மடி நோயினால் அதிகமான வருவாய் இழப்பு எப்படி ?
- பால் பண்ணைகளில் அதிக வருவாய் இழப்பு ஏற்படுத்த கூடிய காரணிகள் மடி நோய் மிக முக்கியமானதாகும்.
- மடி நோயின் போது மருத்துவ செலவு மற்றும் பால் உற்த்தி இழப்பு போன்றவற்றால் மொத்தமாக ரூ.3000 முதல் ரூ.5000 வரை வருமான இழப்பு ஏற்படுகிறது.
- மடி நோய் என்பது கிருமிகள் காம்பின் துளை வழியாக உள்ளே சென்று மடியின் பால் சுறக்கும் திசுவில் நோயை உண்டாக்குகிறது.
- கிருமிகள் உள்ளே நுழைய பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை
- அதிகம் பால் கறக்கும் பசுக்களின் காம்பு துளைகள் பொதுவாக பெரிதாக இருக்கும். அத்துளைகள் பால் கறந்த உடனே மூடுக்கொள்ள தொடங்கும். இது சுமார் 5 நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் வரை ஆகும். இக்கால கட்டத்தில் தான் கிருமிகள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. உள்ளே சிறுதளவு கிருமிகள் சென்றால் அதை பசுவின் நோய் எதிர்ப்பு சக்தி அழித்துவிடும். ஆனால் அசுத்தமான மற்றும் சேறான தரையில் வளர்ப்படும் பசுக்களில் உள்ளே செல்லும் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும. இதை பசுவின் எதிர்ப்பு சக்தியை மீறி செயல்பட்டு நோயை உண்டாக்கும்.
- பசுவின் காம்பு துளை சில பசுக்களின் இயற்கையாகவே பெரிதாக இருக்கும்.
- முதல் கட்டத்தில் பால் நீர்த்தது போல் இருக்கும். இதை கண்டுபிடிப்பது சற்று கடினம். இதை மற்ற காம்பில் பால் கறந்து ஒப்பிட்டு கண்டுபிடிப்பது எளிது. இக்கட்டத்தில் பசுவிற்கு மருத்துவம் செய்தால் ரொம்ப நல்லது.
- இரண்டாம் கட்டத்தில் ( அதவாது முதல் கட்டம் ஆரம்பித்து 3- 5 மணி நேரம் கழித்து ) பால் திரி திரியாகவும் கட்டி கட்டியாகவும் இருக்கும். மற்றும் அந்த பக்கத்து மடியானது வீங்கியும் , சூடாகவும் , கெட்டியாகவும் இருக்கும்.
- மூன்றாம் கட்டத்தில் பால் வெள்ளையாக இல்லாமல் தண்ணீர் போல மங்கலான நிறத்தில் இருக்கும்.
- சில கிருமிகளால் ஏற்படும் மடிநோயானது ரொம்ப ஆபத்தானது. அதை கண்டுபிடிப்பது எளிது. நோய் தாக்கிய 2-4 மணி நேரத்தில் ஒரு பக்க மடியானது அதிகமான வீக்கத்துடனும் பாலானது நிறம் மாறி கலங்கலான தண்ணீர் போல இருக்கும். பசு தீவனம் எடுக்காமல் காய்ச்சலுடன் காணப்படும். இந்த மாதிரி பசு நோய்வாய்படும் போது உடனே காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைக்கும் மருத்துவம் செய்யவேண்டும். இல்லையேன்றால் பல நேரங்களில் பசுக்களின் இறப்பு அதிகமாக இருக்கும்.
கண்டறிதல் :
- மடி வீக்கமாகவோ அல்லது பால் நிறம் மாறியோ அல்லது நீர்த்து காணப்பட்டலோ உடனே கால்நடை மருத்துவரை ஆலோசிக்கவும்.
- உடனே மருத்துவம் ஆரம்பிக்கவேண்டும். காலம் தாழ்த்துவதால் பாதிப்பு அதிகமாகுவது மட்டுமல்லாமல் சிகிச்சையால் சரியாவது காலம் தாமதமாகும்.
தடுப்பு முறைகள் :
- பால் கறந்த 15 நிமிடங்களுக்கு பசுக்களுக்கு பசுந்தீவனம் அளித்தால் , கீழே படுப்பது குறைந்து கம்பின் துளைவழியாக கிருமிகள் உள்ளே செல்வது குறையும்.
- பசுக்களுக்கு சரிவிகித தீவனம் மற்றும் தாது உப்புகள் சரியான அளவில் அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்காலம்.
- பசுக்களின் கொட்டகைகளை சுத்தமாகவும் கிருமிநாசினி கொண்டு கிருமி நீக்கம் செய்யவேண்டும்.
Source :http://www.uzhavan.in/
Thank you sir.
ReplyDeleteI am impressed.
by
Moorthiswaran
Namakkal