நடமாடும் மருந்தகம்
பசு…! நம் நாட்டில் பசுவை தெய்வமாக போற்றுகிறோம். இன்று பசும்பாலினால் தான், உலகில் பல கோடி குழந்தைகள் உயிர் வாழுகின்றன.பசுவில் இருந்து கிடைக்கும் பால், தயிர், வெண்ணெய், நெய் மட்டும் நமக்கு உபயோகமாக இருப்பதில்லை. அதில் இருந்து நமக்கு கிடைக்கும் கோமியம்,சாணம் போன்ற அனைத்தும் உபயோகமாக உள்ளது.ஆகவே பசு நான்கு காலில் நடமாடும் ‘மருந்தகம்’ ஆக நமக்கு செயல்படுகிறது. நாட்டுப்பசுவை ஒரு இயற்கை உரத்தொழிற்சாலையாகவே விவசாயிகள் கருதுகின்றனர்.
விவசாயத்துக்கு, ’பஞ்சகவ்யம்’ தயாரிப்பதோடு மட்டுமின்றி, நாட்டு பசுவின் கோமியம், சாணம் ஆகியவற்றில் பல்வேறு மருத்துவ குணமும் அடங்கி உள்ளன. பல்வேறு உடல் உபாதைகளுக்கு தீர்வளிக்கும் மருத்துவ குணமுள்ள பொருட்கள், பசுவின் கோமியம், சாணம் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.இவை சந்தையில் நல்ல வரவேற்பை பெற துவங்கியுள்ளன.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில், நாட்டுப் பசுக்களை வைத்து கோ-சாலை நடத்துகின்றனர். கோ-சாலையில் இருந்து பெறப்படும் மாடுகளின் கோமியம், சாணத்தை கச்சாப் பொருட்களாக கொண்டு, காய்ச்சி வடிக்கப்பட்ட கோமியம் (அர்க்), குளியல் சோப்பு, விபூதி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, ஷாம்பு, ஹேர் ஆயில், பினாயில், உள்ளிட்ட ஏராளமான மருந்து மற்றும் நுகர் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இக்கால பிஸ்கட்டுகள், உணவு வகைகளுக்குப் பாலாடை அழகு தரும் பொருளாகவும், முக அழகுக்குப் பூசும் பொருளாகவும் பயன்படுகிறது. வெண்ணை பசும் பாலிருந்து எடுக்கப்படும் இப்பொருள் உடல் அழகுக்கும் புரதச்சத்து மிகுந்திடவும் பயனாகிறது.
பல்வேறு பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் அற்புதமான இப்பொருட்கள் குறித்து போதுமான விழிப்புணர்வு விவசாயிகள், மக்களிடையே ஏற்பட்டு வருகிறது. இது ஆரோக்கியமானதொரு முன்னேற்றமாகும்.
ஆனால், தற்போது பூமி வெப்ப மையமாகுதல், மழை இல்லாத வறட்சியின் காரணமாக விவசாய நிலங்கள் அனைத்தும் விலை நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றது. ஆதலால் கால்நடைகளுக்கு போதிய தீவனம், மேய்ச்சல் நிலம் போன்றவை போதிய அளவு கிடைக்காத நிலை உள்ளது. ஆதலால் கால்நடைகளின் வளர்ப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.
ஆதலால், நாம் சுற்றுச் சூழலை பாதுகாத்து பூமி வெப்ப மையமாகுதலை தடுப்போம். இதன் மூலம் மழை வறத்து பெருகி விவசாயம் செழிக்கும். அதேபோல் விவசாயிகளிடமும், ‘பஞ்சகவ்யம்’ பற்றியும், பசுக்களின் பயன்களை பற்றியும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நம் அரிய பொக்கிசமாம் பசுவின் எண்ணிக்கை விகித்ததை கணிசமாக உயர்த்த முடியும்.
Source: http://tk.makkalsanthai.com/2013/01/blog-post_20.html?showComment=1358741109008
Read more at http://tk.makkalsanthai.com/2013/01/blog-post_20.html#dLSFVfcA1rt41BU8.99
No comments:
Post a Comment