Thursday, January 31, 2013

பசுவின் பெருமை

வேறு எந்த விலங்கினத்திற்கும் கொடுக்காத பெருமையினை நாம் பசுக்குக் கொடுத்து கோமாதா என அழைத்து போற்றி வணங்கி வழிபடுகிறோம். கோமாதாவைத் தினமும் பூஜிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் யாருடனும் பேசாமல், பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால் மலடிக்கும் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். 

பசுவுக்கு உணவு கொடுத்த பின்னரே நாம் உண்ண வேண்டும். பாற்கடலில் இருந்து காமதேனு தோன்றினாள் அவளது சக்தி இருக்கும் உலகம் கோலோகம் எனப்படும். கிருஷ்ணன் அங்கு கோக்களுடனும் கோபியர்களுடனும் ஆனந்தமாக இருக்கிறார். காமதேணுவின் சந்ததியினரே பூமியின் பசுக்களாக இருக்கிறார்.


அதனை பால், நெய்னால் வேதமந்திரங்கள், கூறி வேதியர் யாகம் வளர்க்கின்றனர். யாகத்தினால் மழையும், மழையினால் உலக சுபிட்சமும் ஏற்படுகிறது. எனவேதான் "கோம்ராம்மணேப்ப சுபமஸ்து நித்யம்'' என்று கூறப்படுகின்றது. பகவான் கோப்ராம்மணாசுதர் எனப்படுகிறார். கோவின் பாதத்துளி நம் உடலில் பட்டால் வாநவியஸ்நானம் செய்த பலன் கிட்டும். கோதுளிபட்ட அன்னத்தைச் சாப்பிடாது தூக்கி எறிந்ததால் சிறந்த சன்னியாசியாகிய வைசிகன் சண்டாளனாகப் பிறந்தான் கோவுக்குப் பணிவிடை செய்து திலிப் மகாராஜன் ரகுவைப் பெற்றான்.


மிருகங்களில் பசு மட்டுமே தனக்கென வாழாத மிக உயர்ந்த பிறவியாகும். இது மனிதர்களுக்குப் பால் என்னும் சிறந்த சத்து பொருளை அளித்து மனிதன் உண்டபின் அவன் கழிவாக ஒதுக்கும் வைக்கோல், தவிடு, முதவியவைகளை மட்டுமே ஏற்கும் உயர்ந்த பண்பினை உடையது. பசுவின் பாலைப் போன்ற புனித பொருள் வேறு எதுவும் கிடையாது. இதனை நமக்கு வழங்கும் பசு நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை.


குணத்திலும் இதனைப்போன்ற சாந்த குணம் கொணட பிறவி கிடையாது. இதன் சீரிய பண்பினை உணர்ந்தே நம் முன்னோர் தனக்கென வாழாது பிறருக்கென்ன வாழும் தியாகப்பண்புடைய பசுவை வணங்கி, அப்பண்புகள் நமக்கு வரவேண்டும் என்று அதனை வணங்கி அத்தகு தியாகப் பண்பைப் பெற்றனர். தான் சார்ந்த சமூகத்திற்கு அனைத்தையும் கொடுத்துவிட்டு தனக்கென எதையும் பெற விரும்பாத உயர்ந்த பண்பைப் பெற்றனர். இதனாலேயே கோபூஜை செய்தனர்.


அதிதி இல்லாத நாளில் பசுவுக்கு அன்னம் வேண்டும். கோதானத்தை விடச் சிறந்த தானம் எதுவும் கிடையாது. எனவேதான் திருமணம் போன்ற நல்ல காரியங்களில் கோதானம் செய்வதை நம் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. கோதானம் கொடுக்கும்போது பசுவின் வாலை உருவியே தானம் கொடுக்க வேண்டும்.


தினமும் பூஜை செய்து முடிந்த பின் கபில பூஜை செய்து அதன்பின் ஆலயம் சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.பசுவை வணங்கி வலம் வந்தால் எல்லாப் பாவங்களும் விலகும் ஏழு தீவுகளையும் வலம் வந்த புண்ணியமும் சர்வ பீஸ்டமும் உண்டாகும். பசுவை வலம் வந்தால் பூமியை வலம் வந்த புண்ணியம் கிட்டும்.


காலையில் எழுந்ததும் மங்கள ரூபியான பசுவைத் தினமும் தரிசிப்பவன் துன்பங்கள் நீங்கி சுபத்தைப் பெறுகிறான். பசுவையும் கன்றையும் வலம் வருபவன் பூப்பிரதட்சணம் செய்த பலன் பெறுவான் தினமும் கோ பூஜை செய்பவன் கோபாலனின் திருவருளைப் பெற்று மகிழ்ச்சியை அடைகிறான். பசுக்களுக்குத் தினமும் உணவு தருபவனுக்கு இறைவன் அவன் விரும்பிய வரங்களை அளிக்கிறான்.


காமதேனுவின் வாரிசு யார்........


காமதேனு பாற்கடலில் இருந்து தோன்றியது காமதேனுவின் சந்ததிகளே பூலோகத்தில் பசுக்களாக இருக்கின்றன. பசு காமதேனுவின் அம்சம் பசுவின் ஒவ்வொரு பாகமும் மனிதர்களுக்குப் பேருபகாரம் செய்கின்றது. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் எனப்பல வகையிலும் உதவுகின்றது. பசுவின் பாலும் நெய்யும் யாகம் செய்யவும் அபிஷேகத்திற்கும் பயன்படுகின்றன. உடல் நலத்திற்கு அத்யாவசியமான பால், தயிர் நெய் போன்றவற்றை வழங்கும் கோவை (பசுவின்) தாயாக பாவித்து கோமாதா என்கிறோம்.

Thanks to Sasithara Sarma

Sourcehttp://aanmikam.blogspot.in/

No comments:

Post a Comment