Posted: 03 Feb 2013 02:00 PM PST
வருத்தப்படாதே! அழாதே! குற்றமாகக்கருததே! தோல்வி வரும் போது துவண்டு போகாதே. துன்பத்தை பெரிதாக நினைத்து இன்பத்தை இழந்து போகாதே. உனக்கு நிறைய வாய்ப்புகளும், காலங்களும் உள்ளன. அவற்றை உனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதற்காகவே இந்த சின்னச் சறுக்கல் என்பதை உணர்ந்து புத்துணர்ச்சியோடு எழுந்து நடமாடு.- ஸ்ரீ சாயி தரிசனம்
Posted: 04 Feb 2013 02:00 PM PST
பாபா எல்லா ஜீவராசிகளிடமும் தெய்வீகத்தைக்
கண்டார்.நண்பர்களும்,பகைவர்களும் அவருக்கு ஒன்றே.அவாவற்றவராகவும் சமன் செய்யப்பட்டவராகவும் இருந்த அவர் தீயோருக்கும் கட்டுப்பட்டுச் செவி சாய்த்தார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
Posted: 05 Feb 2013 08:25 PM PST
சாயி பாபாவின் லீலைகளை அனுபவித்தவர்கள் மட்டுமே அவரது பக்தர்களாக நீடிக்கிறார்கள். மாறாத நம்பிக்கை, நீடித்த பொறுமை, உண்மையான அன்பு, பணிவான வேண்டுதல் இவையே பாபாவிடமிருந்து அற்புதங்களை பெறும் வழியாகும்.
Posted: 06 Feb 2013 02:00 PM PST
குணம் (சிறப்பாக) தெரிந்தால் அது சாயி-யினுடையது. குணத்தில் பிழை ஏதாவது இருப்பினும் அதுவும் அவருடையதே! நாம் பாபாவின் கையிலிருக்கும் பொம்மை. நூல்களின் இழுப்புக்கேற்ப நடனமாடுகிறோம். நூல்கள் அனைத்தும் பொம்மலாட்டக்காரரின் கைகளில் இருக்கின்றன. கதைக்கேற்றவாறு பலவிதமான வண்ணங்களிலும், உருவங்களிலும் உள்ள விசித்தரமான பொம்மைகளை கதாபாத்திரங்களாக்கி நடிக்கவைக்கிறார்.
Posted: 07 Feb 2013 02:00 PM PST
வீட்டினுள்ளோ,வெளியிலோ,அல்லது வழியிலோ,நீங்கள் எவரை எதிர்கொண்டாலும் அவர்களனைவரும் என்னுடைய வெளிப்பாடுகளே.
அவர்களனைவருள்ளும் நான் உறைகின்றேன்.பூச்சியோ,எறும்போ,நீரில் வாழும் பிராணிகளோ,வானத்தில் பறக்கும் பறவைகளோ,நிலத்தில் வாழும் நாய்,பன்றி போன்ற மிருகங்களோ-அவையனைத்திலும் நான் அவசியம் நிரந்தரமாக வியாபித்திருக்கிறேன்.ஆகவே,உங்களை என்னிடமிருந்து வேறுபட்டவர்களாக நினைக்காதீர்.தம்மிலிருந்து என்னை வேருபடாதவாறு அறிந்தவர் மஹாபாக்கியசாலி."-ஷீரடி சாய்பாபா.
அவர்களனைவருள்ளும் நான் உறைகின்றேன்.பூச்சியோ,எறும்போ,நீரில் வாழும் பிராணிகளோ,வானத்தில் பறக்கும் பறவைகளோ,நிலத்தில் வாழும் நாய்,பன்றி போன்ற மிருகங்களோ-அவையனைத்திலும் நான் அவசியம் நிரந்தரமாக வியாபித்திருக்கிறேன்.ஆகவே,உங்களை என்னிடமிருந்து வேறுபட்டவர்களாக நினைக்காதீர்.தம்மிலிருந்து என்னை வேருபடாதவாறு அறிந்தவர் மஹாபாக்கியசாலி."-ஷீரடி சாய்பாபா.
Posted: 08 Feb 2013 02:00 PM PST
நீங்கள் எங்கிருந்தாலும் சரி,என் முன்னர் மன்றாடிக் கெஞ்சி பக்தியுடனும் விசுவாசத்துடனும் கை நீட்டினால்,நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவுபகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன்.-ஷீரடி சாய்பாபா.
Posted: 09 Feb 2013 02:00 PM PST
உங்களுடைய சாதுரியமான வாதங்களையெல்லாம் விட்டுவிடுங்கள்.அதற்குப் பதிலாக,சாயீ சாயீ என்று ஸ்மரணம் செய்யுங்கள்.என்னுடைய சரித்திரத்தை படியுங்கள்.இறைவனுடைய அருள் இல்லாது இந்த ஆவல் எழாது.இறைவன் அருள்செய்ய விரும்பி முகம் மலர்ந்தால் மட்டுமே என் கதைகளை கேட்கவேண்டும் என்னும் விருப்பமும் ஆவலும் வரும்.-ஷீரடி சாய்பாபா
M Ramachandran
No comments:
Post a Comment