Friday, February 15, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 7/2013)


Posted: 10 Feb 2013 02:00 PM PST
மனத்தினுடைய வேலை சிந்தனை செய்வது,ஆலோசிப்பது.அதைச் செய்யாமல் மனம் ஒரு கணமும் சும்மா இராது.புலனின்பங்களை அதற்குக் கொடுத்தால் புலனின்பங்களைப்பற்றியே சிந்திக்கும்;பாபாவை அதற்குப் பொருளாகக் கொடுத்தால் பாபாவைப்பற்றியே சிந்திக்கும்.
எதையும் வேண்டாதவராக ஆகிவிடுவீர்கள்
Posted: 11 Feb 2013 02:00 PM PST
மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டு நம்பிக்கையுடன் சாயியை வழிபட்டால்,நிச்சயம் உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்.உங்களுடைய அபூர்வமான இச்சைகளுங்கூடப் பூர்த்திசெய்யப்படும்.கடைசியில் நீங்கள் எதையும் வேண்டாதவராக ஆகிவிடுவீர்கள்.அகண்டமான சாந்தியும் திருப்தியும் உங்கள் இதயத்தை நிரப்பும்.
Posted: 12 Feb 2013 02:00 PM PST
எல்லா திசைகளிலும் நான் உன்னை  சூழ்ந்து நிற்கையில் நீ எதற்காக பயப்படுகிறாய்?நீ  எனது பிடியிலேயே இருக்கிறாய்.நானே உனது தந்தை[பாதுகாவலன்].உனக்கு துன்பம் நேர நான் எப்படி அனுமதிப்பேன்.வெறும் தண்டத்துக்கா   நான் இங்கு இருக்கிறேன்?உனது எல்லா கவலைகளிலிருந்தும் எப்படி விடுவிக்கிறேன் என்று மட்டும் பார்.-ஷீரடி சாய்பாபா.
Posted: 13 Feb 2013 02:00 PM PST
பாபாவே  எல்லா  லீலைகளையும்  புரிந்துவிட்டு அவற்றுடன்  எவ்விதத்  தொடர்பும் இல்லாததுபோல் தோற்றமளிக்கிறார்.அவரே  செயல்களைச்  செய்கிறார்.ஆனால் செய்யாததைப்  போன்று  காட்சியளிக்கிறார்.அவரின் லீலைகளை யார்தான் விவரிக்க இயலும்?-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.   
Posted: 14 Feb 2013 02:00 PM PST
நான் உங்களிடத்து இல்லை என்பதாகக் கவலை கொள்ளாதீர்கள். எனது எலும்புகள் உங்களது நலத்தை குறித்துப் பேசி விவாதிப்பதைக் கேட்பீர்கள். ஆனால் எப்போதும் என்னையே நினைவு கூறுங்கள். உள்ளம், உயிர் இவற்றால் என்னை முழுமையாக நம்பி சரணடைந்து விடுங்கள். அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள். சத் சரித்திரம் 25   
  
Posted: 15 Feb 2013 02:00 PM PST

நீ திடம் கொண்டு எழுந்து நில். கவலை, கஷ்டம், பிரச்சினை என உன்னை குறுக்கிடுகிற எதுவும் கடந்து போகக்கூடியவை . ஒரு முடிவுக்கு வருபவை. இவை மிகச் சாதாரணமானவை. இவையெல்லாவற்றையும் விட என் சாயி பெரியவர் என அடிக்கடி சொல்லிப்பழகு; அப்போது மிகப் பெரியவரான சாயி அனைத்தையும் நசுக்கிப் போட்டு, உன் நலனை விசாரித்து உனக்கு மிகுதியான பலனைத் தருவார். அதற்கு இப்போதிலிருந்தே உன்னை தகுதியாக்கிக்கொள்.நீ தகுதி படுத்திக் கொள்ளும்போதே உனக்கு போனஸ், அலவன்ஸ், ஊக்கப்படி என அற்புதங்களை அவர் கொடுப்பதை உனது கண்களால் கண்டு உள்ளத்தால் உணரலாம். ஸ்ரீ சாயி-யின் குரல்



Posted: 16 Feb 2013 02:00 PM PST


அவர் காட்டிய வழியில் நடந்தால் ஆரம்ப காலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும். ஆனால் போகப்போக புதர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும். அப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும். மனம் சுலபமாக சந்தேகங்களால் அலை பாய்ந்து. சாயி ஏன் இந்தக் காட்டுவழிப் பாதைக்கு நம்மை கொண்டு வந்தார் என்று நினைக்கும்.  -    சத் சரித்திரம் 19 (125-126).  எது வந்தாலும் நீ கலங்காதே, சோதனையைத் தருகிற பாபா அதை தாங்கும் சக்தியையும் தருவார், தப்பிக்கிற வழிகள்பலவற்றையும் உருவாக்கி அளிப்பார். உனக்கு பின் இருப்பது அவற்றை விட பெரியவரான பாபா. உன்னை கைவிட மாட்டார். "உன்னைத் தொடுகிறவன் பாபா-வின்  கண்களைத் தொடுகிறவன் என்று உனக்கு ஆணையிடடுள்ளார்"  - சத் சரித்திரம்



No comments:

Post a Comment