Posted: 09 Jun 2013 03:00 PM PDT
எல்லாவற்றிலும் உள்ள இறைவனாக பாபாவை வழிபடு
பாபா: நானா(பாபாவின் நெருங்கிய பக்தர்),எனக்கு பூர்ண போளி வேண்டும்.அதை நைவேத்யமாக தயார் செய்து கொண்டு வா.
அதன்பிறகு நானா எட்டு பூர்ண போளிகளும் அதற்கேற்ற பண்டங்களையும் தயார் செய்ய வைத்து,பாபாவின் முன் கொண்டு வந்து சமர்பித்தார்.
நானா:பாபா உட்கொள்ளுங்கள்.
பாபா சற்று நேரம் தாமதித்தார்.போளியின் மீது ஈக்களும் எறும்புகளும் மொய்க்கலாயின.
பாபா:நல்லது,இந்த தட்டுகளை எடுத்துச் செல்.
நானா:அவற்றை தொட்டுக் கூட பாராமல் தாங்கள் என்னை எடுத்துச் செல்லச் சொல்வது எப்படி?தாங்கள் ஒன்றையும் உண்ணப்போவதில்லை என்றால் என்னை ஏன் இதை தயாரிக்க சொல்லவேண்டும்?கொஞ்சமாவது எடுத்துகொள்ளாவிட்டால் ,நான் தட்டுகளை எடுத்துச் செல்லமாட்டேன்.நானும் உண்ணமாட்டேன்.
பாபா:ஏதோ ஒரு நேரத்தில் நான் நீ கொண்டுவந்த போளியை சாப்பிட்டுவிட்டேன்.பிடிவாதம் வேண்டாம்.தட்டுகளை எடுத்துச் சென்று,உணவு உட்கொள்.
நானா சிணுங்கியவாறு மீண்டு சாவடிக்குச் சென்று விட்டார்.மறுபடியும் பாபா அவரை வரவழைத்தார்.
பாபா:நானா!நீ என்னுடன் பதினெட்டு ஆண்டுகளாக பழகுகிறாய்.இவ்வளவு தானா நீ அறிந்துகொண்டது!என்னைப் பற்றிய உனது கணிப்பு இவ்வளவுதானா!'பாபா' என்றால் உனக்கு கண்முன் தோன்றும் இந்த எண் ஜாண் உடல்தானா!அவ்வளவுதானா?
இதோபார்,நான் எறும்பு உருவிலும் உண்கிறேன்.மொய்க்கும் ஈயின் வாயிலாகவும் சாப்பிடுகிறேன்.எனக்கு தோன்றிய வடிவத்தை நான் எடுத்துக் கொண்டு அந்த வடிவத்தின் மூலம் உண்பேன்.உன் போளியை வெகுநேரம் முன்பே சாப்பிட்டு விட்டேன்..அளவு கடந்த பிடிவாதம் பிடிக்க வேண்டாம்.
நானா:தாங்கள் இப்படிக் கூறினாலும்,என்னால் எதையும் புரிந்து கொள்ளமுடியவில்லை.என்ன செய்யட்டும்?எனக்கு புரிய வைத்தீர்களானால்,நான் தட்டுகளை எடுத்துச் செல்கிறேன்.சாப்பிடுகிறேன்.
அச்சமயம் பாபா ஒரு சமிக்ஞை செய்தார்.அது நானா ஆழ்மனதில் வேறு யாருக்குமே தெரியாத ஒரு ரகசியத்தை புதைத்து வைத்திருந்ததை பற்றியது.அது பாபா தனது அந்தராத்மா எனவும்,ஆகவே எல்லோரினுள்ளும்,எறும்பு உள்பட உறையும் சர்வாந்தர்யாமி எனவும் நானாவுக்கு திடமாக புலப்படுத்துயது.
பாபா:நானா,நான் செய்த இந்த சமிக்ஞையை எப்படிப் பார்த்தாயோ,அவ்வாறே நான் (எல்லா உருவங்களாகவும்)உண்கிறேன் என்பதை தெரிந்து கொள்.

Posted: 10 Jun 2013 03:00 PM PDT
எந்த விஷயத்திலும்,எந்த சமயத்திலும் நான் தன்னந்தனியானவன் என்ற பாவம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன்.இருப்பேன்.நான் பின்பற்ற வேண்டிய கர்மங்கள் என்று ஒன்றும் இல்லை.இருந்தபோதிலும் உங்களைக் கடைதேற்றவே இவ்வுடலை மேற்கொண்டு இவ்வுலகில் அடியெடுத்து வைத்தேன்.இங்கு வந்தேன்.நான் ஜனன மரணத்திற்கு அப்பாற்பட்டவன்.என் இச்சையே நிறைவேறும்.என்னை ஆராதிப்பவர் இருக்கும் வரை என் அனுபூதிகள் தோன்றிக்கொண்டே இருக்கும்.நான் இருக்கிறேன் என்ற உண்மையை தெரிவிக்கும்.என் கதைகளை வெறுங்கதைகளாக நினைக்காதீர்கள்.அவற்றை என் உண்மை வடிவம் என்றே கருதுங்கள்.உங்கள் பாவனை ஏதாக இருக்குமோ அதற்கேற்ற பலனையே நீங்கள் பெறுவீர்கள்.என்னை யார் எப்படி ஆராதிக்கிறார்களோ.அப்படிப்பட்ட பலனே அவர்களுக்கு கிடைக்கும்.உங்கள் பௌதீக,ஆன்மீகத் துன்பங்களை நான் நீக்குவேன்.உன்னுடைய விஸ்வாசமே என்னுடைய சக்தி.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 11 Jun 2013 03:00 PM PDT
நீங்கள் துக்கப்படுபவர்களாக ஆக வேண்டாம்.கிடைத்தவற்றில்
திருப்தியடைந்து இருங்கள்.எதிர்ப்பார்ப்பது நடப்பதென்பது
சகஜம்.நிறைவேறாமற் போவதும் அவ்வளவு சகஜமே.நினைப்பதெல்லாம் நிறைவேறும் என்ற பாவம் கொள்ளலாகாது.அனுகூல,பிரதிகூல பலிதங்கள் இருக்கத்தான் செய்யும்.ஒவ்வொரு விஷயத்திலும் தீவிரமாக உணர்ச்சி வசப்படுதலும் கூட தீமையையே விளைவிக்கும்.காலத்தை அனுகூலமாக மாற்றிக் கொள்வதிலேயே தேர்ச்சி என்பது இருக்கும்.பொருமையின்மைக்கு தூரமாக இருந்தால் ஆனந்தம் என்பது தூரமாகாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

Posted: 12 Jun 2013 03:43 PM PDT
எவன் ஒருவன் எப்போதும் என்னை அவன் மனத்தில் இருத்தி,எனக்கு நிவேதனம் செய்யாமல் உணவை ஏற்கமாட்டானோ,நான் அவனுடைய அடிமை.என்னிடமே வேட்கை கொண்டு மற்றெல்லாவற்றையும் துச்சமாக கருதுபவனுக்கும் நான் அதேபோல் இருப்பேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 13 Jun 2013 03:00 PM PDT
சாய்பாபா ஓர் பூரணமான லீலாவதாரி; நினைத்தமாத்திரத்தில் எங்கும் சஞ்சாரம் செய்யக்கூடியவர்.போவதும் வருவதும் மனிதப் பிறவிகளுக்கே.அவரோ எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் நிறைந்தவர்.அவர் அங்கிருந்து இங்கே வருவது,இங்கிருந்து அங்கே திரும்பி போவது,ஆகிய இரு செயல்களையும் வானமும் அறியாது.ஏனெனில்,அவர் வானத்திலும் நிரம்பி இருக்கிறார்.பாபாவின்சஞ்சாரம்புரிந்துகொள்ளமுடியாதது.நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் அவர் நிரம்பியிருக்கிறார்.இவ்வாறிருக்க,அவர் வருவதென்ன,போவதென்ன!உண்மையான பக்தன் பாபாவை நினைத்தமாத்திரத்தில் நிச்சயமாக அவர்முன்தோன்றுகிறார்..-ஸ்ரீ சாயி இராமாயணம் .
Posted: 14 Jun 2013 03:00 PM PDT
"ஏற்கனவே என்ன நடந்ததோ,என்ன நடக்கப்போகிறதோ,அதற்கேற்றவாறு வாழ்க்கை நடத்து!எது பிராப்தமென்று விதிக்கப்பட்டிருக்கிறதோ,அதை அறிந்துகொண்டு நட!எப்பொழுதும் திருப்தியுள்ளவனாக இரு!சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்பொழுதும் இடம் கொடுக்காதே!"-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 15 Jun 2013 03:00 PM PDT
பக்தர்களின் நலம் கருதி பாபா நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று அவர் பக்தர்கள் வம்சம் விருத்தியாக அருளியது.ஏதாவது ஒரு பக்தைக்கு பிள்ளைப் பேறு உண்டாகும் என் பாபா ஆசி வழங்கினால்,அனேகமாக அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் பாபாவின் வாக்கின்படி அப்பெண்மணி ஒரு ஆண் அல்லது பெண் குழந்தை பெறுவது உறுதி.ஜாதகத்தின் படி புத்திர ஸ்தானத்தில் ஒரு பாபி அல்லது பாபகிரகம் இருப்பதால் இப்பிறவியில் சந்ததி உண்டாக வாய்ப்பில்லை என சோதிடர்கள் கூறியும்,பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள் ஏராளம்.பிராரப்த கர்மா அல்லது ஊழ்வினையின் நியதிகளை மாற்றி பாபா இன்றும் தனது பக்தர்களுக்கு குழந்தை செல்வம் அளித்துவருகிறார்.
No comments:
Post a Comment