Wednesday, January 9, 2013

கோ தானம்


கோ தானம் 



வணக்கம் நண்பர்களே !

                                          என்னிடம் ஒரு நண்பர் இன்று காலையில் தொடர்புக்கொண்டு பேசினார் அப்பொழுது அவர் நீங்கள் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வாக ஒரு பரிகாரத்தை சொல்லுங்கள் என்று கேட்டார் அவரிடம் சொன்னதை உங்களுக்கும் சொல்லுகிறேன் உங்களால் முடிந்தால் வாழ்க்கையில் ஒரு தடவையாவது இதனை செய்யுங்கள்.

நமக்கு வரும் இன்னல்கள் முக்கால்வாசி நமது முன்ஜென்ம வினையில் இருந்து தான் வருகிறது அதனையும் தீர்க்க வேண்டும் அதே போல் இந்த ஜென்மத்திலும் அறிந்து மற்றும் அறியாத செய்த பாவத்தில் இருந்து நம்மை விடுவித்து நாம் நல்ல நிலையை அடையவேண்டும். 

தானம் அளிப்பது தான் சிறந்த வழி. தானங்களில் பல வகை தானங்கள் இருக்கின்றன இப்படி பலவகை தானங்கள் இருந்தாலும் கோ தானத்திற்க்கு ஈடு இணையாக வேறு எந்த தானமும் இருக்கமுடியாது. 

கோ தானம் செய்தால் நம் முன்னோர்களை மோட்சத்திற்க்கு அனுப்புவதாக சொல்லியுள்ளார்கள் அவ்வாறு தானம் செய்யும் போது நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கிறது. சோதிடத்தில் ஏற்பட்ட எப்பேர்பட்ட தோஷமும் இதனால் கரையும். பசுவை தானம் செய்யும் போது அதனை நன்கு பராமரிப்பவர்களாக பார்த்து தானம் செய்யவேண்டும் ஒரு வருட காலத்திற்க்கு தேவையான பராமரிப்பு செலவு மற்றும் உணவை அதை பெறுபவர்களிடம் நீங்கள் கொடுத்தால் இன்னும் வெகுசிறப்பு.

அன்னதானம் மற்றும் வேறுவகை தானமாக இருந்தால் இல்லாதவர்களுக்கு நீங்கள் கொடுக்கலாம் ஆனால் நீங்கள் பசு தானம் செய்தால் அவர்களுக்கு அதை பராமரிக்க சக்தி அவர்களுக்கு இருக்கிறதா என்று பார்த்து தானம் செய்யவேண்டும்.

நம்ம ஆட்கள் எந்த ஒரு செயலிலும் வித்தியாசமாக திறமையாக இருப்பார்கள் பசு தானம் என்று சொன்னவுடன் வயதான அல்லது பால் கறவை இல்லாத அல்லது கன்று இல்லாத பசுவாக வாங்கி கொடுத்துவிடுவார்கள் அவ்வாறு செய்வது தவறு. பசு தானம் செய்ய என்று முடிவு எடுத்துவிட்டால் நல்ல பசுவாக கன்றுடன் கூடிய பசுவை தானம் செய்யவேண்டும்.

பசுவை தானம் செய்தால் ஒருவர் தனது முன் ஏழு பின் ஏழு தலைமுறையினர் மோட்சத்திற்க்கு போக வழி செய்கிறார் நாம் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது.

என்ன நண்பர்களே நீங்களும் கோ தானம் செய்து நல்ல பயனை பெறுங்கள். நன்றி நண்பர்களே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு   Source.http://astrovanakam.blogspot.in/2012/11/blog-post_25.html

Thanks to ராஜேஷ்சுப்பு  


No comments:

Post a Comment