Posted: 14 Jul 2013 03:00 PM PDT
"யார் என்னைப் பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் நான் அகண்டமாக (இடைவிடாது)இருக்கிறேன்.நான் இல்லாதது அவருக்கு சிருஷ்டியனைத்தும் சூனியமாகத் தெரியும்.அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும்.அவர் என்னையே இடைவிடாது தியானம் செய்வார்;நாக்கு என்னுடைய நாமத்தையே ஜபம் செய்யும்.எங்கே போனாலும் எங்கிருந்து வந்தாலும் என்னுடைய சரித்திரத்தையே பாடிக் கொண்டிருப்பார்.இவ்வாறு என்னுடன் ஒன்றிய பிறகு,செயல்புரிவது,செயல்புரியாதிருப்பது இரண்டையுமே மறந்துவிடுவார்.எங்கே என்னுடைய சேவையில் இந்த அளவிற்கு பயபக்தி இருக்கிறதோ,அங்கே தான் நான் நிரந்தரமாகக் காத்திருக்கிறேன் ".-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 15 Jul 2013 03:00 PM PDT
கவலைகளை மறந்து என்னிடம் வந்து உட்கார்.என்னையே தியானி, என்மீதே மனத்தை வை. நடக்கப்போவதை ஒருமித்த மனத்துடன் அமைதியாய் பார்த்துக்கொண்டிரு, வானம் உன்மீது விழுந்தாலும் கவலைப்படாதே, உன்னைக் காப்பாற்ற நான் இருக்கும்போது இந்த கவலை எதற்க்கு? கலங்குவதால் என்னிடமிருந்து நீ தூரமாகிறாய். என்மேல் நம்பிக்கை இருந்தால், என்னால் உனக்கு முடியாத காரியம் என்று எதுவுமே இருக்க முடியாது. - ஷிர்டி சாய்பாபா
Posted: 17 Jul 2013 03:00 PM PDT
ராமபாணத்தைப் போன்று,குறி தவறாது விசித்திரமாகச் செயல்படும் வேறொரு மருந்து உதீயை தவிர எங்கும் இல்லை.சாயியை மனத்தில் நினைத்து,அவர்மேல் நம்பிக்கை வைத்து உதீயை நீருடன் கலந்து தினமும் குடித்தால் தீர்க்கமுடியாத வியாதிகளும் மறைந்துவிடும்
Posted: 18 Jul 2013 03:00 PM PDT
பாபாவின் திட்டங்களை யாரால் அறிய முடியும்?அறிய முயன்றவர்கள் அவதிக்குள்ளானார்கள்!ஆனால்,நீங்கள் அஹங்காரத்தை விடுத்து,அவருடைய காலடியில் புரண்டால்,அளவுகடந்த ஆனந்தம் அனுபவிப்பீர்கள்.
Posted: 19 Jul 2013 03:00 PM PDT
வேறெதிலும் நாட்டமில்லாது சாயியிடம் சரணடைந்து,வருவதையும் போவதையும் சாயியின் கையில் ஒப்படைத்துவிட்ட பிறகு,நாம் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.பாபாவுடைய மஹத்தான சக்தியினுள் அடைக்கலம் புகுந்த நாம் ஏன் வீணாகக் கவலைப்படவேண்டும்?
சமர்த்த சாயியே சனாதன பிரம்மம்.அவருடைய வார்த்தைகளே நமது தலையெலுத்தாகும்.எவர் அவருடைய வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறாரோ,அவர் பூரணமான அனுபவத்தைப் பெறுவார்.
சமர்த்த சாயியே சனாதன பிரம்மம்.அவருடைய வார்த்தைகளே நமது தலையெலுத்தாகும்.எவர் அவருடைய வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறாரோ,அவர் பூரணமான அனுபவத்தைப் பெறுவார்.
No comments:
Post a Comment