Sunday, February 17, 2013

பசுவின் கோமியமும் அதன் மகத்துவமும்



பசுவின் கோமியமும் அதன் மகத்துவமும்


Font size: Decrease font Enlarge font
பசுவின் கோமியமும் அதன் மகத்துவமும்










நம் இந்தியர்களிடையே பசுவானது புனிதவிலங்காகவும் கடவுளாகவும்போற்றப்படுகிறது. பசுவின்சிறுநீரில் எண்ணற்ற நோய்எதிர்ப்பு சக்தி உள்ளது. இதன்காரணமாகவே வீடுகளில்கிருமிகள் அண்டாமல்பாதுகாக்க அடிக்கடி பசுவின்சிறுநீர் தெளிக்கின்றனர் நம் முன்னோர்கள். அதோடு கோவில்களிலும்  தீர்த்தத்தில் பசுவின் சிறுநீரான கோமியம் கலந்துத் தரப்படுகிறது.மனிதர்களின் பல நோய்களை நீக்கும் மருந்தாக திகழும் பசுகோமியத்தில் எவ்வகையான நன்மைகள் இருக்கின்றன என்பதை சற்று பார்ப்போம்.
கோமியத்தில் உள்ள சத்துக்கள்
பசுவின் சிறுநீரில் உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி, டி, இ போன்றவைஅடங்கியுள்ளன. அதோடு தாது உப்புக்களான, லாக்டோஸ், என்ஸைம்போன்றவையும் காணப்படுகின்றன. மேலும் நைட்ரஜன், சல்ஃபர்,பாஸ்பேட், சோடியம், மாங்கனீஸ், சிலிகான், குளோரின், மெக்னீசியம்,கால்சியம், இரும்பு சத்து போன்றவையும் இதில் அடங்கியுள்ளன.கார்பாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், ஆகியவையும் பசுவின் கோமியத்தில் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய்
ஆயுர்வேத மருத்துவ முறையில் ஏற்கனவே கோமியம்பயன்படுத்தப்பட்டு வருகிறது. தோல் நோய், புற்றுநோய், இதய நோய்,பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்களுக்குகோமியத்தில் தயாரிக்கப்படும் மருந்துகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன..
மூன்று தோஷங்களை நீக்கும்
 பசுவின் கோமியமானது மூன்றுவிதமான தோஷங்களான வாதம்,பித்தம், கபம் ஆகியவற்றை நீக்கும் என்று ஆயுர்வேதத்தில்கூறப்பட்டுள்ளது. மனிதர்களின் உடலில் இந்த மூன்று குணங்களும்அதிகரிக்காமல் சமநிலையில் வைக்கிறது. பசுவின் சிறுநீரைஉபயோகிப்பதன் மூலம் இருமல், மைக்ரேன் தலைவலி, தைராய்டு,போன்றவை குணமடைவதாக ஆயுர்வேத மருத்துவர்கள்தெரிவித்துள்ளனர்.
தோல்நோய்களை குணமாக்கும்
 தோல் நோய்களான அரிப்பு, படை, சொரி போன்றவைகளால்பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுவின் கோமியத்தை பூசுவதன் மூலம்நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.மேலும் புற்றுநோய், எய்ட்ஸ் போன்றவைகளுக்கும் கூட இது மருந்தாகபயன்படுத்தப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
 நினைவாற்றல் அதிகரிக்கும்
 பசுவின் கோமியமானது உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகளைகுறைப்பதோடு  நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர்மருத்துவர்கள். அதேபோல் இதயம், மூளையின் சக்தியைவலுவாக்குவதோடு  வயதாவதை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள்கூறியுள்ளனர்.



No comments:

Post a Comment