Tuesday, January 1, 2013

வட இந்தியாவில் இருந்து பசுக்களை கொண்டு வருவது என்?


          வட இந்தியாவில் கிடைக்கும் நாட்டு பசுக்களே சாஸ்த்திரத்தில் உரைத்த தெய்வீகமான பசு வகையாகும். பாற்கடல் அமிர்தம் கடையும் நேரம் வெளியான நந்தா,சுபத்ரா,சுரபி,சுசீலா,பகுளா என்ற 5 வகை தெய்வீக தன்மையுடைய புனித பசுக்களே இப்புவி மக்களின் நன்மைக்காக தோன்றியவை.தேவர்கள் இந்த 5 வகை பசுக்களையும் ஜமதாக்னி, பரத்வாஜர்,வசிஷ்டர்,அசிதா,கெளதமா போன்ற முனிவர்களுக்கு வழங்கினர் இந்த வகை பசுக்கள் மக்களின் அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்யும் தன்மையுடையது என்வே நாம் பசுக்களை காமதேனு என்று அழைக்கிறோம் ( பவிஷ்யபுராணம் உத்ரபர்வா 69 அத்தியாயம்த்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணா யுதிஷ்ட்ரரிடம் உரைக்கிறார் மேலும் பசுக்களில் நான், சுரபி என்று பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்
எவனொருவன் பசுவையும் எள்ளையும் நியம விதிகளின் படி தகுதியான அந்தணருக்கு தானமாக வழங்குகிறானோ அவன் வினைகளின் பலனான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதில்லை
பால் பசுவை தானம் செய்யும் ஒருவன் எல்லாவிதமான ஆபத்திலிருந்தும் பாவ விளைவுகளிலிருந்தும் விடுதலை பெறுகின்றான் (காவோ உபநிஷத்)
”நமோ ப்ராமண்ய தேவாய கோ-பிராமன்ய கிதாய ச                        ஜெகதிதாய கிருஷ்ணாய கோவிந்தாய நமோ நமஹ “
Source :யாசகர் விபூஷண கிருஷ்ணதாஸ் Gorakshyam Trust

No comments:

Post a Comment