால், இந்தக் கட்டு இருந்தேயாக வேண்டும். ஆசைக் கட்டுப் போட்டபின் சாஸ்திரக் கட்டும் போய்விடும். ஆனால் முதலில் அது போவதற்காக இந்த இரண்டாவது கட்டை நாமாகப் போட்டுக் கொள்ள வேண்டும். தார்மிகமாக, மநுஷ்ய காரியம், தேவ காரியம், பூஜை, யக்ஞம், பரோபகாரம், ஜீவாத்ம கைங்கரியம் எல்லாம் பண்ண வேண்டும். ஆசை போனபின் இந்தத் தெய்வ காரியங்கள், வைதிக காரியங்கள், சமூகக் காரியங்கள் எல்லாம் கூட நின்று விடலாம்.
இந்த நிலையை ஒருவன் அடைகிறபோது இப்படிப்பட்ட சாதகனிடம் கோபம் வருமாம். (தேவதைகள் வேறு. தெய்வம் எனறு பொதுவில் சொல்லப்படும் ஸ்வாமி வேறு) மனிதன் வைதிக காரியம் செய்தால்தான் தேவதைகளுக்கு ஆஹ§தி கிடைக்கும். இல்லாவிட்டால் அவர்கள் பட்டினிதான். எனவே இவன் கர்மாவை விட்டு, யக்ஞம், தர்ப்பணம், பூஜை இவற்றை நிறுத்தி விட்டால் தேவர்களுக்குச் சாப்பாடு கிடைக்காது. எனவேத்தான் கோபம் வரும். மாடு கறவை நின்றுவிட்டால்அப்புறம் அது பிரயோஜம் இல்லை என்று bQ போடுவதை நிறுத்தி விடுகிறோம் அல்லவா. மனிதனின் ஆசை எல்லாம் நினறு விட்டால், எந்த தேவதையில் அநுக்கிரகம் இவனுக்கு வேண்டாம் என்றாகி, அவற்றுக்கு இவன் ஆஹ§தி தருவதும் நின்றுவிடும். மனிதனின் கர்மம் நின்றுவிட்டால் அப்புறம் தேவதைகளுக்கு அவனால் பிரயோஜனம் இல்லை. இது காரணமாகத்தான், புராணங்களில் பல ரிஷிகள் பிரம்ம ஞானத்தை அடையத் தபஸ் செய்த போது தேவதைகள் பிரதிபந்தகம் (இடையூறு) விளைவித்த தாகப் பார்க்கிறோம்.
இதனால்தான் ஸம்ஸ்கிருதத்தில் அசட்டுக்கும் அஞ்ஞானிக்கும், தேவனாம் ப்ரியன் என்றே ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. தேவனாம் ப்ரியன் என்றால் தேவதைகளுக்கு இஷ்டமானவன் என்று அர்த்தம். அது ஏதோ புகழ்ச்சொல் போலத் தோன்றும். தேவனாம் பெரிய அசோக் என்று அசோகச் சக்கரவர்த்திக்கூடக் கல்வெட்டுகளில், ஸ்தூபிகளில் எல்லாம் தம்மை வர்ணித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், உண்மையில் எவன் தேவதைகளுக்கு திருப்தி செய்கிற நிலைக்கு மேற்பட்ட ஞானத்தை ஒரு நாளும் தேடிப் போகாமல், கர்மத்திலேயே உழலுகிற அசடே, அவனே தேவனாம் ப்ரியன்.பழைய காலத்தில் ஞானம் வந்தவர்களும்கூட சாஸ்திரக் கர்மாவை விடத் தயங்கினார்கள். மற்றவர்களுக்கு வழி காட்டுவதற்காக, இவற்றை தங்களுக்கு அவசியமில்லாமலும்கூடத் தொடர்ந்து செய்து வந்தார்கள். நாமோ, சிறிது கூடத் தயக்கமில்லாமல், ஹாய்யாக சகல சாஸ்திர தர்மங்களையும் விட்டுவிட்டோம். ஆனால் ஞானியாகத்தான் ஆகவில்லை.
ஞானியில்லை என்றால், தேவனாம் ப்ரியர் களாகவாவது இருந்தால், அவர்களுடைய பிரீதியால், நாம் செத்துப்போன பின் தேவலோகத்துக்குப் போகலாம். தேவலோகம் என்பது ஒரு கேளிக்கை லோகம். அது மோக்ஷமல்ல. மோக்ஷம் என்பது இந்திரியங்களுக்கு எட்டாத அத்மானந்தத்தை சாசுவதமாகத் தருவது. தேவலோகம் என்பது நம் வைதிக கர்மாவினால் கிடைத்த புண்ணியம் தீர்ந்தபின் பூலோகத்துக்குத் திரும்பத்தான் வேண்டும். மோக்ஷ சுகத்துக்கும், தேவ லோகம் என்கிற ஸ்வர்கத்தின் இன்பத்துக்கும், அஜகஜாந்தரம். இருந்தாலும் துக்கமும் கஷ்டமும் நிறைந்த மநுஷ்ய லோகத்திலிருந்து நாம் தேவ லோகத்திற்காகவது போனால் விசேஷம்தான். நாம் இதற்காகவே வழி பண்ணிக் கொண்டிருக்கிறோமா? அதுவும் இல்லை. தேவதைகளுகக்குத் திருப்தி தருகிற வைதிக கர்மங்களை விட்டுவிட்டபின் அவர்களுக்கு எப்படிப் பிரியமானவர்கள் ஆவோம். நாம் நரகவாஸீனாம் ப்ரியர் களாகவே இருக்கிறோம் - நரகத்திலிருப்பவர்கள், நமக்குத் துணையாக இவர்களும் வரப் போகிறார்கள் என்று நம்மைப் பற்றிப் பிரியமான எண்ணுகிற ஸ்திதியில்தான் இருக்கிறோம்.
துஷ்டர்களாக இருப்பதைவிட, அசடுகளாக ஆவது சிலாக்கியம். முதலில் நாம் அசடுகளான தேவனாம்பிரியர்களாக ஆக வேண்டும். அப்புறம் பசுபதி கொஞ்சம் கொஞ்சமாக் கட்டை அவிழ்த்து விடுவார். (தேவ லோகத்தை விரும்பாமல், பற்றின்றி கர்மா செய்தால், இக்கர்மாவே சித்த சுத்திதந்து பிரியத்துக்கும் ஞானத்திற்கு வழிகோலும்) அப்புறம் தேவதைகளின் பிரியத்தையும், அப்பிரியத்தையும் பொருட்படுத்தாத ஞானி ஆகலாம். அப்போது பசு (ஜீவன்) - பாசம் (கயிறு) - பதி (ஈஸ்வரன்) என்கிற மூன்றில் பசுவும் பாசமும் போய், பசி மட்டுமே இருக்கும். பசுவான நாமே பதியாகி இருப்போம்.
சைவ சித்தாந்தத்தில் பசு - பதி - பாசம் என்று எதைச் சொல்கிறார்களோ, அதுதான் ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தில் ஜீவன் - பிரம்மம் - மாயை என்று சொல்லப்படுகிறது. சங்கரரும் பசு - பாசம் என்ற பதங்களையே ஸெளந்தரிய லஹரி சுலோகம் ஒன்றில் பிரயோகித்திருக்கிறார்.
சிரம் ஜீவந்நேவ பசு பாச வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம த்வத் பஜனவான்
(அம்பிகே உன்னை எவன் பூஜிக்கிறானோ அவன் பசு, பாசம் என்றவற்றின் சேர்க்கையால் உண்டாகிற விபரீதத்தைப் போத்திக் கொண்டு ஸதா காலமும் பரமானந்தம் என்ற ரஸத்தையே ருசிக்கிறான்.) 

Source:http://www.kamakoti.org/

Saturday, February 23, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 8/2013)




Posted: 17 Feb 2013 02:00 PM PST

எப்போதும் திருப்தி உள்ளவனாக இரு.சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்போதும் இடம் கொடுக்காதே.நீ துவாரகாமாயியின் குழந்தை.துவாரகாமாயியின் நிழலில் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர் ஆகிறார்.-ஷீரடி சாய்பாபா.
Posted: 18 Feb 2013 02:00 PM PST
"நீங்கள் என்னிடம் அனன்னியமான [வேறொன்றிலும் நாட்டமில்லாத]அன்பு செலுத்துங்கள்.நானும் உங்களை அவ்வாறே பாதுகாக்கிறேன்.காப்பவரும் அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்.குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் மஹேச்வரனும் ஆவார்.குருவின் முக்கியமான ஸ்தானத்தை உணர்ந்துகொண்டவன் மூவுலகங்களிலும் பேறு பெற்றவனாவான்".-ஷீரடி சாய்பாபா.
Posted: 19 Feb 2013 02:00 PM PST
பொறுமையும் சகிப்புத்தன்மையுமே தைரியம்.அதைத் தொலைத்துவிடாதீர்கள்.எப்பொழுது பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அது உங்களைக் கரைசேர்க்கும்.
சகிப்புத்தன்மைதான்,ஒரு மனிதனிடம் இருக்கும் ஆண்மை.இதுவே பாவங்களையும் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் வெல்கிறது.சகிப்புத்தன்மை இல்லாத மனிதனின் நிலைமை பரிதாபகரமானது.
பண்டிதராக இருந்தாலும் சரி,நற்குணம் படைத்தவராக இருந்தாலும் சரி,சகிப்புத்தன்மை இல்லாவிடில் வாழ்க்கை வீணாகிவிடும்.
குரு  மஹாபலம் படைத்தவராக இருக்கலாம்.ஆயினும்,ஆழமாக பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார்.-ஷீரடி சாய்பாபா.[ஸ்ரீ சாயி இராமாயணம் ]
Posted: 20 Feb 2013 02:00 PM PST
பாபாவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர்  தூயவரானாலும் சரி,கபடரானாலும் சரி,கடைசியில் கரையேற்றப்படுவார்.செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது;பலனை அளிப்பவர் 'எல்லாம் வல்ல சாயிபாபா'என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ,அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்.

Posted: 21 Feb 2013 02:00 PM PST

எல்லாச் செயல்புரியும் சக்திகளையும் சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள்.பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள்.சாயி சர்வசக்தியும் நிரைந்தவரென்பதை அறிந்துகொள்ளுங்கள்.பாரத்தை அவர்மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள்;எல்லா சித்திகளையும் பெறுவீர்கள்.
மாறாக,மிகச் சிறிய அளவில் அபிமானம் ஒட்டிகொண்டிருந்து,'நான்தான் செய்கிறேன்' என்று நினைத்தால் ஒரு கணமும் தாமதமில்லாது உடனே அதனுடைய விளைவு தெரியும்.
Posted: 22 Feb 2013 02:00 PM PST
'உன்னுடைய இயல்பு நிர்ணயிக்கும் வழியில் நீ நட;மற்றவருடைய இயல்பு நிர்ணயிக்கும் வழியில் அவர் நடக்கட்டும்.பிறரை பின்பற்றும் முயற்சியில் உன் இயல்புக்கு எதிராக செயல்படாதே'.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

Posted: 23 Feb 2013 02:00 PM PST
யார் எதைச் சொன்னாலும் சொல்லட்டும்.அவையனைத்தையும் நாம் கேட்டுக்கொள்ளலாம்.ஆனால்,நம்முடைய  லட்சியப்பாதையிலிருந்து தடம்புறளகூடாது .நம் குருவின் வார்த்தைகளை மறந்துவிடக்கூடாது.
குருவின் திருவாய்மொழிதான் நமக்கு பரம மங்களங்களை விளைவிக்கும்.அதுதான் நம் போதியும் புராணமும் அனுஷ்டானமும் ஜபமும் தவமும்-அனைத்தும் ஆகும்.-ஸ்ரீ சாயி இராமாயணம்.