நேர்காணல்
– காங்கயம் மாடுகள் காணாமல் போய்விடுமா?
இரா.
வேணுகோபாலகிருஷ்ணன்
மாடு என்றால் தமிழில் செல்வம். ஏனோ ஆடு அப்படி இல்லை. ஆடு, மாடு… அனைத்தும் கால்நடைகள். வீட்டுப் பிராணிகளாக உள்ள இவை, மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை & மாடு, எருது, காளை, பசு, கன்று எனப் பல உள்ளன.
நம் நாட்டில் 42 வகையான மாட்டு இனங்கள் உள்ளதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு. பல வகையான மாடுகளில் தமிழ்நாட்டின் காங்கயம் இன மாடுகள் புகழ் பெற்றவை.
வேளாண் பணிகளிலும், பார வண்டி இழுப்பதிலும் காங்கயம் காளைகள் மிகுந்த திறன் கொண்டவை. பூ என்றாலே தாமரை. காளை என்றாலே காங்கயம் காளைதான் என்று புகழ்ந்து பேசப்படுகின்றது. தென் மாவட்ட ஜல்லிக்கட்டுகளில் 30 சதவிகிதம் காளைகள் காங்கயம் காளைகள்.
இன்றைய அறிவியல் யுகத்தில் இயந்திரமயமாக்கல், உலகமயமாக்கல், தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்தில் விரைவான வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாகப் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருவதை இயற்கை ஆர்வலர்கள் எடுத்துக் கூறி, அந்த அழிவைத் தடுப்பதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் பாரம்பரியச் சிறப்பு மிக்க காங்கயம் காளைகளும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதைப்பற்றி அறிய, திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகிலுள்ள குட்டப்பாளையத்தில் இயங்கி வரும் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்களை ஓம் சக்தி சார்பில் அணுகினோம்.
திரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் பாரம்பரியச் சிறப்புமிக்க பழையகோட்டைப் பட்டக்காரர் ராவ் பகதூர் நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரின் பேரன் ஆவார். அவர் ஓம் சக்திக்கு அளித்த பேட்டி:
கேள்வி: நம் நாட்டில் எத்தனை வகை மாடுகள் உள்ளன?
பதில்: நம் நாட்டில் 42 வகை மாட்டினங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், பகுதிகளில் காங்கயம் இன மாடுகள் உள்ளன. திருநெல்வேலி, தஞ்சை, நாகப்பட்டினம் பகுதிகளில் உம்பளச்சேரி என்னும் இன மாடுகளும், அந்தியூர்ப் பகுதியில் பர்கூர் இன மாடுகளும், கிருஷ்ணகிரி, தர்மபுரிப் பகுதிகளில் ஆலாம்பாடி இன மாடுகளும், தேனிப் பகுதியில் மலைமாடு என்னும் இன மாடுகளும், மதுரை, சிவகங்கைப் பகுதிகளில் புலியகுளம் இன மாடுகளும் உள்ளன.

கேள்வி: காங்கயம் இன மாடுகள் காங்கயம் பகுதியின் பூர்வீக இனமா அல்லது வேறு இன மாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட கலப்பினமா?
பதில்: காங்கயம் இன மாடுகள் காங்கயம் பகுதியின் பூர்வீக இன மாடுகள்தான். 100 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தாத்தா ராவ்பகதூர் நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார் கர்நாடகத்திலிருந்து அமிர்த மகால் என்ற இன மாட்டைக் கொண்டு வந்து இப்போதுள்ள காங்கயம் மாட்டினை வடிவமைத்து அழகுபடுத்தியுள்ளார். மற்றபடி காங்கயம் மாடு என்பது கலப்பினமல்ல. இந்த மண்ணிற்கே உரிய அசல் இனம்தான்.
கேள்வி: காங்கயம் இன மாட்டின் அடையாளங்கள் என்னென்ன?பதில்: காங்கயம் இன மாடுகள் காங்கயம் பகுதியின் பூர்வீக இன மாடுகள்தான். 100 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தாத்தா ராவ்பகதூர் நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார் கர்நாடகத்திலிருந்து அமிர்த மகால் என்ற இன மாட்டைக் கொண்டு வந்து இப்போதுள்ள காங்கயம் மாட்டினை வடிவமைத்து அழகுபடுத்தியுள்ளார். மற்றபடி காங்கயம் மாடு என்பது கலப்பினமல்ல. இந்த மண்ணிற்கே உரிய அசல் இனம்தான்.
பதில்: காங்கயம் இன மாடுகளின் சிறப்பான அடையாளங்களாக அவற்றின் திமில்களும், கொம்புகளும் உள்ளன. கொம்புகள் சற்றே வளைந்து கூர்மையாக இருக்கும். உருண்டு, திரண்டு உயர்ந்திருக்கும் இவற்றின் திமில்கள் வேறு எந்த இன மாட்டிற்கும் கிடையாது. கம்பீரமான தோற்றம் கொண்டவை.
கேள்வி: காங்கயம் இனக் காளைகளின் சிறப்பு இயல்புகள் என்னென்ன?
பதில்: காங்கயம் காளைகள் கடும் வெயிலிலும் தொடர்ந்து 12 மணி நேரம் உழவு, பார வண்டி இழுத்தல் முதலான வேலைகளைச் செய்யும் திறன் கொண்டவை. எந்தத் தட்ப வெப்பச் சூழலையும் தாங்கும் திறன் கொண்டவை. மாட்டு வண்டியில் 4 டன் எடை கொண்ட பொருள்களைக் கழுத்தளவு நீருள்ள பாதையில் கூட இழுத்துச் செல்லும் அளவுக்குப் பலம் வாய்ந்தவை.

இதன் பால் A-2 ரகத்தைச் சேர்ந்தது. இதில் கொழுப்புச் சத்துக் குறைவு. நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய்களையெல்லாம் குணப்படுத்தும் மருத்துவ குணம் மிக்கது. ஆனால் கலப்பின மாடுகளின் A-1 ரகப் பால் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதது. இந்தப் பாலைக் குடிப்பதால் மேற்கண்ட நோய்கள் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கேள்வி: பிறவகை மாடுகளுக்கும் இந்த இன மாடுகளுக்குமுள்ள குறிப்பிடத்தகுந்த வேறுபாடு என்ன?
பதில்: இந்த மாடுகள் எந்த வறட்சியையும் தாங்கக் கூடியவை. பஞ்ச காலத்தில் பனை ஓலைகளைக்கூடத் தின்று உயிர் வாழும். அப்போது உடல் எடை வேண்டுமானால் குறையலாம். பின்னர் பஞ்சம் நீங்கிய காலத்தில் மீண்டும் உடல் பொலிவு பெற்றுவிடும். அயல்நாட்டு இன மற்றும் அயல் கலப்பின மாடுகள் வறட்சி மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்கும் திறன் அற்றவை. உணவு நிலையிலும் இது போல் இருக்காது.

அடுத்து இதன் கோமயம், சாணம் கொண்டு ஜீவாமிர்தம், அமிர்த சஞ்சீவி, பஞ்சகவ்யம் முதலிய இயற்கை உரங்களைத் தயாரித்து இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தலாம். இதனால் விளைச்சல் பெருகும். இயற்கை விஞ்ஞானிகள் கலப்பின மாடுகளின் கழிவுகளை மேற்கண்ட இயற்கை உரங்கள் தயாரிக்கப் பரிந்துரைப்பதில்லை.
காங்கயம் மாடுகள் மிகுந்த நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை. அதனால் இவை பிற இன மாடுகளைப் போல எளிதில் நோய்வாய்ப் படுவதில்லை.
கேள்வி: இந்த இனக் காளைகளின் விந்து அயல்நாடுகளுக்குக் கொண்டு சென்று அங்கு கலப்பினங்கள் உருவாக்கப் படுகின்றனவா?
பதில்: தேசியப் பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் 2002&இன் படி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு இந்தக் காளைகளின் விந்தினைக் கொண்டு செல்ல முடியாது. கொண்டு சென்றால் அது சட்டப்படி குற்றமாகும். ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசில் நாட்டிற்குக் கொண்டு சென்று அங்கே இதன் கலப்பின மாட்டினை உண்டாக்கியுள்ளனர். அந்தக் கலப்பின மாட்டிற்கு பிரம்மன் என்று பெயரிட்டுள்ளனர். 1920-&களிலேயே காங்கயம் மாடுகளுக்கான இன விருத்தி மையம் அங்கே உருவாக்கி யிருக்கிறார்கள். அதன்பின் எங்கும் கொண்டு செல்லப்படவில்லை.

கேள்வி: இந்த இனத்தில் எத்தனை வகைகள் உள்ளன?
பதில்: மாடுகளின் வண்ணங்களைக் கொண்டு மட்டும் இவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவற்றில் 95 சதவிகிதம் மயிலை எனப்படும் வெள்ளை நிறமுடையவை. 2 சதவிகிதம் காரி எனப்படும் கருப்பு நிறம் உடையவை. 3 சதவிகிதம் செவலை என்னும் சிவப்பு நிறமுடையவை.
கேள்வி: இது விரும்பி உண்ணும் தீவனம் எது?
பதில்: மற்ற மாடுகள் உண்ணும் தீவனங்கள் எல்லாவற்றையும் இது உண்ணும். விரும்பி உண்பவையாகக் கொழுக்கட்டைப்புல், செப்பு நெருஞ்சிக்காய், வேலங்காய் ஆகியவற்றைக் கூறலாம்.
பதில்: மற்ற மாடுகள் உண்ணும் தீவனங்கள் எல்லாவற்றையும் இது உண்ணும். விரும்பி உண்பவையாகக் கொழுக்கட்டைப்புல், செப்பு நெருஞ்சிக்காய், வேலங்காய் ஆகியவற்றைக் கூறலாம்.
கேள்வி: கலப்பின மாடுகள் உருவாக்கப்படுவதை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பது ஏன்?
பதில்: மனிதர்களிடத்தில்தான் சாதி ஒழிக்கப்பட வேண்டும். விலங்குகளில் அல்ல. இவ்வாறு இனக்கலப்புச் செய்வதன் மூலம் அந்த இனம் முற்றாக அழிந்துவிடும்.
பதில்: மனிதர்களிடத்தில்தான் சாதி ஒழிக்கப்பட வேண்டும். விலங்குகளில் அல்ல. இவ்வாறு இனக்கலப்புச் செய்வதன் மூலம் அந்த இனம் முற்றாக அழிந்துவிடும்.
இனக்கலப்பால் பிறக்கும் கன்றுகளும் இரண்டும் கெட்டான் இனமாக இருக்கும். அதிகப் பால் கிடைக்கும் என்பதற்காகப் பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் கொண்ட ஓர் இனத்தை அழித்தல் கூடாது. இது கலாச்சார ரீதியிலும் சரியல்ல.
ஓர் இனம் உருவான மண்ணின் தட்ப வெப்பநிலை, நீர், அப்பகுதியில் கிடைக்கும் தீவனங்கள் ஆகியவற்றைக் கொண்டு வாழத் தகுந்த உடல் கூறுகள் அந்தந்தப் பகுதி இனத்திற்கு இயற்கையாகவே அமைந்திருக் கும். அவற்றை மாற்ற முயல்வது இயற்கைக்கு மாறானது.
கேள்வி: காங்கயம் இன மாடுகள் அழிந்து வருவதாகக் கூறப்படு கிறது. இது எதனால்?
பதில்: இந்த இன மாடுகள் 1990-ஆம் ஆண்டில் 11 லட்சத்து 76 ஆயிரம் இருந்தன. 2000 ஆவது ஆண்டில் 4 லட்சத்து 40 ஆயிரம் மாடுகள் இருந்தன. தற்போது சுமார் இரண்டரை லட்சம் மாடுகள்தான் இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.

இதற்கு முதல் காரணம் மக்களிடம் போதிய விழிப்புணர்ச்சி இல்லாமையாகும். அடுத்து, இந்த இன மாடுகள் ஒரு வேளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரையே பால் தருவன. எனவே வியாபார ரீதியாகப் பாலுக்காக மாடுகள் வளர்ப்பவர்கள் குறைவான பால்தரும் இந்த இன மாடுகளை வளர்க்க விரும்புவதில்லை. அதிகப் பால் தரும் வெளிநாட்டுக் கலப்பின மாடுகளையே வளர்க்கிறார்கள்.
மூன்றாவதாக வேளாண்மைத் துறையில் டிராக்டர் முதலான இயந்திரப் பயன்பாடு அதிகரித்து விட்டதால் நல்ல இழுவைச் சக்தி கொண்ட காளைகள் உழவுக்கும், வண்டிகள் இழுக்கவும் தேவையற்றனவாகி விட்டன. இதனாலும் வளர்ப்பது குறைந்து வருகிறது.
அடுத்ததாக அதிக அளவிலான மாடுகளை மேய்க்க முன்பு போல் தற்போது ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் முன்பு நிறைய மாடுகள் வைத்திருந்தவர்களெல்லாம் தற்போது அளவாக மாடுகள் வைத்துக் கொள்கிறார்கள் அல்லது மாடுகள் வளர்ப்பதையே நிறுத்தி விடுகிறார்கள்.
மாடுகளைக் காப்பதற்காக நம் நாட்டில் அரசின் கொள்கை முடிவுகளோ அல்லது பொதுமக்களின் சங்கங்களோ முன்பு இல்லை. இப்போதுதான் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேள்வி: காங்கயம் இன மாடுகளின் அழிவைத் தடுக்க உங்கள் மையம் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?
பதில்: காங்கயம் இன மாடுகளை நாங்கள் பாரம்பரியமாக வளர்த்து வருகிறோம். இந்த இனம் அழிவதைத் தடுப்பதற்காகத்தான் எங்கள் ஆராய்ச்சி மையத்தை 2005-&இல் தொடங்கினோம். எங்கள் மையத்தின் சார்பாக சுமார் 50 மாடுகள் வளர்த்து வருகிறோம்.
இன விருத்திக்காக இப்பகுதியைச் சேர்ந்த நாட்டு மாடுகளுடன் இனச் சேர்க்கை செய்யக் காங்கயம் காளைகளைத் தருகிறோம். வேறு கலப்பின மாடுகளுடன் இனவிருத்தி செய்வதில்லை. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். மாடுகளை வளர்க்கத் தயாராக உள்ள ஆதரவற்ற ஏழைக் குடும்பத்தினரிடம் மாட்டுக் கன்றுகளைக் கொடுத்து அவற்றை 8 முதல் 10 மாத காலம் அவர்கள் வளர்த்துக் கொடுத்தால் பின்னர் அதை விற்பனை செய்து விற்ற தொகையில் பாதியை வளர்ப்பவர்களுக்குக் கொடுக்கும் திட்டம் ஒன்றையும் செயல்படுத்தி வருகிறோம்.
இந்த மாடுகளின் கோமயம் மற்றும் சாணத்தைக் கொண்டு பஞ்சகவ்யம், அமிர்தக் கரைசல், ஜீவாமிர்தம் முதலிய இயற்கை உரப் பொருள்களைத் தயாரித்து இயற்கை வேளாண்மையைச் செய்தும், ஊக்குவித்தும் வருகிறோம்.
இப்பகுதியில் கொறங்காடு என்னும் மேய்ச்சல் நிலம் இம்மாடுகளுக்கு ஏற்றதாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதில் சுண்ணாம்புச் சத்துள்ள தீவனம் மாடுகளுக்குக் கிடைக்கின்றது. இந்த இடத்தைப் பட்டா நிலமாக்க அரசு ஆலோசித்து வருகிறது. இதனை அவ்வாறு பட்டா நிலமாக்காமல் மேய்ச்சல் நிலமாகவே நீடிக்க விட வேண்டுமென அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இங்கே காங்கயம் மாடுகளுக்கான அருங்காட்சியகம் ஒன்று அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எங்கள் மையம் சார்பில் காங்கயம் மாடுகளுக்காக www.kangayambull.com என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. மேலும் மக்களிடம் காங்கயம் மாடுகளைப் பற்றிய விழிப்புணர்வுக்காகக் கண்காட்சியும், காளைகளுக்கான அழகுப் போட்டியும் நடத்திப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.சென்ற ஜனவரியில் வெள்ளக்கோவில் அருகிலுள்ள புஷ்பகிரி நகரில் காங்கயம் காளைகளுக்கான அழகுப் போட்டி நடைபெற்றது. இதன்மூலம் இதைப்பற்றித் தெரிந்து கொண்ட மக்கள் இதை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
உழைப்பிற்கும்,
கம்பீரத் தோற்றத்திற்கும் பெயர்பெற்ற காங்கயம் இன மாடுகளை மட்டுமல்லாது, நம்நாட்டுப் பாரம்பரியத்தைச் சேர்ந்த பிற இனக் கால்நடைகளையும் அழியாது காத்திட பல்லுயிர்ப் பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு ஒன்று தற்போது தொடங்கப் பட்டுள்ளது. இதனை சேனாபதி காங்கயம் மாடுகள் ஆராய்ச்சி மையத்துடன் காங்கயம் இனவிருத்தியாளர்கள் சங்கம், உம்பளச்சேரி பாரம்பரிய மாடுகள் வளர்ப்போர் சங்கம், பர்கூர் மாடு வளர்ப்போர் சங்கம், தேனி மாவட்ட மலைமாடு வளர்ப்போர் சங்கம் ஆகிய அமைப்பினர் இணைந்து தொடங்கியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தின் பாரம்பரியக் கால்நடை இனங்கள் அழியாமல் பாதுகாக்கப்படும் என நம்பலாம்.
பால் ரகங்கள்
A-2 ரகப் பால் என்பது இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா முதலிய நாடுகளைச் சேர்ந்த பாஸ் இண்டிகஸ் (Bos Indicus) ரக மாடுகளின் பால் ஆகும். ஐரோப்பிய நாடுகளின் பாஸ் டாரஸ்(Bos – Taurus) ரக மாடுகளின் பால் A-1 ரகப் பால் ஆகும்.
Sourcehttp://omsakthionline.com/?naergana
No comments:
Post a Comment