Sunday, July 7, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 27/2013)


கவலைப்படாதே
Posted: 30 Jun 2013 11:14 PM PDT
கடவுள் நம்மை வைத்திருக்கும் நிலையில் நாம் திருப்தியடைவோம்;நம் சங்கல்பங்களை அவருடைய சங்கல்பத்திற்க்கு   அர்ப்பணிப்போம்.கிடைப்பதை ஏற்றுக்கொள்.திருப்தியுடனும்,மகிழ்ச்சியுடனும் இரு.ஒருபோதும்
கவலைப்படாதே.அவருடைய ஒப்புதல்,சங்கல்பம் இன்றி ஓரணுவும் அசையாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 02 Jul 2013 03:00 PM PDT
புரந்தரே என்ற பக்தர் : தாங்கள்(பாபா) ஏன் இவ்வளவு பணம் தக்ஷிணையாக  கேட்கிறீர்கள்?

பாபா: நான் எல்லோரிடமும் கேட்பதில்லை.ஆண்டவன் யாரை குறிப்பிட்டு காட்டுகிறாரோ அவரிடமிருந்து மட்டுமே கேட்கிறேன்.ஆனால் பதிலுக்கு,நான் பெற்றுக் கொண்ட தொகையைப் போல் பத்து மடங்கு அந்த நபருக்கு நான் கொடுக்க வேண்டியதாகிறது.எனது சொந்த உபயோகத்துக்காக நான் பணம் பெறுவதில்லை.எனக்கு குடும்பம் எதுவும் கிடையாது.

ஒவ்வொரு தினமும் காலையில் பாபா கையில் ஒன்றுமே இல்லாத எளிய பகீர்;பகல் முழுவதும் தக்ஷிணைகள் குவியும்.மாலை அல்லது இரவில் சேர்ந்த தொகை முழுவதும் பட்டுவாடா செய்து விடப்பட்டுவிடும்.பாபா மறைந்த போது சுமார் பத்து ஆண்டுகள் ஒரு கவர்னருடைய வருமானத்துக்கு சமமான தக்ஷிணையைப் பெற்று வந்த போதும்,அவர் கையில் எஞ்சி இருந்தது ரூ.16 மட்டுமே.பாபா ரூபாய்களை தூசாக மதிப்பவர்.அவர் விரும்புவது உங்கள் மனமும் இதயமும்,உங்கள் நேரமும் ஆன்மாவும் அவரிடம் ஈடுபடுத்தபட வேண்டுமென்பது
Posted: 03 Jul 2013 03:00 PM PDT
என்னிடம் திட விசுவாசம் கொண்ட எவருடைய தேவையும் கிட்டாமற் போகாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாமட்டுமே.

Posted: 04 Jul 2013 03:00 PM PDT
இறைவனை நினை;நானெனும் மமதையை கொன்று விடு.காமத்தை வெல்லாத ஒருவனால் இறைவனைக் காண முடியாது;அதாவது இறையனுபவம் பெற முடியாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
Posted: 05 Jul 2013 03:00 PM PDT

பக்தர் : பாபா நீண்ட நாட்களாக அடியேன் ஒருமைப் பாடான நிலைத்த மனத்துடன் தங்களுக்கு சேவை செய்து வருகிறேன்.அதற்கான பலன் கிட்டிவிட்டது என்பதை நான் எப்படி உணர முடியும்?

பாபா:நம்மிருவருடைய உள்ளங்களையுமே மகிழ்விக்கக் கூடிய உன் சேவையின் பலன் எப்போதெனில்,நீ ஒரு கப்னி அணிந்து,பிக்ஷையின் மூலம் உண்ண ஆரம்பிக்கும்போது(அதாவது நானே நீ என்ற உணர்வு பெற்று பற்றுக்களையும் துறக்கும் போது).
Posted: 06 Jul 2013 03:00 PM PDT
வரவேற்றாலும்,முகத்தைத் திருப்பிக்கொண்டாலும்,நடப்பது நடந்தே தீரும்.பாபாவுடனான நமது தொடர்பு மட்டுமே நம்மை இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பால் கொண்டு செல்ல முடியும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.(ஸ்ரீ சாயி இராமாயணம் )

No comments:

Post a Comment