Saturday, June 29, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 26/2013)

 

 

 

Posted: 23 Jun 2013 03:00 PM PDT

நீ எப்போதும் வாய்மையைக் கடைப்பிடிக்கவேண்டும்;நீ அளித்த வாக்குறிதிகள் யாவற்றையும் நிறைவேற்ற வேண்டும்.விசுவாசமும் பொறுமையும் பெற்றிரு.நீ எங்கே இருந்தாலும் எல்லா நேரங்களிலும் அப்போது நான் உன்னுடனேயே இருப்பேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 24 Jun 2013 03:00 PM PDT
எவன் என்னை பூரண சரணாகதி அடைகிறானோ,எவன் என்னை விஸ்வாசத்துடன் வணங்குகிறானோ,எவன் என்னை நினைவில் இருத்தி நிரந்தரமாக தியானம் புரிகிறானோ,அவனுடைய எல்லா கஷ்டங்களில் இருந்தும் விடுவிப்பது எனது சிறப்பியல்பாகும்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]
Posted: 25 Jun 2013 03:00 PM PDT
இன்றும் நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை எப்போதும் உணர் .பக்தனாகிய
நீ அழைத்தால் நான் ஓடோடி வருவேன். இது சத்தியம் -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

Posted: 26 Jun 2013 03:00 PM PDT

பொறாமை என்கிற வேண்டாத குணத்தைப் பொறுத்த வரை நமக்கு எந்த விதமான(நேரிடை)லாபமோ,நஷ்டமோ கிடையாது.பொறாமை என்பது இன்னொருவருக்கு கிட்டியிருக்கும் லாபம் அல்லது வளம் கண்டு தாளாமை.வேறு ஒருவருக்கு ஒரு அதிருஷ்டமோ,செல்வாக்கோ கிட்டி விட்டால்,நம்மால் அதை சகித்துக் கொள்ள முடியாமல்,அவரை அவதூறாகப் பேசுகிறோம்.அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டால் மகிழ்ச்சியடைகிறோம்.இது நல்லதா?அந்த மனிதன் வளம் பெற்றால்,நமக்கு என்ன நஷ்டம் ஏற்ப்பட்டுவிட்டது?ஆனால் ஜனங்கள் இந்த விதத்தில் சிந்திப்பதில்லை.அவனுக்கு நலம் கிட்டினால்(அவனுடன் சேர்ந்து)நாமும் மகிழ்வோமே?நமக்கும் நலம் கிட்டியது,நாமும் பாக்கியசாலிகள் என் எண்ணுவோமே?அல்லது அதே நலம் நாமும் பெறுவோம்,அல்லது பெறுவதற்கு முயற்சி மேற்கொள்வோம்.அதுவே நமது விருப்பமும்,தீர்மானமுமாக இருக்க வேண்டும்.நம்மிடமிருந்து அவன் எதை எடுத்துச் சென்றுவிட்டான்?ஒன்றுமில்லை.அவனுடைய கர்மாவின் பலனாக அவன் வளம் பெற்றான்.அப்படியிருக்க அதைக் கண்டு நாம் ஏன் பொறாமை படவேண்டும்?ஆகவே,முதலில்
பொறாமையை வென்றுவிடு.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 28 Jun 2013 03:00 PM PDT

நானா(பாபாவின் பக்தர்);பாபா,தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள்.தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவேண்டும்?[உறவினர்களின் பிரிவு,இழப்பு போன்றவை]

பாபா: உமக்கு நெருக்கமானவர்களின் நலனை எண்ணிக் கொண்டு அதன் பொருட்டு நீர் இங்கு வருகிறீரென்றால்,அது தவறு.இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியத்தில்லை.இவை என் சக்திக்கு உட்பட்டவை அல்ல.
இவை(குழந்தை பிறப்பது,உறவினர் இறப்பது போன்றவை)ஊழ்வினையைப் பொருத்தது.தேவாதி தேவனானவரும்,உலகையே படைத்தவருமான,
பரமேச்வரனால் கூட இவற்றை மாற்றிவிட முடியாது.அவரால் சூரியனையோ சந்திரனையோ நோக்கி,'வழக்கமாக உதிக்கும் இடத்திலிருந்து இரண்டு கஜம் தள்ளி உதிப்பாய்' எனக் கூற இயலுமா?இயலாது,ஏனெனில் அவரால் முடியாதது மட்டுமின்றி,அவர் அப்படி செய்யவும் மாட்டார்.அது  ஒழுங்கின்மை,குழப்பம் விளைவிக்கும்.

நானா:அப்படி என்றால்,ஒருவரிடம் "உனக்கு குழந்தை பிறக்கும்"என தாங்கள் கூறுகிறீர்கள்,அவருக்கு குழந்தை பிறக்கிறது.மற்றொருவரிடம்"உனக்கு வேலை கிடைக்கும்"என் சொல்லுகிறீர்கள்,அவருக்கு வேலை
கிடைக்கிறது.இவை எல்லாம் தங்களுடைய அற்புதங்கள் அல்லவா?

பாபா:இல்லை,நானா.நான் எந்த சமத்காரமும் செய்வதில்லை.கிராமத்து ஜோதிடர்கள் சில தினங்கள் முன்னதாகவே பின்னர் நடக்கப் போவதைக் கூறுகிறார்கள்.அவற்றுள் சில பலிக்கின்றன.நான் அவர்களை விட எதிர்காலத்தை தீர்க்கமாகப் பார்க்கிறேன்.நான் கூறுவதும் நடக்கிறது.என் வழியும் ஒருவகை ஜோதிடத்தைப் போன்றதே.உங்களுக்கெல்லாம் இது புரிவதில்லை.உங்களுக்கு.என் சொற்கள் அற்புதங்களாகத் தோன்றுகின்றன;
ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தை அறியமாட்டீர்கள்.ஆகையால் நிகழ்ச்சிகளை  நீங்கள் எமது அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தியாக முடிவு செய்து,எம்மிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள்.பதிலுக்கு நான் உங்கள் பக்தியை இறைவனிடம் திருப்பி உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன்.

Posted: 29 Jun 2013 03:00 PM PDT

என்னையே சார்ந்து எப்போதும் இருப்பாயாக!வீணான எண்ணங்களில் மனதை அலைபாய விடவேண்டாம்.வேதனையை நேரிடையாக அனுபவிக்காமல்,ஊழ்வினையை கடக்க இயலாது.வாஸ்தவமே.சுக துக்கங்களின் காரணம் கர்மாதான்.ஆகையால் உமக்கு நேருவதை தைர்யமாக தாங்கிக் கொள்ளும்.அந்த சக்தியையும் நானே உனக்கு அளிப்பேன்.என்னை பூரணமாக சரணடைந்து,உமது எண்ணம் எப்போதும் என்னிப்பற்றியே இருக்கட்டும்.பிறகு நான் என்ன செய்வேன் என்பதை நீர் பார்ப்பீர்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா









No comments:

Post a Comment