Posted: 07 Jul 2013 03:00 PM PDT
பாபா யாரை எப்போது எப்படி இழுக்க வேண்டும் என திட்டமிடுகிறாரோ, அதை முடிப்பதற்காக தானே முன்கூட்டி அங்கு சென்று கவனிக்கப்படாத காட்சியாளனாக அமர்ந்து விடுகிறார். அவர் அங்கே ஆண்டுக் கணக்கில் இருந்தாலும் நாம் அவரை அடையாளம் கண்டு கொள்வதில்லை. நமக்கு விதிக்கப்பட்ட நேரம் எப்போது வருகிறதோ, அப்போது அவர் நமக்குத் தென்படுகிறார், அது மட்டுமல்ல, நம்மை பக்தனாக்கி, பித்தேற்றி எல்லாவற்றையும் துறந்து தன்னை மட்டுமே நினைக்கும்படி செய்துவிடுகிறார்.
Posted: 08 Jul 2013 03:00 PM PD
இதயத்தைத் தொட்டுச் சிந்தனையை மேம்படுத்தாத வார்த்தை எதையுமே பாபா சொன்னதில்லை.பாபாவினுடைய வழிமுறை எப்பொழுதும் அவ்வாறே.இந்த ரீதியில்தான் பக்தர்களின் நம்பிக்கையை திடப்படுத்தினார்.அவர் காட்டிய வழியில் நடந்தால் ஆரம்பகாலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும்.ஆனால்,போகப்போக பாதை புதர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும்.அப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும்.மனம் சந்தேகங்களால் அலைபாய்ந்து,சாயி ஏன் இந்தக் காட்டுவழிப் பாதைக்கு நம்மை கொண்டுவந்தார் என்று நினைக்கும்.அந்தச் சூழ்நிலையில்தான் நம்பிக்கை நிலையாக நிற்கவேண்டும்.அதுமாதிரி சங்கடங்கள் தான் உண்மையான சோதனைகள்.அசைக்க முடியாத திடமான நம்பிக்கை வேரூன்றும் வழி இதுவே.சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு,சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால்,எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும்.சாயி நாமத்தின் சக்தி அவ்வளவு பிரம்மாண்டமானது.சங்கடங்களினுள்ளே மறைந்திருக்கும் பிரயோஜனம் இதுவே.ஏனெனில்,சங்கடங்களும் சாயியால் விளைவிக்கப்படுவனவே.சங்கடம் வரும்போதுதான் சாயியின் ஞாபகம் வருகிறது!சங்கடங்களும் அப்பொழுது விலகிவிடுகின்றன!
Posted: 09 Jul 2013 03:00 PM PD
ஒருமுறை சாயியைப் பிரேமையுடன் நோக்கினால்,அவர் ஜன்மம் முழுவதற்கும் நம்முடையவர் ஆகிவிடுகிறார்.அனன்னியப் பிரேமையைத் தவிர நம்மிடம் அவர் வேறெதையும் வேண்டுவாரில்லை.நாம் கூப்பிடும்போது காப்பாற்ற ஓடிவருகிறார்! அந்நேரத்தில் காலமோ இடமோ அவருக்குக் குறுக்கே நிற்கமுடியாது.சதாசர்வ காலமும் சாயிபாபா நமக்குப் பின்னால் உறுதியாக நிற்கிறார்.அவர் எங்கு,எவ்வாறு,எந்த விசையை இயக்குவார் என்று நமக்குத் தெரியாது.அவருடைய செயல்கள் புரிந்துகொள்ள முடியாதவை.இம்மாதிரியாக அவர் செயல்படும்போது நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம்.அவற்றை அறவே விடுத்து,அவருடைய பாதங்களின்மேல் மனத்தைச் செலுத்தினால்,தியானமும் தாரணையும்(மனம் ஒருமுகப்படுதல்)விருத்தியடையும்.ஒருமுகப்பட்ட மனத்தில் சாயிசிந்தனை பின்தொடரும்.இதைத்தான் சாயி நம்மைச் செய்யவைக்கிறார்.எடுத்த காரியமும் தடங்கலின்றி நிறைவேறுகிறது.
Posted: 10 Jul 2013 03:00 PM PDT
பூமியில் பிறந்த தேஹம் செயல் புரிந்தே ஆகவேண்டும்.இதில் சந்தேகம் ஏதுமில்லை.ஆகவே,மனைவி,மக்கள்,செல்வம்,வீடு,வாசல் இவற்றை மனம் நிறையும்வரை தேடி அடையுங்கள்.உலகியல் விவகாரங்களை விட்டுவிட வேண்டிய அவசியம் இல்லை.ஆயினும்,மனத்தை மட்டும் சாயியிடம் சமர்பித்தால்,உலகியல் விஷயங்களின் மீதான மோஹம் தானாகவே விலகும்.முயற்சிகளும் சுலபமாக வெற்றியடையும்.-(ஸ்ரீ சாயி இராமாயணம்)
Posted: 11 Jul 2013 03:00 PM PDT
ஸ்ரீ சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரை நேரிடையாக தரிசனம் செய்வதற்கு சமானம் என்னும் கருத்தை விளக்கும் கதை.
பாலாபுவா சுதார் என்ற பெயர் கொண்ட பம்பாயைச் சேர்ந்த பக்தர் ஒருவர்,பாபாவை தரிசனம் செய்வதற்காக சிர்டிக்குச் சென்றார்.
அதுதான் அவருடைய முதல் தரிசனம்.அவர் அதற்கு முன்பு சாயியை தரிசனம் செய்ததில்லையெனினும்,அவரைப் பார்த்தவுடனே பாபா மிகத் தெளிவாகச் சொன்னார்,-
"இவரை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும்"
பாபா எப்படி இவ்வாறு சொல்கிறார்,என்றெண்ணி பாலாபுவா வியப்படைந்தார்.பாபா சிர்டியை விட்டு எங்கும் வெளியே போனதில்லை.நானோ சிர்டிக்கு வருவது இதுதான் முதல் தடவை.பாபாவுக்கு எப்படி என்னை நான்கு ஆண்டுகளாகத் தெரிந்திருக்க முடியும்?இதுபற்றித் திரும்ப திரும்ப யோசித்தப்பின்,நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாபாவின் நிழற்படத்தை ஒருமுறை நமஸ்காரம் செய்தது பளீரென்று ஞாபகத்திற்கு வந்தது. பாலாபுவாவுக்கு பாபாவின் வார்த்தைகளில் ஒளிந்திருந்த சத்தியம் விளங்கியது.பாபாவின் எங்கும் நிறைந்த தன்மையையும் பக்தர்களின்மேல் அவருக்கு இருக்கும் தாயன்பும் புரிந்தது.
இன்றுதான் பாபாவின் உருவத்தை முதன்முறையாகக் காண்கிறேன்.நான் நமஸ்காரம் செய்தது அவருடைய நிழற்படத்திற்கே.
அதுபற்றி நான் எப்பொழுதோ மறந்துவிட்ட போதிலும்,பாபா என்னை அடையாளம் கண்டுகொண்டார்!
ஆகவே பாபாவின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரைப் பிரத்யக்ஷமாக தரிசனம் செய்வதற்கு சமானம்.அனைத்தையும் இயல்பாகவே அறியும் பாபா நமக்கெல்லாம் அளிக்கும் படிப்பினை இதுவே.

Posted: 12 Jul 2013 03:00 PM PDT
என்னிடம் அடைக்கலம் தேடி வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது,சென்றகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம்.உங்களுடைய காரியம் கைகூடும் என்று அறீவீர்களாக .-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 13 Jul 2013 03:00 PM PDT
எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் என் மீது தன் பாரத்தைப் போடுகிறானோ,அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
No comments:
Post a Comment