பரமாச்சார்ய மஹா ஸ்வாமிகள்
ஜெகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி அருளிய
“தசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்”
ஜெகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி அருளிய
“தசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்”
1. நம் வாழ்க்கை முறையில் நடை உடை பாவனைகளில் அவரவர் குல ஆச்சாரத்திற்கேற்ப நடந்து கொள்வது.
2. அவரவர் குல ஆச்சாரப்படி செய்ய வேண்டிய, நித்திய விதிமுறைகளை (கர்மானுஷ்டானங்களை) முறை தவறாது செய்தல் வேண்டும். அது குறித்த விழிப்புணர்வினை இளைஞர்களிடையே ஏற்படுத்த வேண்டும். நமது நித்திய விதிமுறைகள் (கர்மானுஷ்டானங்கள்) மற்றும் நமது வைதீகக் காரியங்களின் (உபநயனம், திருமணம், நீத்தார் கடன் போன்ற
செயல்களின்) பொருள் உணரச் செய்தல்)
3. பசு மாடுகளைக் காப்பது. (கோ சம்ரக்க்ஷணம் – கோசாலை அமைத்தல், கோபூஜை செய்தல் முதலானவை).
4. வேதம் ஓதுவது மற்றும் ஓதுவதற்கு உதவுவது. (வேத அத்யயனம், வேத அத்யாபனம்). ஆடவர்களுக்கு வேதம்/ருத்ரம் முதலியன கற்பித்தல், குழந்தைகளுக்கும் மகளிருக்கும் சமுஸ்கிருத தமிழ் ஸ்லோக வகுப்புக்களை ஏற்படுத்துவது.
5. பிடி அரிசித் திட்டம்
6. புறக்கணிக்கப்பட்ட சிதிலமடைந்த இறை வழிபாட்டுத்தலங்களை சரி செய்து பராமரிப்பது (உ-ம் பகவத் கைங்கர்யம், உழவாரப்படை திருப்பணி, சிதிலம் அடைந்த கோயில்களைப் சரி செய்வது போன்றவை). அவ்வாலயங்களில் இறை வழிபாடுகள் முறையாக நடக்க வழிவகைகள் செய்வது. நமது சிவ விஷ்ணு ஆலையத்திலேயே நித்தியமும் செய்யப்படும் ஆலையப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம்.
7. சாதி மத பேதமின்றி அநாதைப் பிணங்களுக்கான இறுதிக் கடன்களைச் செய்வது ( அநாதப் பிரேத ஸ்மஸ்காரங்கள்) உத்ரக்கிரையை நடத்த தக்க வசதிகளை உண்டாக்குவது.
8. எளிமையான முறையில், முறையான வைதீகக் காரியங்களை விட்டுக் கொடுக்காமல், சமஷ்டி உபநயனங்கள் மற்றும் திருமணங்களை நடத்துவது. நடத்த உதவுவது (ஜாதகப் பரிவர்த்தனை, ஐம்பொன் தாலி மற்றும் கூறைப் புடவை வாங்கித்தருவது முதலானவை)
9. இசை மூலம் இறையுணர்வை வளர்த்தல். இலவச இசை வகுப்புக்களை நடத்துவது.
10. அரசாங்க விதிமுறைகளை மீறாமல், பெண்களுக்குரிய திருமண வயது எனக் குறிப்பிட்ட வயதிலாவது திருமணம் செய்விப்பது. வரதட்சிணையை நேராகவோ, மறைமுகமாகவோ வாங்குவது/கொடுப்பது இவற்றைத் தவிர்த்தல். (ஆதாரம்: தெய்வத்தின் குரல்)
No comments:
Post a Comment