Posted: 28 Jul 2013 03:00 PM PDT
சாய்பாபாவின் பாதங்களில் நம் அகங்காரத்தை சமர்ப்பித்தாலன்றி நமது வேலையில் நாம் வெற்றி பெறமாட்டோம். நம் அகங்காரத்தை ஒழித்தால் நமது வெற்றி உறுதி அளிக்கப்படுகிறது
Posted: 29 Jul 2013 03:00 PM PDT
மஹானுபவரான சாயி மஹராஜைத் தவிர உனக்கு வேறெந்த துணையும் இல்லை.முழுமையான விசுவாசத்துடனும் பக்தியுடனும் நீர் பாபாவின் உதீயை ஏற்றுக்கொண்டால்,அது தன்னுடைய சக்தியைத் தானே வெளிபடுத்தும்.பக்தி பா(BHA)வத்துடன் உதீயை அணுகவும்.பிறகு அது விளைவிக்கும் அற்புதத்தைப் பார்க்கலாம்.அது உடனே உம்மை இன்னல்களிலிருந்து விடுவிக்கும்.உதீயினுடைய இயல்பான குணம் இதுவே.
Posted: 30 Jul 2013 03:00 PM PDT
என்ன நடக்கப் போகிறதோ அது நடக்கட்டும்.ஆனால்,அது பாபாவின் விருப்பப்படியே நடக்கும் என்ற திடமான சங்கல்பத்தை ஏற்றுக்கொண்டு இருங்கள்.வேண்டுவதோ வேண்டாததோ,சுகமோ துக்கமோ,அமிருதமோ விஷமோ-இந்த இரட்டைச் சூழல்கள் நாம் சேர்த்த வினைகளுக்கு ஏற்றவாறு வெள்ளம்போல் நம்மை நோக்கிப் பாய்கின்றன.ஆகவே அவற்றைக் கண்டு சிரிக்கவும் வேண்டாம்,அழவும் வேண்டாம்.எது எது நேர்கிறதோ,அது அதைப் பொறுத்துக்கொள்ளவும்.பாபாவே நமது ரட்சகர்;எப்பொழுதும் அவரையே தியானம் செய்வீராக.பாரம் சுமப்பவர் அவரே!
" நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்"
பாபாவின் வாக்கு வெறும் சொற்களல்ல;பிரம்மதேவன் எழுதும் தலையெழுத்துக்கு சமம்.மனிதனுடைய கர்மவினையின் பலன்களையும் தடுத்து நிறுத்தும் சக்தி வாய்ந்தவை.

Posted: 31 Jul 2013 03:00 PM PDT
ஸ்ரீ சாய்பாபாவின் வழிமுறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை!பாபாவின் பாதங்களில் மூழ்காமல்,அவருடைய யதார்த்தமான சொரூபம் கைக்கு எட்டாது.பாபாவின் பாதங்களில் ஒட்டிக்கொள்வதே நமக்கு எல்லாவற்றுக்கும் மேன்மையான லாபம்.
Posted: 01 Aug 2013 03:00 PM PDT
நான் யார் மீதாவது கோபப்படுவது போலத் தெரிந்தாலும்,என்னுடைய இதயத்தில் கோபமே கிடையாது.தாய் தன் குழந்தையை எட்டி உதைத்துத் தள்ளினால் தான்,கடல் ஆற்றை வராதே என்று திருப்பியடித்தால் தான்,நான் உங்களை வெறுத்து ஒதுக்கி இன்னல் செய்வேன்.நான் என் பக்தர்களின் பிடியில் தான் இருக்கிறேன்;அவர்கள் பக்கத்தில் நிற்கிறேன்.எப்பொழுதும் அவர்களுடைய அன்பை தாகத்துடன் நாடுகிறேன்;துன்பத்தில் அவர்கள் கூப்பிடும்போது ஓடிவருகிறேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 02 Aug 2013 03:00 PM PDT
ஊரும் பெயரும் இல்லாத சாயி அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர்.கடைக்கண் பார்வையால் ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்!
தனது பக்தனின் எல்லா காரியங்களையும் முன் நின்று நடத்துபவர் அவரே.அதேசமயம் எந்த விஷயத்திலும் சம்பந்தபடாதவர் போல் தோன்றுகிறார்.அவர் எவர்களுக்கெல்லாம் கிருபை செய்ய விரும்புகிறாரோ அவர்களிடமெல்லாம் பலவிதமான மாறுவேஷங்களில் தோன்றுகிறார்.கணக்கற்ற அற்புதங்களை திட்டமிட்டு நிறைவேற்றுகிறார்.அவரை தியானத்தாலும் பிரேமை பொங்கும் பஜனையாலும் அணுக முயல்பவர்களுடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களைப் பாதுகாக்கிறார்.

Posted: 03 Aug 2013 03:00 PM PDTஎன்னை வேறொன்றிலும் நாட்டமில்லாமலும் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமலும் இரவுபகலாகத் தொழுபவன் இரண்டென்னும் மாயையை வென்று என்னுடன் ஐக்கியமாகிவிடுகிறான்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
No comments:
Post a Comment