Saturday, June 15, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 21/2013)


Posted: 19 May 2013 03:00 PM PDT
உங்கள் விஸ்வாசத்தை உறுதிபெறச் செய்யுங்கள்.ஸ்திரமாக்குங்கள்.மனம் திரியட்டும்.அது எனக்காகவே ஆகட்டும்.சிந்தனை செய்யுங்கள்,அது என்னைப்பற்றியதாகவே இருக்கட்டும்.என்னிடம் உங்கள் ஆர்வம் எவ்வளவு இருக்குமோ,என்அனுக்கிரகமும் அவ்வளவு இருக்கும்.பகீரதப்பிரியத்தனம் செய்யத் தேவையில்லை.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 20 May 2013 03:00 PM PDT
நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லுகிறேன்.நன்றாக நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் துக்கப்படுபவர்களாக ஆக வேண்டாம்.கிடைத்தவற்றில் திருப்தியடைந்து இருங்கள்.நான் ஒரு பக்கீர்.வீடு வாசல் இல்லாதவன்.லௌகீக தாக்கங்கள் இல்லாதவன்.ஒவ்வொன்றையும் விட்டு விட்டு ஓரிடத்தில் உட்கார்ந்திருப்பவன்.இருந்த போதிலும் மாயை அடிக்கடி என்னையும் பாதித்துக் கொண்டே இருக்கும்.நான் அதை மறந்தாலும் அது என்னை மறக்கவில்லை.பிரம்மா முதல் சிறு பிராணி வரை இந்த மாயையில் விழாதவர்கள் இல்லை.ஹரி நாமம் ஜபிப்பவர்கள் மட்டும் இந்த மாயை ஒன்றும் செய்யாது.அவர்கள் இருக்கும் இடத்தின் பக்கத்திலும் செல்லாது.ஹரி  நாம ஜபம் எப்பொழுதும் செய்து கொண்டே இருக்கவேண்டும்.ஆகையால்தான் நான் இறைவனின் நாமம் பற்றி அடிக்கடி சொல்லுகிறேன்.இறை நாம மகிமை பற்றி எவ்வளவு சொன்னாலும் அது குறைவானதேயாகும்.ஆகையால் மாயையை நசிக்கும் சக்தி அந்த பரமாத்மனுக்கு மட்டுமே இருக்கும்.அவர் அனுக்கிரகம் கிடைக்கும் வரையில் ஆராதிக்க வேண்டும்.ஸ்மரணை செய்ய வேண்டும்.அதுபோல் எப்போதுமே செய்து வரவேண்டும்.கலியுகத்தில் இறை நாமத்தைத் தவிர்த்து,தருணோபாயம் வேறொன்றில்லை.அது ஒன்றே அடைக்கலம்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா[ஸ்ரீ சாயி திருவாய்மொழி]
Posted: 21 May 2013 03:00 PM PDT
சர்வ இந்திரியங்களும் பைத்தியம் பிடிக்கும்படி,பக்தி பாவத்துடன் இறைவனை ஆராதிக்க வேண்டும்.அவர் இதயம் கரையும்படி பூஜிக்க வேண்டும்.இப்படிச் செய்து வந்தால் விஷய வாசனைகளிலிருந்து இந்திரியங்கள் விலகியிருந்து மனம் சாந்தியடையும்.சாந்தமடைந்த மனம்,அந்தப் பரமனின் திருப்பாதங்களில் ஸ்திரமாக நிற்கும்.ஸ்தரமடைந்த மனம் என்னையே தரிசிக்கும்.சத்புருஷர்களின் தரிசனமாத்திரத்தில்,சகல பாவங்களும் நசிந்துவிடும்.தேகம்,இந்திரியங்கள் பரிசுத்தமடையும்.என்னிடமிருந்து வேறாகாத மனத்தில் புரச்சிந்தனைகள் தோன்றாது.துன்பங்கள் தலையெடுக்காது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
Posted: 22 May 2013 03:00 PM PDT
நம்பிக்கையுடன் நான் கூறுவதை கேளுங்கள்.நான் உங்களுக்காகவே வந்துள்ளேன்.உங்கள் காரியத்தைத் தவிர,எனக்கென்று வேலைகள் ஏதும் இல்லை.கர்ம அனுசரணைகளும் இல்லை.இரவும்,பகலும் உங்களைப் பற்றியதே என் சிந்தனையெல்லாம்!உங்களைக் கடைத்தேற்றுவதோன்றே என் லட்சியம்.என் பக்கமாக பார்வையை திருப்புங்கள்.அமைதியான மனதுடையவராய் என் கதைகளைக் கேளுங்கள்.அப்படியாக வெற்றியடையுங்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 23 May 2013 03:00 PM PDT
குருவைத்தவிர வேறு ஒன்று இல்லை என்ற பாவனையை மனதில் இருத்திக்கொள்.என் சொற்களை நம்பி,உன் ஆர்வத்தை என்பால் திருப்பு.என் பார்வையை உன்மேல் வைப்பேன்.என்னையே லட்சியமாகக் கொள்.உனக்கு நிச்சயம் சுபம் விளையும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பா


Posted: 24 May 2013 03:00 PM PDT
சாய்பாபாவின் கிருபையும் காதலையும் பெறுவதற்கு அவருடைய பாதகமலங்களை வழிபடுங்கள்.ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அருளும் நலந்தரும் போதனையை ஏற்பதற்கு இதயத்தில் இடம் செய்துகொள்ளுங்கள்.இந்திரிய சுகங்களை யதேச்சையாக அனுபவிக்கும் போதுங்கூட உள்ளுக்குள்ளே எப்பொழுதும் சாயிபிரிதி  இருக்கட்டும். ஏனெனில்,அதுவே உலகியல் விஷயங்களுக்கும் ஆன்மீக விஷயங்களுக்கும் அபயமளிக்கும்.
Posted: 25 May 2013 03:00 PM PDT
பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் ஏதுமில்லை.நம் தாயை எப்படி அணுகுவோம்?இம்மாதிரி ஒரு கேள்வி கேட்பது மடத்தனமானது.அன்பு என்ன என்று குழந்தை உணருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே தாய் தன் குழந்தைகள் மீது அன்பைப் பொழிந்து வருகிறாள்.அதே போல் பாபா குழந்தைகள் மீது அன்பைப் பொழியும் ஒரு கண்ணுக்குத் தெரியாத அன்னையின் பாத்திரத்தை ஏற்று,முற்பிரவிகளிலிருந்தே தொடர்ந்து தம் பக்தர்களாகிய குழந்தைகள் மீது அன்பைப் பொழிகிறார்.ஆனால் அவர்கள் இப்போது பாபாவை எப்படி அணுகுவது?அவர்கள் பாபாவை அணுகவேண்டும் என் மனப்பூர்வமாக விரும்பட்டும்.உடனே அணுகுமுறை துவங்கிவிட்டது.அக்கணத்திலிருந்தே அவர்கள் நிலையில் முன்னேற்றம் ஆரம்பமாகிவிட்டது.அவர்கள் மேலும் மேலும் உற்சாகமடைகின்றனர்,மேன்மேலும் பலனடைகின்றனர்.முதலில் ஒரு வித நன்றியுணர்வையும்,நாளடைவில் பிரேம பக்தியையும் அவர்கள் பெறுகிறார்கள்.பக்தர்கள் பாபாவின் திருவுருவை தங்களிடம் உள்ள லாக்கெட்டுகள் ,படங்கள் ஆகியவற்றில் அடிக்கடி பார்த்து,பாபாவின் திருவுருவை தினமும் மனதில் கொண்டுவரட்டும்,கவிஞனின் கற்பனைகள் எல்லாவற்றையும் விட திறன்படைத்த பாபாவின் அத்புத லீலைகளை [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]படிக்கட்டும்.பாபாவின் குணாதிசயங்களை நினைவுபெற பாபாவின் அஷ்டோத்திர சத நாமாவளி[108 நாமாக்கள்]மிக்க சக்தி வாய்ந்த சாதனம்.ஆர்வமுள்ள பக்தர்கள் ஒன்று கூடி செய்யும் பூஜைகள்,பஜனைகள் ஆகியவற்றில் பங்கு கொள்ளட்டும்.ஆர்வமுள்ள சாதகனுக்கு பாபாவே மேற்கொண்டு உள்ள வழிகளைக் காட்டுவார்.ஒவ்வொரு உண்மையான பக்தனுக்கும் பலவித வழிகளில் பாபாவுடன் மேற்கொண்டு தொடர்பு எப்படி வைத்துக் கொள்வது,அதை எப்படி வளர்த்துகொள்வது என்பது பற்றி பாபாவே உணர்த்துவார்.பாபா கடைபிடிக்கும் முறைகள் பலவகைப்படும்.உணர்ச்சிமிக்க துடிப்புள்ள சில பக்தர்கள் இன்றும் பாபாவைக் காண்கிறார்கள்,விழிப்புடன் இருக்கும்போதே அவருடன் பேசவும் செய்கிறார்கள்.சிலருக்கு கனவுகளில் இந்த அனுபவம் கிட்டுகிறது.பாபாவே தெய்வம் என்ற திடமான நம்பிக்கை கொண்ட சாயி பக்தர்கள் எண்ணற்றவர்கள்,அவர்கள் தங்கள் பிரார்த்தனைகள் பாபாவால் ஏற்கப்பட்டு பலன்களைப் பெறுகிறார்கள்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.









No comments:

Post a Comment