Sunday, April 7, 2013

பற்களைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்



பற்கள்தானே என்று நினைக்காமல், பற்களைப் பற்றி தெரிந்து கொள்வதும், அதனை பாதுகாப்பதும், அதில் ஏதேனும் பிரச்னை ஏற்படின் உடனடியாக சரி செய்வதும் மிகவும் முக்கியமாகிறது.
பிறக்கும் 2000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறக்கும் போதே பல் இருக்குமாம்.
ஒரு கரு பிறக்க 6 மாதம் இருக்கும் முன்பே கருவிற்கு வளர வேண்டிய பற்கள் தயாராகிவிடுகின்றன.
பிறந்த பிறகு முதன் முதலாக முளைக்கும் பற்கள் பால் பற்கள் என்று கூறப்படுகிறது. அவை விழுந்த பிறகு முளைக்கும் பற்கள் கோரைப் பற்களாகும்.
குழந்தை பிறந்து 6வது மாதத்தில் முளைக்கத் துவங்கும் பற்கள் 3 வயதில் முழுமை பெறுகின்றன. 3 வயது குழந்தைக்கு பொதுவாக 20 பற்கள் வளர்ந்திருக்கும்.
பிறகு 5 முதல் 6வது வயதில் ஒவ்வொரு பால் பற்களாக விழத் துவங்கி 12 அல்லது 13 வயதில் அனைத்து பால் பற்களும் விழுந்து கோரைப் பற்கள் அந்த இடத்தை நிரப்புகின்றன.
சிலருக்கு பால் பற்கள் விழும் முன்பே கோரைப் பற்கள் மூளைக்கத் துவங்கி விடுகின்றன. பலர் இரண்டு பற்களையும் ஒருசேர கொண்டிருப்பதும் உண்டு.
நமது பற்களின் மீது இருக்கும் எனாமல்தான், நமது உடலில் உள்ள மிக கடினமான பகுதியாகும்.
மனிதன், உணவை கடிக்க, கிழிக்க, அரைக்க, மெல்ல என நான்கு விதமான பற்களைக் கொண்டுள்ளான்.
ஒரு மனிதனுக்கு இருப்பது போன்ற பற்கள், வேறு யாருக்கும் இருப்பதில்லை. நமது விரல் ரேகைகளைப் போலவே பற்களின் அமைப்பும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
நமது பற்களில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளால், உடலில் சில வியாதிகள் ஏற்படுவதும் உண்டு.
நமது பல்லின் மூன்றில் 1 பங்கு பல் ஈறுப் பகுதிக்குள் மூடியுள்ளது. அதாவது, மூன்றில் 2 பங்கு பல்லைத் தான் நாம்மால் பார்க்க முடிகிறது.
ஆரோக்கியமான பற்களை முழு வெள்ளை நிறத்தில் இருக்காது. சிறிது பழுப்பு நிறமாகவே இருக்கும்.
உமிழ் நீரில் உள்ள ஜீலி 7 ன் அளவு குறையும் போது, அதில் உள்ள கால்சியம் மற்றும் உப்புச்சத்து, பற்கள் மேல் படியும் போது அவை காரையாக மாறிவிடுகிறது.
பல் சொத்தை என்பதும் ஒரு பரம்பரை வியாதிதான்.
பற்களை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தேய்க்க வேண்டும். அதிக நேரம் தேய்ப்பதால் பல் எனாமல் தேய்ந்து போக வாய்ப்பிருக்கிறது.
பொதுவாக எடுப்பான பல் அமைப்பைப் பெற்றிருப்பவர்கள் கம்பி கட்டும் சிகிச்சை முறையைப் பயன்படுத்தி பற்களை சீராக மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். இதனை 18 வயதுக்கு மேல் செய்வது நலம் என்கின்றனர் மருத்துவர்கள்.
தற்போது பற்களை சீராக அமைக்க லேசர் முறைகளும் வந்து விட்டன.
பற்களைக் கொண்டு பாட்டிலைத் திறப்பது போன்றவை பற்களை பாதிக்கும் செயல்கள் என்பதை பலரும் அறிவதில்லை.
பால் பற்கள் முளைத்த குழந்தைகளுக்கு இரவில் சர்க்கரை கலந்த பால் கொடுத்துவிட்டு படுக்க வைப்பதாலும், குழந்தைகளின் பற்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
பற்களை பத்திரமாக பாதுகாக்க நார்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். பழம், காய்கறிகளை கடித்து மென்று சாப்பிடுவது உடலுக்கு மட்டும் அல்லது பற்களுக்கும் நன்மை தரும்.
First Published :06 April 2013 in தினமணி

1 comment:

  1. மிகவும் விரிவான விளக்கம்...

    பதிவைப் பலரும் அறிய பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete