Posted: 26 May 2013 03:00 PM PDT
துன்பம் வந்த நேரத்தில் ஒரு நன்மை விரும்பி,நல்ல ஆலோசனையை சொல்பவர் யாராயினும் அவர்கள் இறைவனின் வடிவங்களே.இறைவனின் சங்கல்பம் இல்லாமல்,அவர்கள் அந்த நன்மை நல்கும் ஒன்றைச் சொல்லமாட்டார்கள்.இவ்விஷயத்தை அனைவரும் நன்கு நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.அந்த அறிவே இருக்க வேண்டும்.ஆகையால் அப்படிப்பட்டவர்கள் கூறும் இதமானவற்றைத் தள்ளி விடவேண்டாம்.கேட்டு கடைப்பிடிக்க வேண்டும்.துன்பங்கள் வராமலிருக்காது.வரும்.வந்தபோது நிலைமையை இன்னும் மோசமாக்கலாகாது.நல்லவற்றைக் கூறுபவர்களின் பேச்சை ஏற்று பின்பற்ற வேண்டும்.அப்போதுதான் மேன்மை உண்டாகும்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
Posted: 27 May 2013 03:00 PM PDT
இந்த மசூதியில் உள்ள பக்கீர் தயை நிறைந்தவர்.யாரையும் நிராசையுடன் திரும்பிச் செல்லும்படி விடமாட்டார்.உன் ஆனந்தத்தில் நான் இருக்கிறேன்.உன் மகிழ்ச்சிக்காகவே நான் இவ்வளவு சிரமப்படுகிறேன்.உன் விஸ்வாசத்தை ஸ்த்ரமாக்கவே இங்கு விந்தைகள் நிகழ்கின்றன.இம்மசூதி நம்மைப் பெற்றெடுத்த தாய் இதன் படியேறியவர்கள் யாராயினும் கூட,அவர்கள் துக்க சாகரத்தில் மூழ்கியிருந்தாலும், அவர்களுடைய சஞ்சித கர்ம வினை பலமானதாக இருப்பினும் அவர்களும் நிச்சயமாக ஆனந்த வெள்ளத்தில் மிதப்பார்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. நவவித பக்தி
Posted: 28 May 2013 03:00 PM PDT
பக்தியின் வெளிபாடுகளைப்பற்றி இவ்விதம் அறிவீராக.-
முதலாவதாக, சிரவணம் (சாயியின் பெருமையை கேட்டல்),
இரண்டாவதாக, கீர்த்தனம்(சாயியின் லீலைகளைப் பாடுதல்),
மூன்றாவதாக, ஸ்மரணம்(சாயியை நினைத்தால்),
நான்காவதாக, பாதசேவனம்(பாதங்களைக் கழுவுதல்-பிடித்து விடுதல்),
ஐந்தாவதாக, அர்ச்சனம்(மலர்களால் அர்ச்சனை செய்து பூஜித்தல்),
ஆறாவதாக, வந்தனம் (பணிதல்-நமஸ்காரம் செய்தல்-வணங்குதல்),
ஏழாவதாக, தாஸ்யம் (அடிமைபோல் சாயிக்கு சேவை செய்தல்),
எட்டாவதாக, ஸக்யம் (சாயியிடம் தோழமை கொள்ளுதல்),
ஒன்பதாவதாக,ஆத்மநிவேதனம் (தன்னையே சாயிக்கு அர்ப்பணம் செய்தல்).
நவவித பக்திகளில் ஏதாவது ஒன்றையாவது பூரணமான பா(BHA)வத்துடன் கடைப்பிடித்தால்,வேறெதையும் வேண்டாத ஸ்ரீ சாயிபாபா,பக்தனுக்கு தம்மை வெளிப்படுத்துவார்.

Posted: 29 May 2013 03:00 PM PDT
பாபாவிற்கும் பக்தர் ரேகேவிற்குமான உரையாடல்.
பாபா: என் கஜானாவின் சாவி இப்போது உன் கைகளில்.எது வேண்டுமோ கேள்.மாதந்தோறும் ரூபாய் ஐந்து முதல் நூறு வரையோ அல்லது எது வேண்டுமோ,எதுவாயினும் நான் உனக்கு அளிக்கிறேன்.
பக்தர் (ரேகே) கேட்க மறுக்கிறார்.
பாபா:ஏதாவது கேள்.உனக்கு ஏதாவது கொடுக்க நான் ஆவலுடன் உள்ளேன்.
பக்தர் (ரேகே):நான் எது கேட்பினும் தாங்கள் கொடுப்பீர்கள் என் ஒத்துக் கொள்ளப்பட்டது தானே?
பாபா: ஆம்.
பக்தர் (ரேகே): பாபா,அப்படியானால் நான் விரும்புவது இதுதான்.இப்பிறவியிலோ,இனி எனக்கு நேரக் கூடிய பிறவிகளிலோ,தாங்கள் என்னைவிட்டு பிரியக்கூடாது.எப்போதும் தாங்கள் என் கூடவே இருக்கவேண்டும்.
பாபா; அப்படியே ஆகட்டும்.நான் உன்னுடன் இருப்பேன்.உன் உள்ளே இருப்பேன்,புறத்தே இருப்பேன்.நீ எப்படியிருந்தாலும்,என்ன செய்தாலும் அவ்வாறு இருப்பேன்.

Posted: 30 May 2013 03:00 PM PDT
மீதமுள்ள தீவினையின் காரணமாகவே இந்த உடல் கிடைத்துள்ளது.உடல் வாய்த்த காரணத்தால் கர்மா அதன் வேலையைச் செய்யாமலிராது.அந்தக் கர்மம் இன்பவடிவம் கொண்டிருந்தாலும் துக்க வடிவம் கொண்டிருந்தாலும் பாதிக்கப்படாமல் இருங்கள்.கர்மா அப்படிச் செயல்படும் என்று அறிந்து,பயமின்றி அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்.வானம் இடிந்து மேலே விழுந்தாலும் உன் நிலையில் நீ உறுதியாக இரு,தாங்கும் சக்தியை நான் கொடுக்கிறேன்.உன் முன்னும் பின்னும் நானே ரட்சனையாக இருப்பேன்.மீதமுள்ள தீவினை அழியாவிடில் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டியிருக்கும்.இதைத் தவிர்க்க முடியாது.உங்களுக்கு அந்தச் சக்தி எப்படிக் கிடைக்கும் என்ற சந்தேகம் வேண்டாம்.என் நாமஸ்மரணையில் உள்ள சக்தி அத்தகையது.சுயநலமின்றி என்னை ஆராதித்து வந்தால்,ஸ்மரணை செய்துவந்தால்,ஜெபம் செய்துவந்தால்,அப்படிப்பட்ட அனுபூதி உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.இந்த உண்மையை நீங்களே உணர்வீர்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
Posted: 31 May 2013 03:00 PM PDT
என் பக்தன் எப்படி இருந்தாலும்,நல்லவனோ கெட்டவனோ,அவன் என்னுடையவன்;அவனுக்கு தேவையானவை எல்லாம் நானே அளிப்பேன்.அவனுக்கும் எனக்குமிடையே பேதம் எதுவுமில்லை.இப்போது அவன் பொறுப்பு முழுவதும் என்னிடமே உள்ளது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 01 Jun 2013 03:00 PM PDT
நீ எங்கு இருக்கின்றாயோ அங்கேயே இருந்துகொண்டு என்னை கேள்வி கேள்!தேவையில்லாது எதற்காகக் காட்டிலும், வனத்திலும் திரிந்து விடைகளைத் தேடுகிறாய்? நான் உன்னுடைய ஞான நாட்டத்தை திருப்தி செய்கிறேன். அந்த அளவிற்கு என்னை நம்புவாயாக.- நான் அனைவருள்ளும் வியாப்பித்திருக்கிறேன். நான் இல்லாத இடமே இல்லை. பக்தர்களுக்காக நான் எங்கும் , எப்படியாவது தோன்றுவேன்-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
No comments:
Post a Comment