Saturday, December 29, 2012

பசும் பால் சாப்பிட்டால் அறிவு வளரும்


பசும் பாலை அருந்தும் குழந்தைகளுக்கு மற்ற பாலை குடிப்போரை விட அறிவு வளர்ச்சியும், புத்திசாலித்தனமும் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டுப் பால் அறிவை வளர்க்க உதவும் என்பார்கள். ஆனால் பசும் பாலில்தான் அறிவு வளர்ச்சிக்கான அனைத்து அம்சங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில், 'குளோரி ஆஃப் கோமாதா' என்ற பெயரில் 3 நாள் தேசிய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பசும்பால் உள்ளிட்ட பசுவிடமிருந்து பெறப்படும் பொருட்களின் பயன் குறித்த விரிவான ஆலோசனைகள், கருத்துப் பரிமாற்றங்கள், கட்டுரைகள் தாக்கல் செய்தல் உள்ளிட்டவை நடந்தன குஜராத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹிதேஷ் ஜானி என்பவர் தாக்கல் செய்த கட்டுரையில், பசும் பாலை அருந்துவோருக்கு, மற்ற பாலைக் குடிப்பவர்களை விட அறிவு வளர்ச்சி அதிகமாக உள்ளது. பசும் பாலில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளதால், அது மூளையைத் தூண்டி நமது சிந்தனைகள் சீராகவும், கூறாகவும் இருக்கும் வகையில் செயல்படுத்த உதவுகிறது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள ஈஸ்வர்யா என்ற கிராமத்தில், பசு மாட்டின் சிறுநீரை (கோமியம்) சேகரித்து அங்குள்ள பெண்கள் விற்பனை செய்து நல்ல லாபம் சம்பாதிக்கிறார்களாம். இதற்காக கூட்டுறவு சங்கங்களும் கூட அமைக்கப்பட்டுள்ளதாம். பசும் பால் பொருட்களால் குஜராத் மாநில கிராமங்களில் நல்ல பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது என்றார் ஜானி. இதுதவிர பசும்பாலுக்கு, டி.பி எனப்படும் காச நோயைக் குணப்படுத்தும் சக்தி இருப்பதாகவும் ஜானி தெரிவித்தார். குஜராத்தில் மொத்தம் 31 வகை பசு மாடுகள் இருக்கின்றனவாம். இதுதவிர இத்தாலி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் காணப்படும் பிராமண பசுக்கள் எனப்படும் வகையைச் சேர்ந்த 6000 பசுக்களும் குஜராத்தில் உள்ளனவாம். நிகழ்ச்சியில், ஈரோடு, கிராம சமுதாய நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.நடராஜன் பேசுகையில், பசு மாட்டிலிருந்து கிடைக்கும் ஐந்து வகைப் பொருட்களும் (பஞ்சகாவ்யா) நமது உடலில் ஏற்படும் வியாதிகளைத் தீர்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக விவசாயத்திற்கும் கூட அது உதவுகிறது. பஞ்சகாவ்யா முறையைக் கடைப்பிடித்து விவசாயம் செய்வோருக்கு நல்ல பலன்கள், விளைச்சல் கிடைக்கின்றன என்றார் அவர் 

நன்றி;tamil.oneindia.in/news/

No comments:

Post a Comment