Posted: 02 Jun 2013 03:00 PM PDT
சாயி நாமத்தை மிஞ்சிய சக்தி வேறொன்றில்லை.சாயியுடன் ஐக்கியமடைய இந்த நாம உச்சாரணை பாலமாய் விளங்கும்.சாயி நாமம் உச்சரிக்கப்படும் இடத்தில் சாயிபாபா நேரடியாகவே தோன்றுவார்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
Posted: 03 Jun 2013 03:00 PM PDT
இதர தேவதைகள் அனைத்தும் மாயை;குருவே சாசுவதமான ஒரே தேவன்.அவரிடம் விசுவாசம் செலுத்தினால்,நம்முடைய தலையெழுத்தையே மாற்றிவிடுவார்.-ஸ்ரீமத் சாயி இராமாயணம்.
Posted: 04 Jun 2013 03:00 PM PDT
"சில சமயம் நான் ஒரு நாய்;சில சமயம் நான் ஒரு பன்றி;சில சமயம் நான் ஒரு பசுமாடு;சில சமயம் ஒரு பூனை;சில சமயம் ஓர் எறும்பு;ஓர் ஈ,ஓர் நீர்வாழ் பிராணி-பலவிதமான உருவங்களில் நான் இவ்வுலகில் உலவிவருகிறேன்.
உயிருள்ள ஜந்துக்கள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே நான் விரும்புகிறேன் என்று அறிந்துகொள்ளும்..பேதபுத்தியை விட்டுவிடும்;அதுவே என்னை வழிபடும் சிறந்த முறையாகும்."-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
உயிருள்ள ஜந்துக்கள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே நான் விரும்புகிறேன் என்று அறிந்துகொள்ளும்..பேதபுத்தியை விட்டுவிடும்;அதுவே என்னை வழிபடும் சிறந்த முறையாகும்."-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 05 Jun 2013 03:00 PM PDT
ஏழு ஆண்டுகளாக குணப்படுத்த முடியாத தலைவலியுடன் பாபாவின் பக்தை வந்து பாபாவின் முன் அமர்ந்தார்.
பாபா:(அம்மாதின் சிரத்தை தொட்டு மென்மையாக வருடிக்
கொடுத்து)உங்களுக்கு தலைவலி இல்லையா?
பக்தை :இருந்தது.இப்போது நின்றுவிட்டது.
(தீராத தலைவலி உடனடியாக நிரந்தரமாக மறைந்தது).
பாபா:இவ்வளவு வருஷங்களாக எனக்கு நன்றாக உணவளித்து வருகிறீர்கள்.
பக்தை:நான் தங்களை தரிசிப்பது இப்போதுதான்.
பாபா:சிறுபிராயம் முதலே நான் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பக்தை குழப்பமடைந்தார்.
பாபா:உங்கள் வீட்டில் என்ன பூஜை.
பக்தை:கணபதி பூஜை.
பாபா:உங்கள் தாயார் வீட்டில்?
பக்தை:கணபதி.நான் கணபதிக்கு எல்லாவித புஷ்பங்களும்,பழங்களும்,
தின்பண்டங்களும் சமர்ப்பித்திருக்கிறேன்.
பாபா:அவை எல்லாம் என்னை வந்தடைந்தன.ஆகவே சிறுமியாக
இருந்தகாலத்திலிருந்தே நான் உங்களை பார்த்து வருகிறேன்.
பக்தை :பாபா,என் கணபதியின் ஒரு கரம் உடைந்து விட்டதால் அந்த சிலை
தூக்கி எறியப்பட வேண்டுமென்கின்றனர்.அது சரிதானா?
பாபா:உங்கள் குழந்தை கையை ஒடித்துக் கொண்டால்,அதை நீரிலே தூக்கி
எறிவீர்களா?அந்த விக்கிரகத்தை தினமும் பூஜை செய்யவும்.

Posted: 06 Jun 2013 03:00 PM PDT
தினமும் சமைத்தவுடன் ஒரு கவளமாவது வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டால் கண்ணுக்குத் தெரிகிற மற்றும் தெரியாத லட்சக் கணக்கான ஜீவராசிகளுக்கு அன்னதானம் அளித்த புண்ணியம் கிடைக்கும்.அதை உண்ண யாரையும் அழைக்கவோ,விரட்டவோ கூடாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 07 Jun 2013 03:00 PM PDT
இன்பமும் துன்பமும் மாயையே.இவ்வுலகத்தில் தோன்றும் இன்பம் உண்மையான இன்பமாகாது.அதுவே உண்மையான இன்பம் என்று நம்பிவிடுவதால் உலகப்பற்றுள்ள மனிதன் அதனால் விசையுடன் கவரப்படுகிறான்.ஒவ்வொருவருடைய பிராரப்தத்தின் படி,ஒருவனுக்கு அறுசுவை உண்டிகள் கிடைக்கின்றன;ஒருவனுக்கு மக்கின ரொட்டி துண்டுகளும்,வேறு ஒருவனுக்கு தவித்துக் கஞ்சியும் கிட்டுகின்றன.பிந்தியவர்கள் அதனால் மனவருத்தமடைகின்றனர்;முந்தியவர்கள் தங்களுக்கு குறையொன்றுமில்லை என எண்ணிக்கொள்கின்றனர்.அனால் இவைகளில் எதை உண்பதாலும் கிட்டும் பலன் ஒன்றே,அதாவது பசி தீர்வது.ஒருவன் ஜரிகை துப்பட்டாவை போர்த்திக் கொள்கிறான்.இவருடைய நோக்கமும் ஒன்றே,அதாவது உடலை மறைத்துக் கொள்வது.இன்பமும்,துன்பமும் அவரவர் அபிப்பிராயத்தைப் பொருத்தது.இது மாயையின் தோற்றம்,அழிவைத் தரக்கூடியது.மனதில் சுகம்,துக்கம் என்ற எண்ணங்கள் தோன்றும் போது,அவற்றிற்கு இடம்கொடுக்காதே,எதிர்த்து நில்.அது முற்றிலும் மாயையே.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 08 Jun 2013 03:00 PM PDT
அல்லும் பகலும் உன்னை பற்றியே எனது சிந்தனை.எனக்கு உறக்கம் இல்லை.திரும்பத் திரும்ப உன்னுடைய பெயரை உச்சரித்த வண்ணம் உள்ளேன்.ஒவ்வொரு அடியிலும் நான் உன்னை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.உனக்கு என்ன நேரும் என்பதை நான் மட்டுமே அறிவேன்.கவனி,உன் பொருட்டு,உன் வேதனைகளை அகற்றி நான் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.உன்னை நான் ஒருபோதும் மறவேன்.இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் நீ இருப்பினும் உன்னை நினைவில் வைத்திருப்பேன்.நான் உன்னுடைய பக்தியை விரும்புகிறேன்.என் பக்தனுடைய கொத்தடிமை நான்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
No comments:
Post a Comment