Monday, January 14, 2013

பால்வள தொழில்நுட்ப படிப்பு


இந்தியாவின் முக்கிய தொழிலாக பால்வளதுறை விளங்குகிறது. பால் தொடர்புடைய பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு உள் மற்றும் வெளி நாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. பால் பொருட்கள் தயாரிப்பில் இந்தியா சிறந்த இடத்தை வகுக்கின்றது.  
பாலின் மூலம் பல்வேறு உணவு பொருட்கள் தயாரிக்கப்படுவதால், அதற்கு அடிப்படையாக விளங்கும் பசுக்களை நல்ல முறையில் பராமரித்து அதற்கு தேவைபடும் சத்தான ஆகாரங்களை சரியான முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. பதப்படுத்தும் பணியில் பாலை நுகர்வோர் பயன்படுத்தும் விதத்தில் அதை மாற்றுவது, தயிர், வெண்ணெய் போன்ற பொருட்களாக மாற்றும் பணிகளும் உள்ளன. பல்வேறு இடங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலானது தொழிற்சாலையை அடைந்தபின் பால் மற்றும் பால் பொருட்களாக பதப்படுத்தப் படுகிறது. இதற்கு டெய்ரி டெக்னாலஜிஸ்டுகள் எனப்படும் தொழில் நுட்ப வல்லுனர்கள் பணியில் நியமிக்கப்படுகிறார்கள். தொழில்நுட்பம் மற்றும் தரக்கட்டுப்பாடு போன்ற பணிகளை இவர்கள் செய்கிறார்கள். பதப்படுத்தும் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குதல், கொள்முதல் செய்யப்பட்ட பாலை முழுவதுமாக பதப்படுத்துவது போன்ற கூடுதல் பணிகளை இவர்களே செய்கிறார்கள்.
பால்வளத்துறையை முறையாக நடத்த இதற்கென படிப்புகள் வழங்கப்படுகிறது. இது துவக்கத்தில் பால்வளத் தொழில்நுட்பம் என்பது வெடினரி சயின்சின் ஒரு பகுதியாக மட்டுமே இருந்து வந்தது. இத்துறையின் முக்கியத்துவம் அறிந்து பல கல்வி நிறுவனங்களில் இது தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகிறது. இப்படிப்புகளில் முறைப்படுத்தல், உறையிடுதல், சேமித்தல், பரவல், சந்தைப்படுத்தல், வெண்ணெய், நெய், கோவா, பாலாடைக்கட்டி போன்றவற்றை தயாரித்தல் போன்றவற்றை செய்யும் விதத்தை முறையாக கற்று கொடுக்கப் படுகின்றது. இத்துறையில் டிப்ளமோ, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு படிக்க விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவிலோ அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது விவசாயப் பாடப்பிரிவில் பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துறையில் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவில் பால்வளத் துறை படிப்புகள் வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
* College of Veterinary Science, Andra Pradesh
* Sanjay Gandhi Institute of Dairy Technology
* Indira Gandhi Krishi Vishwavidyalaya, Chattisgarh
* Seth MC College of Dairy Science. Gujrat
* National Dairy Research Institute, Haryana
* University of Agricultural Sciences, Karnataka
* College of Dairy Technology, Madhya Pradesh
* Maharana Pratap University of Agriculture & Technology, Rajasthan
* College of Dairy Science, Rajasthan
நன்றி தினமணி நாள் இதழ் dated 14/1/2013
* Faculty of Veterinary Science and Animal Science, West Bengal

No comments:

Post a Comment