Wednesday, January 9, 2013

கால்நடைகள் :: மாடு வளர்ப்பு :: இனங்கள்


கறவை மாட்டு இனங்கள்

நம் இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் பலவகை கறவை மாட்டு இனங்கள் உள்ளன.
நம் (உள்) நாட்டு இனங்களைக் கீழ்க்கண்ட 3 முறைகளில் வகைப்படுத்தலாம்:
பால் உற்பத்திக்குரிய இனம்
இவ்வகை இனங்களில் பெண் மாடுகள் பாலுக்கு உண்டான மரபியல் குணாதிசயங்களை அதிக அளவில் பெற்று அதிக பால் உற்பத்தி செய்யும் திறனுள்ளது. ஆனால் ஆண் மாடுகளில் வேலைக்குரிய திறன் குறைந்தே காணப்படும். அதிக பால் உற்பத்தி செய்யும் இனங்களில் சில.. சாஹிவால், கிர், சிகப்பு, சிந்தி மற்றும் தியோனி. இம்மாடுகளின் சராசரி பால் உற்பத்தி ஆண்டு ஒன்றிற்கு 1600 கி.கிக்கும் அதிகமாக இருக்கும்.
வேலைக்குரிய இனங்கள்
இந்த இனங்களில் ஆண் மாடுகள் மிக வலிமையானதாகவும் கடினமாக உழைக்கும் திறன் பெற்றதாக இருக்கும். பெண் மாடுகள் வருடத்திற்கு 500 கி. கிராமற்குக் குறைவாகவே பால்தரும். இவ்வகை எருதுகள் நல்ல எடையும் அதன் எடையை விட இருமடங்கு எடையை இழுக்கும் திறன் கொண்டதாக இருக்கும். மணிக்கு 5 லிருந்து 7கி.மீ வரை செல்லுக்கூடியவை. அதற்கு எடுத்துக்காட்டுகளாவன காங்கேயம், உம்பளாச்சேரி, ஹல்லிகர் மற்றும் அம்ரிட்மஹால்.
Pulling bull
வண்டி இழுக்கும் எருதுகள்

Ploughing bull
ஏர் உழும் எருதுகள்
இரண்டிற்கும் பயன்படும் இனங்கள்
இவ்வகை இனங்களில் பசுவும் மிகுந்த பால் தரக்கூடியதாக இருக்கும். எருதும் நல்ல வேலைத்திறன் மிக்கதாக இருக்கும். எ.கா. ஹரியானா, தர்பார்கார் மற்றும் கன்கிராஜ்.

ஹரியானா
  • இது பெரும்பாலும் ஹரியானாவின் கர்னல், ஹிசார் மற்றும் கர்கியான மாவட்டங்களிலும், டெல்லி, மேற்கு மத்தியப்பிரதேசத்திலும் காணப்படும்
  • 1140 - 4500 கி.கிராம் வரை பால் தரக்கூடியது
  • ஆண் மாடுகளும் ஏர் உழுவதிலும் வண்டி இழுப்பதிலும் திறம் படைத்தவை.
hariyana breed
ஹரியானா
தர்பார்கார்
  • ஜோத்பூர், கட்ச் மற்றும் ஜெய்சல்மாரில் காணப்படுகிறது
  • சாதாரண நிலையில் 1660 கி.கி மும், நல்ல பராமரிப்பில் 2500 கி.கிமும் பால் தரக்கூடியது
tharbarkar breed
தர்பார்கார்
கான்கிரேஜ்
  • இவ்வினம் குஜராத்தில் காணப்படுகிறது
  • பால் உற்பத்தி 1300 கி.கிலிருந்து 3600 கி.கி வரை தரக்கூடியது
  • முதல்கன்று 36 லிருந்து 42 வது மாதத்தில் ஈனும்
  • கன்று ஈனும் இடைவெளி 15-16 மாதங்கள்
  • எருதுகள் வேகமாகச் செல்லக்கூடியது. உழவுக்கு ஏற்ற வலிமையான இனங்களாகும்
Kackraj breed
கான்கிரேஜ்
வேலைக்குரிய இனங்களாவன

காங்கேயம்
    • தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தாராபுரம் மாவட்டத்திலுள்ள காங்கேயத்தில் தோன்றயது
    • ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, கரூர், திண்டுக்கல், போன்ற பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது
    • உழுவதற்கும், வண்டி இழுக்கவும் மிகவும் ஏற்ற இனம் இது எதற்கு வறட்சியையும் தாங்கி வாழக்கூடியது
Kangayam
காங்கேயம்
ஹல்லிகர்
  • கர்நாடகாவின் டும்குரி, ஹஸ்ஸான் மற்றும் மைசூர் பகுதிகளில் காணப்படுகிறது
  • ஆண் மாடுகள் மிக வலிமையாகவும், விரைவாக நடக்கக் கூடியதாக இருக்கும்
hallikar_breed
ஹல்லிகர்
அமிர்த்மஹால்
  • இதுவும் கர்நாடகத்தில் காணப்படும் இனமாகும்
  • எருதுகள் நன்கு இழுக்கவும், உழைக்கவும் திறன் பெற்றதாக இருக்கும்
amritmahal breed
அமிர்த்மஹால்
பால் உற்பத்தி இனங்கள்

சிவப்பு சிந்தி
    • பாகிஸ்தானைச் சேர்ந்த சிந்து மாநிலத்தில் தோன்றிய இனம் இது
    • இவ்வினம் பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஒரிசாவில் காணப்படுகிறது
    • நல்ல பராமரிப்பில் இந்த இனம் 1700 கி.கிலிருந்து 3400 கி.கி வரை பால் தரக்கூடியது
red sindhi_breed
சிவப்பு சிந்தி
சாஹிவால்
  • இந்த இனமும் பாகிஸ்தானைச் சேர்ந்த மாண்டோ கோமாரி என்ற இடத்தில் தோன்றியது
  • முக்கியமாக பஞ்சாப், ஹரியானா, உ.பி, டெல்லி, பீஹார் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் காணப்படுகிறது
  • பால் அளவு 1350 கி.கி சாதாரணசூழலில்
  • நல்ல பராமரிப்பில் 2100 கி.கி பால் தரக்கூடியது
  • முதல் கன்று ஈனும் வயது 30-36 மாதம் வரை
  • கன்று ஈனும் இடைவெளி
sahiwal_breed
சாஹிவால்
கிர்
  • இந்த இனம் குஜராத் மாநிலத்திலுள்ள கத்தியவார் எனும் இடத்திற்கு அருகேயுள்ள கிர் காடுகளில் தோன்றியது
  • இது சாதாரண கழராமச் சூழலில் 900 கி.கிமும்
  • நன்கு பராமரித்தால் 1600 கி.கி வரையிலும் பால் கறக்கக் கூடியது
  • தியோனி:
  • ஆந்திரப்பிரதேசத்தின் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் காணப்படுகிறது
  • பசுக்கள் நல்ல அளவு பால் தரும், அதேபோல் எருதுகளும் வேலைகளுக்கு ஏற்றவை
gir_breed
கிர்

அயல்நாட்டு இனங்கள்

ஜெர்ஸி


தோற்றம்:
 இங்கிலாந்து நாட்டின் ஜெர்ஸி தீவில் தோன்றியது.

சிறப்பியல்புகள்
  • இது செம்மை கலந்த கருமை நிறத்தினை உடையது சில மாடுகளில் வெண் புள்ளிகள் காணப்படும் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படுகிறது
  • முதல் கன்று ஈனும் வயது 26-30 மாதங்கள்
  • கன்று இடைவெளி 13-14 மாதங்கள்
  • பால் உற்பத்தி 5000-8000கி.கி
  • தூய இனம் நாளொன்றுக்கு 20 லிட்டரும் கலப்பு இன பசுக்கள் 8லிருந்து 10லி வரை கறக்கக் கூடியது
Jersi_breed
ஜெர்ஸி
ஹால்ஸ்டீன் பிரீசியன்

தோற்றம்:
 இது ஹாலாந்து நாட்டின் வட பகுதியில் தோன்றியது.

சிறப்பியல்புகள்:
  • இவ்வினம் வெண்மை மற்றும் கருமை கலந்தோ அல்லது வெண்ணிறத்துடன் செம்மை கலந்தோ காணப்படும்
  • இதன் 15வது மாதத்தில் இனவிருத்தி செய்யப்படுகிறது
  • அயல் நாட்டு இனங்களில் மிகவும் பெரியது. இதன் பால் உற்பத்தி 7200-9000கி.கி வரை
  • இந்த இனம் மற்ற இனங்களை விட அதிக பால் உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை. தூய இனம் நாளொன்றுக்கு 25 லிட்டரும் கலப்பினமாக இருந்தால் 10 லிருந்து 15 லிடடர் வரை தரக்கூடியது
  • கடலோர மற்றும் டெல்டா பகுதிகள் இவ்வினத்திற்கு ஏற்றவை
holstein freisen
ஹால்ஸ்டீன் பிரீசியன்
கலப்பு இன விருத்தம்

வெவ்வேறு இனத்தைச் சார்ந்த மாடுகளை இனைத்துச் செய்லதே கலப்பு இன விருத்தம் ஆகும். இந்த இனவிருத்தியானது பால் மற்றும் மாமிச உற்பத்தியை அதிகரிக்கச் செய்யப் பயன்படுகிறது. இந்தியாவில் செபு இனக் கறவை மாடுகள் மற்றும் சில மாடுகள் சில அயல்நாட்டு இனங்களான ஹால்ஸ்டீன் பிரீசியன், பிரெளன் ஸ்விஸ் மற்றும் ஜெர்ஸி காளைகளையோ அல்லது அவற்றின் விந்தினையோ பயன்படுத்தி பால் உற்பத்தி அதிகரிக்கச் செய்யப்படுகிறது.

பயன்கள்
  • நமக்குத் தேவையான பண்புகள் மற்ற இன மாடுகளிலிருந்து நம்நாட்டு கன்றுகளுக்கு கடத்தப்படுகிறது
  • எடுத்துக்காட்டாக அயல்நாட்டு இனங்களுடன் நம்நாட்டு இனங்களை விருத்திசெய்யும்போது பிறக்கும் கன்றுகளில் அயல்நாட்டு பண்புகளான் அதிக பால் உற்பத்தி, நல்ல எடை, அதிக வளர்ச்சித் திறன். அதிக இனவிருத்திப் பண்பு போன்றவை இருப்பதோடு நம் நாட்டு பண்புகளான வறட்சியைத் தாங்கும் சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவையும் இருக்கின்றன.
  • கலப்பு இனவிருத்திக் கன்றுகளில் வளர்ச்சி அதிகம் எனவே நாம் சீக்கிரம் பலனை அடைய முடியும்
  • தேவையான பண்புள்ள இனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து இனவிருத்தி செய்து கொள்ளலாம்
தீமைகள்
  • நாம் எதிர்பாராத நன்மைகள் கிடைக்காமலும் போகலாம் (அ) குறைவாகக் கிடைக்கலாம்
  • கலப்பு இன விருத்தத்திற்காக இரண்டு அல்லது சில இனங்களுக்கு தனி கவனம் அவசியம்
இனவிருத்திக்கான இனங்கள்
அயல்நாட்டு இனங்களான ஜெர்ஸி, ஹால்ஸ்டீன் பிரீசியன், பிரெளன் ஸ்விஸ் போன்ற இனங்களையோ அல்லது இவற்றின் கல்பினத்தையோ இனவிருத்திக்குப் பயன்படுத்தலாம். ஜெர்ஸி இனம் கொழுப்புச் சத்துள்ள பாலுக்காவும், ஹால்ஸ்டீன் இனம் அதிக அளவு பால் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் இனவிருத்திக்குப் பயன்படுத்தப்படும் இனங்கள்
வ.எண்இனத்தின் பெயர்தோற்றம்காண்ப்படும் இடங்கள்பயன்படுத்தப்படும் இடங்கள்பயன்பாடு
1.பிரெளன் ஸ்விஸ்சுவிட்சர்லாந்து-இந்தியா, பாகிஸ்தான், மற்றும் பிற ஆசிய நாடுகள்கறவை இனம்ாக
2.ஹால்ஸ்டீன் பிரீசியன்ஹாலந்துவடக்கு ஹாலந்து மேற்கு - பிரிஸ்டேன்ட்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும்கறவை இனம்ாக
3.ஜெர்ஸிஃபிரிட்டிஷ் தீவுகள்ஜெர்ஸியத் தீவுகள்எல்லா மாநிலங்ளிலும்கறவை இனம்ாக
(ஆதாரம்: தேசிய கால்நடை மேம்பாட்டுக்கழகம்.)

இந்தியாவின் கால்நடை இனங்கள்
வ.எண்இனம்இருப்பிடம்காணப்படும் இடங்கள்பரவியுள்ள இடங்கள்தேவையுள்ள இடங்கள்பயன்பாடு
1.ஹல்லிகர்கர்நாடகாடும்குர், ஹஸ்ஸான், மைசூர்டோட் பாலாபூர் ஹரிகார், தேவர்குடா, சிக்ரகுவல்லி, கருவல்லி, சிட்டவட்கி (த.நா.வடக்கு ஏற்காடு, ஹின்டுபூர் சோமகட்டா, ஆனந்த்பூர், ஆந்திரப்பிரதேசம்தர்வார், வட கனரா, பெல்லாரி, ஆனந்பூர், சித்தூர், (ஆ.பி), கோவை, வட ஏற்காடு, சேலம் (த.நா.)வேலைத் திறனுக்காக (எருது)
2.காங்கேயம்தமிழ்நாடுகோயம்புத்தூர், ஈரோடு (தமிழ்நாடு)அவினாசி, திருப்பூர், கன்னாரம், மதுரை ஈரோடு, ஆத்திக்கொம்புதமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள்வேலை (எருது)
3.சிவப்பு சிந்திபாகிஸ்தான், மற்றும் இந்தியா---கறவை மாடு
4.தர்பார்கர்பாகிஸ்தான் (சிந்து)உமர்கோட், நாகேர்ட் தோரோ நாரோ சோர்பலோட்ரா, (ஜோத்பூர்), புஸ்கர் (அஜ்மர்), குஜராத் மாநிலம்-கறவை மாடு
5.வேச்சர்கேரளாவைக்கோம், மண்ணுசக்தி (கேரளா)---

(ஆதாரம்: தேசிய கால்நடை மேம்பாட்டுக் கழகம்)


No comments:

Post a Comment