Sunday, September 1, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 33/2013)


 
Posted: 18 Aug 2013 03:00 PM PDT
அப்துல் ரஹீம் ஷம்சுதீன் ரங்காரி  - செப்டம்பர் 11, 1936.

1913-
ல் என் ஷிர்டி விஜயத்தின் போது.

பாபா : நீ எங்கிருந்து வருகிறாய்?
நான் : தானா
பாபா : எதற்காக?
நான் : என் மனைவிக்கு தொண்டையில் வீக்கம், முதலியன.
பாபா : அவளை மசூதிக்குள் வரச்சொல்.

நான் அவளை மசூதிப் படிகளில் ஏற்றி அழைத்து வந்தேன். அவள் பாபாவை வணங்கினாள். அவர் அவள் கையைத் தொட்டு, "குதா அச்சா கரேகா" (அதாவது கடவுள் நன்மை செய்வார்) எனப் பகன்றார். அவர் கேட்காமலேயே நான் அவரிடம் ரூ.1-4-0 அளித்தேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு ஊதி வழங்கினார். அதன் பின்னர் 2 மணி நேரம் தங்கினேன். என் மனைவியின் வீக்கம் விரைவாக வடிந்து கொண்டிருந்தது.

மேலும் அவர் சொன்னார்: நீ நேற்று வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நான் : ஏன்?
பாபா : சங்கீர்த்தனம் நடந்தது. இரவு முழுவதும் நான் அழுதேன். அவர்கள் என் மீது வசை பாடினார்கள்.
நான் :  ஏன் அவர்கள் தங்கள் மீது வசை பாடவேண்டும்?
பாபா : நான் "வசை பாடினார்கள்" என்று சொன்னால் மக்கள் புரிந்துகொள்வதில்லை. ஆனால் நீ புரிந்துகொள்வாய்.

நான் : "வசை பாடினர்" என்றால் உண்மையில் புகழ் பாடினர் என நான் எண்ணினேன்.

(
சில மகான்கள் புகழ்ச்சியை இகழ்ச்சி எனப் பேசுவதன் மூலம் அதை தாங்கள் பொருட்படுத்துவதில்லை என்பதை காண்பிக்கின்றனர். மேலே குறிப்பிட்டுள்ள பஜனையில், முழுவதுமே பாபாவை உயர்வாக புகழ்ந்து பாடியிருக்க வேண்டும்; அதை இகழ்ச்சி போலவே பாவித்து அவர் அதை பொருட்படுத்தாமலிருந்திருக்க வேண்டும். மேலும் இந்த புகழ் மாலையில், பகவானிடம் இறங்கச் செய்யத்தக்க பிராத்தனைகளுடன் நெஞ்சை உருக்கும் இன்னிசை கலந்து விடும். அதனால் பாபா அழுவார்).

நான் : கடவுளை துதித்து பாடும்போது, ஆண்டவனிடம் பக்தி செலுத்துபவன் அழுவான், சிரிப்பான் அல்லது கூத்தாடுவான்.
பாபா : அதேதான். நீ சொன்னது சரி. உனக்கென ஒரு  குரு உள்ளாரா?
நான் : ஆம். ஹபீ பலீஷா சிஸ்தி நிஜாமி.
பாபா : அதனால் தான் உன்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

நான் ஷீரடிக்கு செல்வதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே சமாதியடைந்து விட்ட என் குரு வெளியே செல்லும் போதெல்லாம் இன்னிசையும் பின் தொடரும் என்பதை நான் நினைவு கூர்ந்தேன். - ஸ்ரீ சாய்பாபா பக்தர் அனுபவங்கள்.  
Posted: 19 Aug 2013 03:00 PM PDT
"'நான்' 'என்னுடையது' என்னும் உணர்வுகளை அறவே ஒழித்துவிட்டுப் பற்றற்ற செய்கைகளைச் செய்துகொண்டு வாழ்வாயாக.இறைவன் அளிப்பதை தியாக பூர்வமான உணர்வுடன் ஏற்றுக்கொள்.எவருடைய உடைமைக்கோ சொத்துக்கோ ஆசைப்படாதே."-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 20 Aug 2013 03:00 PM PDT
துகாராம் பார்கு, டிசம்பர் 9, 1936.

சாயி பாபாவுடன் நெருக்கமாக எனக்குச் சில அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. 1912-ல், கோதாவரி வாய்க்கால்களில் முதன் முதலாக நீர் திறந்துவிடப்பட்டபோது, இருபது மைல் தொலைவிலுள்ள காரஞ்ஜிகாம் என்ற கிராமத்துக்கு, வேலை தேடி பிழைப்பை நடத்துவதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்தேன். கிளம்பிய போதே, ஷிர்டியிலே கோபர்காம் சாலையில் நான் இருந்த போதோ, லெண்டிக்கு செல்லும்போதோ, அங்கிருந்து திரும்பும்போதோ வழியில் பாபா என்னை சந்தித்தார். அவர் என் கழுத்தைச் சுற்றி தம் கையை என் தோளில் போட்டுக்கொண்டு, "போகாதே" எனக் கூறினார். அவருடைய சொல்லை மதியாது நான் அந்த கிராமத்துக்குப் போனேன். நான் அங்கு போய்ச் சேர்ந்த தினம் எனக்கு காய்ச்சல் ஆரம்பித்தது, நீண்ட காலம் விடவே இல்லை. பிழைப்புக்கு வேலை செய்வது எனபது நடவாது காரியம் ஆனது; ஆகவே என்னை கவனிப்பதற்கு என் உறவினர்களின் தயவை நாடியிருக்கும்படி ஆனது. பதினைந்து நாட்கள் காய்ச்சலுக்கு பிறகு, ஷீரடிக்கு திரும்பிச் செல்லும் அளவுக்கு எனக்கு தெம்பு வந்தது. ஆனால் இங்கு வந்ததும் சுமார் 45 நாட்கள் ஜுரத்தால் அவதிப்பட்டேன். பிறகு பாபாவின் ஊதியைப் பெற்று வரும்படி என் தாயை அனுப்பினேன். அதை இட்டுக் கொண்ட மறு தினமே ஜுரம் நின்றது. - ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்.


Posted: 21 Aug 2013 03:01 PM PDT
என் அருகில் இரு;சும்மா இரு.மற்றவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
Posted: 22 Aug 2013 03:34 PM PDT
யாருக்கு எது நன்மை அளிக்குமோ அதற்க்கு ஏற்றவாறே நான் கொடுப்பேன். கொடுக்கப்பட்டது எதுவாக இருந்தாலும் அது நான் அளித்ததே என்பதை நீங்கள் அறிந்தால் என்னை அறிந்து கொண்டவரே ஆவர்.  இல்லாததை பற்றியோ, கிடைக்காதவற்றை பற்றியோ கவலைப்படுவதால் பயன் ஒன்றும் கிடையாது. ஷிர்டி சாய்பாபா    
Posted: 23 Aug 2013 10:55 AM PDT
விரோதங்களையும்,வீண் வாதங்களையும் தவிர்த்துவிட்டால்,இறைவன் உன்னை காப்பாற்றுவார்.தீங்குக்கு தீங்கு என்பதை தவிர்.தீங்குக்கு பதிலாக
நன்மையை செய்.பிறருடைய சொற்கள் உனக்கு தீங்கிழைக்காது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. அன்பைப் பொழிவார்
Posted: 25 Aug 2013 03:00 PM PDT
எனக்கு(பாபாவுக்கு) விசுவாசத்துடன் பணிபுரிபவனுக்கு,கடவுள் அன்பைப்
பொழிவார்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.