Saturday, November 16, 2013

பாபா-வின் கணக்கு





Posted: 03 Sep 2013 11:20 AM PDT
திரு. பி.வி.தேவ்.(ஓய்வு பெற்ற தாசில்தாரர், ஸ்டேஷன் ரோடு, தானே , மும்பை)
டிசம்பர் 13. 1936

தொழுநோயை (வம்சாவளியாக வந்ததோ, தொத்திக் கொண்டதோ எதுவாயினும் சரி), பார்வையின்மை, காது கேளாமை, வாத நோய், பேய் பிடித்திருப்பது, செய்வினை, சூன்யம் போன்றவற்றின் விளைவுகள் ஆகியவற்றை போக்குதல், தீய வேசிகள், இதர பாபிகள் ஆகியோரை தூய்மைப் படுத்துதல் போன்றவற்றில் சாயி பாபா இயேசு கிறிஸ்துவைப் போலவே நடந்து கொண்டாரா எனபது பற்றி, நான் துல்லியமான விவரங்களை நான் அறியேன். ஆனால்,தீய குணத்தை போக்குவதில், பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. என் விஷயத்தை எடுத்துக்கொள்வோம்; லோபம் அல்லது பொருளாசையைக் கண்டித்தார். இதன் முழு விவரத்தையும் கூறுகிறேன்.

என் உத்தியோக காலம் முழுமையாக நிறைவடைந்த பின்னரும், எனக்கு முன்று மாத கால நீடிப்பு அளிக்கப்பட்டது. எனக்கென்னவோ ஓராண்டு கால நீடிப்பு கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு. கலெக்டர் இந்த விஷயத்தை விசாரித்தபோது நான் மேலும் ஓராண்டு பணியாற்ற விரும்புவதை அவரிடம் தெரிவித்தேன். இவ்வாறாக இவ்விஷயம் தீர்மானிக்கப்பட்டு, எனக்கு ஓராண்டு பணி நீடிப்புக் கிடைத்தது. அந்த சமயத்தில் நான் ஒரு கனவு கண்டேன். சாயி பாபா யாருடனோ அமர்ந்திருக்கிறார். அவர் முன் நான் விழுந்து வணங்குகிறேன்.

பாபா: அந்த புத்தகங்கள் என்ன என அறிவாயா?
நான்: தெரியாது
பாபா: அவை உன் கணக்குகள், நான் அவற்றை பார்த்துக்கொண்டிருந்தேன்.
நான்: என் கணக்கா, பாபா?
பாபா: ஆம். இங்கே உள்ளன அவை. இங்கே பார். நெ.17, நெ.16க்குப் பின் வருமா?
நான்: நெ.16 முதலில் வரும், 17-க்குப் பின் அல்ல.
பாபா: அப்படியானால் உன் கணக்குகளில் 17-க்குப் பிறகு 16 வருவதெப்படி?
நான்: அது எப்படி சாத்தியம், பாபா?
பாபா: பாபா, பார். இதோ உன் கணக்கு.

அவர் கணக்குப் புத்தகத்தை தூக்கி எறிகிறார். அதைப் படித்ததில் அது என்னுடைய கணக்கு தான் என தெரியவந்தது. 'ஆம். பாபா. இதோ 17-க்குப் பின் 16 வருகிறது. அது எப்படி?' பின்னர் கனவைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன். முடிவுக்கு வந்தேன்.
-
ஸ்ரீ சாயி பாபாவின் பக்தர் அனுபவங்கள்.

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி


Posted: 30 Aug 2013 03:00 PM PDT
கவலைகளை மறந்து என்னிடம் வந்து உட்கார்.என்னையே தியானி, என்மீதே மனத்தை வை. நடக்கப்போவதை ஒருமித்த மனத்துடன் அமைதியாய் பார்த்துக்கொண்டிரு, வானம் உன்மீது விழுந்தாலும் கவலைப்படாதே, உன்னைக் காப்பாற்ற நான் இருக்கும்போது இந்த கவலை எதற்க்கு? கலங்குவதால் என்னிடமிருந்து நீ தூரமாகிறாய். என்மேல் நம்பிக்கை இருந்தால், என்னால் உனக்கு முடியாத காரியம் என்று எதுவுமே இருக்க முடியாது. - ஷிர்டி சாய்பாபா   
Posted: 31 Aug 2013 03:00 PM PDT
மனமும் புத்தியும் புலனுறுப்புகளும் உலக இன்பங்களைத் துய்க்க ஈர்க்கப்படும்போது முதலில் என்னை நினை.பிறகு அவற்றை அம்சம் அம்சமாக எனக்கு சமர்ப்பணம் செய்வாயாக.இவ்வுலகம் அழியும்வரை புலன்கள் அவற்றுக்குரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும்;இதைத் தடுக்க இயலாது.ஆனால்,அந் நாட்டங்களை என்னுடைய பாதங்களில் சமர்ப்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே வலுவிழந்துவிடும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 01 Sep 2013 03:00 PM PDT
காமம் எழும்போது என் விஷயமாக காமப்படு.கோபம் வரும்போது கோபத்தை என்மீது காட்டு.அபிமானத்தையும்  (தேஹத்தின் மீதுள்ள பிடிப்பையும்) துராகிருதத்தையும்(உரிமை இல்லாத இடத்து வலிய நிகழ்த்தும் செயலையும்)பக்தர்கள் என்னுடைய பாதங்களை நோக்கியே செலுத்தட்டும்.
காமம்,கோபம்,தேஹாபிமானம் போன்ற இயற்கையான உணர்ச்சிகள்  பொங்கியெழும்போது என்னைக் குறியாக ஆக்கி அவற்றை என்மீது ஏவுக.
நான்(பாபா) நிரந்தரமாகவே உன் அருகில் இருக்கிறேன் என்று உன் மனம் நம்ப ஆரம்பித்துவிட்ட பிறகு,உன் மனத்தின் வேகங்களும் தீவிரமான உணர்ச்சிகளும் தாமாகவே பலமிழந்துவிடும்.காலக்கிரமத்தில் வேருடன் அறுக்கப்படும்.மனம் வேகங்களிலிருந்து விடுபட்டுவிடும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 02 Sep 2013 04:00 PM PDT
பக்தர்கள் திட்டம் போடுகிறார்களே தவிர,எது நன்மை தரும் என்பது அவர்களுக்குத் தெரியாது.பாபாவுக்குத்தான் நடந்ததும் நடப்பதும் நடக்கப்போவதும் பக்தனுக்கு எது நன்மை தரும் என்பதும் தெரியும்.
தம்முடைய ஆசைகளை ஒருவர் தம் மனத்தின் அடி ஆழத்தில் இருக்கும் விருப்பத்தை சாயிபாதங்களில் பிரேமையுடன் நிவேதனம் செய்துவிட்டு பூரண விசுவாசத்துடன் பலனை எதிர்ப்பார்க்கும்பொழுது,சாயி அவரை நல்ல வழியிலேயே நடத்துகிறார்.அனன்னியமாக சரணாகதியடைந்த பக்தனை எந்தவிதமான ஆபத்தும் வாராமல் காப்பாற்றுவது அவருடைய விரதம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


ஷீரடி சாய்பாபாவின் அருளாசி


Posted: 26 Aug 2013 03:00 PM PDT
மனித ஆத்மாக்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந்தும், பல பிறவிகளிலிருந்தும் விடுபடுவதற்காக, அவர்களை தம் பக்கம் இழுத்து, உதவி செய்து, பண்படுத்தி, ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடையச்செய்வதே பரம சத்குருவான ஸ்ரீ சாயி நாதரின் முக்கியப் பணியாகும். 'ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா' புத்தகத்தில் பாபா அவர் முன்பிறவியைப்பற்றி பல கதைகள் கூறியிருக்கிறார். அவர் பரமாத்மாவாக இருப்பதால், எல்லா ஜீவாத்மாக்களின் முற்பிறவிகள் பற்றியும் அறிந்திருக்கிறார்.

"
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் என் பக்தர்கள் எவரேனும் ஒருவர் இறப்பை சந்திக்க நேரிடும்போது, அந்த ஆத்மாவை என்னிடம் இழுத்துக் கொள்ள முடியும். எல்லோரையும் பற்றி, எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன்". ஓர் உண்மையான பக்தனுக்கு, இப்படிப்பட்ட ஒரு சமர்த்த சத்குருவை பற்றிக்கொள்வதே அடிப்படையான மற்றும் இறுதியான தேவையாகும்.

ஆனால், சத்குரு ஒருவர் மட்டும்தான் இறப்பிற்குப் பிறகும் நம்முடனேயே வருகிறார். ஆகவே, அவரே நமது சிறந்த, நிலையான துணையாவார். நாம் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பு, பக்தி, நம்பிக்கை இவற்றை முழுமையாக அவர்பால் செலுத்தி அவரையே நாம் இறுகப் பற்றிக்கொள்வோம்.

இவ்வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் சுக துக்கங்கள்யாவும் அவருடைய கட்டுப்பாட்டிற்கும் வழிகாட்டுதலுக்கும் உட்பட்டே நடக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும். இத்தகைய அனுபவங்கள் ஆத்மாவை உய்விக்கத்தான் என்பதால் அவை தேவையானவை என்றும் நாம் உணர வேண்டும். இத்தகைய தீவிர நம்பிக்கையும், பொறுமையும் உடையவர்கள், இவற்றை சீக்கிரமே இழந்து விடும் மற்றவர்களை காட்டிலும், விரைவாக முன்னேற்றம் காண்பார்கள், பாபா உறுதியளிக்கிறார்: "ஒரு கஷ்டமான நிலைமையை சந்திக்கும் போது மனம் உடைந்து போக வேண்டாம். பொறுமையுடன் என்ன நடக்கிறது என்பதை கவனித்த வண்ணம் இருங்கள் ஏனெனில் என்னுடைய குழந்தைகளையும், பக்தர்களையும், எப்படியாவது காப்பாற்றுவதே என்னுடைய கடமையாகும்." இதைவிட சிறந்த உறுதி மொழியை வேறு எவரால் நமக்கு கொடுக்க முடியும்?  
Posted: 27 Aug 2013 03:00 PM PDT
பாபா தனது பக்தரிடம் கூறியது;
நான் உன்னுடனேயே(கண்ணுக்கு புலப்படாமல்) வருவேன்.கவலை வேண்டாம்.நான் உன் அருகிலேயே இருக்கிறேன்.தாளிடப்பட்ட கதவுகள் என் நுழைவை தடுத்துவிட முடியாது.நானே அங்கு உன் இல்லாளையும் உன்னையும் காத்துக் கொண்டு அமர்ந்துள்ளேன்.நீ எங்கிருப்பினும்,என்னை நினை.நான் உன் பக்கத்தில் இருப்பேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
சாந்தி அளிப்பார்
Posted: 28 Aug 2013 03:00 PM PDT

வேற்று மனிதர்களின் பேச்சு,அதனால் உமது நம்பிக்கை குலைந்தது எல்லாம் பாபாவின் லீலை.உலகம் என்ன பேசுகிறது அல்லது எத்தகைய துன்பம் அளிக்கிறது என்பது பற்றி யோசிக்காதீர்.பாபாவின் சரணங்களில் உமது உள்ளத்தை நிலைநிறுத்தும்,அப்போது பாபா உமக்கு சாந்தி அளிப்பார்."