Sunday, August 11, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 32/2013)


Posted: 04 Aug 2013 03:00 PM PDT
பாபாவினுடைய இரு பாதங்களையும் பற்றிக் கொண்டவர்களுடைய பாவங்கள் அனைத்தும் அழியும்.பூர்வஜன்ம நல்வினைகளின் பலன் மேல் தளத்திற்கு எழும்பும்.வாழ்க்கை பாதையில் பயமோ தடைகளோ வாரா.பக்தர்களின் மனோரதங்களை சாயி பரிபூரணமாக அறிவார்;அவற்றை நிறைவேற்றவும் செய்கிறார்.அதன்மூலமாக,பக்தர்கள் வாழ்க்கையில் நிறைவு பெற்றவர்களாகிறார்கள். 
Posted: 05 Aug 2013 03:00 PM PDT
"துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு             உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்".
பாபாவின் திருவாய்மொழியை விகற்பமாகப் பார்ப்பவர்களுக்கு எந்த சங்கற்பமும் நிறைவேறாது.சங்கற்பம் சக்தியில்லாததும் பலனளிக்காததுமான பிதற்றலாகவே முடியும்.பாபாவின் வசனத்தின் பொருளை எவர் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாரோ,அவர் இகத்திலும் பரத்திலும் நலம் பெறுவார்.எவர் அதில் தோஷமும் குதர்க்கமும் காண்கிறாரோ,அவர் அதலபாதாளத்தில் வீழ்கிறார். 
Posted: 06 Aug 2013 03:00 PM PDT
சிந்தனையை சாயியின் நினைவில் வைத்து,கண்கள் சமர்த்த சாயியின் பாதங்களில் நிலைபெற்று,மனம் சாயி தியானத்திலேயே ஈடுபடுபவருடைய தேஹம் முழுவதும் சாயியின் சேவைக்கு அர்ப்பணமாகிறது.
Posted: 07 Aug 2013 03:00 PM PDT
எந்நேரமும் பாபாவிற்கு சேவை செய்வதிலேயே கண்ணாக இருந்து ,பாபாவின் ஆணைக்குக் கீழ்படியும் பக்தர்,தான் செய்யும் செயல்களின் முடிவை பாபாவின் தலைச்சுமைக்கு விட்டுவிடுகிறார்.வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும்,அது பாபாவின் ஆணை.பாபாவின் ஆணைக்கு பக்தன் அடிமை.சுதந்திரமான கருத்தென்பது அவருக்கு இல்லை.பாபாவின் வசனத்தை எந்நேரமும் பரிபாலனம் செய்யும் ஆர்வத்தில்,நல்லதா/கெட்டதா என்ற ஆராய்ச்சியும் அவருக்கு இல்லை.
Posted: 09 Aug 2013 03:00 PM PDT
படைக்கும் தெய்வமாகிய பிரம்மாவிலிருந்து புல்பூண்டு வரை இப்பிரபஞ்சத்தில் எங்கும் நிலவியிருக்கும்,அளவற்றதும் முடிவற்றதும் பின்னமில்லாததுமான முழுமுதற்பொருளே சாய்பாபாவாக உருவெடுத்திருக்கிறது.சாயி ஒரு சாதாரண மனிதரே என்று நினைப்பவர்கள் மந்தமதிபடைத்தவர்கள்; துரதிருஷ்டசாலிகள். அரிதாகக் கிடைக்கும் இவ்வதிருஷ்டத்தை அவர்கள் எவ்வாறு அனுபவிக்க முடியும்?சாயி ஆத்மபோதத்தின் சுரங்கம்;பூரணமான ஆனந்தத்தை அனுபவிக்கும் விக்கிரஹம்.சம்சார சாகரத்தை முழுமையாகவும் பாதுகாப்புடனும் கடப்பதற்கு அவரைச் சட்டென்று பற்றிக்கொள்வோமாக!
Posted: 10 Aug 2013 03:00 PM PDT
உனது பிரேமையை தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை.செயல் புரியாதது போல் நான் காணப்படினும்,ஒருபோதும் உன்னை கவனியாமலிருந்தது  இல்லை.என்னுடைய கிருபையால் நீ இப்போதைய நிலையை அடையப் பெற்றிருக்கிறாய்.உனக்கென்ன நிர்ணயிக்கப்பட்ட கடமையை செய்;உனது உடல்,வாக்கு,உயிர் முழுவதையும் எல்லாவற்றையும் வியாபித்து நிற்கும் தன்மையுடைய என்னிடம் அர்ப்பணம் செய்யவேண்டும்.என்னிடம் விசுவாசம் வைப்பது இப்போது உனக்கு மிகவும் அவசியமாகிறது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.No comments:

Post a Comment