Posted: 30 Aug 2013 03:00 PM PDT
கவலைகளை மறந்து என்னிடம் வந்து உட்கார்.என்னையே தியானி, என்மீதே மனத்தை வை. நடக்கப்போவதை ஒருமித்த மனத்துடன் அமைதியாய் பார்த்துக்கொண்டிரு, வானம் உன்மீது விழுந்தாலும் கவலைப்படாதே, உன்னைக் காப்பாற்ற நான் இருக்கும்போது இந்த கவலை எதற்க்கு? கலங்குவதால் என்னிடமிருந்து நீ தூரமாகிறாய். என்மேல் நம்பிக்கை இருந்தால், என்னால் உனக்கு முடியாத காரியம் என்று எதுவுமே இருக்க முடியாது. - ஷிர்டி சாய்பாபா
Posted: 31 Aug 2013 03:00 PM PDT
மனமும் புத்தியும் புலனுறுப்புகளும் உலக இன்பங்களைத் துய்க்க ஈர்க்கப்படும்போது முதலில் என்னை நினை.பிறகு அவற்றை அம்சம் அம்சமாக எனக்கு சமர்ப்பணம் செய்வாயாக.இவ்வுலகம் அழியும்வரை புலன்கள் அவற்றுக்குரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும்;இதைத் தடுக்க இயலாது.ஆனால்,அந் நாட்டங்களை என்னுடைய பாதங்களில் சமர்ப்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே வலுவிழந்துவிடும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 01 Sep 2013 03:00 PM PDT
காமம் எழும்போது என் விஷயமாக காமப்படு.கோபம் வரும்போது கோபத்தை என்மீது காட்டு.அபிமானத்தையும் (தேஹத்தின் மீதுள்ள பிடிப்பையும்) துராகிருதத்தையும்(உரிமை இல்லாத இடத்து வலிய நிகழ்த்தும் செயலையும்)பக்தர்கள் என்னுடைய பாதங்களை நோக்கியே செலுத்தட்டும்.
காமம்,கோபம்,தேஹாபிமானம் போன்ற இயற்கையான உணர்ச்சிகள் பொங்கியெழும்போது என்னைக் குறியாக ஆக்கி அவற்றை என்மீது ஏவுக.
நான்(பாபா) நிரந்தரமாகவே உன் அருகில் இருக்கிறேன் என்று உன் மனம் நம்ப ஆரம்பித்துவிட்ட பிறகு,உன் மனத்தின் வேகங்களும் தீவிரமான உணர்ச்சிகளும் தாமாகவே பலமிழந்துவிடும்.காலக்கிரமத்தில் வேருடன் அறுக்கப்படும்.மனம் வேகங்களிலிருந்து விடுபட்டுவிடும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

Posted: 02 Sep 2013 04:00 PM PDT
பக்தர்கள் திட்டம் போடுகிறார்களே தவிர,எது நன்மை தரும் என்பது அவர்களுக்குத் தெரியாது.பாபாவுக்குத்தான் நடந்ததும் நடப்பதும் நடக்கப்போவதும் பக்தனுக்கு எது நன்மை தரும் என்பதும் தெரியும்.
தம்முடைய ஆசைகளை ஒருவர் தம் மனத்தின் அடி ஆழத்தில் இருக்கும் விருப்பத்தை சாயிபாதங்களில் பிரேமையுடன் நிவேதனம் செய்துவிட்டு பூரண விசுவாசத்துடன் பலனை எதிர்ப்பார்க்கும்பொழுது,சாயி அவரை நல்ல வழியிலேயே நடத்துகிறார்.அனன்னியமாக சரணாகதியடைந்த பக்தனை எந்தவிதமான ஆபத்தும் வாராமல் காப்பாற்றுவது அவருடைய விரதம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment