Monday, February 4, 2013

பாரம்பரியம் மறையவில்லை


பாரம்பரியம் மறையவில்லை 3 களிமண் உருண்டை...நாவல் குச்சி அகப்பை...சாண வறட்டி...
வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பொங்கல் மிகவும் பாரம்பரியமானதுநடைமுறையில் பூமியில் பள்ளம் தோண்டி, அதில்  
மண்ணாலேயே மூன்று உருண்டைகளை அடுப்பு வடிவில் அமைத்து, அதற்கு முன்னதாக மாட்டு சாணத்தால் தட்டப்பட்ட வறட்டிகளை கொண்டு தீ  மூட்டி, புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபடுவர். பொங்கலை கிண்டுவதற்கு புதிதாக உடைக்கப்பட்ட நாவல் மரக்குச்சியால் செய்யப்பட்ட அகப்பை  பயன்படுத்தப்பட்டது.

இப்போது, இந்த பாரம்பரியம் மறைந்து வருகிறது. கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட  வடமாவட்டங்களில் நகர்ப்புறங்களில் வாசலில் பொங்கலிட்டு வழிபடுவதற்கு பதில், பெரும்பாலானோர் வீட்டிலேயே சாதாரண பண்டிகை நாட்களை  போன்று சர்க்கரை பொங்கல் செய்து அதை மொட்டை மாடியிலோ அல்லது வாசலிலோ சாணம் அல்லது தண்ணீர் தெளித்து கோலம் போட்ட இடத் தில் செங்கரும்பு, மஞ்சள் கொத்துடன் வாழை இலையில் படையலிட்டு பொங்கலோ, பொங்கல் என்று முழக்கமிட்டு கதிரவனை வழிபடுவர். நகர்ப் புற நடைமுறை இப்போது கிராமப்புறங்களிலும் எட்டிப்பார்த்துள்ளது.

மறுநாள் திருவள்ளுவர் தினமாகவும், மாட்டுப் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பசு, காளைகளை குளிப்பாட்டி கொம்புகளை  சீவி 
வர்ணம் தீட்டி அவற்றுக்கு மாலை அணிவித்து மஞ்சள், குங்குமம் இடுவர். பின்னர், பொங்கலிட்டு பூஜை செய்து அந்த பொங்கலை கால்நடை களுக்கு ஊட்டி விடுவதுடன், அதன் எச்சில் கலந்த தண்ணீரை மாட்டுத் தொழுவம், வீடுகளில் தெளிப்பர். அப்போது, பொங்கலோ பொங்கல் மாட்டுப்பொங்கல், பட்டி பெருக 
பால்பானை பொங்க நோவும், பிணியும் தெருவோடு போக என்று முழக்கமிடுவர்.

அதோடு மாடுகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அவற்றின் கழுத்தில் சங்கு, மணி இணைத்த புதிய கயிறும், மூக்கணாங்கயிறும் அணிவிக்கப்படுகிறதுகழுத்தில் 
புதிய சலங்கைகள் கட்டப்பட்டு, மாலைகள் போட்டு அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து செல்லப்படும். இப்படி, தங்களுக்காக உழைத்த  கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அன்று குடும்பத்தில், உறவினர்களில் மூத்தவர்களை சந்தித்து ஆசி பெறுதல், அவர்கள் அளிக்கும் அன்பளிப்புகளை பெறுதல் ன்ற நடைமுறை இப்போதும் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பின்பற்றப்படுகிறது
நன்றி: தினகரன்

Sourcehttp://www.dinakaran.com/


No comments:

Post a Comment