Tuesday, February 12, 2013

பசுவின் பிருஷ்ட பாகத்தில் லட்சுமி வாசம்


பசுவின் பிருஷ்ட பாகத்தில் லட்சுமி வாசம்

பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார். ஆனால் லட்சுமி தேவியானவள் காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள். அப்போது பசு லட்சுமிதேவியிடம்,``நீ சஞ்சல குணம் உள்ளவள்.எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது.

மலஜலம் கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது.'' என்று சொன்னது. லட்சுமி தேவியும் ``அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கி தரவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டதோடு பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தை தேர்ந்தெடுத்தாள். லட்சுமி தேவியை போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள்.


அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் காலையில் எழுந்ததும் பசுவின் பிருஷ்ட பாகத்தை தரிசிக்க வேண்டும். அவ்வாறு தரிசித்தால் லட்சுமிதேவியை தரிசித்த புண்ணியம் ஏற்படும். மேலும் அந்த இடத்தை தொட்டு கண்களில் ஒற்றி கொண்டால் கங்கையில் நீராடிய புண்ணியமும் கிட்டும்.


பசுவின் பிருஷ்ட பாகத்தில் லட்சுமி வாசம் செய்வதால் பெருமாள் கோவிலில் விஸ்வரூப தரிசனத்தின் போது பெருமாளின் சந்நிதி நோக்கி பசுவின் பிருஷ்ட பாகம் இருக்கும் படி செய்து பகவானும் மகாலட்சுமியும் ஒருவரை யொருவர் தரிசித்துக் கொள்ளும்படி செய்வது வழக்கம்.

No comments:

Post a Comment