Posted: 28 Jan 2013 02:00 PM PST
நான் உனது ஆசைகளை பூர்த்தி செய்ய ஆவலாய் இருக்கும்போது வீணாக மற்றவர்களை கேட்டு தெரிவது பயனில்லை.உனது எல்லா கேள்விக்கும் நானே விடையளிக்கத் தயாராக இருக்கும்போது மற்றவர்களைக் கேட்பதையும்,அனாவசியமாகப் பிறரிடம் விசாரிப்பதையும் நான் விரும்புவதில்லை-ஷீரடி சாய்பாபா.
Posted: 29 Jan 2013 02:00 PM PST
"பாபா எப்போதுமே வாழ்கின்றார்.ஏனெனில் பிறப்பு இறப்பு என்ற இருமையையும் கடந்தவர் அவர்.எவனொருவன் ஒருமுறை முழுமனத்துடன் அவரை நேசிக்கிறானோ அவன்,எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான்.நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார்.எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார்.பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார்."-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
Posted: 30 Jan 2013 02:00 PM PST
சிந்தாமணி நாம் கேட்பதைக் கொடுக்கும். கற்பக விருட்சம் நாம் மனதில் நினைத்ததைக் கொடுக்கும். காமதேனு நாம் ஆசைப்படுவதை உற்பத்தி செய்யும். ஆனால், குருவாகிய பாபாவோ நாம் நினைத்தே பார்க்காதவற்றையும் அருள்செய்வார்.
Posted: 31 Jan 2013 02:00 PM PST
தனது பக்தர்களின் தேவையை பாபா நன்கு அறிவார்.அவர்களுக்கு எது நன்மையோ அதை மட்டுமே பாபா அளிப்பார்.பாபாவை நேசிக்கும் ஒருவன்,உண்மையில் அவரிடம் எந்த வேண்டுதலையும் வைக்கத் தேவையில்லை.எது நேரினும் அது பாபாவின் விருப்பம் என்பதை நன்கு அறிவோம்.
Posted: 01 Feb 2013 02:00 PM PST
நான் உனது ஆசைகளை பூர்த்தி செய்ய ஆவலாய் இருக்கும்போது வீணாக மற்றவர்களை கேட்டு தெரிவது பயனில்லை.உனது எல்லா கேள்விக்கும் நானே விடையளிக்கத் தயாராக இருக்கும்போது மற்றவர்களைக் கேட்பதையும்,அனாவசியமாகப் பிறரிடம் விசாரிப்பதையும் நான் விரும்புவதில்லை-ஷீரடி சாய்பாபா.
Posted: 02 Feb 2013 02:00 PM PST
பாபாவின் பாதங்களை உறுதியாக பிடித்துகொள்பவர் மற்றவர் பலவிதமாக சிரமப்பட்டும் அடையமுடியாததை சொற்ப முயற்சியாலே அடைந்துவிடுவர்.தனது பக்தர்களின் எல்லா வேலைகளையும் அவரே முன் நின்று நடத்துகிறார். இடற்பாடுகள் அனைத்தையும் அவரே கலைக்கிறார்.செய்வதறியாது இருக்கும் தனது பக்தனின் செயல்கள் அனைத்தையும் செய்பவர் அவரே...
M.Ramachandran
No comments:
Post a Comment