Posted: 21 Jul 2013 03:00 PM PDT
உயிரினங்கள் அனைத்தையும் நேசி;யாருடனும் சண்டை செய்யதே.பதிலடி கொடுக்காதே,யாரையும் இழிவாகப் பேசாதே.உன்னைப் பற்றி (உனக்கு எதிராக) யாராவது பேசினால் சற்றும் கலங்காது சென்றுவிடு.அவனுடைய சொற்கள் உன் உடலை துளைத்துவிட முடியாது.பிறருடைய செயல்கள் அவர்களையே பாதிக்கும்.உன்னை அல்ல.உன்னுடைய செயல்கள் மட்டுமே உன்னை பாதிக்கும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 22 Jul 2013 03:00 PM PDT
நீ என்ன செய்தாலும் நான் உன் மீது கோபம் கொள்ளவே மாட்டேன். நீ என் செல்லக்குழந்தை. உனக்கு இன்னும் பக்குவத்தைப் போதிக்கவே நான் தோல்வியை அனுமதித்தேன், உனது சிந்தனை இன்றைய காலக்கட்டத்தை பார்க்கிறது, எனது நோக்கமோ உனது எதிர்காலம் தொடர்பானது. நீ அந்தக்காலத்தில் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக உன்னால் சகித்துக்கொள்ளக் கூடிய வகையில் இத்தகைய சின்னச் சின்ன பிரச்சனைகளை தந்து உன்னை பக்குவப் படுத்துகிறேன். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
Posted: 23 Jul 2013 03:00 PM PDT
குணங்களற்ற,பரிபூர்ணனான,நிர்குணனானவன் நான்.எனக்கு பெயர் கிடையாது.தங்குமிடமும் கிடையாது.எனக்கு வயது லக்ஷக்கனக்கான ஆண்டுகள்.ஆசிகள் வழங்குவதே என் தொழில்.எல்லா பொருட்களும் என்னுடையவை.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றையும் நான் அளிக்கிறேன்.இவ்வையகம் முழுவதும் என்னுள் அடக்கம்.நான் எல்லாவற்றிலும்,அவற்றிற்கப்பாலும் இருக்கிறேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 24 Jul 2013 03:00 PM PDT
நம்மிருவரிடையே பரஸ்பரம் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டிய கடன்கள்,ரீணானுபந்தம் உள்ளது.பல ஆண்டுகளாக இருந்து வரும்,ஆயிரம் ஆண்டுகளாகவும் இருக்கலாம்.கடன்களால் நமது பந்தம் பிணைக்கப்பட்டுள்ளது.ஆகையால் நம்மிருவரிடையே வித்தியாசம் எதுவுமில்லை,பிரிவும் என்றுமில்லை.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 25 Jul 2013 03:00 PM PDT
உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயா?மீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம்.இரவும் பகலும் உன்னை நான் பேணி வந்து,ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 26 Jul 2013 03:00 PM PDT
குருவே அன்னை;குருவே தந்தை.குரு,தேவர்களின் கோபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார்.குருவினுடைய கோபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும் முடியாது என்பதை நன்கு அறிக.உலகவாழ்க்கையின் வழிகாட்டி குரு.புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு,மனிதனை அவனுடைய நிஜரூபத்தைக் காணும்படி செய்கிறார்.மஹா காருண்யமூர்த்தியான குரு,சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார்.ஆகவே,
எப்பொழுதும் பாபாவின் உறவை நாடுங்கள்.எல்லா பாவங்களும் ஒழிய அவருடைய பாதங்களை வழிபடுங்கள்.
எப்பொழுதும் பாபாவின் உறவை நாடுங்கள்.எல்லா பாவங்களும் ஒழிய அவருடைய பாதங்களை வழிபடுங்கள்.
Posted: 27 Jul 2013 03:00 PM PDT
குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது.குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேலெழுப்பப்படுகிறார்கள்.
குரு,மந்திரங்கள்,புனிதத்தலங்கள்,தேவதைகள்,வைத்தியர்கள்,-இந்த ஐந்திற்கும் ஒருவருடைய நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்.
நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ,அதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும்.
குரு,மந்திரங்கள்,புனிதத்தலங்கள்,தேவதைகள்,வைத்தியர்கள்,-இந்த ஐந்திற்கும் ஒருவருடைய நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்.
நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ,அதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும்.
No comments:
Post a Comment